என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

மேகம் எனக்கொரு கவிதை தரும்

மேகங்கள்
மேகங்கள்
வெண்ணிலவு காயவைத்த
கைக்குட்டைகள்


மேகங்கள்
மழை நூல்
நூற்கும்
பஞ்சுகள்

மேகங்கள்
விண்கடலில்
மிதக்கும்
வெண்படகுகள்மேகங்கள்
இடி இசையை
உருவாக்கும்
இசைக்கருவிகள்


மேகங்கள்
மின்னல்
உற்பத்தி செய்யும்
மின்னாலைகள்மேகங்கள்
கருணையின்
உருவகங்கள்
மேகங்கள்
வெய்யிலை தடுக்கும்
வெண்கொற்றக்
குடைகள்

மேகங்கள்
காற்றின் திசையில்
பறக்கும்
நூலில்லா காற்றாடிகள்

மேகங்கள்
பூமிப் பந்தின்
பறக்கும்
போர்வைகள்


மேகங்கள்
நினைத்த
உருவமாய்
காட்சி அளிக்கும்
அற்புதங்கள்

மேகங்கள்
கன்னியரின்
கவர்ச்சி மிகு
கார் குழல்கள் 

 
மேகங்கள்
காதலுக்கு
தூது செல்லும்
வெண் புறாக்கள்

மேகங்கள்
மழைத் துளியை
சுமந்து செல்லும்
விமானங்கள்
   

 மேகங்கள்
 மலைச் சிகரங்களை
 முட்டிபார்க்கும்
வெண்பட்டுப்
பறவைகள்
            மேகங்கள்
   இயற்கை வரைந்த 
கருப்பு வெள்ளை 
ஓவியங்கள் 

மேகங்கள்
காலம் காலமாய்
கவிஞர்களின்
கற்பனைக்கு
தீனிபோடும் 
 கருப்பொருள்கள்

வாழ்க மேகங்கள்!
வளர்க மேகங்கள்!


இதைப் படிச்சாச்சா?
                            
வடிவேலு வாங்கிய கழுதை.நான் கழுதை 


முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்? 

  ********************
உங்கள் கருத்துக்களை தவறாது தயங்காது  சொல்வீர்!21 கருத்துகள்:

 1. மேகங்கள்
  மலைச் சிகரங்களை
  முட்டிபார்க்கும்
  வெண்பட்டுப்
  பறவைகள்

  அசந்துபோனேன்!!!!!

  பதிலளிநீக்கு
 2. மேகம் கவிதைகள் எல்லாம் அசத்தல்

  பதிவர் மேடையில் கவிதை யை வாசியுங்கள் என்று சொன்னதும்
  உறவுகளின் கருத்தும் நகைச்சுவை

  பதிலளிநீக்கு
 3. அனைத்து கவிதைகளும் அசத்தல் (TM 1)

  பதிலளிநீக்கு
 4. மேகம் தந்த கவிதைகள் அனைத்துமே அருமை. ரசித்தேன்.

  த.ம. 2

  பதிலளிநீக்கு
 5. மேகக் கவிதைகள்: அமோகம்! சிறப்பான படைப்பு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
  கோப்பை வென்ற இளம் இந்தியா!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html

  பதிலளிநீக்கு
 6. முனைவர்.இரா.குணசீலன் said...
  மேகங்கள்
  மலைச் சிகரங்களை
  முட்டிபார்க்கும்
  வெண்பட்டுப்
  பறவைகள்
  அசந்துபோனேன்!!!!!//
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
 7. //அ .கா . செய்தாலி said...
  மேகம் கவிதைகள் எல்லாம் அசத்தல் //
  நன்றி நன்றி

  பதிலளிநீக்கு
 8. வரலாற்று சுவடுகள் said...
  அனைத்து கவிதைகளும் அசத்தல் (TM 1)//
  நன்றி நன்றி

  பதிலளிநீக்கு
 9. வெங்கட் நாகராஜ் said...
  மேகம் தந்த கவிதைகள் அனைத்துமே அருமை. ரசித்தேன்.
  த.ம. 2//
  நன்றி நன்றி

  பதிலளிநீக்கு
 10. //s suresh said...
  மேகக் கவிதைகள்: அமோகம்! சிறப்பான படைப்பு! //
  நன்றி!//

  பதிலளிநீக்கு
 11. படங்களும் பொருத்தமான வாசகங்களும் அருமை.

  முதல் படம் மிகவும் அருமை! ;)))))

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 12. அழகான மேகங்கள் அழகாய் இருப்பது வானத்திலல்ல கவிதைகளில் தான்...
  அழகான வரிகள் சார்

  பதிலளிநீக்கு
 13. மேகம் பற்றி கட்டம் கட்டிய கவிதைகள் தூறல் சார்

  பதிலளிநீக்கு
 14. படங்களும், அதற்கேற்ப வரிகளும் அருமை...

  வாழ்த்துக்கள்... நன்றி... (TM 4)

  பதிலளிநீக்கு
 15. கவிதையும் ,கவிதைக்கான படங்களும் அருமை

  பதிலளிநீக்கு
 16. //சிட்டுக்குருவி said...
  அழகான மேகங்கள் அழகாய் இருப்பது வானத்திலல்ல கவிதைகளில் தான்...
  அழகான வரிகள் சார்//
  நன்றி சிட்டுகுருவி!

  பதிலளிநீக்கு
 17. //சீனு said...
  மேகம் பற்றி கட்டம் கட்டிய கவிதைகள் தூறல் சார்//
  நன்று சீனு ஐயா!

  பதிலளிநீக்கு
 18. // மேகங்கள்
  கருணையின்
  உருவகங்கள் // அன்னை படத்தை போட்டு அருமை.
  அனைத்து படங்களும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 19. கவிபேராரசு வைரமுத்து அவர்களின்
  கவிதை வரிகளில் மேகங்களை உணர
  வியந்து போனேன்
  இதுவரைப் படிக்காத கவிதை
  பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 20. சார் இந்த வைரமுத்துவின் கவிதை அல்ல.எனது சொந்தக் கவிதை அய்யா.
  வானம் எனக்கொரு போதி மரம் என்பது வைரமுத்துவின் புகழ் பெற்ற வரிகள் என்பதால் அதன் தாக்கத்தில் தலைப்பு மட்டும் அதன் செயலில் வைத்துள்ளேன்.மற்றபடி கவிதை முழுக்க முழுக்க எனது கற்பனையே.
  நன்றி அய்யா கருத்திற்கும் வாக்கிற்கும்

  பதிலளிநீக்கு
 21. எத்தனை உருவகங்கள்? படத்துக்குத் தக்கவாறு வருவதில் விண்கடலில் வெண் படகுகள் முதலிடம். அப்புறம் வெண்புறா....எல்லா வார்த்தைகளும் பிரமாதம்.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895