குதிரை என்பது வெறும் மிருகத்தை குறிப்பது இல்லை.காண்பது எதுவும் குதிரைக்கு தொடர்புடையதாகத் தோன்றுகிறது.உதாரணமாக காற்று சுழற்றி சுழற்றி அடித்தால் குதிரை தாண்டிப் போகிறது என்று அர்த்தம். கை பம்பில் டைட்டா அடித்து தண்ணிர் வந்தால் பம்புக்குள்ள குதிரை தண்ணீர் இழுப்பதாகத் தோன்றும்.
(பம்ப்போட கைப்பிடியை பாருங்கள் அது குதிரை வால் போலவே தோன்றும்.)
அந்த குதிரை சக்தி பற்றி அழகாக சொல்லும் ஒரு நெடுங்கவிதை
இரும்புக்குதிரையின் குதிரை நாயகன் விஸ்வநாதன் சொல்வதை கேளுங்கள் .ஒரு கதைபோல இருக்கும் இக்கவிதை சற்று பெரிதாக இருக்கும் முழுவதும் படித்தால் அதன் சுவை உணரமுடியும்
கல்தோன்றி மண் தோன்றி கடவுள் தோன்றி
கைவழியே மொழிவளரும் காலம் தோன்றி
கால்நடையே செல்வமெனக் கொண்ட நாளில்
ஆண்டிருந்த ஓர் அரசன் பறையறிவித்தான்
வீட்டிற்கொரு குதிரை வளர்க்க வேண்டும்
வேண்டுகிற உதவிகள் அரசு செய்யும்
குதிரைகள் தேசத்தின் பொக்கிஷங்கள்
போர்வந்தால் புரவிகளை அரசே வாங்கும்
போர்க்காலம் காணாத அரசில்லை.
போராட்டம் இல்லாத காலம் இல்லை
போர்க்காலம் முன்கருதி புரவி வளர்ப்பீர்
பின்வரும் சந்ததிக்கு உறுதி கொடுப்பீர்
மீறுபவர் தேசத்தின் முதல் எதிரிகள்
மறுப்பவர்கள் வெளியேற்றப் படுவர் உறுதி
பறையடித்து ஊர் முழுதும் செய்தி சொல்ல
ஜனம்கூடி தெரு நடுவே புலம்பலாச்சு
இவன் என்ன பேயரசன் குதிரை வெறியன்
திடுமென்று குதிரைக்கு எங்கே போக?
குதிரைதான் செல்வமெனில் செந்நெல் என்ன?
கொள்ளுமட்டும் பயிரிடவா வயலும் நீரும்?
ஆடுகளோ உணவாகும்; மாடுகளோ பயிர் வளர்க்கும்;
மேய்ப்பதொன்றும் கடினமில்லை கோலசையக் கூடவரும்!
குடும்பத்து பெண்மணிக்கு குதிரைகளா கட்டுப்படும்?
குரல் கொடுத்தால் நாய்போல புரவிகளா துணையாகும்?
இவன் என்ன பேயரசன் குதிரை வெறியன்..
பார்ப்பனர்கள் சிலர்கூடி தமக்குள்ள பேசி
முடிவாக திடமாக சபைக்குள் சென்று
தமக்கு மட்டும் கட்டளையைத் தளர்த்துமாறு
பணிவாக அறிவித்தார் காரணம் சொன்னார்
வேதங்கள் சொல்லுகையில் குதிரை கனைக்கும்
பாடத்தில் முழுமுனைப்பு சிதறிப் போகும்
தோல்பொருளை பார்ப்பனர்கள் தொடக்கூடாது
வாரின்றி குதிரைகள் வசப்படாது
போருக்கும் பார்ப்பனர்க்கும் பொருத்தமில்லை
போரில்லா வழ்க்கையதே எங்கள் கொள்கை
பேரரசன் யோசித்தான் தலை அசைத்தான்
பார்ப்பனர்கள் குதிரைக்கு விலக்கு என்றான்
பார்ப்பனர்கள் சபை நீங்க வணிகர் வந்தார்
வைத்தியரும் கொல்லரோடு சேர்ந்து கொண்டார்
எங்களுக்கும் விலக்களிப்பாய் தேரா மன்னா
வணிகத்தில் எருதுகளே உதவியாகும்
பொதி சுமக்கும் கழுதைகளே போதும் எமக்கு
ஊர் சுற்றும் வேலையிலே நாங்கள் இருக்க
பெண்டுகளே பிற வேலை செய்தல்வேண்டும்
புரவிகளை பெண்டுகளால் ஆள முடியுமா?
பேரரசே தயை செய்யும் இது தாங்க முடியுமா?
மன்னவனும் மனு ஏற்றான்; விலக்கு என்றான்.
வந்தவர்கள் சபை மீள கூட்டமாக
தொழில் தெரிந்த சூத்திரர்கள் முன்னே சென்றார்
குதிரைகள் பேணுதற்கு வசதியில்லை
முன்பின்னே இது குறித்து பழக்கமில்லை
கைகாலே துணையாக உழைப்போர் நாங்கள்
போரென்றால் கால்படையின் அங்கம் நாங்கள்
குதிரைகள் சுமை எமக்கு உதவி வராது
உழவுக்கோ கவலைக்கோ துணையாகாது
மன்னவனும் தலையசைத்தான் சரியே ஏன்றான்
படைவீரர் மேற்கொள்வார் போகச் சொன்னான்
படைவீரர் பெருமறவர் கூட்டம் போட்டார்
முடிவாக அரசனிடம் வணக்கம் சொன்னார்
போர்க்காலம் குதிரைகள் தேவைஎனினும்
போர் எதிரி யானையுடன் வந்து நின்றால்
குதிரைகள் என்செய்யும் கலைந்து போகும்
படைவீரர் தெருவுக்கொரு யானை வளர்ப்பார்
முறைபோட்டு அனுதினமும் பேணிக் காப்பார்
வீட்டுக்கொரு குதிரைஎன்ற விதியினின்று
பேரரசே விலக்களிப்பீர் யானை தருவீர்!
பேரரசன் யோசித்தான் கவலை சூழ
கையசைத்தான் மற்றவர்கள் கலைந்துபோக
மறு நாளே சபை கூட்டி எழுந்து நின்று
பெருமன்னன் குரல் செருமிப் பேசலானான்.
மன்னன் என்ன சொன்னான்? விரைவில்.
*******************************
இதையும் படியுங்க!
பாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன?
குதிரை சொல்லும் ஏழாம் வேதம்
குதிரை வேதம் 6- பாலகுமாரன்.
குதிரைகள் சொல்லும் நான்காம் வேதம்.
பால குமாரன் கவிதைகள் -பகுதி 2
பாலகுமாரனின் கவிதைகள்!l
அருமை...வரிகள்
பதிலளிநீக்குகுதிரைப்பற்றிய கதை கவிதை நடையில் சிறப்பாக உள்ளது.வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது[போல் வீட்டிற்கு ஒரு குதிரை வளர்த்த காலம் போல...
பதிலளிநீக்குதிடுமென்று குதிரைக்கு எங்கே போக?
பதிலளிநீக்குகுதிரைதான் செல்வமெனில் செந்நெல் என்ன?
கொள்ளுமட்டும் பயிரிடவா வயலும் நீரும்?
ஆடுகளோ உணவாகும்; மாடுகளோ பயிர் வளர்க்கும்;
மேய்ப்பதொன்றும் கடினமில்லை கோலசையக் கூடவரும்!
குடும்பத்து பெண்மணிக்கு குதிரைகளா கட்டுப்படும்?
குரல் கொடுத்தால் நாய்போல புரவிகளா துணையாகும்?
இவன் என்ன பேயரசன் குதிரை வெறியன்..//
அருமையான வரிகள் .
மறு நாளே சபை கூட்டி எழுந்து நின்று
பெருமன்னன் குரல் செருமிப் பேசலானான்.//
மன்னர் என்ன சொன்னார் அறிய ஆவல்.
பகிர்வுக்கு நன்றி.
நல்ல பகிர்வு தோழரே.. ஆமாம்.. மன்னன் என்ன சொன்னான்?
பதிலளிநீக்குThodarungal sir.
பதிலளிநீக்குகுதிரை வேதம் அருமை சார்
பதிலளிநீக்குதொடரட்டும் குதிரை கவிதைகள்! (TM 3)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கும்ம்ம் .... நல்ல பதிவு நண்பரே
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி நண்பரே...
பதிலளிநீக்குமுடிவில் கேள்வி கேட்டு ஆவலை தூண்டு விட்டது சிறப்பு...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 4)
அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)
பகிர்வுக்கு நன்றி .
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பால குமாரனின் ஆரம்ப காலக் கதைகளில் கதைகளை விட, கவிதைகள் ரசிக்கத் தக்கவையாக இருக்கும்..
பதிலளிநீக்குஇரும்புக் குதிரைகள் தொடங்கிப் பல நாவல்களில் அவரின் கவிதைகள் கதைப் போக்கை மாற்றும் இடங்களில் அமையும்..
அவரின் கவிதைகளை ரசித்த அளவிற்கு அவரை அக்காலத்தில் ரசிக்கவும் ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை. :))
ரசிக்கத்தக்க கதைக்கவிதை.
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வு நண்பரே! சில இடங்கள் குறியீட்டு வரிகளாக தெரிந்தாலும் ரசிக்க வைக்கும் வரிகள் தான் . மிக்க நன்றி!
பதிலளிநீக்குமனவேகத்தையும் குதிரையோடுதானே ஒப்பிடுகிறோம்.நல்லதொரு கவிதை தந்தீர்கள்.நன்றி !
பதிலளிநீக்குமன்னன் சொன்னதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு நன்றிகள்
பதிலளிநீக்குஎனது வாசிப்பில் எழுத்துச் சித்தர் பாலகுமரன் நூல்களும் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் படித்ததில்லை. அவற்றில் ” இரும்புக் குதிரைகள் “ நாவலும் ஒன்று. தங்களின் விமர்சனத்தைப் படித்ததும், குறிப்பாக // அவற்றில் ஒன்று லாரி ஓட்டுனர் ஆக்சிடென்ட் செய்துவிட்டு சிறைக்குப் போகவேண்டிய சூழ்நிலை எழுந்தால் லாரி கிளீனர் வண்டியை தான் ஒட்டியபோதுதான் விபத்து நடந்தது என்று சொல்லி ஒப்புக்கொண்டு சிறை செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி // என்று பகுதி.2 இல் தாங்கள் குறிப்பிட்ட செய்தியைப் படித்ததும் இந்த நாவலை வாங்கிப் படிக்க முடிவு செய்துள்ளேன். நன்றி!
பதிலளிநீக்கு70 களின் தொடக்கத்தில் கணையாழியில் கவிதைகள் சில எழுதியிருந்தார் பாலா.1972 தீபாவளி அன்று ராயப்பேட்டை வீட்டு வாசலில் அவருடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஅருமையான கவிதை... பாலகுமாரன் கவிதைகளும் எழுதினாரா...?
பதிலளிநீக்குசிறப்பான கவிதை பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html
//கோவை நேரம் said...
பதிலளிநீக்குஅருமை...வரிகள்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//Manimaran said...
பதிலளிநீக்குகுதிரைப்பற்றிய கதை கவிதை நடையில் சிறப்பாக உள்ளது.வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது[போல் வீட்டிற்கு ஒரு குதிரை வளர்த்த காலம் போல...//
நன்றி மணிமாறன். தொடர்ச்சியை வாசிக்கக் மீண்டும் வருக!
//கோமதி அரசு said...
பதிலளிநீக்குமன்னர் என்ன சொன்னார் அறிய ஆவல்.
பகிர்வுக்கு நன்றி.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. விரைவில் அடுத்த பகுதி பதிவிடுவேன்.மீண்டும் வருக!
//மதுமதி said...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு தோழரே.. ஆமாம்.. மன்னன் என்ன சொன்னான்?//
பதிவர் திருவிழாவின்பணிகள் பல இருந்தும் இடையில் என் வலைப் பக்கம் வந்ததற்கு நன்றி.
மன்னன் சொன்னது விரைவில்
//மோகன் குமார் said...
பதிலளிநீக்குThodarungal sir.//
வருகைக்கு மிக்க நன்றி மோகன்குமார்!
//சீனு said...
பதிலளிநீக்குகுதிரை வேதம் அருமை சார்//
நன்றி சீனு, மீண்டும் வருக!
//வரலாற்று சுவடுகள் said...
பதிலளிநீக்குதொடரட்டும் குதிரை கவிதைகள்! (TM 3)//
வரலாற்று சுவடுகளின் வருகை தவறியதாக வரலாறு இல்லை. மிக்க நன்றி நண்பரே!மீண்டும் வருக!
//அ .கா . செய்தாலி said...
பதிலளிநீக்கும்ம்ம் .... நல்ல பதிவு நண்பரே//
மிக்க நன்றி நண்பரே!மீண்டும் வருக!
//திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வுக்கு நன்றி நண்பரே...
முடிவில் கேள்வி கேட்டு ஆவலை தூண்டு விட்டது சிறப்பு...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 4)
அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)//
தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தங்கள் பதிவை உடனே படித்துவிட்டேன். மிக நன்று.
//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.சார் .
//அறிவன்#11802717200764379909 said...
பதிலளிநீக்குபால குமாரனின் ஆரம்ப காலக் கதைகளில் கதைகளை விட, கவிதைகள் ரசிக்கத் தக்கவையாக இருக்கும்..
இரும்புக் குதிரைகள் தொடங்கிப் பல நாவல்களில் அவரின் கவிதைகள் கதைப் போக்கை மாற்றும் இடங்களில் அமையும்..
அவரின் கவிதைகளை ரசித்த அளவிற்கு அவரை அக்காலத்தில் ரசிக்கவும் ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை. :))//
அவர் சிறந்த கவிஞர் என்பதை விட சிறந்த கவிதை ரசிகர்.பல்வேறு நல்ல திரைப்படப் பாடல்களை தன கதைகளில் பயன் படுத்துவார்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.சார் .
//கலாகுமரன் said...
பதிலளிநீக்குரசிக்கத்தக்க கதைக்கவிதை.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//கிஷோகர் said...
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வு நண்பரே! சில இடங்கள் குறியீட்டு வரிகளாக தெரிந்தாலும் ரசிக்க வைக்கும் வரிகள் தான் . மிக்க நன்றி!//
கருத்துக்கு நன்றி நண்பரே!
//ஹேமா said...
பதிலளிநீக்குமனவேகத்தையும் குதிரையோடுதானே ஒப்பிடுகிறோம்.நல்லதொரு கவிதை தந்தீர்கள்.நன்றி !//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. சகோதரி!
//Tamil nesan said...
பதிலளிநீக்குமன்னன் சொன்னதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு நன்றிகள்//
முதல் வருகை என்று நினைக்கிறேன். மிக்க நன்றி சார் மீண்டும் வருக!
//தி.தமிழ் இளங்கோ said...
பதிலளிநீக்குஎனது வாசிப்பில் எழுத்துச் சித்தர் பாலகுமரன் நூல்களும் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் படித்ததில்லை. அவற்றில் ” இரும்புக் குதிரைகள் “ நாவலும் ஒன்று. தங்களின் விமர்சனத்தைப் படித்ததும், குறிப்பாக // அவற்றில் ஒன்று லாரி ஓட்டுனர் ஆக்சிடென்ட் செய்துவிட்டு சிறைக்குப் போகவேண்டிய சூழ்நிலை எழுந்தால் லாரி கிளீனர் வண்டியை தான் ஒட்டியபோதுதான் விபத்து நடந்தது என்று சொல்லி ஒப்புக்கொண்டு சிறை செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி // என்று பகுதி.2 இல் தாங்கள் குறிப்பிட்ட செய்தியைப் படித்ததும் இந்த நாவலை வாங்கிப் படிக்க முடிவு செய்துள்ளேன். நன்றி!//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!
//சென்னை பித்தன் said...
பதிலளிநீக்கு70 களின் தொடக்கத்தில் கணையாழியில் கவிதைகள் சில எழுதியிருந்தார் பாலா.1972 தீபாவளி அன்று ராயப்பேட்டை வீட்டு வாசலில் அவருடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.நல்ல பகிர்வு.//
அவருடைய மற்ற கவிதைகள் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது.அவரது நாவலில் வந்த கவிதைகளை மட்டுமே இங்கு பகிர்ந்திருக்கிறேன்.
அவரோடு பழகிய தாங்கள் எனக்கு அறிமுகமானவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
//HOTLINKSIN.COM திரட்டி said...
பதிலளிநீக்குஅருமையான கவிதை... பாலகுமாரன் கவிதைகளும் எழுதினாரா...?//
அதிக அளவில் கதைகளுக்கிடையே எழுதி இருக்கிறார்.
வருகைக்கு நன்றி
//s suresh said...
பதிலளிநீக்குசிறப்பான கவிதை பகிர்வு! நன்றி!//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
கவிதை வடிவில் கதை. பாலகுமாரன் அவர்களின் கவிதைகளில் ஒன்றை அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
பதிலளிநீக்குஅன்புடையீர்,
பதிலளிநீக்குபடங்களும் பதிவும் மிகவும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஓர் விருது காத்துள்ளது. தயவுசெய்து வருகைதந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html
அன்புடன்
vgk
Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
பதிலளிநீக்குThank you Rajeswari.Wish you the same for Leibster Blog Award
பதிலளிநீக்குபாலகுமரனைத் திரும்பவும் வாசிக்கத் துாண்டியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குநன்றிங்க முரளிதரன் ஐயா.
அருமையான வரிகள். ஒரு காலத்தில் குதிரைக் கவிதைகளை மட்டுமே திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன்....
பதிலளிநீக்கு