என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

புஷ்பா மாமியின் புலம்பல்கள்-பயமுறுத்தும் பயணங்கள்

   காலையில் பால் வாங்க புறப்பட்டேன். வாசலக்கூட தாண்டவில்லை புஷ்பா மாமி எங்கோ ஊருக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். மாமி  ஊர்ல இல்லையா அதுதான் தெருவே கலகலப்பு இல்லாம ஒரு  இருந்ததா?

  முரளி! பால் வாங்கத் தானே கிளம்பறகொஞ்சம் இரு எங்க கார்டையும் குடுக்கறேன்.எனக்கும் சேத்து வாங்கிட்டு வந்திடு! ராத்திரி பயணத்தில பயந்து பயந்து தானே வர வேண்டி இருக்கு. ராத்திரி முழுக்க ஒரு நிமிஷம் கூட தூங்கல.தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ஆக்சிடென்ட் கண்ணு முன்னாடியே நின்னுட்டு இருக்கறப்போ தூக்கம் எப்படி வரும்?

  அந்த ட்ரெயின்ல பயணம் செஞ்சவா ராத்திரி கூட போன்ல பேசி இருப்பாளே.கலையில நாம இருக்கமாட்டோம்னு அவாளுக்கு தெரியுமா?
         32 பேருக்குமேல அநியாயமா செத்துப் போயிட்டாளே! சயின்ஸ் டெக்னாலஜின்னு என்னனமோ சொல்றா. ஆனா விபத்தை தடுக்க முடியலையே. ராத்திரிதானா அது பத்திண்டு எறியணும்! பகல்ல இருந்தா யாராவது பாத்திருப்பாளே! எப்படி நடந்ததுன்னு என்ன காரணம்னு இன்னும் கண்டு பிடிக்கலயே!  ரயில்வே நிர்வாகம் பாசென்ஜெர்ஸ் பாதுகாப்பில நிறைய கவனம் வெக்க வேணாமா?.ஓவ்வொரு பெட்டியிலயும் ஒரு கேமரா வைக்கலாமே. ரயில்வே போலீஸ் அங்கங்க இருப்பாளே?அவாளும் சேந்து தூங்கி இப்படி நிறைய பேர நிரந்தரம தூங்க வச்சிட்டாளே! நெருப்பு, புகை இது கொஞ்சம் இருந்தாகூட அலாரம் அடிக்கிற மெஷின் எல்லாம் இருக்காமே!அ தெல்லாம் இதுல யூஸ் பண்ணனும்னு ரயில்வேக்கு தோணவே தோணாதா?அதுக்கு அப்படி என்ன செலவு ஆயிடப் போறது? இதெல்லாம் அவன் எங்க செய்யப் போறான்?

   அவசரத்துக்கு ட்ரெயின நிறுத்தறதுக்கு இன்னும் எடிசன் காலத்து சங்கிலி படிச்சு இழுக்கிற முறையத்தான இன்னும் ஃபாலோ பண்ணிட்டிருக்கா?. அதுவும் பெரும்பாலும் ஒர்க் பண்ணறதில்லேன்னுதான் சொல்லறா. சினிமால்லாம் டிஜிட்டலா மாறிப்போச்சு. அவசியமானதெல்லாம் இன்னும் மாறாமயே இருக்கு.இ ந்த மாதிரி விபத்து நடக்கும்போதெல்லாம். ஏதோ நிவாரணம் கொடுத்துட்டு விசாரணை பண்ணறேன்னு சொல்லி அதோட மறந்து போயிடுவா.
   உனக்கு தெரியாது .அந்த காலத்தில  லால் பகதூர் சாஸ்த்ரி (1956) போக்குவரத்து மந்திரியா இருந்தப்ப அரியலூர்ல  நடந்த ட்ரெயின் விபத்துக்கு தானே பொறுப்பேற்று தன்னோட மந்திரி பதிவியை ராஜினாமா செஞ்சாராம்.இப்ப அந்த பொறுப்புல  இருக்கிற அமைச்சர் யாருன்னுகூட தெரியல.

      என்னடா நான்  பாட்டுக்கு பொலம்பிக்கிட்டே இருக்கேன் நீ வாய தொறக்க மாட்டேன்கிறயே!

"ஆமாம் மாமி! நீங்க சொல்லறதெல்லாம் சரிதான்.மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ரெண்டு மூணு நாளா பஸ் ஒட்டையில விழுந்து இறந்துபோன பொண்ணப் பத்தியும் இந்த ஆக்சிடண்ட்  பத்தியும் தான் பேசிக்கிட்டிருக்கோம்."


"நீ எங்க பேசி இருக்கப் போற?.பேசறத வேடிக்கை பாத்துண்டுதான இருந்திருப்ப. அப்படியே உங்கப்பா மாதிரி"

என்று சொல்லி என்னை வாரிவிட்டு விட்டு பால் கார்டு எடுத்துவர சென்றார் புஷ்பாமாமி.

  எத்தனயோ மக்களின் எதிரொலியான மாமியின் புலம்பல்  உரியவர்களை மாறச்  செய்யுமா?
                 
     **********************************
29 கருத்துகள்:

 1. உங்கள் எழுத்து மிகவும் உறுத்தியது.மிகுந்த மன வேதனையான நிகழ்ச்சி. இதன் காரணங்கள் என்னவாக இருந்த போதிலும் , நம் அரசாங்கம் மக்களை நேசிக்கவில்லை - மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் , தங்கள் வசதிக்கு உண்டானதை மட்டுமே செய்து கொள்ளும் கும்பல்.

  இந்தியர்களின் வாழ்கை இவ்வளவுதானா? என்று விடியும் நம் நல்ல நாள்?

  பதிலளிநீக்கு
 2. வருந்த வைக்கும் இரு சம்பவங்கள் :((

  காணொளி பார்க்க எனக்கு தைரியம் இல்லை

  பதிலளிநீக்கு
 3. முரளி,

  அப்படியே என் கருத்தோடு ஒத்து போகுது,சம்பவம் நடந்த அன்றே ஒரு பதிவும் போட்டு புலம்பியாச்சு, புலம்புறதை தவிர என்ன செய்ய முடியும் மிடில் கிளாஸ் மக்களால்?

  உண்மையில் நம்ம ரயில்வே நிர்வாகம் வெள்ளைக்காரன் விட்டுப்போனப்போ என்ன ஒரு தொழில்நுட்பத்தில்,நிலையில் விட்டானோ அப்படியே இருக்கு.

  எதிர்பாராத விதமாக யாராவது டிரயினைக்கடத்தினா கூட எதுவும் செய்ய முடியாது.டிரயினை எல்லாம் கடத்துவாங்களா என நினைக்காதிங்க சென்னையில் எலெக்ட்ரிக் டிரயினை ஒருத்தன் கடத்திப்போய் வியாசர்பாடியில் விபத்தாகி இருக்கு. :-))

  வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: என்ன கொடுமை சார் இது-7

  பதிலளிநீக்கு
 4. இந்த ரயில்வே மந்திரியை மக்களெல்லாம் சேர்ந்து உதைத்தால் என்ன...
  நம் நாட்டு போக்குவரத்தையும் சாலைகளையும் காட்டும் பொழுது மிகமிக கேவலமாகத் தான் இந்நாட்டில் காட்டுகிறார்களே என்று நான் வருந்தியதுண்டு... ஆனால் அதுதான் உண்மை என்றபோது யாரைக் குறை சொல்வது....

  தகவலுக்கு நன்றிங்க முரளிதரன் ஐயா.

  பதிலளிநீக்கு
 5. கொஞ்சம் கூட மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத அரசியல் வாதிகள் இருக்கும் இந்த நாட்டில் எதுவும் நிகழும்!

  பதிலளிநீக்கு
 6. // சினிமால்லாம் டிஜிட்டலா மாறிப்போச்சு. // அருமையான ஆதங்கம் சார்
  புலம்பல்கள் புலம்பல்களாகவே மட்டும் தான் சார் இருக்கும்.. என்ன செய்வது

  பதிவு அருமை

  பதிலளிநீக்கு
 7. ஒவ்வொரு ரயில் பயணத்திலும் ரயில் இருக்கும் நிலை கண்டு புலம்பத்தான் முடிகிறது நண்பரே....

  தனது நாற்காலி ஒன்றே குறியென இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இவையெல்லாம் சாதாரண விஷயம். இரண்டொரு நாட்களில் மக்கள் மறந்துவிடுவார்கள் என விட்டுவிடுவார்கள்.....

  த.ம. 4.

  பதிலளிநீக்கு
 8. உண்மையான ஆதங்கம்! மக்கள் நலனில் கவனம் செலுத்தாத அரசுகள்! இதை மக்கள் தான்மாற்ற வேண்டும்!

  பதிலளிநீக்கு
 9. அப்படியே என் கருத்தோடு ஒத்து போகுது,சம்பவம் நடந்த அன்றே ஒரு பதிவும் போட்டு புலம்பியாச்சு, புலம்புறதை தவிர என்ன செய்ய முடியும் மிடில் கிளாஸ் மக்களால்?
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 10. AROUNA SELVAME said...
  இந்த ரயில்வே மந்திரியை மக்களெல்லாம் சேர்ந்து உதைத்தால் என்ன...
  நம் நாட்டு போக்குவரத்தையும் சாலைகளையும் காட்டும் பொழுது மிகமிக கேவலமாகத் தான் இந்நாட்டில் காட்டுகிறார்களே என்று நான் வருந்தியதுண்டு... ஆனால் அதுதான் உண்மை என்றபோது யாரைக் குறை சொல்வது..//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. //வரலாற்று சுவடுகள் said...
  கொஞ்சம் கூட மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத அரசியல் வாதிகள் இருக்கும் இந்த நாட்டில் எதுவும் நிகழும்!//
  நன்றி! நன்றி!

  பதிலளிநீக்கு
 12. சீனு said...

  // சினிமால்லாம் டிஜிட்டலா மாறிப்போச்சு. // அருமையான ஆதங்கம் சார்
  புலம்பல்கள் புலம்பல்களாகவே மட்டும் தான் சார் இருக்கும்.. என்ன செய்வது
  பதிவு அருமை//
  நன்றி சீனு சார்

  பதிலளிநீக்கு
 13. //வெங்கட் நாகராஜ் said...
  ஒவ்வொரு ரயில் பயணத்திலும் ரயில் இருக்கும் நிலை கண்டு புலம்பத்தான் முடிகிறது நண்பரே.... //
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. சில நபர்களின் பொறுப்பற்ற செயலால் பல பொறுப்புள்ள நபர்களின் உயிர் வீணாக போகும் அவலம் இன்ன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 15. புகை இது கொஞ்சம் இருந்தாகூட அலாரம் அடிக்கிற மெஷின் எல்லாம் இருக்காமே!அ தெல்லாம் இதுல யூஸ் பண்ணனும்னு ரயில்வேக்கு தோணவே தோணாதா?அதுக்கு அப்படி என்ன செலவு ஆயிடப் போறது? இதெல்லாம் அவன் எங்க செய்யப் போறான்?//

  நியாயமான புலம்பல் தான்.
  பழமை மறைந்து புதுமை வர வேண்டும ரயில்வே நிர்வாகத்தில்
  ஊதும் சங்கை ஊதிவைப்போம்.
  மாற்றங்கள் வர வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
 16. ஒவ்வொரு நிகழ்விற்கு பின்னே துரிதமாக செயல்படும் அரசாங்கம் தனத கடமையை சரிவர செய்தாலே இது போன்ற சம்பவங்களை தவிர்க்கலாமே.

  பதிலளிநீக்கு
 17. ''...எத்தனயோ மக்களின் எதிரொலியான மாமியின் புலம்பல்...''
  உண்மை எனக்கே மனசுலே ஓடிண்டிருந்தது. (பேருந்தின் ஓட்டையும் - இப்படியும் பஸ் ஓட்டுவாற்களா என்று!!!!.......) நன்று.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 18. வேதனைகள் இங்கே
  புலம்பலை ஏற்படுத்தி இருக்கிறது..
  மனம் கனக்கிறது..

  பதிலளிநீக்கு
 19. //ட்ரெயின நிறுத்தறதுக்கு இன்னும் எடிசன் காலத்து சங்கிலி படிச்சு இழுக்கிற முறையத்தான இன்னும் ஃபாலோ பண்ணிட்டிருக்கா?//
  அட நீங்க சொன்னப்பிறகு தான் இத எனக்கு சிந்திக்க தோனது...

  பதிலளிநீக்கு
 20. சினிமால்லாம் டிஜிட்டலா மாறிப்போச்சு. அவசியமானதெல்லாம் இன்னும் மாறாமயே இருக்கு

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895