சிந்தித்தவை .
சிறிய அளவில் எளிமையாக நடத்தப் பட இருந்த பதிவர் சந்திப்பு பிரம்மாண்டமாக 26.08.2012 அன்று நடந்தேறியதை பற்றி பதிவுகள் வந்த வண்ணம் இருக்கிறது. டிஸ்கவரி பேலசில் முளைத்த சிந்தனை உலக தமிழ்ப் பதிவர்களை ஒருங்கிணைப்பட வேண்டும் என்பதே அனைவரும் ஒரு அமைப்பாக செயல்பட வேண்டும் என்ற சிந்தனையை வெளியிட்டவர் புலவர் ராமானுஜம் ஐயா அவர்கள். ஈரோடு கோயம்பத்தூர் என்று பதிவுகள் சந்திப்புகள் நடந்தாலும் தலைமை இடமான சென்னையில் பெரிய அளவில் பதிவர் சந்திப்பு நடைபெற்றதில்லை என்று கூறப்பட்டது. அந்தக் குறையை போக்கும் வண்ணம் தமிழ்ப் பதிவுலகமே திரண்டு வருகை தர வைக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று இரவும் பகலும் சிந்தித்து திட்டமிட்டனர். விழா நடத்துவதற்கு தேவையான நிதி இடவசதி இன்னும் எழக்கூடிய பல்வேறு சிக்கல்கள் இவற்றையும் கருத்தில் கொண்டு புலவர் ராமானுஜம் அவர்களின் ஆலோசனையோடு தூரிகையின் தூறல் மதுமதி, பட்டிகாட்டான் பட்டணத்தில் ஜெயக்குமார்,வீடு திரும்பல் மோகன்குமார், மின்னல் வரிகள் பாலகணேஷ் ,மெட்ராஸ் பவன் சிவகுமார்,அஞ்சா நெஞ்சன் உள்ளிட்ட பலரும் தங்கள் சொந்தப் பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு விழாப் பணியில் ஈடுபட்டனர்..அனைவரும் சென்னையில் நடத்தினாலும் மற்ற தமிழகத்தின் மற்ற பகுதியில் உள்ள பதிவர்கள், பழைய புகழ் பெற்ற பதிவர்கள் எந்த விதத்திலும் வருத்தமடைந்து விடக் கூடாது என்ற சிந்தனையுடனே செயல் பட்டனர்.அதில் வெற்றியும் கண்டனர்
அமைப்பு ரீதியாக செயல் படுவதில் என்ன நன்மை?எந்த நோக்கத்திற்காக?
தனிப்பட்ட ஒருவருக்கு எந்த நன்மையும் இல்லை. ஆனால் புதிய பதிவர்களை உருவாக்காலாம்.அவர்களுக்கு வழி காட்டலாம். இயன்ற சமுதாய நற்பணிகளை செய்யலாம்.ஒருவர் தனியாக செய்வதை விட அனைவரும் சேர்ந்து செய்தால் சற்று பெரிய அளவில் செய்ய முடியும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டபடி எழுதுவதை தவிர்த்து நமக்கு நாமே வரையறை செய்து கொள்ள முடியும்.தமிழ் மென்பொருள்கள் குறிப்பாக எழுத்துருக்கள் தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும்.இதன் மூலம் கூகுள் மைக்ரோ சாப்ட் நிறுவனங்களையும் நம்மை கவனிக்க வைக்க முடியும்.நமது தமிழ் மொழி வளர்ச்சிக்கு நம்மாலான பணிகளை ஒன்று சேர்ந்து செய்ய முடியும். பத்திரிகைகள் பதிவுலகை கவனித்து வருவது குறிப்பிடத்த தக்கது. பல எழுத்தாளர்கள் கவிஞர்களுக்கு தக்க வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர இயலும்.ஆரோக்கியமான விவாதங்கள் நடத்த முடியும்.தரமான ஆரோக்கியமான ஊடகமாக செயல்பட தமிழ்ப் பதிவுலக அமைப்பு தேவை. இவ்வாறெல்லாம் சென்ற சிந்தனையின் முதற் படியாக பதிவர் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.
சந்தித்தவை :
ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்தது. பதிவர்களின் எழுத்துக்களை மட்டுமே பார்த்த நான் அவற்றை எழுதியவர்களை பார்த்தபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். எல்லோருக்கும் அவரவர் பெயர் வலைப் பதிவின் பெயர் எழுதப்பட்ட அடையாள அட்டையை கொடுத்து அசத்தினர். ஒரு சிலர் சட்டையில் மாட்டி இருந்த அடையாள அட்டையை உற்றுப் பார்த்து கொண்டிருந்தனர். தனக்கு பரிச்சியமான வலைப்பதிவாக இருந்தால் அறிமுகப் படுத்திகொண்டு பேசிக் கொண்டிருந்தது ரசிக்கும்படி இருந்தது. சிலரை புகைப் படத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்த்ததற்கும் வித்தியாசம் இருந்தது. திண்டுக்கல் தனபாலன் நேரிலும் புகைப் படத்திலும் ஒரே மாதிரியாக அழகாக இருந்தார். தீதும் நன்றும் பிறர்தர வாரா ரமணிசாரைப் பார்த்து என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். முரளிதரன்னு இன்னொருத்தரும் இருக்காரே என்றார். அது நான்தான் என்று சொல்ல,வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கொண்டு இருப்பீர்கள் என்றுதான் கற்பனை செய்து வைத்திருந்தேன் என்றார்.
வசந்த மண்டபம் மகேந்திரன்,மூத்த பதிவர் நடன சபாபதி அவர்கள் , வலைச்சரம் சீனா அவர்கள் , சிபி செந்தில்குமார் மற்றும் பலரையும் முதன் முதலாக சந்தித்து பேசியது மகழ்ச்சி அளித்தது. +2 மாணவன் போல இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருந்தார் ஒருவர். அவர்தான் ஃ பிலாசபி பிரபாகரன் என்று தெரிந்து கொண்டேன்.அவர் பலபேரால் அறியப்பட்டிருந்தார். கடற்கரை விஜயனும் கல்லூரி மாணவர் போலவே இருந்தார். ஜாக்கி சேகரும், கேபிள் சங்கரும் பதிவர் ஸ்டார் அந்தஸ்துடன் வலம் வந்தனர்.
தமிழ்வாசி பிரகாஷ் பேரைக் கேள்விப் பட்டிருந்த நான் அவர் நடுத்த வயதுடையவராக இருப்பார் என்று நினைத்தேன்.அவர் இளைஞராக வந்து நின்றார். டீன் வயது முதல் டி வயதுகள் வரை பலதரப்பட்டவர் பதிவர்களாக இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. பெண் பதிவர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.
மூத்த பதிவர்கள் இந்த வயதில் கணினியைக் கையாண்டு இளைஞர்களுக்கு இணையாக பதிவுகள் மூலம் நிரூபித்திருப்பது உண்மையிலேயே பாரட்டப் படவேண்டிய ஒன்றுதான். சந்தித்தவை எல்லாம் சந்தோஷத்தையே தந்தது.
தித்தித்தவை ;
1. இனிமையான வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது
2. பதிவர் அறிமுகம் பாந்தமாய் இருந்தது
3. சுவையான மதிய உணவு நெஞ்சில் நின்றது
4. சுரேகாவின் தொகுப்பு சொக்க வைப்பதாக இருந்தது
5. பட்டுக்கோட்டை பிரபாகரின் பேச்சு பிரமாதமாக இருந்தது
6. சரியான நேரத்தில் தேநீர்,மற்றும் காபி, நினைத்துப் பார்க்க வைத்தது
7. மாலை போண்டோ ருசித்தது
8. தென்றல் சசிகலாவின் நூல் வெளியீடு இதமாய் இருந்தது
9. கவியரங்கம் , குறிப்பாக மருத்துவர் மயிலனின் கவிதை, லதானந்த் அவர்களின் நகம் பற்றிய கவிதை கைதட்ட வைத்தது.
10 மக்கள் சந்தையின் போட்டி அறிவிப்பு மனதைக் கவர்ந்தது.
மொத்தத்தில் அடுத்த பதிவர் சந்திப்பை ஆவலுடன் எதிர் பார்க்க வைத்து விட்டது .
இந்த விழாவிற்காக பாடுப்பட்ட பதிவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அத்தனை பேருக்கும் தமிழ்ப் பதிவுலகம் சார்பில் பலமாக நன்றிகள் உரைப்போம்.
*****************
இதைப் படித்தீர்களா?
அருமை...உங்களை பார்த்ததும் மகிழ்ச்சியே....
பதிலளிநீக்குதலைப்பு சிறப்பு பகிர்வும் அருமை உண்மையில் தித்திப்பாக.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநேரலையில் கண்டுகளித்தேன் விழா சிறப்பாய் முடிந்ததில் மகிழ்ச்சி (TM 2)
பதிலளிநீக்கு//தரமான ஆரோக்கியமான ஊடகமாக செயல்பட தமிழ்ப் பதிவுலக அமைப்பு தேவை. இவ்வாறெல்லாம் சென்ற சிந்தனையின் முதற் படியாக பதிவர் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.//
பதிலளிநீக்குஇந்தச் சந்திப்பு அடுத்து வைக்கப் போகும் அடி இதுவாக இருந்தால் நல்லது.
சரியான பார்வையில் தங்களுடைய அனுபவஙகளை சொல்லியிருக்கிறீர்கள்..
பதிலளிநீக்குநன்று...
இந்த ஆரோகியமான உறவு தொட்ர வேண்டும் என்புதே என்னுடைய ஆசை...
தவிர்க்கமுடியாத காரணத்தால் வர முடியவில்லை .. அனைவரும் நல்லா என்ஜாய் செய்து உள்ளீர்கள் ...
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வுகள் சார் .. அடுத்து எப்போ என்ற ஆவலை எல்லோர் மனதிலும் தூண்டி விட்டுள்ளது
பதிலளிநீக்குரசித்து எழுதி உள்ளதை நானும் ரசித்தேன்...
பதிலளிநீக்குஉங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்... நன்றி...
(7)
சந்திப்பு பற்றிய உங்கள் பகிர்வும் நன்று. ஒவ்வொரு தளத்திலும் சந்திப்பு பற்றிய பகிர்வுகள் படிக்கும் போது கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு! :))
பதிலளிநீக்கு//கோவை நேரம் said...
பதிலளிநீக்குஅருமை...உங்களை பார்த்ததும் மகிழ்ச்சியே....//
நன்றி!
//Sasi Kala said...
பதிலளிநீக்குதலைப்பு சிறப்பு பகிர்வும் அருமை உண்மையில் தித்திப்பாக.//
நன்றி சசிகலா
வரலாற்று சுவடுகள் said...
பதிலளிநீக்குநேரலையில் கண்டுகளித்தேன் விழா சிறப்பாய் முடிந்ததில் மகிழ்ச்சி (TM 2)//
வரலாற்றுக்கு நன்றி
//வெங்கட ஸ்ரீநிவாசன் said...
பதிலளிநீக்குஇந்தச் சந்திப்பு அடுத்து வைக்கப் போகும் அடி இதுவாக இருந்தால் நல்லது.//
நன்றி நன்றி
கவிதை வீதி... // சௌந்தர் // said...
பதிலளிநீக்குசரியான பார்வையில் தங்களுடைய அனுபவஙகளை சொல்லியிருக்கிறீர்கள்.//
நன்றி சௌந்தர்
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
பதிலளிநீக்குதவிர்க்கமுடியாத காரணத்தால் வர முடியவில்லை .. அனைவரும் நல்லா என்ஜாய் செய்து உள்ளீர்கள் ...//
நன்றி நன்றி
//அரசன் சே said...
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வுகள் சார் .. அடுத்து எப்போ என்ற ஆவலை எல்லோர் மனதிலும் தூண்டி விட்டுள்ளது//
உண்மைதான் அரசன்
//திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குரசித்து எழுதி உள்ளதை நானும் ரசித்தேன்...//
நன்றி நன்றி
//வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்குசந்திப்பு பற்றிய உங்கள் பகிர்வும் நன்று. ஒவ்வொரு தளத்திலும் சந்திப்பு பற்றிய பகிர்வுகள் படிக்கும் போது கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு!//
நன்றி நன்றி
விழா பற்றிய விவரிப்புக்கு நன்றி.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
பதிவர் விழாவில் கலந்து கொண்டு தங்களை சந்தித்ததில் சந்தோசம் கொள்கிறேன்...
பதிலளிநீக்கு//சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட//
சிலருடைய எழுத்து முதிர்சியாக இருக்க
பதிலளிநீக்குஅவர்களை புகைப்படம் இல்லாததால்
நாமாக் ஒரு வயதை வரையாய் செய்து கொள்வதை
தவிர்க்க இயலவில்லை. சில செம ஜாலி பதிவுகளாகத்
தருகிறார்களே இளைஞர்களாக இருப்பார்கள்
என கற்பனை செய்து கொண்டு வந்தால்
அவர்கள் என வயதொத்தவர்களாக இருந்தார்கள்
ஆனால் என் மனம் கவர்ந்த விஷயமே எல்லோரும்
எழுத்தால் நான் கொண்டிருந்த அவர்கள் மதிப்பை விட
பெருந் தன்மையில் நேசம் காட்டுவதில் கூடுதலாக
இருந்தார்கள் தாங்கள் உட்பட
மிக மிக அருமையாக பதிவர் சந்திப்பு குறித்த
நினைவுகளை பகிர்வு செய்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 10
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html