(மன்னிச்சுக்குங்க நண்பர்களே! இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி! கற்பனை கழுதையை தட்டி விட்டுட்டேனா.அதன் விளைவுதான் சார்.
ஆனா ஒண்ணு! நாளைக்கு சீரியசான பதிவுதான்.
சுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள். பீ கேர்ஃபுல்.... நான் என்னை சொன்னேன். )
**********************************************
வடிவேலு வாங்கிய கழுதை
'என்னைப்
பார் யோகம் வரும்" னு எழுதி வச்ச கழுதை போட்டாவை வாங்கி மாட்டி தினமும்
பாத்தா உனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று வடிவேலுவுக்கு யாரோ
சொல்ல,"அப்படியாவது யோகம் அடிக்குதா பாக்கலாம்' என்று போட்டோ வாங்க
கடைக்குபுறப்பட்டார் வடிவேலு.
கடையில் படத்தை வாங்கும்போது "அண்ணே! அண்ணே! வாங்காதீங்க!" என்று குரல் கேட்டது .வடிவேலுவின் நண்பர்கள் வந்து கொண்டிருந்தார்கள்
.
.
"அடேய் இங்கயும் வந்துட்டீங்களா! நீங்க சொல்றத கேக்க மாட்டேன். நானே எதையும் டீல் பண்ணிக்குவேன். நீங்க போகலாம்!
"அண்ணே! நாங்க சொல்றத கேக்காம ஓட்டல்ல போய் சாப்பிட்டுதானே ஏமாந்தீங்க!"
"அதை ஏண்டா ஞாபகப் படுத்துறீங்க' என்னதாண்டா பண்ணனும்னு சொல்றீங்க!"
"அண்ணே கழுதை ஃபோட்டா வாங்குறதுக்கு பதிலா கழுதையே வாங்கி தினமும் பாத்தா நீங்க கோடீஸ்வரர் ஆயிடுவீங்கண்ணே!"
"ம்ம்ம்.........நீங்க சொல்றதும் சரிதான்...சரி ஒரு கழுதையத் தான் வாங்கி பாப்போம். ஏண்டா என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலியே!"
"அண்ணே!எங்கள எப்பவுமே நம்ப மாட்டேங்கறீங்களே!"
"உங்களை
எப்படிடா நம்பறது எத்தனை முறை என்னை அடிவாங்க வச்சிருப்பீங்க! ஐடியா
சொல்லிட்டீங்க இல்ல நீங்க கிளம்புங்க!நான் பாத்துக்கிறேன்.ஐடியா
சொன்னதுக்கு இந்தாங்க இந்த காசை வச்சு டீ குடிச்சிட்டு போங்க!" என்று
சொல்லி அவர்களை துரத்திவிட்டு ஊருக்கு ஓரமாக இருக்கும் கழுதை விற்கும்
கடைக்கு சென்றார்
.
.
அங்கே அழகழகான கழுதைகள் விற்பனைக்கு இருந்தன.அதைப் பார்த்த வடிவேலு
"ஆஹா! எவ்வளோ கழுதைங்க! நம்மளைவிட அழகா இருக்கே!இதைப்பாத்தா இப்பவே யோகம்
வந்துடும் போல இருக்கே!
"ஹலோ கடையில யாரு? கழுதை என்ன விலை"
"பிச்சைக் காரங்களுக்கெல்லாம் நான் கழுதை விக்கறதில்ல" கடைக்காரன் சொன்னான்!
"என்ன எகத்தாளம்! ப்ரதர் உன் ஜட்ஜ்மெண்டு ராங். இதோ பார் எவ்வளோ பணம்?" பாக்கெட்டிலிருந்து கத்தையாக பணத்தை எடுத்துக் காட்டினார்.
"சாரி சார்! பிச்சகாரங்க கிட்ட கூட நிறைய பணம் இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேனே தவிர பாத்ததில்ல இப்பதான் பாக்குறேன். உங்களைப் பாத்ததில எனக்கும் யோகம்தான் சார்!"
வடிவேலு டென்ஷனாகி "ஹலோ ஓவரா போய்ட்டிருக்க நீ! இந்தா பணம் அதோ அந்த முடி புசுபுசுன்னு அழகா ஸ்டைலா நின்னுக்கிட்டுருக்கே அந்த கழுதைய குடு'
வடிவேலுவிடம் நிறைய பணம் இருப்பதை தூரமாக நின்றுகொண்டிருந்த திருட்டுத்
தொழில் செய்யும்அழகான இளம்பெண் பார்த்துக் கொண்டிருந்தாள்.'ஆஹா!இன்னைக்கு
நல்ல கிராக்கி மாட்டி இருக்கு..இந்த சான்சை விடக் கூடாது." என்று நினைத்துக்
கொண்டே வடிவேலுவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கழுதையை ஒரு கயிற்றில் கட்டி அதை வடிவேலு கையில் கொடுத்தான் கடைக்காரன்,
கழுதை பின்னால் வர கயிற்றைப் பிடித்துக்கொண்டு 'இனிமே நமக்கு வறப்போற அதிர்ஷ்டத்தை எந்த கொம்பனாலயும் தடுத்து நிறுத்த முடியாது' என்று நினைத்துக்கொண்டே நடந்தார்.
இதைப்பார்த்த இளம் பெண் சத்தமில்லாமல் வந்து கழுதையின் கயிற்றை அவிழ்த்துவிட்டு தன கழுத்தில் அந்தக் கயிற்றைக் கட்டிக்கொண்டாள். இதை அறியாத வடிவேலு தொடர்ந்து நடக்க கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கழுதை கூடவே வருகிறதா என்று திருப்பிப் பார்க்க அங்கே கழுதைக்கு பதிலாக ஒரு பெண் இருப்பது வடிவேலுவுக்கு கண்டு அதிர்ச்சிஏற்பட்டது
இதைப்பார்த்த இளம் பெண் சத்தமில்லாமல் வந்து கழுதையின் கயிற்றை அவிழ்த்துவிட்டு தன கழுத்தில் அந்தக் கயிற்றைக் கட்டிக்கொண்டாள். இதை அறியாத வடிவேலு தொடர்ந்து நடக்க கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கழுதை கூடவே வருகிறதா என்று திருப்பிப் பார்க்க அங்கே கழுதைக்கு பதிலாக ஒரு பெண் இருப்பது வடிவேலுவுக்கு கண்டு அதிர்ச்சிஏற்பட்டது
ஐயோ! சொன்னா கேளு செல்லம்! நான் உன்ன வச்சுக்க முடியாது |
"என்னடா இது அதிசயம்!, ஏ பொண்ணு! கழுதைதானே வாங்கினேன், நீ எப்படி வந்த!"
"எசமான் ! நான் இதுக்கு முன்னாடி கழுதையாத்தான் இருந்தேன்.உங்க கை பட்டதும் பொண்ணா மாறிட்டேன்."
"அய்யய்யோ என்னம்மா சொல்ற! ஒண்ணும் புரியலயே!"
"ஆமாம் எசமான்! நான் மொதல்ல ஒரு பொண்ணாதான் இருந்தேன்.ஒரு சாமியார் கிட்ட காசு
திருடிட்டனா? அவரு என்ன கழுதையா மாறிடுவேன்னு சாபம் கொடுத்துட்டார். "
"ஆங்.. அப்புறம் "
'நான்
அவர்கிட்ட கெஞ்சி சாப விமோசனம் கேக்க. அவரு அழகா கறுப்பா ஒரு ராஜகுமாரன்
வந்து உன்னை தொட்டதும் திரும்பவும் நீ பொண்ணா மாறிடுவேன்னு சொன்னாரு.அதே
மாதிரி இப்போ மாறிட்டேன். எசமான்!, இனிமே நான் உங்களுக்குத்தான் சொந்தம்
.நீங்கதான் என்ன கல்யாணம் பண்ணிக்கணும்."
"அதெல்லாம் முடியாதுமா.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சி. நீ போய்டும்மா "
"பரவால்ல முதலாளி எனக்கு ஆட்சேபனை இல்ல....."
"சொன்ன கேளு செல்லம். நான் உன்ன வச்சுக்க முடியாது..."
"அப்படின்னா நீங்க பையில வச்சிருக்கிற பணத்தை குடுங்க நான் போயிடறேன்..'
"ஏன் என்ன இப்படி டார்ச்சர் பண்ற. அவ்வவ்..."
முடியாது என்று மறுக்க அந்தப் பெண் பாக்கெட்டில் கைவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு ஓடினாள்.
"இதோ
பாரு மரியாதையா பணத்தை குடுத்துடு .....இல்லன்னா திருப்பி கழுதை ஆயிடுவ.
கழுதை ஆயிடுவ.. அப்புறம் பொண்ணா வே மாறமாட்ட இது எங்க ஆத்தா மேல சத்தியம். அவ்வ்வ்வ்.
" என்று சாபம் கொடுத்துக்கொண்டே துரத்தியும் பிடிக்க முடியவில்ல .
" இந்தப் பொண்ணு நம்மள ஏமாத்திட்டாளே! கழுதையைப் பாத்தா அதிர்ஷ்டம்னு நினைச்சா இந்தக் கழுதைக்கு யோகம் வந்திடுச்சே.ஒருவேளை நம்ம மூஞ்சி கழுத மாதிரி இருக்குதோ.எதுக்கும் கண்ணாடியைப் பாத்து டெஸ்ட் பண்ணனும்."
.
" இந்தப் பொண்ணு நம்மள ஏமாத்திட்டாளே! கழுதையைப் பாத்தா அதிர்ஷ்டம்னு நினைச்சா இந்தக் கழுதைக்கு யோகம் வந்திடுச்சே.ஒருவேளை நம்ம மூஞ்சி கழுத மாதிரி இருக்குதோ.எதுக்கும் கண்ணாடியைப் பாத்து டெஸ்ட் பண்ணனும்."
.
வடிவேலு
வீட்டுக்குள் நுழையும்போது வடிவேலுவின் மனைவி "அங்கயே நில்லுயா! நான்
சேத்து வச்சிருந்த பணத்தை எல்லாம் தூக்கிட்டு போய்ட்டயே!எங்க அது? எந்த
கழுத கிட்டயா குடுத்த? உன்கூட எவ குடுத்தனம் பண்ணுவா... உன்ன போய் என்
தலயில கட்டி வச்சுட்டாங்களே " என்று கண்டபடி திட்ட ...
"ஏய் மரியாதையா பேசு. என்ன கட்டிக்க எத்தனை பொண்ணுங்க தயாரா இருக்காங்க
தெரியுமா... இப்பகூட ஒரு பொண்ணு என் பின்னாடி வந்தது. நாந்தாண்டி வேணாம்னு
உனக்காக தியாகம் பண்ணிட்டு வந்தேன்...."
"போய்யா போ அந்த கழுதைய கூட்டிட்டு வா ..நானும் பாக்கறேன்..."
மனதுக்குள் 'அந்தப் பொண்ணு கழுதன்னு இவளுக்கும் தெரிஞ்சு போச்சோ?'
மனதுக்குள் 'அந்தப் பொண்ணு கழுதன்னு இவளுக்கும் தெரிஞ்சு போச்சோ?'
"போறன்டி இப்பவே போய் அந்தப் பொண்ணோட வந்து உன் கொட்டத்தை அடக்கறேன்" சவால் விட்டுவிட்டு ஆவேசத்துடன் கிளம்பினார்
வடிவேலு அந்தப் பெண்ணைத் தேடி மீண்டும் கழுதை வாங்கிய இடத்துக்கே வர
அங்கே அந்தப் பெண்ணைக் காணவில்லை. சுற்றுமுற்றும் பார்க்க அங்கே காலையில்
வாங்கிய அதே அழகான புசு புசு கழுதை நின்றிருந்தது.
அதைப்
பார்த்த வடிவேலு அதிர்ச்சியுடன்,"ஐயோ பொண்ணே! நான் குடுத்த சாபம்
பலிச்ச்சிடுச்சே. நீ எங்கிட்ட பணத்த புடுங்கினதால உன்னை கழுதையா மாற சாபம்
குடுத்தனே.நிஜமாவே திரும்பவும் கழுதையா மாறிட்டயே!"
கழுதைய தொட்டுப் பார்த்து பெண்ணாக மாறுகிறதா என்று பார்த்துக்கொண்டே,
"உன்னை பொண்ணா மாத்த முடியலயே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......."
கழுதைய தொட்டுப் பார்த்து பெண்ணாக மாறுகிறதா என்று பார்த்துக்கொண்டே,
"உன்னை பொண்ணா மாத்த முடியலயே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......."
என்று புலம்ப தூரத்தில் மறைவாக அந்த இளம்பெண் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்
*******************************************************************
சும்மா ஒரு ஜாலிக்குத்தான் .சிரிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க
சும்மா ஒரு ஜாலிக்குத்தான் .சிரிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க
அருமை அருமை
பதிலளிநீக்குபடிக்கும்போதே காட்சி மனதில் ஓடும்படியாக
மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள்
படங்களை இணைத்தது கூடுதல் சிறப்பு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 1
பதிலளிநீக்குஹா... ஹா... ரசித்துப் படித்தேன்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்... நன்றி... (த.ம. 2)
சார் தலைப்பிலேயே மிரட்டுறீங்க. அஞ்சலி போட்டோ இன்னும் "அலகா" உள்ளதை போட்டிருக்கலாம் ஹி ஹி
பதிலளிநீக்குவடிவேலு,காமெடி,கழுதை இவை எல்லாவற்றையும் மீறி வடிவேலு ஒரு நல்ல நடிகர் என்பதை இந்ததநேரத்தில் தங்களது பதிவிற்க்கு கருத்து சொல்வதின் மூலமாய் வெளிப்படுத்த தோணுகிறது,நன்றி வணக்கம்.
பதிலளிநீக்குஉடம்பெல்லாம் குலுங்கக் குலுங்கச் சிரிச்சிட்டே இருக்கேன்! கருத்து எப்படி எழுதறதாம்?
பதிலளிநீக்குநன்றி முரளி.
ஹா..ஹா...
பதிலளிநீக்குமீண்டும் கழுதையா என நினைத்தேன். ஆனால் சற்று வித்தியாசமாக சிரிக்கும் படி பகிர்ந்த விதம் அருமை.
பதிலளிநீக்குஅட கழுதையே... சாரி சாரி அடக் கடவுளே... ஹா ஹா ஹா... எனக்கும் உங்க மேனியா தொத்திக்கிச்சு
பதிலளிநீக்குகலக்குங்க :)
பதிலளிநீக்கு(TM 6)
கதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநச் ... வாழ்த்துக்கள் சார்
பதிலளிநீக்குவடிவேலு நகைச்சுவை அருமை! சிறப்பாக எழுதி உள்ளீர்கள்! சிரிக்க வைத்த படைப்பு! நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html
என்ன ஆச்சு குதிரையிலிருந்து கழுதைக்கு மாறிட்டீங்க?
பதிலளிநீக்குபதிவைத்தான் சொன்னேன்.
நல்ல நகைச்சுவை
முரளிதரன் ஐயா... எங்கிட்ட மட்டும் உண்மையைச் சொல்லுங்க.
பதிலளிநீக்குஇந்தக் கதையில வர்ர வடிவேலு நீங்க தானே...
ஹாஹாஹா...
அருமை... ஹிஹி
பதிலளிநீக்குசிரிக்க வைத்த கதை
பதிலளிநீக்குநகைச்சுவை கதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//Ramani said...
பதிலளிநீக்குஅருமை அருமை
படிக்கும்போதே காட்சி மனதில் ஓடும்படியாக
மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள்
படங்களை இணைத்தது கூடுதல் சிறப்பு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி
மிக்க நன்றி தனபாலன் சார்!
பதிலளிநீக்கு//மோகன் குமார் said...
பதிலளிநீக்குசார் தலைப்பிலேயே மிரட்டுறீங்க. அஞ்சலி போட்டோ இன்னும் "அலகா" உள்ளதை போட்டிருக்கலாம் ஹி ஹி//
கழுதையா இருந்து பெண்ணா அப்பதான் மாறினதால
மேக் அப் போட நேரம் இல்லை..
//விமலன் said...
பதிலளிநீக்குவடிவேலு,காமெடி,கழுதை இவை எல்லாவற்றையும் மீறி வடிவேலு ஒரு நல்ல நடிகர் என்பதை இந்ததநேரத்தில் தங்களது பதிவிற்க்கு கருத்து சொல்வதின் மூலமாய் வெளிப்படுத்த தோணுகிறது,நன்றி வணக்கம்.//
வடிவேலு மிக அற்புதமான நடிகர் என்பதில் ஐயம் இல்லை.நான் அவருடைய ரசிகன்.இ தை திரைப்படக் காட்சியாக மனதில் நினைத்துத்தான் எழுதி இருக்கிறேன். தனிப்பட்ட வடிவேலுவை கிண்டல் செய்ய அல்ல சார்.
கருத்துக்கு மிக்க நன்றி சார்!
//முனைவர் பரமசிவம் said...
பதிலளிநீக்குஉடம்பெல்லாம் குலுங்கக் குலுங்கச் சிரிச்சிட்டே இருக்கேன்! கருத்து எப்படி எழுதறதாம்?
நன்றி முரளி.//
மிக்க நன்றி சார்.
//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பதிலளிநீக்குஹா..ஹா..//
நன்றி!நன்றி!.
//Sasi Kala said...
பதிலளிநீக்குமீண்டும் கழுதையா என நினைத்தேன். ஆனால் சற்று வித்தியாசமாக சிரிக்கும் படி பகிர்ந்த விதம் அருமை.//
நன்றி சசிகலா!
//சீனு said...
பதிலளிநீக்குஅட கழுதையே... சாரி சாரி அடக் கடவுளே... ஹா ஹா ஹா... எனக்கும் உங்க மேனியா தொத்திக்கிச்சு//
மிக்க நன்றி சீனு சார்!
//வரலாற்று சுவடுகள் said...
பதிலளிநீக்குகலக்குங்க :)
(TM 6)//
நன்றி.நேத்து இந்தப் பக்கம் வரலையேன்னு நினச்சேன்.
இன்னைக்கு வந்துட்டீங்க ரொம்ப நன்றி பாஸ்.
//வெங்கட ஸ்ரீநிவாசன் said...
பதிலளிநீக்குகதை நன்றாக இருக்கிறது./
நன்றி வெங்கட்
//அரசன் சே said...
பதிலளிநீக்குநச் ... வாழ்த்துக்கள் சார்//
நன்றி அரசன்.
நன்றி சுரேஷ் சார்!
பதிலளிநீக்கு//ezhil said...
பதிலளிநீக்குஎன்ன ஆச்சு குதிரையிலிருந்து கழுதைக்கு மாறிட்டீங்க?
பதிவைத்தான் சொன்னேன்.
நல்ல நகைச்சுவை//
யோகம் வருதான்னு பாக்கத்தான் மேடம். நன்றி.
//AROUNA SELVAME said...
பதிலளிநீக்குமுரளிதரன் ஐயா... எங்கிட்ட மட்டும் உண்மையைச் சொல்லுங்க.
இந்தக் கதையில வர்ர வடிவேலு நீங்க தானே...
ஹாஹாஹா.//
ஹிஹிஹிஹி ..
//இடி முழக்கம் said...
பதிலளிநீக்குஅருமை... ஹிஹி//
கருத்தளித்த இடி முழக்கத்திற்கு நன்றி.
//சென்னை பித்தன் said...
பதிலளிநீக்குசிரிக்க வைத்த கதை//
நன்றி ஐயா!நன்றி!
//கோமதி அரசு said...
பதிலளிநீக்குநகைச்சுவை கதை நன்றாக இருக்கிறது//
நன்றி கோமதி மேடம்..
//"போய்யா போ அந்த கழுதைய கூட்டிட்டு வா ..நானும் பாக்கறேன்..."
பதிலளிநீக்குமனதுக்குள் 'அந்தப் பொண்ணு கழுதன்னு இவளுக்கும் தெரிஞ்சு போச்சோ?' //
திரையில் பார்ப்பது போன்றுள்ளது.தொடருங்கள்
சிரித்தேன்.
பதிலளிநீக்குநன்றி .
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தமிழ்மணம் பார்க்க முடியவில்லையே!
பதிலளிநீக்குஇன்று நீங்கள் என்ன பதிவு போட்டு இருக்கிறிரீகள் என்று பார்க்கலாம் என்றால் முடியவில்லை. என் பதிவையும் தமிழ் மணத்தில் சேர்க்க முடியவில்லை.
தமிழ்மணம் இன்று வேலை செய்யவில்லை.பதிவெழுதி வைத்துக் காத்திருக்கிறேன். சிறிது நேரத்தில் தமிழ்மணம் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இந்திய நேரப்படி ஒரு மணி அளவில் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.ஆவலுடன் கேட்டதற்கு மிக்க நன்றி.மேடம்.பதிவின் தலைப்பு 'சுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள்.'
பதிலளிநீக்குசெம காமடியாக இருக்கிறது... போட்டோ கமென்ட் செம ரகளை...
பதிலளிநீக்குஹி ஹி ..சூப்பர் சார்..வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஹி.ஹி.... நல்லாத்தான் இருக்கு!
பதிலளிநீக்குஹாஹா ஹிஹி... very funny.
பதிலளிநீக்குநல்ல எழுத்து நடை, வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகதையின் நடை கடைசிவரை சிரிப்பூ...
பதிலளிநீக்கு