முட்டாள்களின்
உருவகம் நான்!
மூடர்களின்
உவமானம் நான்!
மதி குறைந்து
போனதால்
பொதி சுமக்கப்
பிறந்தவனாம்!
குரல் வளத்தில்
காக்கையும் நானும்
கைவிடப் பட்டவர்கள்.
குட்டியாய் இருக்கும்போது
குதிரையைப்
நானும்ம் அழகுதான்!
நானும்ம் அழகுதான்!
கழுதை வளர்ந்து
குதிரை ஆனதா
குதிரை தேய்ந்து
கழுதை ஆனதா?
டார்வினிடம்தான்
கேட்கவேண்டும்
கத்திப் பேசுபவர்கள் எல்லாம்
எங்கள் பாலை கொஞ்சம்
அதிகம் குடித்தவர்களாம்.
"என்னைப்பார் யோகம் வரும்"
என் படத்தை மாட்டி
எழுதி வைத்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு
யோகம்வரும்;
எனக்கு?
பிறரை ஏசும்போதும்
என் பெயரே
உங்களுக்கு நினைவு வரும்!
மாடுகள்கூட
மதிப்பிழந்துபோன வேளையில்
கழுதைகளுக்கு ஏது கவனிப்பு?
எனக்கு
தெரியாதுதான்;
கற்பூரவாசம்!
நான்
தேடியும் கிடைக்காதது
அன்பு, நேசம்
கட்டிப் பிடிக்க
யாரும் இல்லை!
அதனால்
எட்டி உதைத்து
என் கோபத்தை
வெளிப்படுத்துவேன்!
என்ன செய்வது?
எனக்கு
தெரியாதுதான்;
கற்பூரவாசம்!
நான்
தேடியும் கிடைக்காதது
அன்பு, நேசம்
கட்டிப் பிடிக்க
யாரும் இல்லை!
அதனால்
எட்டி உதைத்து
என் கோபத்தை
வெளிப்படுத்துவேன்!
என்ன செய்வது?
காலச் சுழற்சியில்
எங்களினம்
காணாமல் போகும்!
ஏளனப் பொருட்களாக
எங்களை பார்ப்பவர்களே!
எங்களை பார்ப்பவர்களே!
உங்களிடம்
ஒன்றுமட்டும் சொல்கிறேன்.
முட்டாள்களுக்கும்
இந்த மண்ணில்
கொஞ்சம் இடம் கொடுங்கள்
ஏனெனில்
அவர்களை வைத்துதான்
அறிவாளிகள் அளக்கப்படுகிறார்கள்.
*********************
- கழுதைகளின் மூல இருப்பிடம்ஆப்ரிக்க பாலைவனங்கள் என்று கூறப்படுகிறது.
- சாதரணமாக கழுதைகள் 3 வகைகளில் காணப்படுகின்றன. 36 இன்ச்சுகளுக்கு குறைவானவை.சிறுகழுதைகள், 36 லிருந்து 54'' வரை நடுத்தரக் கழுதைகள்,56'' மேலுள்ளவை மம்மூத் என்று அழைக்கப்படும் பெருங்கழுதைகள்.
- அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் மம்மூத்தை வளர்த்தவர்.
- கழுதைகள் உண்மையில் புத்திசாலித் தனமானவை.ஆனால் அறிவில்லாத மிருகம் என்று தவறாகக் கருதப்படுகிறது.
- ஒரே அளவில் உள்ள கழுதையையும் குதிரையையும் ஒப்பிடும்போது கழுதையே வலிமையானது.
- கழுதைகள் அபார ஞாபக சக்தி வாய்ந்தது.25 ஆண்டுகளுக்கு முன்னால்வாழ்ந்த இடத்தையும் உடனிருந்த கழுதையும் கண்டுபிடித்துவிடும் திறமை உடையது.
- கழுதையை எளிதில் பயமுறுத்தி விட முடியாது.
- ஆண் கழுதை ஜாக் என்றும் பெண் கழுதை ஜென்னி என்றும் அழைக்கப் படுகிறது.
- ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்தவை ம்யூல்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
- பெண் கழுதைக்கும் ஆண் குதிரைக்கும் பிறந்தவை ஹின்னீஸ்
- கழுதைகளுக்கு மழையில் நனைவது பிடிக்காது.இயற்கையில் அதன்தோல் பிற விலங்குகளைப் போல் வாட்டர் ப்ரூஃப் ஆக அமையவில்லை
- நன்கு பராமரிக்கப் பட்டால் கழுதை 40 ஆண்டுகள் கூட உயிர் வாழும்.
- கழுதைப்பால் கிராமப் புறங்களில் மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.
அருமை...அருமை...
பதிலளிநீக்குநட்சத்திர வாழ்த்துக்கள் சகோ.
கழுதைக்குப் பரிந்து இப்படி அழகான விஷய்ங்களோடு பதிவு போட முடியுமென்பது ஆச்சரியம்தான். பல பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுவது கூட நாலு கழுதை வயசாயிடுச்சு என்றுதான்.உங்களின் பகிர்வு மிக நன்று. அருமை.
பதிலளிநீக்குமுட்டாள்களுக்கும்
பதிலளிநீக்குஇந்த மண்ணில்
கொஞ்சம் இடம் கொடுங்கள்
ஏனெனில்
அவர்களை வைத்துதான்
அறிவாளிகள் அளக்கப்படுகிறார்கள்.
அருமையான விளக்கம் பாலகுமரன் குதிரை கவிதை எழுதியது மாதிரி நீங்கள் கழுதை கவிதை எழுதிவிட்டீர்களா! கழுதை இனி சந்தோஷ்மாய் இருக்கும்.
கழுதையை பற்றிய சில உண்மைகள் அருமை.
பதிலளிநீக்கு40 வருடம் உயிர் வாழும் நன்றாக பாரமரிக்க பட்டால் என்பதை கேள்வி படும் போது வருத்தமாய் உள்ளது. தனக்கு மூட்டை சுமந்து வேலை பார்க்கும் கழுதையை நன்றாக பராமரிக்கலாம் மனிதர்கள்.
வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குநட்சத்திரமானதற்கும்.. இந்தப் பதிவிற்கும்..
/// "என்னைப்பார் யோகம் வரும்"
பதிலளிநீக்குஎன் படத்தை மாட்டி
எழுதி வைத்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு
யோகம்வரும்
எங்களுக்கு? ///
நல்ல கேள்வி...
கழுதைகள் பற்றிய சில உண்மைகள்... சிறப்பு...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 4)
கழுதையைப்பற்றிய கவிதை அருமை.
பதிலளிநீக்கு//கட்டிப் பிடிக்க
யாரும் இல்லாததால்
எட்டி உதைத்து
எங்கள் கோபத்தை
வெளிப்படுத்துவோம் //
என்ற வரிகளைப்படித்து வாய்விட்டு சிரித்தேன்.
கழுதைகள் உண்மையில் புத்திசாலித் தனமானவை.ஆனால் அறிவில்லாத மிருகம் என்று தவறாகக் கருதப்படுகிறது என்று சொல்லி நம்முடைய ‘புத்திசாலித்தனத்தை’ வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள்.தகவலுக்கு நன்றி!
நட்சத்திர வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகழுதைகள் பற்றிய தகவல்கள் அருமை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகழுதைப் பற்றிய கவிதையும் தகவலும் சிறப்பாக இருந்தது, உயிரினங்கள் மீது அன்பு செலுத்துபவர் சக மனிதர்களையும் மிகுந்தே அன்பு செலுத்துவர். பாராட்டுகள்
பதிலளிநீக்கு.
பதிலளிநீக்குகவிதையும் கவிதையின் கருப்பொருள் குறித்த
தகவல்களும் மிக அருமை
அதிகம் அறியாதவை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 7
பதிலளிநீக்குசிறந்த படைப்பாக்கம் சார் ...
பதிலளிநீக்குகவிதையின் கடைசி வரிகள் சிறப்பு.
பதிலளிநீக்குதகவல்கள் நன்று
த.ம.8
பதிலளிநீக்குதகவல்களும் கவிதையும் அருமை! நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாய் சைக்கிள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html
கவனிப்பாரற்றுப் போன கழுதை குறித்து கவனிப்பான வார்த்தைகள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குமுட்டாள்களுக்கும்
இந்த மண்ணில்
கொஞ்சம் இடம் கொடுங்கள்
ஏனெனில்
அவர்களை வைத்துதான்
அறிவாளிகள் அளக்கப்படுகிறார்கள்
அருமையான வரிகள்!அனைவரும் சிந்திக்கத்
தக்கன!
நட்சத்திரப் பதிவருக்கு முதற்கண் வாழ்த்துக்கள்!
அடடடா... கழுதை கூட கவிதை வரிகளில் மின்னுகிறது...
பதிலளிநீக்குஹாஹாஹா... முரளிதரன் ஐயா... கழுதைக்கு கற்புர வாசம் மட்டுமில்லை.. எந்த வாசமும் தெரியாதாம்... உண்மையாங்க...?
வாழ்த்துக்கள் முரளிதரன் ஐயா.
எந்த வரியை அல்லது வரிகளை எடுத்தாண்டு, உங்களைப் பாராட்டுவது என்று யோசித்துத் தோற்றுப் போனேன்! காரணம்.............
பதிலளிநீக்குஅத்தனை வரிகளும் அற்புதம்.
பலமுறை படித்தேன்.
மீண்டும் படிப்பேன்.
நெஞ்சார்ந்த பாராட்டுகள் முரளிதரன்.
வாழ்த்துகள்..சார்..
பதிலளிநீக்கு//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பதிலளிநீக்குஅருமை...அருமை...
நட்சத்திர வாழ்த்துக்கள் சகோ.//
நன்றி சார்!
//பால கணேஷ் said...
பதிலளிநீக்குகழுதைக்குப் பரிந்து இப்படி அழகான விஷய்ங்களோடு பதிவு போட முடியுமென்பது ஆச்சரியம்தான். பல பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுவது கூட நாலு கழுதை வயசாயிடுச்சு என்றுதான்.உங்களின் பகிர்வு மிக நன்று. அருமை//
மிக்க நன்றி சார்!
//கோமதி அரசு said...
பதிலளிநீக்குஅருமையான விளக்கம் பாலகுமரன் குதிரை கவிதை எழுதியது மாதிரி நீங்கள் கழுதை கவிதை எழுதிவிட்டீர்களா! கழுதை இனி சந்தோஷ்மாய் இருக்கும்.//
நன்றி கோமதி மேடம்
//அறிவன்#11802717200764379909 said...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்..
நட்சத்திரமானதற்கும்.. இந்தப் பதிவிற்கும்//
நன்றி அறிவன் சார்!
திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்கு/// "என்னைப்பார் யோகம் வரும்"
என் படத்தை மாட்டி
எழுதி வைத்திருக்கிறீர்கள்.
உங்களுக்குயோகம்வரும்எங்களுக்கு? ///
நல்ல கேள்வி...
கழுதைகள் பற்றிய சில உண்மைகள்... சிறப்பு...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 4)//
தனபாலன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி!
வே.நடனசபாபதி said...
பதிலளிநீக்குகழுதையைப்பற்றிய கவிதை அருமை.
//கட்டிப் பிடிக்க
யாரும் இல்லாததால்
எட்டி உதைத்து
எங்கள் கோபத்தை
வெளிப்படுத்துவோம் //
என்ற வரிகளைப்படித்து வாய்விட்டு சிரித்தேன்.
கழுதைகள் உண்மையில் புத்திசாலித் தனமானவை.ஆனால் அறிவில்லாத மிருகம் என்று தவறாகக் கருதப்படுகிறது என்று சொல்லி நம்முடைய ‘புத்திசாலித்தனத்தை’ வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள்.தகவலுக்கு நன்றி!//
மிக்க நன்றி சார்!
//மோகன் குமார் said...
பதிலளிநீக்குநட்சத்திர வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கு நன்றி!
//Sasi Kala said...
பதிலளிநீக்குகழுதைகள் பற்றிய தகவல்கள் அருமை. வாழ்த்துக்கள்.//
நன்றி சகோதரி!
//Ramani said...
பதிலளிநீக்குகவிதையும் கவிதையின் கருப்பொருள் குறித்த
தகவல்களும் மிக அருமை
அதிகம் அறியாதவை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்//
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார்!
//அரசன் சே said...
பதிலளிநீக்குசிறந்த படைப்பாக்கம் சார் //
நன்றி அரசன்!...
//சென்னை பித்தன் said...
பதிலளிநீக்குகவிதையின் கடைசி வரிகள் சிறப்பு.
தகவல்கள் நன்று//
நன்றி அய்யா!
//s suresh said...
பதிலளிநீக்குதகவல்களும் கவிதையும் அருமை! நன்றி!
இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாய் சைக்கிள்!//
நன்றி சுரேஷ்!
//தி.தமிழ் இளங்கோ said...
பதிலளிநீக்குகவனிப்பாரற்றுப் போன கழுதை குறித்து கவனிப்பான வார்த்தைகள்.//
மிக்க நன்றி ஐயா!
//புலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்குமுட்டாள்களுக்கும்
இந்த மண்ணில்
கொஞ்சம் இடம் கொடுங்கள்
ஏனெனில்
அவர்களை வைத்துதான்
அறிவாளிகள் அளக்கப்படுகிறார்கள்
அருமையான வரிகள்!அனைவரும் சிந்திக்கத்
தக்கன!
நட்சத்திரப் பதிவருக்கு முதற்கண் வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி அய்யா!
//AROUNA SELVAME said...
பதிலளிநீக்குஅடடா... கழுதை கூட கவிதை வரிகளில் மின்னுகிறது...
ஹாஹாஹா... முரளிதரன் ஐயா... கழுதைக்கு கற்புர வாசம் மட்டுமில்லை.. எந்த வாசமும் தெரியாதாம்... உண்மையாங்க...?
வாழ்த்துக்கள் முரளிதரன் ஐயா.//
நன்றி நன்றி!
//முனைவர் பரமசிவம் said...
பதிலளிநீக்குஎந்த வரியை அல்லது வரிகளை எடுத்தாண்டு, உங்களைப் பாராட்டுவது என்று யோசித்துத் தோற்றுப் போனேன்! காரணம்.............
அத்தனை வரிகளும் அற்புதம்.
பலமுறை படித்தேன்.
மீண்டும் படிப்பேன்.
நெஞ்சார்ந்த பாராட்டுகள் முரளிதரன்.//
மிக்க நன்றி அய்யா! தங்களைப் போன்றவர்களின் பாராட்டுக்கள் ஊக்கமளிப்பதாக உள்ளது.
//Uzhavan Raja said...
பதிலளிநீக்குவாழ்த்துகள்..சார்.//
நன்றி ராஜா!வருக!வருக!
கழுதையார் பற்றிய கவிதையும் சரி,கழுதையார் பற்றின மேலதிக விபரங்களும் சரி அறியாத தகவல்கள்.பாரட்டக்கூடிய பதிவு முரளி !
பதிலளிநீக்குநட்சத்திரமே!
பதிலளிநீக்குஇனிய வாழ்த்து(க்)கள்.
நம்மூரில் இல்லை என்பதால் கழுதையைக் கண்டதும் மகிழ்ச்சி:-))))
ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்தவை ம்யூல்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
பதிலளிநீக்குபெண் கழுதைக்கும் ஆண் குதிரைக்கும் பிறந்தவை ஹின்னீஸ்
this above line cannot understand anyone can explain
நட்சத்திர வாழ்த்துகள்
பதிலளிநீக்குநழறைந்த தகவல்கள்.
பதிலளிநீக்குநல்ல கவிதை.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
கழுதை பற்றிய உண்மைகள் அருமை.... தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.
பதிலளிநீக்குநட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குகழுதை வலிமையானது என்பது கேள்விக்குறி :) still சுவாரசியமான விவரங்கள்.
பெண்களை கழுதை என்பது ஏன் தெரியுமோ?
//அப்பாதுரை said...
பதிலளிநீக்குநட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!
கழுதை வலிமையானது என்பது கேள்விக்குறி :) still சுவாரசியமான விவரங்கள்.
பெண்களை கழுதை என்பது ஏன் தெரியுமோ?//
தெரியவில்லை ஐயா, காரணம் தெரிந்தால் மகிழ்ச்சி அடைவேன்.
//வெங்கட ஸ்ரீநிவாசன் said...
பதிலளிநீக்குநட்சத்திர வாழ்த்துகள்//
நன்றி ஸ்ரீனிவாசன்
//வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்குகழுதை பற்றிய உண்மைகள் அருமை.... தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.//
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//kovaikkavi said...
பதிலளிநீக்குநழறைந்த தகவல்கள்.
நல்ல கவிதை.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.//
நன்றி வேதா மேடம்.
//ஹேமா said...
பதிலளிநீக்குகழுதையார் பற்றிய கவிதையும் சரி,கழுதையார் பற்றின மேலதிக விபரங்களும் சரி அறியாத தகவல்கள்.பாரட்டக்கூடிய பதிவு முரளி !//
நன்றி ஹேமா!
துளசி கோபால் said...
பதிலளிநீக்குநட்சத்திரமே!
இனிய வாழ்த்து(க்)கள்.
நம்மூரில் இல்லை என்பதால் கழுதையைக் கண்டதும் மகிழ்ச்சி:-))))//
நன்றி துளசி கோபால்
என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளில் இந்த கழுதை கவிதையும் ஒன்றாகிறது... ஒரு முட்டாள் கழுதை இவ்வளவு அழகா கவிதை பாடியிருக்குமா??.
பதிலளிநீக்கு//முட்டாள்களுக்கும் இடம் கொடுங்கள் அறிவாளிகளை அளப்பதற்கு...// அருமை சார்
கவிதை அருமை நண்பரே...
பதிலளிநீக்கு