இது எனது 200 வது பதிவு
புத்தகக் கண்காட்சி நடப்பதை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. 10ம் தேதியில் இருந்து தினமும் இரவு சன் நியூசில் இரவு 7.00 மணிக்கு ஒளி பரப்பாகிக் கொண்டிருக்கிறதாம்.
சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் பேச்சாற்றல் பற்றி மோகன் குமாரின் "வீடு திரும்பல்". வலைப் பதிவில் படித்தேன். பேச்சில் ஜொலிக்கும் எஸ்.ராவுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் அவரின் அனுபவமின்மை கொஞ்சம் வெளிப்பட்டது. இன்னும் சற்று சுவாரசியமாகத் தொகுத்திருக்கலாம் என்று தோன்றியது.
நான் பார்த்த நாளன்று தொடர்கதைகள் படிக்கும் பழக்கம் குறைந்து போனது பற்றி விவாதிக்கப் பட்டது. அது பற்றித்தான் கேபிள் சங்கர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவரது கருத்தைக் கேட்க முடியவில்லை.பலரும் இது சம்பந்தமாக தங்கள் கருத்துக்களை கூறினர்

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளர் இந்துமதி, லேனா தமிழ்வாணனிடம் தொடர்கதைகள் இப்போது அதிகமாக வருவதில்லையே? அதன் காரணம் என்ன என்று கேட்டார்.
இந்துமதி, "தொடர்கதைகள் இப்போதும் விரும்பிப் படிக்கப் படுகின்றன. ஆனால் பத்திரிகைகள்தான் அதிகமாக வெளியிடுவதில்லை" என்றார். லேனா தமிழ்வாணனோ பத்திரிகைகளில் எதை அதிகமாக விரும்புகிறார்கள் என்று ஆய்வு மேற்கண்டபோது முதல் பத்து அம்சங்களில் தொடர்கதை இடம் பெறவில்லை. அதனால்தான் தொடர்கதை வெளியிட பத்திரிகைகள் முன்னுரிமை அளிப்பதில்லை என்றார்.
அவர் சொல்வதில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. முன்பெல்லாம் பத்திரிகைகளை தொடர்கதைகளை வாரந்தோறும் பிரித்தெடுத்து சேகரித்து பைண்ட் செய்து வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. இப்போது யாரும் அப்படிச் செய்வதில்லை. தொடர்கதைகளை படிக்கும் அளவுக்கு யாருக்கும் பொறுமை இருப்பதில்லை.ஆனால் புத்தகமாக இருந்தால் ஒரே மூச்சில் கூட படித்து விடுகிறார்கள்.முன்பு தொடர்கதைகள் பெண்களை கவர்ந்திழுக்கக் கூடிய சக்தி வாய்ந்ததாக இருந்தது.ஆனால்இப்போது தொலைக்காட்சி தொடர்கள் அந்த இடத்தை பிடித்துக் கொண்டதால் தொடர்கதைக்கான மௌஸ் குறைந்துதான் காணப்படுகிறது. ஆனால் மாத நாவல்கள் இன்றும் பெண்களால் ரசிக்கப் படுகின்றன. ரயில்வே ஸ்டேஷன் புத்தகக் கடையில் இன்றும் ரமணிசந்திரன் நாவலை கேட்டு வாங்குவதை காணமுடிகிறது (இதுவரை ரமணிச்சந்திரன் இன் ஒரு நாவலைக் கூட நான் படித்ததில்லை)
ஆனால் சுயமுன்னேற்றத் தொடர்கள்,பிரபலங்களின் அனுபவங்கள் போன்றவற்றிற்கு இப்போதும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் இவற்றை ஒரு வாரம் விட்டுவிட்டால் கூட புரிந்து கொள்வதில் கஷ்டம் ஏதுமில்லை.
பொதுவாக இப்போது வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்றாலும் படிப்பதில் ஏதாவது பயன் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கவேண்டும் அல்லது குறைந்த பட்சம் புதிய தகவல்களாவது இருக்கவேண்டும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. இலக்கியத்தை ரசிப்பது,முந்தைய,தற்போதைய சமூகச் சூழல்களை, வரலாற்றை அறிந்துகொள்வது போன்ற பண்பாட்டுப் பயன்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.நிகழ்ச்சி நன்றாகவே இருக்கிறது.
*********************************************************************************************************************
.
இன்றைய தினம் எனது வலைப் பதிவின் பெயரில் சிறிது மாற்றம் செய்வதாக அறிவித்திருந்தேன். என் சிந்தனையில் இருந்த சில பெயர்களின் பட்டியலை வெளியிட்டு அதில் நான் தேர்ந்தெடுக்க இருக்கும் பெயரை கண்டுபிடிக்கும்படி உங்களுக்கு நினைவிருக்கலாம்
பதிவுலக நண்பர்கள் அன்புடன் தங்கள் ஊகங்களையும் ஆலோசனைகளையும் கூறி இருந்தனர். அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சொன்ன பெயர்களில் சில ஏற்கனேவே உள்ளன என்பதை கருத்துக்கள் மூலம் அறிந்துகொண்டேன். பலர் நல்ல பெயர்களை பரிந்துரைத்தனர். எனது விருப்பமாக நிறப்பிரிகை, மெய்பிம்பம் மாயபிம்பம் இருந்தது. ஆனால் நிறப் பிரிகை பெயரில் வேறு ஒரு வலைபூ உள்ளதை கூகிளில் தேடித் பார்த்த போது தெரிந்தது. மெய்பிம்பம் மாயபிம்பம் சற்று நீளமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் பிம்பம் என்ற பெயரில் ட்வீட் ஒன்றையும் பார்த்தேன். திருமதி ஜயந்தி ரமணி அவர்கள் புல்லாங்குழல் என்ற பெயரை சொல்லி இருந்தார். அந்தப் பெயர் பிடித்திருந்தது. அதன் வழியே சிந்தித்தபோது புல்லாங்குழல் செய்ய உதவுவது மூங்கில். மூங்கில் காகிதம் உட்பட பல பொருட்கள் செய்ய பயன்படுகிறது. மூங்கிலில் நுழைந்த காற்று இசையாக மாறி இன்பம் தருகிறது. எனவே மூங்கில் காற்று என்ற பெயரை தற்காலிகமாக வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். ஒருவேளை இந்தப் பெயரை வேறு யாரேனும் வைத்திருந்தால் வேறு பெயர் மாற்ற வேண்டும்.
இந்தப் பெயரில் வலைப்பதிவு இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.
இது தொடர்பாக கருத்திட்ட அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
*******************************************************************************************************************
பதிவுலகில் நிறையப் பேர் 200 பதிவுகளை சர்வ சாதரணமாக எழுதி இருக்கிறார்கள். அற்புதமான எழுத்தாற்றலும் ஏரளாமான விஷயங்களும் கொண்டு பல்வேறு வல்லுனர்கள், அறிஞர்கள், கவிஞர்கள்,படைப்பாளிகள் வகை வகையாக சிறப்பான பதிவுகளை எழுதி வருகிறார்கள். இவர்களுக்கிடையில் எனது பதிவுகளையும் அங்கீகரித்து பாராட்டி, ஆலோசனை கூறி. கருத்துக்கள் இட்டவர்களுக்கும் வாசித்தவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்
*****************************************************************************************
இதைப் படித்தீர்களா?
சுஜாதாவுக்கு கவிதை எழுதத் தெரியுமா?

புல்லாங்குழல் செய்ய உதவுவது மூங்கில்,மூங்கில் காகிதம் உட்பட பல பொருட்கள் செய்ய பயன் படுகிறது.மூங்கிலில் நுழைந்த காற்று இசையாக மாறி இன்பம் தருகிறது. எனவே மூங்கில் காற்று என்ற பெயரை தற்காலிகமாக வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். //
பதிலளிநீக்குஅருமையான பெயர் தேர்வு.
வாழ்த்துக்கள்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்
நீக்கு
பதிலளிநீக்கு"லேனா தமிழ்வாணனோ பத்திரிகைகளில் எதை அதிகமாக விரும்புகிறார்கள் என்று ஆய்வு மேற்கண்டபோது முதல் பத்து அம்சங்களில் தொடர்கதை இடம் பெறவில்லை. அதனால்தான் தொடர்கதை வெளியிட பத்திரிகைகள் முன்னுரிமை அளிப்பதில்லை என்றார்."
நமக்கு எல்லாமே முன்னிலையில் இருக்கவேண்டு, முப்பது மாணவர் படிக்கும் வகுப்பறையில் தன் பிள்ளைதான் முதல் மதிப்பெண் பெறவேண்டும். பத்தாவதோ பதினோராவதோ மதிப்பெண் வாங்கட்டுமே என்ன கொரஞ்சிடப்போவுது. அப்படிவாங்கின பிள்ளையை படிப்பைவிட்டே நிருத்திட்டோம்ன்னு சொல்லராமாதிரி இருக்கு லேனா தமிழ்வாணன் சொல்றது. முதல் பத்து இடத்துல இல்லைன்னா என்ன நீங்க தொடரவேண்டியதுதானே? சுத்தமா நிருத்திட்டதால படிப்பில்ல கெட்டுபோச்சு.
அவர்களுக்கு புத்தகம் விற்கவேண்டும் என்பதுதான் முதல் நோக்கம்
நீக்கு//200 பதிவு/
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அண்ணா. பட்டைய கிளப்புங்க..
நன்றி ஹாரி
நீக்குI'm really inspired with your writing skills as neatly as with the structure on your blog. Is this a paid subject or did you modify it yourself? Anyway keep up the nice high quality writing, it's uncommon
பதிலளிநீக்குto peer a nice blog like this one nowadays..
My web site ray ban uk
Thanks for your comment
நீக்குவாழ்த்துக்கள் பாஸ் !!
பதிலளிநீக்குநன்றி சிவா
நீக்கு200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சியை பார்க்க முடியாம போனாலும் உங்க பதிவு மூலம் தெரிஞ்சிக்க முடியுது.பல பேர் விமர்சனங்கள் எழுதினாலும் நீங்கள் சரியாக சுவாரஸ்யமாக கருத்தை நேர்த்தியாய் சொல்லிவிடுகிறீர்கள். அதனால் தொலைக்காட்சியை மிஸ் பண்ணினாலும், நிகழ்ச்சி பற்றி உங்க பதிவை மிஸ் பண்ணாம படிச்சிடறதுண்டு.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குஇருநூறாவது பதிவுக்கு
பதிலளிநீக்குமனம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பரே..
பலநூறு படைத்திடுங்கள்...
நன்றி மகேந்திரன்
நீக்குமூங்கில் காற்றாய் முளைதெழுந்தமைக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகிராமத்தில் மூங்கில் வாசம், மூங்கில் காற்று இவற்றை அனுபவித்துப் பார்த்ததுண்டு. உங்கள் வலைப் பதிவில் மூங்கிலின் காற்றும் வாசமும் வீசட்டும்!
நன்றி தமிழ் இளங்கோ சார்
நீக்கு‘மூங்கில் காற்று’ என்ற பெயர் மிக அருமை. பொங்கல் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குபெயர் தேர்வு அருமை... & .இருநூறாவது பதிவுக்கு
பதிலளிநீக்குமனம் கனிந்த வாழ்த்துக்கள்
நன்றி மதுரை தமிழன்
நீக்கு200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!பாராட்டுக்கள்..
பதிலளிநீக்கு‘மூங்கில் காற்று’ இசையுடன் வருகைக்கு வாழ்த்துகள்...
நன்றி ராஜேஸ்வரி மேடம்
நீக்குஇருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அதோடு பொங்கலுக்கும் வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குநன்றி மனோ சார்!
நீக்கு200க்கு வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜசேகர்
நீக்கு200 பதிவுகள் சாதனை தன இவ்வளவு தூரம் தாக்குப் பிடிப்பது என்பது சாதரான காரியம் இல்லை. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி சீனு
நீக்குagaligan karuthu miga miga sari. ivargal seiyum thavarukku matravar mel pazhi podugirargal. My hearty congrats to you for Double Century and heartful wishes to hit many more successful centuries murali.
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கணேஷ் சார்!
நீக்குஇனிய பொங்கல் வாழ்த்து.
பதிலளிநீக்கு200வது பதிவிற்கு இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
இரட்டைச் சதமடித்து விட்டீர்கள்!.வாழ்த்துகள் முரளிதரன்
பதிலளிநீக்குஎஸ்,ரா வாழ்வின் நிதர்சன எழுத்தாளர்,வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி குட்டன்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு
நீக்குதொடரும் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
வணக்கம்!
பதிலளிநீக்குஒவ்வொரு நாளும் உயா்தமிழைத் தேடிவரும்
செவ்விய நண்பா முரளி! தெளிதமிழை
இட்டுச் சிறந்தாய்! இருநுாற்றை இன்று..நீ
தொட்டுச் சிறந்தாய் தொடா்ந்து
பதிலளிநீக்குமீண்டும் வணக்கம்!
மூங்கிற் காற்றின் இனிமையினை
முரளி தரனே இசைத்திடுக!
ஏங்கித் தவிக்கும் காதலென
எழுத்தை எழிலாய்ப் படைத்திடுக!
தாங்கி நிற்கும் விழுதாகத்
தமிழைத் தரித்துக் தழைத்திடுக!
ஓங்கி அளந்த திருவடியான்
ஒப்பில் புகழை அருளுகவே!
கவிஞா் கி.பாரதிதாசன்
பிரான்சு
மூங்கில் காற்றுக்கும் - 200 க்கும் வாழ்த்துகள்
பதிலளிநீக்கு