என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 29 ஜனவரி, 2013

நீயா? நானா?காதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா?



   நமது சமுதாயத்தில் காலம் காலமாக காதல் திருமணங்கள் நடந்ததாலும் கூடவே அதற்கு ஆதரவும்,  எதிர்ப்பும் இருந்து  வந்திருக்கிறது. ஆனால் இப்போது ஆதரவு கூடி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இதில் சினிமாவிற்கு பெரும்பங்கு உண்டு.
  20.01.2013 அன்று நீயா நானா நிகழ்ச்சியில் காதலை ஆதரிக்கும் பெற்றோர்களும் எதிர்க்கும் பெற்றோர்களும் விவாதித்தனர். வழக்கம்போல கோபியூத் சாரி கோபிநாத் காதலை ஆதரித்து பேசினார்.(கோபிநாத்தின் திருமணம் காதல் திருமணம் இல்லை என்று நினைக்கிறேன்.)

 காதல் திருமண எதிர்ப்பிற்கு காரணம் சாதிதான் என்று  நிகழ்ச்சியில்  பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களில் சுபவீ அவர்களின் பேச்சு எதிர்வாதம் செய்ய முடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது. ஆனால் வாதம் செய்ய முடியாதே தவிர மனதை மாற்றிவிடுமா என்றால் சந்தேகமே! பத்திரிகையாளர். இறைவன் ,"என்னதான் சாதிகள் வெளியே இல்லை என்று சொன்னாலும் உள்மனதில் சாதீய உணர்வு இருப்பதை   மறுக்க முடியாது" என்றார்.

அதற்கு உதாரணம் இதில் பங்கேற்ற ஒருவர் இளவயதில் சாதி மதம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்தவர்.அவர் கூட  பிற்காலத்தில் தன் வாரிசுகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியது பத்திரிகையாளர் இறைவன் கருத்தில் இருந்த உண்மையை சுட்டிக் காட்டியது.

  தாழ்த்தப்பட்ட இனத்தில் பெண் கொடுப்பதையோ எடுப்பதையோ விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தது ஒரு தரப்பு. சமூகத்தில் பலர் சொல்லவில்லையே தவிர உள்மனதின் நிலை இதுதானே!

  கிராமப் புறங்களில் காதல் திருமணம் ஒரு பிரச்சனையாக இருந்தாலும் தற்போது குறிப்பாக நகர்ப்புறப் பெற்றோர்களின் மனநிலை மாறியுள்ளதாகவே தெரிகிறது. நிச்சயிக்கப்படும்  திருமணங்களிலும் இப்போது மாற்றம் வந்திருக்கிறது.   உட்பிரிவுகளை பொருட் படுத்தாமல் நிச்சயம் செய்யப் படுகிறது. காதல் திருமணத்தை விரும்பாவிட்டாலும் தீவிர எதிர்ப்பு காட்டுவதில்லை. மகன் அல்லது மகனுடன் பேசி காதல் திருமணத்தை நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாற்றிவிடுகிறார்கள்.அதனால் பல சிக்கல்கள் தீர்ந்து விடுகிறது. உறவினர்களின் முணுமுணுப்பை கண்டு கொள்வதில்லை. 

  எனது நண்பர்களில் ஒரு சிலர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சிலரது காதல் பாதியில் முடிந்திருக்கிறது. இந்தக் காதல்களில் ஒரு விஷயம் கவனித்தேன். நகர்ப்புறமாக இருந்தாலும் சாதிகளின் பங்கு இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய இனத்தை விட  உயர்ந்த சாதியாக தாங்களே கருதும் பெண்களைத்தான் காதலிக்கிறார்கள். இதனை சாதனையாகவும் நினைக்கிறார்கள்.இதற்கு பல சமூக காரணங்கள் உண்டு.. இதற்கு பையனின் பெற்றோர்கள் அதிக எதிர்ப்பு காட்டுவதில்லை.

    கீழ் நிலையில் உள்ளதாககக் கருதப்படும்  இனத்தின்  பெண்ணை  காதலிப்பதை பெற்றோர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தன்பெண்  தன்னைவிட கீழ் சாதியாக கருதப்படும் ஆணை  காதலித்தால்  வெட்டிவிடுவேன் என்று சொன்னது அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் சில இடங்களில் அவ்வாறுதான் நடந்து கொண்டிருகின்றன.

 நிகழ்ச்சியில்   தாழ்த்தப்பட்ட இனப் பெண்ணை யார் காதலிப்பதற்கும் தடை ஏற்படுவதில்லை  என்றார்  எழுத்தாளர் இமயம்
   ஆனால் தன் இனத்தை விட  கீழானதாக நினைக்கும்    சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்வது அரிய நிகழ்வாகத்தான் இருக்கிறது.  காதலிப்பவனே  திருமணம் செய்து கொள்ள முழுமனதுடன் விரும்புவதில்லை என்றே கருதுகிறேன்.  இதற்கு விலக்குகளும் உண்டு.

  ஆண்  அழகைப் பார்த்தே காதலை தொடங்குகிறான். தொடர்கிறான்
தொடக்கத்தில் ஆணின் தோற்றத்தால் பெண்கள் கவரப் பட்டாலும் தன்னை உண்மையாக காதலிப்பவன் என்று பெண் நினைத்தால் அவனது அழகைப் பற்றி சிந்திப்பதில்லை என்பது எனது கருத்து. பெண்கள் பெரும்பாலும் சாதிகள் பார்ப்பதில்லை என்பது நல்ல விஷயம்.

   காதலால் சாதிகள் ஒழியும் என்ற நப்பாசை நிறையப் பேருக்கு உண்டு.எத்தனையோ காதல் திருமணங்கள் நடந்தாலும் சாதிகள் ஒழிய அது உதவியதா என்பது கேள்விக் குறியே! மேல் தட்டு வர்க்கத்தினரிடம் காதல் பெரிய  பாதிப்பை ஏற்படுத்துவதில்லை நடுத்தர வர்க்கமும் ஏழை வர்க்கமுமே காதலால் அதிக பாதிப்பை சந்திக்கின்றன.

   எந்த  சாதியாக இருந்தாலும் அழகான அல்லது திறமையான பெண்களே காதலிக்கப்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. காதலிக்கப்படாத அல்லது காதலிக்காத பெண்களுக்கு நிச்சயிக்கப்படும் திருமணமே கை கொடுக்கிறது. யாருக்காவது வறுமையில் வாடும் பெண்ணை பார்த்து காதலிக்கவும் திருமணம் செய்து கொள்ளவும் தோன்றுகிறதா என்று கேட்கப்பட்ட கேள்வி சிந்திக்க வைத்தது.

  நல்ல மாற்றங்களுக்கு காதல் திருமணம் உதவினால் மகிழ்ச்சிதான். அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

*****************************************************************************************

42 கருத்துகள்:

  1. அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை
    ஆயினும் சுருக்கமாக அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. காதல் கல்யாணங்களால் சாதிகள் ஒழிவதில்லை ஆனால் அதன் மூலம் சமுதாயத்தில் இல்லாத ஒரு புதிய சாதி தோன்றுகிறது என்பதுதான் உண்மை

    பதிலளிநீக்கு
  3. ஆனால் தன் இனத்தை விட கீழானதாக நினைக்கும் சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்வது அரிய நிகழ்வாகத்தான் இருக்கிறது. காதலிப்பவனே திருமணம் செய்து கொள்ள முழுமனதுடன் விரும்புவதில்லை என்றே கருதுகிறேன். இதற்கு விலக்குகளும் உண்டு.

    satthiyamaana unmai ithu nanpa....!

    பதிலளிநீக்கு
  4. ஆணின் தோற்றத்தால் பெண்கள் கவரப் பட்டாலும் தன்னை உண்மையாக காதலிப்பவன் என்று பெண் நினைத்தால் அவனது அழகைப் பற்றி சிந்திப்பதில்லை//..........உண்மை

    பதிலளிநீக்கு
  5. நல்ல மாற்றங்களுக்கு காதல் திருமணம் உதவினால் மகிழ்ச்சிதான். அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.//

    உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  6. இந்த டாபிக்கை நீங்க எப்ப எழுதுவிங்கன்னு பார்த்தேன்.. இந்த டாபிக் ல காதலுக்கு ஆதரவா வேலூரிலிருக்கும் என் அன்பிற்குரிய தோழி பொன்னரசி பேசினாங்க. அவங்க என்னையும் நீங்க கலந்துகிட்டு பேசினீங்கன்னா நல்லாயிருக்கும்னு சொல்வாங்க. டி.வி பார்க்க நேரம் கிடைப்பதில்லை..! மற்றபடி நல்ல நிகழ்ச்சிகளை ரசிக்க விருப்பம்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னமே எழுத வேண்டிய பதிவு.சற்று தாமதமாகி விட்டது.தங்களைப் ஒன்றவர்களின் ஆதரவினால்தான் எழுத முடிகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. காதல் திருமணத்தால் சாதி ஒழிவதில்லை ஆணின் சாதியைத்தானே குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். சாதி பட்டியலில் ஒன்றும் இல்லை என்று வந்தால் தான் இந்த நிலை மாறும் . நீங்கள் கூறியது போல் தங்களை விட குறைவான இனத்தவரை திருமணம் செய்ய தங்களுக்கு மனம் ஒப்பினாலும் ஊராருக்காக போலி முகமூடி போட்டு பிள்ளைகளை ஒதுக்கிவிடுகிறார்கள் முரளிதரன் பதிவிற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. டி.வி நிகழ்ச்சியை பார்க்கறதை விட முரளி சார் நீங்க சொல்ற விமர்சனமே பார்த்தது போல் சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. நீயா நானா தொடர்க!

    பதிலளிநீக்கு
  9. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. எழில் மற்றும் அ.உண்மைகள்:
    ஆணின் சாதியைத்தானே குழந்தைகளுக்குக் கொடுப்பதும், புதிய ஜாடியை உருவாக்குவதும் இந்தியா, இலங்கை மற்றும் சில தென்கிழக்கு நாடுகளில் என்றால் சரி.

    மற்றபடி, மேலை நாடுகளில் நீங்க சொன்னபடி இல்லை...இங்கு ஜாதியும் கிடையாது...இங்கு race -உம கிடையாது...

    பதிலளிநீக்கு
  11. என் வருத்தம் என்னவென்றால் காதல்...வயது...முதிர்ச்சி..இவற்றை ஒரே வாக்கியத்தில் இட்டு யாருமே பேசவில்லை என்பது தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்ற இன்னும் சில அம்சங்கள் பேசப் படவில்லை.காதல் திருமண எதிர்ப்பிற்கு இதை யாரும் ஒரு காரணமாக சொல்லவில்லை.அனைவரும் சாதி பற்றியே பேசினர்.

      நீக்கு
  12. காதலுக்குக் கண் இல்லைதான்!
    ஆனால் தன்னலம் இருக்கத்தான் செய்கிறது.

    த.ம. 4

    பதிலளிநீக்கு
  13. கோபிநாத்தின் திருமணம் காதல் திருமணம் இல்லை என்று நினைக்கிறேன்.\\
    ஹா..... ஹா..... ஹா.....

    \\இறைவன் ,"என்னதான் சாதிகள் வெளியே இல்லை என்று சொன்னாலும் உள்மனதில் சாதீய உணர்வு இருப்பதை மறுக்க முடியாது" என்றார்.\\ இது தான் உண்மை, கசந்தாலும்.


    \\அதற்கு உதாரணம் இதில் பங்கேற்ற ஒருவர் இளவயதில் சாதி மதம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்தவர்.அவர் கூட பிற்காலத்தில் தன் வாரிசுகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியது பத்திரிகையாளர் இறைவன் கருத்தில் இருந்த உண்மையை சுட்டிக் காட்டியது.\\ காதல் திருமணத்தால் சமுதாயத்தினரால் நாங்கள் பட்ட கஷ்டத்தை நீங்கள் படவேண்டாம் என்ற எண்ணம் தான் இதற்க்குக் காரணம்.


    \\எத்தனையோ காதல் திருமணங்கள் நடந்தாலும் சாதிகள் ஒழிய அது உதவியதா என்பது கேள்விக் குறியே!\\ எத்தனையோ என்பதை விட எத்தனை சதவிகிதம் என்று பாருங்கள், 1 க்கும் கீழேதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதல் அத்தனையும் திருமணத்தில் முடிவதில்லை என்பது உண்மைதான்.

      நீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. சொந்தபந்தங்கள் புறக்கணித்தாலும், தனித்து வாழ்வதற்கான வசதிகளும் ‘தில்’லும் இருந்தால் தயக்கமின்றிக் காதல் திருமணங்களை ஆதரிக்கலாம்.

    நிகழ்ச்சியைத் தெளிவாகவும் சுவையாகவும் சுருக்கித் தந்துள்ளீர்கள்.

    மகிழ்வுடன் பாராட்டுகிறேன் முரளி.

    பதிலளிநீக்கு
  16. நீயா நானா நிகழ்ச்சி காதல் திருமணஙகளைப்பற்றிப் பேசும் போது தன் முகத்தை வெளிப்படையாகவும் காட்டிக்கொண்டது. அம்முகம் இன்றைய தமிழ்ச்சமூகத்தின் முகம். எந்த ஜாதியினரையும் சம்பந்தியாக ஏற்றுக்கொள்வோம் ஆனால் தலித்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றனர்.

    இதிலிருந்து தெரியவருவது இது வெறும் காதல் திருமணங்களுக்கு மட்டுமல்லாமல், எல்லாவற்றுக்குமே தலித்துகள் ஒதுக்கப்படவேண்டிய இழிவானவர்கள் என்பதே.

    முடிவில் கோபிநாத் சொன்னார்: நான் இங்கு கலந்து கொண்டவர்களின் கருத்துக்களை வைத்து அவர்களைக் குற்ற்வாளிகளாகப்பார்க்கவில்லையென்றார். அதன்படி, தலித்துக்கள் ஒதுக்கப்படவேண்டிய இழிவானவர்கள் என்ற எண்ணம் குற்றமில்லை.

    இதற்கு என்ன காரணம்? ஏன் இச்சமூகத்தில் ஒரே ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் இழிவானவர்கள்? ஏன் படித்தவர் படிக்காதவர் ஏழை பணக்காரன் என்று எவர் பார்த்தாலும் தலித்துக்களை கீழான இழிபிறவிகளாகப்பார்க்கிறார்கள்?

    எனக்குப்புரியவில்லை. உங்களுக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தர்மப்படியும் நியாயப் படியும் அது குற்றம்தான். சுபவீ அவர்கள் சொன்னது போல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உள்ளவற்றை ஒரு நூற்றாண்டில் மாற்றிவிடமுடியாது.இந்த மன நிலை மாறும்.ஆனால் இன்னும் காலம் பிடிக்கும்.

      நீக்கு
  17. //அருணா செல்வம்January 29, 2013 at 8:24 PM

    காதலுக்குக் கண் இல்லைதான்!
    ஆனால் தன்னலம் இருக்கத்தான் செய்கிறது.//

    சரியாக சொன்னீர்கள் தன்னலத்தின் உச்சம்தான் காதல்

    ஒருவருக்கு காதல் ஒருமுறை மட்டும் தான் வருமா? கல்யானம் முடிந்து குழந்தைகள் பெற்ற பின்பும் வருமா? ஒரு முறை காதலித்து காதல் திருமணம் செய்தவர் இன்னொருவரை காதல் செய்யும் வாய்ப்பு இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமணம் செய்தவர் ஏமாந்தால் எத்தனை காதல் வேண்டுமானாலும் வரும்.

      நீக்கு


  18. தரமான விமர்சனம்! தங்கள் கட்டுரை தெளிவான சிந்தனை!நன்று!

    பதிலளிநீக்கு
  19. நானும் இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை இருப்பினும் தங்கள் விமர்சனம் மற்றும் அனைவரின் கருத்துக்களையும் படித்ததில் மகிழ்ச்சி அனைவரின் கருத்தும் அறிய வாய்ப்பு கொடுத்த தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. //காதலுக்குக் கண் இல்லைதான்!
    ஆனால் தன்னலம் இருக்கத்தான் செய்கிறது.//

    It s rather surprising as it comes from a woman poster here. If selfishness or self interest, (both have slightly different meanings in phycology), is the base of a love between a man and a woman, it is not love but convenience. There are plenty of so-called 'love' marriages which can be called marriages of conveniences. But they are not truly love marriages. Love between a man and a woman - to come to together to live in a marriage - is thoroughly selfless, or interest of other person uppermost but it s rare.

    Aruna Selvam and most of us have been led to think that all love marriages are founded on selfishness. Why? Our society, as a whole, is deeply immersed in material values. Sons killing parents for property is a daily news in newspapers.

    Occasionally, I have seen true love between a man and a woman. Men committing suicide or women doing that, unable to bear the thought of having another person in the place of the one loved in their future married life - are seen today sometimes. Can we call these aborted love affairs based on selfish? Or, committing suicide unable to bear the death of the loved one? Can we call these selfish?

    பதிலளிநீக்கு
  21. பின்னாளில் இவர்களும் பெற்றோர் ஆவார்கள்!

    பதிலளிநீக்கு
  22. கல்லூரிக்காலத்தில் எடுத்த பாடம்
    கவனத்தையும் காதலையும்
    மிகவும் ஈர்த்திருந்தபடியால்
    பெண்ணைக்காதலிக்க நேரமில்லை.

    பதிலளிநீக்கு
  23. (உண்மையான)காதல் திருமணங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சாதியை மையப்படுத்தியே காதல் கண்மூடித்தனமாக எதிர்க்கப்படுகின்றன.. அதைத்தான் நிகழ்ச்சி கூறியது..

    பதிலளிநீக்கு
  24. எல்லா (பெற்றோர் பார்த்து வைத்த திருமணம், காதல் திருமணம், கலப்பு திருமணம், மறுமணம் என்று ) திருமணங்களிலும், வாழ்க்கையில் வெற்றியும் இருக்கிறது. தோல்வியும் இருக்கிறது. தோல்வியை மட்டுமே படம் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். நீதிமன்றங்களில் இருக்கும் பல குடும்ப வழக்குகள் எல்லா ஜாதியிலும் இருக்கின்றன. தன் ஜாதிக்காரன் என்று யாரும் விட்டுக் கொடுப்பதில்லை.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895