என்னை கவனிப்பவர்கள்

சனி, 26 ஜனவரி, 2013

உங்களுக்கு குடியரசு தினம்!..ஆனால் எனக்கு?

இது சரவணன் மீனாட்சி
 இன்னைக்கு  குடியரசு தினம் சந்தோஷமாக கொண்டாடி  இருப்பீங்க இன்றுதான் நமது அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள். அது மாதிரி எனக்கும் புது சட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்ட நாள் அதாங்க எனக்கு திருமண நாள். அதனால காலையில  இருந்து சட்ட திட்டங்களை மீறி பதிவு எதுவும் போடமுடியல
   இப்பதான் டைம் கிடைச்சது கல்யாணம் மனைவி  பற்றிய சில ஆங்கிலப் பொன்மொழிகளை போட்டு உங்களை கடுப்பேத்தலாம்னு  முடிவு பண்ணேன். உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தாலும் சும்மா இன்னொரு தடவை படிச்சு பாருங்க 
எனக்கு தெரிஞ்சவரை தமிழ் படுத்தி இருக்கேன். தப்பா இருந்தா சொல்லுங்க . நான் கொஞ்சம் பீட்டர்ல வீக்

1.In my house I’m the boss, my wife is just the decision maker.

- Woody Allen

என்  வீட்டில் எல்லா அதிகாரமும் எனக்கே.என் மனைவி சும்மா முடிவு எடுப்பவர் மட்டுமே .

2. My wife and I were happy for twenty years. Then we met.-
- Rodney Dangerfield
  நானும் என் மனைவியும் 20 வருடமா சந்தோஷமா இருந்தோம்.அதாவது திருமணம் ஆகும் வரை 


3. After marriage, husband and wife become two sides of a coin; they just can’t face each  other, but still they stay together.-
- Henny Youngman
 திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.எதிர் எதிராக இருந்தாலும் இணைந்துதான் இருக்கவேண்டும் 

4. We always hold hands. If I let go, she shops.-
   நாங்கள் எப்போதும் இணைந்தே செல்வோம்.அவ்வாறு இல்லையெனில் அவள் ஷாப்பிங் சென்றிருக்கிறாள் என்று அர்த்தம்.

5. Marriage is a three ring circus: engagement ring, wedding ring, and suffering.
   திருமணம் என்பது மூன்று மோதிரங்கள் கொண்ட சர்க்கஸ்.1.engagement ring, wedding ring, and suffering.

 6.My husband said he needed more space. So I locked him outside.
  என் கணவர் அவருக்கு அதிக இடம் கொடுக்க வேண்டும் என்றார், வீட்டின் வெளியே இருக்க சொல்லி விட்டேன்.

7. Marriage is when a man looses his bachelors degree and woman gets her masters degree.
   திருமணத்தின் போது ஆண் பேச்சிலர் பட்டத்தை இழக்கிறான். பெண்ணோ முதுகலை பட்டத்தை பெறுகிறாள்

8. I don’t worry about terrorism. I was married for two years

- Sam Kinison

  நான் தீவிர வாதத்தை பற்றி கவலைப் படுவதில்லை.ஏனனில் எனக்கு திருமணம் ஆகிவிட்டது.


9. Marriage is the only war in which you sleep with the enemy.
  எதிரியுடன் உறங்க வேண்டிய ஒரே போர் திருமணம்தான் 

10. Love is blind, marriage is the eye-opener.
    காதல் கண்களை மறைக்கும். கல்யாணம் கண்களை திறக்கும்
  
11-Why are wives more dangerous than the Mafia?
The mafia wants either your money or life… Wives want both! 

  கொள்ளைக்காரனுக்கு  உங்கள் பணம் அல்லது உயிர் ஏதாவது ஒன்று  வேண்டும் . மனைவிக்கு இரண்டும் வேண்டும்  

12. The only moment that my wife listens to me is when I’m talking in my sleep.
   நான் தூக்கத்தில் பேசும்போது மட்டுமே என் மனைவி என் பேச்சை கவனிப்பாள்

13. Behind every successful wife, stands a surprised mother in law.
   ஒவ்வொரு வெற்றி கரமான மனைவிக்கும் பின்னால் அவர் அம்மா இருப்பார் 

14. Marriage is like a public toilet. Those waiting outside are desperate to get in & those inside are desperate to come out...
திருமணம் என்பது ஒரு பொதுக் கழிப்பறை போன்றது.வெளியே காத்துக் கொண்டிருப்பவர்கள் சீக்கிரம் உள்ளே போக துடிப்பார்கள். உள்ளே இருப்பவர்களோ வெளியே வர விரும்புவார்கள்

  15. A good wife always forgives her husband when she's wrong.
   ஒரு நல்ல மனைவி தான் செய்த தவறுகளுக்கு பெருந்தன்மையுடன் கணவனை மன்னித்து விடுவார் 

அப்ப எல்லா நாட்டுலயும் இப்படித்தானா?


*********************************************************************************
என் பதிவிலிருந்து
 
உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?'.
சமையல் காரரே நீங்கதானே!


****************************************************************************
இதைப் படித்து விட்டீர்களா?

26 கருத்துகள்:

  1. இனிய குடியரசு தின வாழ்த்துகள் ..

    இனிய திருமணநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் உங்கள் மனம் போல என்றும் வாழ்க்கை மணம் வீசட்டும் !...
    அருமையான நகைச்சுவைகளைப் பகிர்ந்துள்ளீர்கள் சகோதரரே மிக்க
    நன்றி பகிர்வுக்கு :)

    பதிலளிநீக்கு
  3. எப்போதும்போல தப்பேதும் செய்யாமல்
    எருக்கன் குச்சியால் மட்டும் அடிவாங்காமல்
    முப்போதும்போல முத்தமழ் கொண்டே
    முனகித்திரியாமல் அடக்கமாய் வாழ்க!

    நீடூழி வாழ்க நிமதியாய் வாழ்க
    நினைத்ததெல்லாம் கிடைத்துவாழ்க்கை வாழ்க
    பார்போறற வாழ்க பக்குவமாய் வாழ்க
    பாசத்தோடு எல்லோரின் வாழ்த்தோடு வாழ்க.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள். எதுக்குன்னு சொல்லத் தெரியல?

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் இரண்டு மகிழ்ச்சியான விஷயங்கள்..!

    பதிலளிநீக்கு
  6. தாமதமாய் வாழ்த்து சொல்கிறேன். திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!
    வாழ்க நலமுடன்!

    பதிலளிநீக்கு
  7. இனிய குடியரசு தின வாழ்த்துகள் ..

    இனிய திருமணநாள் வாழ்த்துகள்...

    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் முரளிதரன் உங்கள் மனைவியின் மனம் போல என்றும் வாழ்க்கை மணம் வீசட்டும் !...( உங்கள் மனம் போல என்று வாழ்த்ததான் எழுத ஆரம்பித்தேன் ஆனால் என் மனைவி அருகில் நின்றதால் அதை மாற்றி எழுதிவிட்டேன்)

    பதிலளிநீக்கு
  9. குடியரசு தினத்தில் சுதந்திரம் இழந்தீர்களா! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. பெரும்பாலான "முழி"பெயர்ப்புகளில் அர்த்தம் / ஒரிஜினலின் வீரியம் போய்விட்டது.

    Eg :

    \\Marriage is when a man looses his bachelors degree and woman gets her masters degree.\\ திருமணத்திற்குப் பின்னர் பெண் குடும்பத்தில் அதிகாரம் செலுத்துவதால் Master ஆகிறார், அதனால் masters degree. இந்த அர்த்தத்தை "முதுகலை பட்டத்தை பெறுகிறாள்" என்பது தருகிறதா?!!

    அப்படியே படித்து புரிந்து கொண்டால் மட்டுமே இவற்றின் நோக்கம் நிறைவேறும், மொழி பெயர்த்தால் அர்த்தம் / ஒரிஜினலின் வீரியம் போய்விடும்.

    பதிலளிநீக்கு
  11. திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிவு அருமை.
    இரசித்துப் படித்துச் சிரித்தேன்.
    ஒவ்வொருவரின் அனுபவத்தையும் ஆராய்ந்து எழுதி இருக்கிறார்கள்.
    அதை அழகாகப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
    தூய தமிழ் நாட்காட்டி வாங்க
    அணுகும் முகவரி :
    சின்னப்ப தமிழர்
    தமிழம்மா பதிப்பகம் ,
    59, முதல் தெரு விநாயகபுரம்,
    அரும்பாக்கம் , சென்னை- 600106 .
    அலைபேசி - 99411 41894.

    பதிலளிநீக்கு
  13. மகிழ்வான திருமண நாள் வாழ்த்துக்கள் முரளிதரன்.

    ரொம்ப கஷ்டப்பட்டுடீங்களோ...எப்படியோ எங்களைச் சிரிக்க வைத்துவிட்டீர்கள்

    என் முக நூலில் பகிர்ந்துள்ளேன். நன்றி.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895