என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 1 ஜனவரி, 2013

மனைவிக்கு சமையலில் உதவலாமா?நீயா நானா?


 கடந்த ஞாயிறு அன்று  நீயா நானா? பார்த்திருப்பீர்கள். சமையல் செய்வதில் மனைவிக்கு உதவுவேன் என்று பெருமையுடன் சொல்பவர்கள் ஒருபுறம். உதவ மாட்டேன் என்று அகங்காரத்துடன் சொல்பவர்கள் இன்னொரு புறம்.
     தர்க்க ரீதியாக மனைவிக்கு உதவமாட்டேன் என்று சொல்பவர்கள் நிச்சயம் வெற்றி பெற முடியாது. கோபிநாத் மனைவிக்கு உதவுபவர்கள் பக்கம்தான் பேசுவார் என்பது தெரிந்ததே. கோபிநாத் மட்டுமல்ல யாராக இருந்தாலும் அதைத் தான் செய்திருப்பார்கள்.மனைவிக்கு உதவத் தேவை இல்லை என்று சொல்லி பெண்களுக்கு எதிரானவன் நான் என்று காட்டிக் கொள்ள யார்தான் விரும்புவார்கள்?. அப்படி வாதிட வந்தவர்களும் தன் பக்கம்  நியாயம் இருக்கிறது என்று நிகழ்ச்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். டிவியில் தலைகாட்டலாமே என்றுதான் தோற்கும் அணியில் இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்திருப்பார்கள். நியாயமான காரணங்கள் அவர்கள் பக்கம் இல்லை என்று தெரிந்தும், அவர்களை அழைத்து விட்டு கண்டிக்கிறேன்! அனுமதிக்க மாட்டேன்  என்று சொல்வதை தவிர்த்திருக்கலாம்.

   இரு தரப்பிலும் பெண்களையும் அழைத்து பேச வைத்திருந்தால் அவர்கள் கருத்தையும் அறிந்திருக்க முடியும். அல்லது உதவுபவர்கள் தரப்பினரை மட்டும் அழைத்து மனைவிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை  வலியுறுத்தி இருக்கலாம்.

   தலைப்பு  வேறு மாதிரியும் வைத்திருக்கலாம். பெண்களுக்கு சமையலில் உதவுபர்கள் என்று மனைவியோடு தாய்,  சகோதரி இவர்களையும் இணைத்திருக்க வேண்டும். மனைவிக்கு சமையலில் உதவி செய்யும் கணவர்கள் உண்டு. தாயைப் புகழ்ந்து தள்ளும் ஆண்கள் சமையலுக்கு தாய்க்கு நிச்சயமாக உதவி இருக்க மாட்டார்கள். நமது குடும்பச் சூழ்நிலைகளில் தாய் ஒரு போதும் தன் மகனை சமையல் கட்டுக்கு அழைப்பதில்லை. விதி விலக்குகள் ஏதேனும் இருக்கலாம்.

  இதில் மனைவிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.மனைவிக்கு  சமையலில் உதவி செய்வதில் நான் பெருமை அடைகிறேன் என்று சொல்பவர்கள். என்றேனும் அவர்கள் தாய்க்கோ சகோதரிக்கோ சமையலில் உதவி செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

    எந்தக் குடும்பத்திலும் தாய் தன் மகனுக்கு சமையல் செய்ய கற்றுக் கொள்ள வற்புறுத்துவது இல்லை. தாய் தன் ஆண் பிள்ளைகளுக்கு சமையலில் பெண்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருந்தால் பிற்காலத்தில் அவர்கள் மனைவிக்கு உதவ எந்த தயக்கமும் இன்றி சமையல் அறையில் நுழைவார்கள். 

   ஆண் பெண் சமத்துவம் உள்ள மேலை நாடுகளில் கூட ஆண்கள் சமைக்க உதவுவார்களே தவிர முழு சமையலும் வீட்டில் செய்யும் ஆண்கள் இருப்பார்களா? தெரியவில்லை.
   சமையல்  தொழிலையே பிரதானமாகக் கொண்டவர்கள் கூட வீட்டில் மனைவி/தாய்க்கு  உதவுவார்கள் என்று சொல்ல முடியாது.

   திருமணத்திற்கு முன்பாக அம்மாவுக்கு காய்கறி வாங்கிக் கொடுக்கவாவது சென்றிருப்போமா? (அதுக்கு அப்பா போவார்?) திருமணத்திற்குப் பின் முதலில் மளிகைக் கடைக்கு காய்கறிக் கடைக்கு  சேர்ந்து செல்வோம் பின் தனியாகவும் செல்வோம். இது நடுத்தரக் குடும்பங்களில் வழக்கமாக நடை பெறுவதுதான்..வேலைக்கு செல்லும் பெண்களின் கணவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். அங்கும் செய்யாமல் இருந்தால் அது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

  அதுவும் மனைவி ஆரம்பத்திலேயே இதை வற்புறுத்தினால்தான் ஆண்கள் செய்வார்கள். பின்னர் அது பழக்கமாகிவிடும்,மனைவி உதவி கோரவில்லை என்றால் கணவன் கண்டு கொள்ள மாட்டான்.  ஆனால் கணவன் செய்யும் சிறு உதவிகள்கூட  மனைவியை நிச்சயமாக மகிழ்விக்கும் என்பதில் ஐயமில்லை. அதுவும் அவர்கள் உடல் நலமின்றி இருக்கும்போது செய்யும் உதவிகள் நிச்சயம் நெருக்கத்தை இன்னும் மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. டீ போட்டுக் கொடுத்தால் கூட அவர்கள் முகம் மலரும்.

      சமயலறை பெண்களுக்கானது என்பது  நமது சமூகத்தின் 
நெடுங்கால நடைமுறை. ஆண்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இதில் வரும் மாற்றம் தவிர்க்க இயலாதது.
 
     நம் சமுதாயம் ஆணாதிக்க சமுதாயம். இதில் ஆணுக்கொரு நீதி பென்னுகொரு நீதி என்றுதான் இருக்கிறது. பெண்ணையும் சமமாக மதிக்க வேண்டும் என்று அறிவு சொல்லும். ஆனால் மனம் அதை எளிதில் ஏற்காது. இப்போது மாற்றம் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் முழுமையான மாற்றம் நடை பெற இன்னும் கொஞ்சம்  காலம் பிடிக்கும்.

***************************************************************************************
   

41 கருத்துகள்:

 1. இரண்டு பேரும் வேலைக்குப் போனா, வீட்டில் வேலைக்காரியும் இல்லைன்னா கண்டிப்பா கணவன் 50% எலா வேலைகளையும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். கணவன் மட்டுமே சம்பாத்திக்கப் போகும் பட்சத்தில் அவனுக்கு கிடைக்கும் ஓய்வை வைத்தே அவன் சமையலில் உதவ முடியும்.

  பதிலளிநீக்கு
 2. I would say that those who were on the "no cooking" side were treated as villains.

  It was actually Gopinath who was arguing with them rather than the "cooking help" group. Gopinath should restrict himself to co-ordinating, rather than indulging in arguing. If not he should be ready to answer the question "Do you help your wife in cooking?"

  In my view the episode was biased.

  பதிலளிநீக்கு

 3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  பதிலளிநீக்கு
 4. குடுமபம்னா கணவன் வேலைக்குப் போகனும்... மனைவி பிள்ளைகளை அவர்களுக்குறிய தேவைகளை நிறைவு செய்யனும்... வேலை முடித்து வருகிற கணவனிடம் அன்பாகப் பேசி அவருக்கு குடிக்க ஏதாவது கொடுத்து சமையல் கட்டுக்கு கணவனும் மனைவியுமா சேர்ந்து போகனும்.. பின் சமைத்தைதை அழகாக இருவரும் சேர்ந்து பிள்ளைகளுக்கும் ஊட்டி சாப்பிட்டுவிட்டு தூக்கச் செல்லனும்..

  இப்படித்தான் குடும்பம் இருக்கனும்... இப்ப இருக்கிரதெல்லாம் குடும்பமா என்னு கேட்ட்கத் தோனுது :P

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல காலமாக உள்ள குடும்ப அமைப்பில் நல்லதும் கெட்டதுமான மாறுதல்கள் வந்து கொண்டிருக்கின்றன

   நீக்கு
 5. இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு

 6. வணக்கம்!

  அடுப்பூதும் பெண்ணின் அடிமைநிலை மாற்றத்
  தொடுத்துாதும் ஆக்கம் தொடா்வீா்! - தடுக்கும்
  தடைகளை முற்றும் தகா்ப்பீா்! பழமை
  முடைகளை மாய்ப்பீா் முனைந்து!

  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு
  01.01.2013

  பதிலளிநீக்கு
 7. பெண்கள் சுதந்திரம் என்பது காமெடியான விடயம். வீட்டுராணியாக இருந்தவங்க எல்லாம் முழு நேரம் சமைத்தாங்க, துவைத்தார்கள். அவர்களுக்கு நேரம் இருந்தது. அப்போ எல்லாம் டி வி சீரியல் பார்ப்பதில்லை. குழந்தைகளை பார்த்துக்கிட்டாங்க. புருசன் உழைத்தாந் எல்லாருக்கும் சேர்த்து.

  இன்னைக்கு, மனைவியின் சம்பளம் பல கணவர்களுக்கு முக்கியம், தேவைப்படுது. அவங்க வேலைக்குப் போனால்.. ஒண்ணு யாராவது ஒரு அடிமை (வேலைக்காரப் பெண்) வைத்து, சமையல் செய்யலாம் இல்லைனா இவன் ஒத்தாசை செய்யணும். இங்கேயும் ஆணின் சுயநலம்தான். தியாகம் எல்லாம் இல்லை. He wants her income, so he does some of her routine responsibilities of her including cooking.

  மனைவிக்கு சமையலில் ஒத்தாசை செய்றவன் எல்லாம் யோக்கியன்னு நெனச்சுக்காதீங்க. அதேபோல், தனக்கு சமையல்கட்டு பிடிக்காதுனு சொல்றவன் எல்லாம் மட்டமான ஆம்பளையும் இல்லை.

  ஒவ்வொரு கேஸையும் தனியாக எடுத்து அனலைஸ் செய்வது நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மனைவிக்கு சமையலில் ஒத்தாசை செய்றவன் எல்லாம் யோக்கியன்னு நெனச்சுக்காதீங்க.//
   நான் நிச்சயமாக நினைக்க வில்லை வருண்!

   நீக்கு
 8. கணவன் செய்யும் சிறு உதவிகள்கூட மனைவியை நிச்சயமாக மகிழ்விக்கும் என்பதில் ஐயமில்லை//

  உண்மைதான்.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. தலைப்பு தங்கள் கருத்துப் போல் வைத்திருந்தால் நன்று என்பதே என்கருத்து!

  பதிலளிநீக்கு
 10. இந்த விஷயத்துல என் கணவர் " நோ"ன்னு சொல்லிடுவாங்க.. உன்னால முடிஞ்சா செய் இல்லைன்னா ஹோட்டல்ல பார்த்துக்கலாம்னு கூலா சொல்லிடுவாங்களே தவிர ஒரு சின்ன உதவிக்கு கூட வரமாட்டாங்க..! அவங்க உட்கார்ந்த இடத்தில இருக்கிற காபி தம்ளரை கூட எடுத்து வந்து கிச்சன் பக்கம் போடமாட்டாங்க.. என் தோழி நீயா நானா வரும் நேரம் போன் செய்து உங்க வீட்டுக்காரரை பார்க்க சொல்லுப்பா என்றாங்க. அதெல்லாம் இயல்பா வரனும். வீட்டு வேலைகளில் ஆண், பெண் பிரிச்சு பார்க்காம ஷேர் பண்ணி செய்யும் போதுதான் டென்ஷன் இல்லாம சந்தோஷமா இருக்க முடியும். ஆண்கள் மன நிலை இப்படி வருவதற்கு காரணம் நிச்சயமா அம்மாக்கள்தான்.. ஆண்பிள்ளையை மார்க்கெட் வேலைக்கும் பெண் பிள்ளைக்கு கிச்சன் வேலைக்கும் பழக்க படுத்துவதது அம்மாங்கதான். ஆம்பிளை பிள்ளைக்கு வீட்டு வேலைகள் அழகு கிடையாதுன்னு வளர்ப்பது பெற்றோர்கள்தான். இன்று இருவருமே வேலைக்கு போகும் சூழ்னிலையில் நிச்சயம் ஷேர் பண்ணிக்கனும். பெற்றவங்க அப்படி பழக்கம் பண்ணவில்லை என்றாலும் நாங்க புரியவைத்தால் எத்தனை மாமியார், மாமனார் இயல்பா எடுத்துக்கறாங்க ? உடனே இவன் பெண்டாட்டி சம்பாதிக்கிறான்னு அவ துணியை இவன் காய போட்டுகிட்டிருக்கான் வெட்கமில்லாம என்று பொருமுகிறார்கள். என் கணவர் எனக்கு வீட்டு வேலைகளில் உதவ மறுப்பது அவர் பெற்றோர்கள் ஆணாதிக்கத்தை தூவி வளர்த்து விட்டதுதான். இதில் ஆண், பெண் என்ற விவாதத்திற்கே நான் வரவில்லை. நம் சூழலுக்கு நேரத்தை சமாளிக்க ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டு்ம் என்பதே.

  ஆமா நீங்க கிச்சனை எட்டி பார்க்கிறதுண்டா அதை சொல்லாமலே விட்டுட்டிங்களே...?! எப்படியோ மனைவிக்கு உதவும் கணவர்களுக்கு.. ஐ மீன்.. வீட்டு வேலைகளி்ல் பகிரும் ஆண்களுக்கு என் மரியாதை கலந்த வணக்கங்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிரட்டினா பயந்து போய் செய்யறது உண்டு. ஹிஹி

   நீக்கு
  2. ஹலோ மிசஸ்.. முரளிதரன்... சாரை தினமும் மிரட்டுங்க.. நீங்க கிச்சன்ல வேர்த்து வழிஞ்சிட்டிருக்கும்போது அவர் பாருங்க ஏ.ஸியை போட்டுகிட்டு கம்ப்யூட்டர்ல உட்கார்ந்திட்டிருக்கிறார்.. ஸ்டார்ட் யுவர் வால்யூம்...!

   ( DTH EFFECT STARTING... )

   ( போட்டு கொடுக்கிறது இவ்வளவு இண்ட்ரஸ்ட்டிங்கா இருக்குன்னு தெரியாம போச்சே... அதான் நிறைய பேரு அந்த வேலைய செய்றாங்களா.. நம்மளும் ஸ்டார்ட் பண்ணிடுவோம்... அடுத்தது.. யாரை..?)

   நீக்கு
  3. காதுல பஞ்சை வச்சுக்கிட்டு கண்டிநியு பண்ணுவோமில்ல.

   நீக்கு
 11. முரளி இந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள். உதவுவது அனதுக்கு ஆறுதல் தரும்.
  இனிய 2013. வாருங்களேன் என் பக்கம்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 12. நானும் இந்த நிகழ்ச்சி பார்த்தேன் நண்பரே....
  அன்றாட இல்லப்பணிகளில் உதவுதல்
  என்பது அவரவர்களின் புரிந்துகொள்ளும்
  தன்மையையும் அவர்களுக்கு உள்ளான
  உறவின் வலிமையையும் பொறுத்தே உள்ளது...
  சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும் சில நேரங்களில்
  வித்தாக அமையும்...
  ஆயினும் சமையல் என்பது பெண்ணிற்கு மட்டுமே
  உண்டான அவர்களுக்கு மட்டுமே உரித்தான
  அவர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்ற
  எண்ணம் மாறவேண்டும் என்பது மட்டும்
  விளங்கப்பட வேண்டிய ஒன்று...

  பதிலளிநீக்கு
 13. நான் சமைத்தால் அதை என் மனைவி முகர்ந்துகூட பார்க்கமுடியாது அதனால் நான் அந்த மாதிரியான வேலைக்கு போறதில்லை

  பதிலளிநீக்கு
 14. சமையலுக்கு ஹெல்ப் பண்றது தப்பில்லை சகோ அது உங்க மனைவி மூடை பொறுத்து..,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூடு எப்படின்னு சமையல் அறையில் இருந்து வர்ற சத்தத்தை வச்சு கண்டு பிடிச்சிடுவேன் மேடம். ஹிஹி

   நீக்கு
 15. நான் ஒரு சில வினாடிகள் தான் பார்த்தேன் அந்த வினாடிகளில் ஒருவர் மனைவி செய்யும் சமையலுக்கு ஒரு குறிபிட்ட பணம் (வீட்டு செலவுக்கு என்று பொதுவாக சொல்லியிருக்கலாம்) கொடுக்கிறோம் என்று அவசரப்பட்டு சொல்லிவிட்டு. நன்றாக வாங்கி கட்டி கொண்டார். பிறகு அவரே சொன்னதுக்கு மன்னிப்பும் கேட்டுகொண்டார். அவரை பார்க்க பரிதாபமாக இருந்தது முரளி சார்.

  பதிலளிநீக்கு
 16. நானும் ஒரு அரை மணி நேரம் தான் பார்த்தேன் இப்போதுதான் இரண்டு மணி நேரம் இழுத்து விடுகிறார்களே.

  என் வீட்டில் அவர் தயங்காமல் தேவைப்படும் நேரங்களில் சமையலில் உதவுவார்.சமயங்களில் நான் இல்லாத போது முழுச் சமையலும் செய்வார். இன்னுமொரு சிறப்பு அவரின் அம்மாவும் வேலைக்குச் சென்ற்வராதலால் அம்மா விவசாயம் செய்து வருவதற்குள் சமையலை முடித்து வைப்பாராம். இப்போது என் மகனையும் உதவி செய்யப் பழக்குகிறேன் அவன் முகம் காட்டினாலும் . உன் காலத்தில் குடும்ப வேலைகளை நன்கு பழகிக் கொள் அப்போதுதான் குடும்ப வாழ்க்கை அழகாகச் செல்லும் என அறிவுறுத்துகிறேன்.
  சமையலறை பெண்களுக்கு மட்டுமேயானது எனும் எண்ணத்தை குழந்தைகள் மனதில் விதைக்காமல் அம்மாக்கள் செய்தால் மாற்றங்கள் சாத்தியம் மட்டுமல்ல... அத்தியாவசியமானதும் கூட..

  பதிலளிநீக்கு
 17. உண்மைதான் முரளி சார்.. சிறு சிறு வேலைகளைச் செய்து அவர்களை பெரிய விதத்தில் மகிழ்விக்கலாம்.. ஆனால் அதை பெருபாலானோர் செய்வதில்லை.. நல்ல பகிர்வு.. நன்றி..

  பதிலளிநீக்கு
 18. “உயர்ந்த உள்ளங்கள் உதவுகின்றனர்“ முரளிதரன் ஐயா.

  பதிலளிநீக்கு
 19. //மனைவிக்கு சமையலில் உதவி செய்வதில் நான் பெருமை அடைகிறேன் என்று சொல்பவர்கள். என்றேனும் அவர்கள் தாய்க்கோ சகோதரிக்கோ சமையலில் உதவி செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.//

  இப்படியெல்லாம் கேக்கப்படாது!

  பதிலளிநீக்கு
 20. This is a topic that is near to my heart... Take care! Exactly where are your contact details though?
  Take a look at my blog post :: skin bleaching cream

  பதிலளிநீக்கு
 21. "கிளைமாக்ஸ் சண்டைக்காக ஒரு எரிமலையின் உச்சியிலிருந்து உருளுகிறார்.. முகமெல்லாம் ரத்தம்.. மேக்கிங்கில் காட்டுகிறார்கள், சிரித்துக்கொண்டே வருகிறார் இந்த 58வயது பையன். யோவ் என்னய்யா.. உனக்கெல்லாம் வலிக்காதா.. என்று நமக்கு கோபம் வருகிறது. "

  இதெல்லாம் என்ன பிரமாதம். நம்ம 62வயது தாத்தா இளைஞர் 4 இஞ்சி மேக் அப் போட நடிக்கும் போது இதெல்லாம் பெரிய விஷயமா?

  பதிலளிநீக்கு
 22. ஆண்களை அடையாளம் காட்டியது இந்த நிகழ்வு !

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895