என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 31 டிசம்பர், 2012

நீங்கள் இடும்/உங்களுக்கு கிடைக்கும் கருத்து எந்த வகை?

   
   வலைப்பூ வைத்திருப்பவர்கள் மற்றும் முகநூலில் எழுதுபவர்கள்  தங்கள் எண்ணங்களையும்  படைப்புகளையும் கவிதை கட்டுரை என்று பல்வேறு வடிவங்களில் பதிவுகளாக எழுதி வருகிறார்கள். அதை வாசிப்பவர்களும் பதிவு தொடர்பான தங்கள் கருத்தை வெளிப்படுத்துகிறார்கள். பதிவுகளுக்குக் கிடைக்கும் கருத்தை வைத்து எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை அறிய முடியும். என்றாலும் சில நல்ல பதிவுகளுக்கு கருத்துக்கள் குறைவாகவும் காணப்படுகின்றன. எப்படி இருப்பினும் கருத்துக்கள் அதிகம் கிடைக்கும்போது பதிவெழுதுபவருக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பது என்னவோ உண்மைதான். எல்லாக் கருத்துக்களும் பாராட்டுக் கருத்துக்களாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. கருத்திடுபவர் எப்படி வேண்டுமானாலும் தன் கருத்தை சொல்வார், கிண்டலாகவோ, கோபமாகவோ கூட கருத்திடலாம்.
  எனது பதிவிற்கு இடப்பட்ட  கருத்துக்கள், நான் படித்த மற்ற பதிவர்களின் பதிவுகளுக்குக் கிடைத்த கருத்துக்கள்  இவற்றை வைத்து கருத்திடலை கீழ்க்கண்டவாறு வகைப் படுத்தி இருக்கிறேன்.

1.பொதுவான கருத்திடல்

  அருமை, நன்று, சூப்பர் என்பவை இந்த  வகைக் கருத்துக்களுக்கு உதாரணங்களாகும்.பெரும்பாலான பின்னூட்டக் கருத்துக்கள் இப்படித் தான் காணப்  படுகின்றன.

2.அநாகரீகக் கருத்திடல் : 

    தகாத வார்த்தைகைளைப் பயன்படுத்தி கருத்திடல்.இது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியது.

3.விவாதக் கருத்திடல்: 

  பதிவில் உள்ள விவாதத்திற்குரிய விஷயங்களை எடுத்துக் கொண்டு பதிவெழுதுபவரிடமோ அல்லது கருத்திட்ட பிறரிடமோ தொடர்ந்து பின்னூட்டத்தின் மூலமாகவே விவாதிப்பது. சில சமயங்களில் இவை பதிவை விட சுவாரசியாமாக இருப்பதுண்டு.
     என்னைப் பொருத்தவரை இதுபோன்ற கருத்திடலையும்  தவிர்ப்பது நல்லது.விவாதத்தின் மூலம் தன் கருத்தை பிறர் ஏற்றுக் கொள்ள வைக்க முடியாது என்பதே என் கருத்து. இது வீண் மனக்கசப்பைத் தான் ஏற்படுத்தும் என்பதை பல பதிவுகளின்  பின்னூட்டங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

 4.ஐயக் கருத்திடல்: 
  பதிவு சம்பந்தமான தனது சந்தேகங்களை கருத்தாகப் பதிவிடல்.பெரும்பாலும்,வரலாறு,அறிவியல் தொழில் நுட்ப பதிவுகளில் இவ் வகைக் கருத்திடலைக் காணலாம்

5.விமர்சனக் கருத்திடல்
  பதிவை அலசி ஆராய்ந்து விமர்சித்தல். கவிதை,கதை,திரை விமர்சனம் போன்றவற்றிற்கு இவ்வகைக் கருத்திடலை பார்க்கலாம்.

6.விளக்க கருத்திடல். : 
   பதிவுகளில் சொல்லப்பட்டுள்ள தனிப்பட்ட நபரைப் பற்றியோ அல்லது துறையைப் பற்றியோ தவறான தகவல்கள் இருந்தால் சார்ந்தவர் அதைப் பற்றிய விளக்கம் தருதல்.

7. தொடர்பிலாக் கருத்திடல்: 
    பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் உங்கள் வலைப்பதிவு அழகாக உள்ளது,வந்தேன்,நலமா? ரொம்ப நாளாக காணவில்லையே என்பன போன்ற கருத்திடல் இந்த வகைக்குள் அடங்கும்.

8. விளம்பரக் கருத்திடல்: 
   திரட்டிகளில் இணையுங்கள்,என் வலைப் பக்கத்திற்கு வாருங்கள் என்பன போன்ற கருத்திடல்.

9.. முரண் கருத்திடல்: 
  ஒரு பதிவுக்கு ஆதரவாக கருத்திட்டு விட்டு அதற்கு எதிராகப் போடப்படும் பதிவிலும் அதற்கும் ஆதரவாக, அதாவது தான்  முன் இட்ட கருத்துக்கு முரணான கருத்திடல்.

10.கிண்டல்/நையாண்டிக் கருத்திடல்: யாரையும் புண் படுத்தாத வகையில் நகைச்சுவையுடன் கருத்திடல்  

11. வாழ்த்துக் கருத்து: 
   பிறந்த நாள் வாழ்த்து,100 வது பதிவு வாழ்த்து,புத்தாண்டு வாழ்த்து,நன்றி  போன்றவை.

12. குறியீட்டுக் கருத்து:  கருத்துகளை வார்த்தைகளால் தெரிவிக்காமல் Smileys மூலம் கருத்தளிப்பது.

  இதெல்லாம் போக இன்னொரு வகையும் உண்டு அதாவது கருத்திட வேண்டும் நினைத்தும் போடாமல் இருப்பது.

வேறு  சிலவும் விடுபட்டிருக்கலாம்

   மேற்கண்டவற்றில் இரண்டாவது வகையைத் தவிர மற்ற வகைகளை சூழ் நிலைக்கேற்ப பயன் படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் கருத்திடல் எந்த வகை?

***************************************************************************************

இதுல ஏதாவது ஒரு கருத்தை சொல்லிட்டுப்  போங்க!


45 கருத்துகள்:

 1. //இதெல்லாம் போக இன்னொரு வகையும் உண்டு அதாவது கருத்திட வேண்டும் நினைத்தும் போடாமல் இருப்பது.//

  இது நம்ம வழி, தனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ வழி.

  பதிலளிநீக்கு
 2. நாம பொதுவா பாராட்டுற ரகம்! கருத்திடல் பற்றிய உங்கள் கருத்துக்கள் அருமை! எப்புடி? பகிர்வுக்கு நன்றி முரளி!

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் இணைக்காமலிட்ட பன்னிரண்டாவது வகையை நண்டு நொரண்டு சொல்லிவிட்டார்.

  12. கருத்தை சொற்களால் போடாமல் சிமிலியால் மட்டுமே சொல்வது.

  பதிலளிநீக்கு
 4. நன்றி சார்!உங்கள் கருத்து வகையையும் சேத்துட்டேன்.

  பதிலளிநீக்கு
 5. இத்தனை வகை இருக்கா ?

  நான் பொதுவா தெரியாததை தெரிந்து கொள்ளும் ஆவலில் கருத்திடுவேன். வாழ்த்தும் பாராட்டும் நிறைந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 6. புது வருடத்தில் தோல்வி மேகங்கள் விலக வெற்றிச்சூரியன் சுடர்விட வாழ்த்துகள் – வாழ்த்துக்கருத்திடல்தான் நண்பரே

  பதிலளிநீக்கு
 7. புத்தாண்டு மகிழ்ச்சி வருடம் முழுவதும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 8. கருத்துகளின் தொகுப்புகள் அருமை .. பாராட்டுக்கள்..

  11. வாழ்த்துக் கருத்து:
  பிறந்த நாள் வாழ்த்து,100 வது பதிவு வாழ்த்து,புத்தாண்டு வாழ்த்து,நன்றி போன்றவை.

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 9. இடுகைகள் பற்றிய புதிய அகன்ற பார்வை. பாராட்டுகள்.

  தன் வலைதளத்தின் ‘தரவரிசை’யை மேம்படுத்துவதற்கும் பின்னூட்டம் இடுவதாகச் சொல்கிறார்களே, உண்மையா முரளி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பரமசிவம் .நாம் இன்னொருவருக்கு கருத்திடுவதால் தர வரிசை நிச்சயம் மேம்படாது.ஆனால் நம் பதிவுக்கு இடப்படும் கருத்துக்களும் வாக்குகளும் தமிழ்மண தர வரிசைக்கு உதவும்.நாம் கருத்திட்டால் பதிலுக்கு அவரும் வந்து கருத்திடக் கூடும்.ஆனால் கருத்துக்கள் மட்டுமே தரவரிசை உயர்விற்கு உதவாது.பார்வையாளர் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கவேண்டும்.
   அலெக்சா தரவரிசை பின்னூட்டங்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.எனது பெரும்பாலான பதிவுகளுக்கு தமிழ்மண வாக்குகள் குறைவாகவே கிடைக்கின்றன.

   நீக்கு
 10. எதுவுமே சொல்லாமல் போனால் என்னையும் இந்த வகைப்படுத்தாத நிலையில்(இதெல்லாம் போக இன்னொரு வகையும் உண்டு அதாவது கருத்திட வேண்டும் நினைத்தும் போடாமல் இருப்பது) சேர்த்து விடுவீர்களோ?

  அதனால் வருகையையாவது பதிவு செய்ய வேண்டுமோ?

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. கருத்து பற்றி கருத்தா.. நல்லாவே பிரிச்சி பிச்சிட்டிங்க... !

  பதிலளிநீக்கு

 12. நல்ல அலசல்! என்னைப் பொறுத்தவரை, என் பதிவானாலும் அல்லது மறுமொழியானாலும் சரி, மனதில் தோன்றுவதை எழுதுவேன்!

  பதிலளிநீக்கு
 13. வெவ்வேறு வகையான கருத்திடல் பற்றி (இத்தனை வகைகள் இருக்கிறதா?) அருமையானதொரு அலசல்.
  உங்களின் பல பதிவுகளைப் படித்தும் கருத்திடாமல் போயிருக்கிறேன். நான் எந்த வகை என்று புரிந்திருக்கும்.
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி!நாம் நம்மையும் அறியாமல் இதையெல்லாம் பயன் படுத்திக் கொண்டிருக்கிறோம்

   நீக்கு
 14. கருத்தான பதிவு
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 15. கருத்துரை (COMMENTS) குறித்த ஒரு நல்ல அலசல் கட்டுரை.

  // உங்கள் கருத்திடல் எந்த வகை?//

  எந்த பதிவையும் படிக்காமல் நான் கருத்துரை இடுவது இல்லை. சூழ்நிலயின் காரணமாக படிக்க முடியாமல் போனால், வெறுமனே அந்த பதிவுக்கு “ஆஹா! ஓகோ! பேஷ்! பேஷ்!” என்று கருத்துரை இடுவதும் கிடையாது.

  எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. எதை பின்நூட்டமிடுவதர்க்கும் பயமாக இருக்கு.......... நான் எஸ்கேப்.........

  பதிலளிநீக்கு
 17. ***உங்கள் கருத்திடல் எந்த வகை? ***

  I share my thoughts in all the above mentioned ways (the one you dislike as well) and much more ways. It all depends on the posts and the facts and criticisms in the post.

  I share my thoughts for myself, not for pleasing others. I can not lie in order to maintain some worthless "blog friendship"! I would rather share what I think as right even if it hurts my "friends".

  There are lots of dramas and politics going on in this world. Groupism, politics and hatred and what not. So, just keep going attitude is better.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //There are lots of dramas and politics going on in this world. Groupism, politics and hatred and what not. So, just keep going attitude is better.//
   உண்மைதான்.

   நீக்கு
 18. என்னைப் பொறுத்தவரை படிக்காமல் கருத்திட மாட்டேன். சம்பிரதாயத்திற்காக புகழ மாட்டேன். மாற்றுக் கருத்திருந்தால் சொல்வதும் பதிவே முற்றிலும் எனக்கு ஒவ்வாததாக இருந்தால் சைலண்டாக வெளிநடப்பு செய்வதுமே வழக்கம். இதில்... நான் எந்தப் பிரிவைச் சேர்ந்தவனென்று... நீங்களே கூறுங்கள். உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

 19. வணக்கம் நண்பரே...
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
  படைப்பு என்பது ஒவ்வொரு படைப்பாளியின்
  கருவாக்கம்...அதற்காக நாம் கருத்திடுவது
  சம்பிரதாயமாக இருந்துவிடக்கூடாது
  என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்...
  நண்பர் பாலகணேஷ் சொன்னது போல
  ஒவ்வாத செய்திகள் இருந்தால் ஒதுங்கி விடுவேன்..
  இதுவரை என் கருத்துக்களை பார்த்து
  உங்களுக்கே அது தெரிந்திருக்கும்...
  என் வகையில் உங்களின் கருத்துக்களும்
  அவ்வகையைச் சார்ந்ததே என்பது என் எண்ணம்...

  பதிலளிநீக்கு
 20. அருமையான தொகுப்பு, இது எல்லோருக்கும் பொருந்தும் வகையில் இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 21. டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக
  டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக வருகிற 04-01-13 அன்னைக்கி காலை ஒன்பது மணி அளவில தொடங்கி பதினோரு மணி வரைக்கும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் மேமொரியல் ஹால் எதிரில பாலியல் வன்கொடுமைக்கும்
  , வன்முறை கொலை கொள்ளை போன்ற சமூக குற்றங்களுக்கும் எதிரான போராட்டம் நடக்குதுங்கோ ......கோ அனனைவரும் தவறாம கலந்துக்கணுமுன்னு இந்தியன் குரல் சார்பில கேட்டுக்குறோம் சாமியோவ் .
  நன்மக்களே!
  வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த இந்தியன் குரல் நடத்தும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத அதிகாரிகளை தண்டனையில் இருந்து தப்பிவைக்கும் நோக்கில் தவறான ஆணைகள் இட்டும், விண்ணப்பதாரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியும், விண்ணப்பதாரர்களுக்கு உரிய நீதியை வழங்காத தமிழ் நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளை வெளிச்சப்படுத்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். தகவல் உரிமை சட்ட உபயோகிப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
  இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

  காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்
  பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
  மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
  அரைகுறை ஆடையில் நடனங்கள் இறுக்கமான உடையில் கவர்ச்சியான தோற்றத்துடன் இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச பாடல் காட்சிகளையும் வன்முறைக் காட்ச்சிகளையும் ஒளிபரப்பிட தடை செய்.
  நாடகம் என்ற பெயரால் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத உலகிற்கே கற்பு நெறி என்றால் என்ன என்று போதிக்கும் எம்குலமாம் தமிழ் குலப் பெண்களை அவமதிக்கும் நோக்கில் கள்ளக்காதல் ஒருவருடன் காதல் பல ஆண்களுடன் கள்ளக்காதல் அதிலும் கணவருக்குத் தெரியாமல் கள்ளக்காதல் செய்வது எப்படி என்று சொல்லித்தரும் போக்கினை உடனே தடை செய்.
  சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
  காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
  மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.
  -இந்தியன் குரல்
  9444305581
  Posted by Bala subramanian at 1:43 am

  பதிலளிநீக்கு
 22. அய்யா,
  வணக்கம். தங்களின்இப்பதிவினைக்காணவில்லை.
  கண்டிருந்தால் நிச்சயமாய்ச் சுட்டியிருப்பேன்
  மன்னிக்க!
  நீங்கள் சொன்ன கடைசி வகை அருமை..
  “கருத்திட வேண்டும் என நினைந்தும் போடாமலிருப்பது “
  தகவலுக்கு நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895