கிறிஸ்துமஸ் தினத்தன்று விஜய் டிவி சிறப்பு நிகழ்ச்சியில் கோபிநாத்திடம் கெளதம் மேனன் சொல்லிக் கொண்டிருந்த விஷயம் கவனத்தை ஈர்த்தது. எனக்கும் ஹாரிஸ் ஜெயராஜூக்கும்தான் நல்ல கெமிஸ்ட்ரி என்று கூறினார். பின் ஏன் பிரிந்தீர்கள் என்று கோபி நாத் கேட்க, நான் அடுத்த படத்துக்கு ரகுமானுடன் சேர இருக்கும் விஷயம் ஹாரிசுக்கு வேறு யாரோ சொல்லி இருக்கிறார்கள், நான் சொல்ல வில்லை என்று கோபம். இவ்வளவு நாள் நாம் நெருக்கமாகப் பழகி இருக்கிறோம் என்னிடம் சொல்லி இருக்கலாமே! இனிமேல் நாம் இருவரும் சேர்ந்து பணிய புரிய வேண்டாம் என்று கெளதம் மேனனுக்கு மெயில் அனுப்பியதாக சொன்னார். தன் மீதுதான் தவறு என்றும் தான் சொல்லி இருக்கலாம் என்றும் தவறை ஒப்புக் கொண்டார். அவர் ஈகோவை விட்டு வந்தால் அவருடன் இணையத் தயார் என்றும் கூறினார் கெளதம்.
நெருங்கிய நண்பர் இத்தனை நாள் இணைந்திருந்த திருந்த தன்னை விட்டுவிட்டுவேறு இசை அமைப்பாளரை நாடியது மன வருத்தம் அளிக்கக் கூடிய செயல்தான் என்றாலும் இந்தியாவின் நம்பர் 1 இசை அமைப்பாளரான ரகுமானுடன் இணையும் வாய்ப்பை எந்த இயக்குனராவது தவற விடுவாரா? கெளதமும் ஒரு வியாபாரிதானே! நட்பா? வியாபாரமா என்றால் வியாபாரம்தான்?
அடுத்த படத்திற்கு ரகுமான் கிடைப்பாரா? மீண்டும் ஹாரிசுடன் இணையவே கெளதம் மேனனின் விருப்பமாக இருக்கிறது என்பது கௌதமின் கூற்றில் தெரிய வருகிறது. அது இயலாத நிலையில் தற்போது இளையயாராஜாவை தேர்ந்தெடுத் திருப்பார் கெளதம். தன்னுடைய "நீதானே என் பொன் வசந்தம்" படத்திற்கு இளையராஜாதான் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து அவருடன் இணைந்திருப்பார் என்று நான் கருதவில்லை. இளம் இசை அமைப்பாளர் யாரையேனும் தேர்ந்தெடுத்திருந்தால் எதிர்காலத்தில் கெளதம்-ஹாரிஸ் மீண்டும் இணைவதில் சிக்கல் ஏற்படக் கூடும் என்றுதான் ராஜாவை இசைக்க வைத்திருப்பார். மேலும் ராஜாவின் நெடுங்காலப் புகழையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் அவர் எண்ணமாக இருந்திருக்கும்.
நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் நன்றாக இருக்கின்றன என்றாலும் ரகுமானோ அல்லது ஹாரிசோ இசை அமைத்திருந்தால் இன்னும் பேசப் பட்டிருக்கும். அதற்காக இளையராஜாவின் இசையை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தமில்லை.
இன்றைய இளைஞர்களைப் பொருத்தவரை இளையராஜா முந்தைய தலைமுறையின் இசை அமைப்பாளராக கருதப் படுகிறார். அவருடைய பழைய பாடல்களை யாரும் போற்றத் தவறுவது இல்லை. ஆனால் அவரது புது இசை வடிவங்கள் அவ்வளவாகக் கவர்வதில்லை என்பது உண்மையே! ஆனாலும் ராஜாவை விட்டுக் கொடுக்க மனமில்லை.அதுதான் அவரது வெற்றி.
யார் எப்படி இணைந்தால் என்ன? நமக்கு தேவை நல்ல படைப்புகள். யார் தந்தாலும் பாரபட்சமின்றி ரசிப்போம்.
*****************************************************************************************
கெளதம் மேனின் பேட்டி
***************************************************************************************************************
பதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்தக் கவிதை பொருந்துமா?
பதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்தக் கவிதை பொருந்துமா?
**************************************************
எது நடக்கக் கூடாதோ அது நடந்தே விட்டது.பாலியல் வன்முறை நிகழ்த்திய கொடியவர்களை தண்டிக்க அந்நியன் வருவானா தண்டனை தருவானா?
இந்தக் கவிதையில் உள்ளது போல மனதுக்குள் தண்டனை தந்தாவது ஆறுதல் அடைய முடிகிறதா பாருங்கள்!
அந்நியன் வருவானா?தண்டனை தருவானா?
எது நடக்கக் கூடாதோ அது நடந்தே விட்டது.பாலியல் வன்முறை நிகழ்த்திய கொடியவர்களை தண்டிக்க அந்நியன் வருவானா தண்டனை தருவானா?
இந்தக் கவிதையில் உள்ளது போல மனதுக்குள் தண்டனை தந்தாவது ஆறுதல் அடைய முடிகிறதா பாருங்கள்!
அந்நியன் வருவானா?தண்டனை தருவானா?
நீ.எ.பொ.வ. க்கு பின்னால் இத்தனை விசயங்கள் இருக்கிறதா?
பதிலளிநீக்குஏதோ நம்ம காதில விழுந்தது.
நீக்குவருகைக்கு நன்று அருள்
பதிலளிநீக்குஇளையராஜா அந்தக் காலத்து ஏ ஆர்....அவ்வளவுதான்
பதிலளிநீக்குகௌதமின் தவறை ஒத்துக் கொண்ட செயல் பாராட்டத்தக்கது
நீங்கள் சொல்வது சரிதான்.
நீக்குநல்ல படைப்பை யார் தந்தாலும் சரிதான்... :-))
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஜெய்
நீக்குஇனிமையாக இசையை யார் தந்தாலும் வாழ்த்தும் நெஞ்சம்.
பதிலளிநீக்குநன்றி கோமதி மேடம்
நீக்குபேர்புகழுக்கும்,பணத்திற்கும் இடம் மாறாதவர் யார் ?இசை இல்லாவிட்டால் நாளின் ஒரு சொட்டு நேரமாவது கிடைக்கும் நிம்மதி இல்லாமல் போய்விடும் !
பதிலளிநீக்குநிச்சயமாக
நீக்குநல்ல பகிர்வு. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி வாழ்த்துக்கள் தங்களுக்கும்
நீக்குநல்ல பகிர்வு! நட்பில் ஈகோ வந்தால் நஷ்டம் இருவருக்கும்தான்! இதை அவர்கள் புரிந்து கொண்டு மீண்டும் இணைந்தால் சரி! நன்றி!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குஏற்கனவே இந்த காணொளியை பார்த்திருந்தாலும் உங்கள் பதிவில் படிப்பது அருமை.கௌதமும் ஹாரிசும் பிரிவதற்கு இரண்டு தரப்பிலும் தவறு இருந்தாலும்,தவறு என் மீதுதான் என கௌதம் ஒத்துக்கொள்வது எவ்வளவு பெரிய பெருந்தன்மை...!!
பதிலளிநீக்குநன்றி மணிமாறன்
நீக்குஇன்றைய காலத்திற்கேற்ப இசியாம்மைக்க முடியாது என்பதால் தன் இசைஞானி அவர்களே யுவன்மற்றும் பவதாரிணி,கார்த்திக் ஆகியோரை தனித்து விட்டுள்ளார் .யார் அவர் இசைக்கு விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இசையமைக்கும் இசைஞானி ஒரு பெரிய சகப்ப்தம் என்பதையும் நினைவில் வையுங்கள்
பதிலளிநீக்குசரி நண்பரே இதையும் படியுங்களேன்http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_30.html
நானும் இளைய ராஜாவின் ரசிகன்தான்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி.
உங்கள் பதிவை காலையிலேயே படித்து விட்டேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
நீதானே பொன் வசந்தம் படத்தை பார்த்த பொது தான் பாடல்கள் மற்றும் இசை படத்தின் பலம் என்று புரிந்தது .இந்த படத்துக்கு ஹரிஸ் இசை பொருந்துமா என்பது தான் சந்தேகமே.
பதிலளிநீக்குநீ.என்.பொன்வசந்தம் இசை இன்றைய தலைமுறை ஏற்றுகொள்ளா விட்டாலும் இப்படத்தின் இசை இன்னும் தொடர்ந்து வரும் தலைமுறைகளில் நிச்சயமாக பேசப்படும் இசை நவீனம் கொண்டுள்ளது.படத்தை பார்க்கும் பொது இதை உணரலாம்.கௌதமின் சரியான தெரிவு ராஜா தான்.
இன்றும் எல்லோரும் கேட்டும்,பார்த்தும் ரசிக்கும் பாடல்கள் ராஜாவால் மட்டுமே தர முடியும் என்பது நீ.போ. வசந்தம் பாடல்கள் சிறந்த உதாரணம்.