சமீப காலாமாக பாலியல் வன்முறை சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து அதிர்ச்சி உண்டாக்குகின்றன.தலைநகரில் பேருந்தில் நடந்த கொடிய சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்தநிகழ்வைப் பற்றிய செய்தி இணையத்தில் வெளியான கீழ்க்கண்ட செய்தி கண்டு மனம் பதறியது
........... அவரது குடல் பகுதி பெரும் சேதம் அடைந்திருப்பதால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் நரம்புகள் வழியாகத் தான் உணவு ஏற்ற வேண்டும். ஆனால் அது முக்கியமில்லை. தற்போது அவரது உயிரைக் காப்பாற்றவே போராடுகிறோம் என்று டாக்டர் அத்தானி தெரிவித்தார். முன்னதாக கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் அந்த கும்பலில் தன்னுடன் இருந்த ஒருவர் அப்பெண்ணின் வயிற்றில் இருந்து கயிறு போன்ற ஒன்றை உருவியதாகத் தெரிவித்தார். அது கயிறல்ல அப்பெண்ணின் குடல் என்று நினைக்கிறேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
(http://tamil.oneindia.in/news/2012/12/20/india-delhi-gang-rape-victim-still-critical-writes-to-mother-166582.html)
தமிழகத்திலும் ஏழாம் வகுப்பு மாணவியையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொன்றே சென்றிருக்கின்றனர் சில கயவர்கள். இவர்களெல்லாம் மனிதர்கள்தானா? இவர்களை என்ன செய்தால் தகும்? உள்ளத்தில் உதித்த உணர்வலைகள் கண்ணீருடன் இதோ! (இக்குற்றம் புரிந்த அனைவரையும் அவன் என்றே குறிப்பிட்டிருக்கிறேன்)
அந்நியன் வருவானா?தண்டனை தருவானா?
கணினி விசைப் பலகை-மேல்
என் கண்ணீர் விழுந்திடுதே
கவிதை எழுதுமுன்னே -என்
கைகள் நடுங்கிடுதே
நெஞ்சு கொதிக்கிறதே-பாவியை
நிழலும் வெறுக்கிறதே
பஞ்சு மனங்கள் எல்லாம்-இன்று
பதறி துடிக்கிறதே!
பேருந்து போகையிலே-பெரும்
பேருந்து போகையிலே-பெரும்
பாதகம் நிகழ்ந்ததுவே
யாருந்து கோலானார்? --அதை
அறிந்து தண்டிப்போம்.
அகிம்சை விரும்பி;நான்-இன்று
இம்சை விரும்பினேன்
அந்நியன் தேடுகின்றேன்- ஒரு
அதிரடி நாடுகின்றேன்.
அப்படிஒருவன் இருந்தால்-இந்த
அப்படிஒருவன் இருந்தால்-இந்த
அநியாயம் கண்டபின்னே
இப்படி தண்டனைகள் -இன்று
தந்துதான் செல்வானோ!
கண்ணைப் பிடுங்கிடிவான்- அவன்
கண்ணைப் பிடுங்கிடிவான்- அவன்
காட்சி பறித்திடுவான்
புண்ணாய் ஆக்கிடுவன் -அவனை
பொத்தல் செய்து வைப்பான்
காமக் கொடுஞ்செயல்கள் - பல
காமக் கொடுஞ்செயல்கள் - பல
புரியும் பாவிகளைப்
சாமப் பொழுதுக்குள் --கொடும்
சாவறிய வைத்திடுவான்.
பாம்புகள் நடுவேதான் -அவனை
படுக்கவே வைத்திடுவான்
சாம்பல் ஆகும்வரை -அவனை
எரித்துப் பொசுக்கிடுவான்
நாக்கைப் பிடுங்கித்தான் -அவனை
நடுங்க வைத்திருப்பான்
காக்கையை அழைத்து -அதை
வீசி எறிந்திருப்பான்
உடலில் ஆடையுருவி-அவனை
உறுமீன் இரையாக
கடலில் வீசிடுவான் -அவன்
கால்களை கட்டிவைத்து
காலில் செருப்பகற்றி -அவனை
கடும்பகல் வெயிலிலே
பாலையின் நடுவேதான்-தனியாய்
பரிதவிக்க விட்டிடுவான்
சுட்ட நீரைத்தான் -எடுத்து
சுட்ட நீரைத்தான் -எடுத்து
முகத்தில் வீசிடுவான்
கட்டி நெருப்பெடுத்து-அவன்
கையில் தைத்திடுவான்
உறுப்பை அறுத்திடுவான் -அவன்
உறுப்பை அறுத்திடுவான் -அவன்
உடலை சிதைத்திடுவான்
வெறுப்பை காட்டிடுவான் -இன்னும்
வேறுபல செய்திடுவான்
உரிமை மீறலென்று-சிலர்
உரிமை மீறலென்று-சிலர்
நெஞ்சை உலுக்கிய கொடுமை !துயரம் தோய்ந்த தங்கள் கவிதை சோகத்தின் வார்ப்படம்!
பதிலளிநீக்குஉண்மையில் மனம் நொந்துதான் எழுதினேன் ஐயா
நீக்குநெஞ்சை காயப்படுத்திய ஆதங்கம்...அது கவிதையாகத்தான் வெளிப்படும்
பதிலளிநீக்குஉண்மைதான் அய்யா!
நீக்குநெஞ்சு கொதிக்கிறதே-பாவியை
பதிலளிநீக்குநிழலும் வெறுக்கிறதே
பஞ்சு மனங்கள் எல்லாம்-இன்று
பதறி துடிக்கிறதே! //
நல்ல வரிகள் நயமாக உள்ளது.
உள்ளபடி சொல்லப்போனால் உண்மையான வருத்தம் தான்
விருத்தமாய் விளையும் கவிதை இதுவோ
நீக்குவருத்தத்தில் பிறந்த கவிதை.
நன்றி
நெஞ்சு கொதிக்கிறதே-பாவியை
பதிலளிநீக்குநிழலும் வெறுக்கிறதே
பஞ்சு மனங்கள் எல்லாம்-இன்று
பதறி துடிக்கிறதே!
நல்ல மனம் படைத்தவர்கள் எல்லாம் பதறி துடித்து தான் போகிறார்கள்.
ஏன் இந்த நிலை ! தனி மனிதன் ஒழுக்கம் கெட்டதனால் இந்த சீரழிவுகள்.
பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் கட்டாயப்படுத்த வேண்டும்.
இனி இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறா வண்ணம் சட்டம், கடுமையாக இயற்றப்பட வேண்டும்.
சட்டத்தில் மாற்றம் கௌ வரப போவதாகச் சொல்லி இருக்கிறார்களே பார்ப்போம்
நீக்குஇந்த கொடுமைகளை செய்பவர்களின் ஆண்மையை அறுத்தெறிய சட்டம் கொண்டுவர வேண்டும்.
பதிலளிநீக்குசட்டம் மிகக் கடுமையாக வேண்டும்.
நீக்கு
பதிலளிநீக்குகொதிக்கிற நெஞ்சிலிருந்து விழுந்த
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
அக்கினிக் குண்டுகளாய்த் தாக்கிப் போகின்றன
மனம் சுட்ட கவிதை
இனி இது போன்ற சம்பான்கள் நடை பெறக கூடாது.
நீக்குஎத்தனை அந்நியன் வந்தால் கூட இந்த நாய்கள் திருந்தாது போல....
பதிலளிநீக்குநெஞ்சம் கொதிக்கிறது நண்பரே...
நாம் கற்பனையில்தான் தண்டனை கொடுத்து பார்க்க முடிகிறது.
நீக்குகட்டுக்கடங்காத வேதனையைக் கவிதையாக்கியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகவிதையைப் படித்ததும் மன வருத்தம் அதிகரித்தது.
இம்மாதிரிக் கயவர்கள் இனியேனும் உருவாகாமல் தடுப்பது நமக்குள்ள தலையாய கடமை.
இன்று இணையத்தில் இந்த செய்தியைப் படித்தபோதே மனதில் பிறந்த வார்த்தைகள்தான். இவை. நான் யோசித்து எழுதவில்லை.
நீக்கு"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கண்ட பின்னே"
பதிலளிநீக்குஉங்களுடைய ஆதங்கம் தான் இப்படி கவிதையாக வெளிவந்துள்ளது.
ராஜி
நியாயமான கோபம் தெரிகிறது. அந்நியன் வரத்தான் வேண்டும். இல்லாவிடில் யார் தான் இதைத் தடுப்பார்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
பதிலளிநீக்குகவிதை கண்கலங்க வைக்கிறது.மனிதர்களுக்கு உணர்ச்சிகளைப் படைத்த ஆண்டவன் அதற்கு வடிகாலையும் தானே படைத்திருக்கிறான்.பாலியல் உணர்ச்சிகளை போக்கிக் கொள்ள ஆயிரம் வழிகள் உள்ளது.அதை விட்டுவிட்டு அப்பாவிப் பெண்களை வன்புணர்வு செய்துதான் தீர்த்துக் கொள்ளவேண்டும் என யார் சொல்லிக் கொடுத்தது.ஓன்று இதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது இதற்கான தன்டைனைகளை கடுமையாக்க வண்டும்.
ஏழாம் வகுப்பு மாணவிப் பற்றிய செய்தி இணையத்தில் படித்தேன்.அவன் ஏற்கனவே தன் சித்தி மகளிடம் தவறாக நடந்து ஜாமீன் பெற்றானாம்,பிறகு சித்தியையும் அவளது மகளையும் வெட்டிய வழக்கு வேறு இருக்கிறதாம்,ஏற்கனவே நிறைய சில்மிசங்களில் ஈடுபட்டு பல வழக்குகள் இருக்காம், இப்படிப்பட்ட ஒருவன எப்படி நம் சமுதாயத்தோடு இணைந்து சுதந்திரமாக வாழ நம் சட்டம் அனுமதிக்கிறது..? துருப்பிடித்த நம் தண்டனை முறைகளை மாற்றவேண்டாமா...?
இந்தக் குற்றங்களுக்கு ஏதாவது வழி கண்டே ஆக வேண்டும்
நீக்குநெஞ்சு பொறுக்குதில்லையே இம்மிருக மனிதர்களைக் கண்டு. தாங்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தனக்கும் உடன்பிறந்தோர் உள்ளனர் என்பதை மறந்துதானே இவ்விதம் வன் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களை எல்லாம் தூக்கில் தொங்கவிட வேண்டும் அய்யா. அப்பொழுதுதான் மற்றவர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்யமாட்டார்கள். தங்களின் கவிதை கலங்க வைத்துவிட்டது அய்யா.
பதிலளிநீக்குஅந்தக் கயவர்களுக்கு பெரும்பாலோருடைய கருத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே
நீக்குஉமது இப்பதிவு என்னுள் நிறைய சிந்தனை ...உமக்குள் ஒரு மிகப்பெரிய கவிஞன் ஒளிந்திருக்கிறார்...இன்னும் நிறைய பதிவுகள் செய்யலாமே?..
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி அய்யா! 50 க்கு மேற்பட்ட கவிதைப் பதிவுகளும் உள்ளன.
நீக்குஎன் வலைப்பக்கத்தில் கவிதைகள் டேப்பில் உள்ளன
அந்நியன் வருவான் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்... இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக பெண்களே அந்நியனாக உருவெடுக்க வேண்டும்....
பதிலளிநீக்குதாங்கள் சொல்வதும சரிதான்
நீக்குசெய்தி கேட்ட ஒவ்வொருவருக்குள்ளும் எழுந்த கோபம் உங்கள் கவிதை வரிகளில் தெரிகிறது.
பதிலளிநீக்கு'பெண்களே அந்நியனாக உருவெடுக்க வேண்டும்' என்ற விமலை செல்வப்பெருமாள் அவர்களின் வரிகளை வழி மொழிகிறேன்!
அனைவரையும் பாதித்த நிகழ்வாக இது உள்ளது.
நீக்குடெல்லி நிகழ்வுகளின் முந்தைய அனுபவத்தில் இந்த பரபரப்பும் ஊடகங்களால் பேசப்பட்டு மறந்து போகக் கூடும்.பொதுமக்களின் குரல்கள் ஒலிக்கத்துவங்கியுள்ளது மட்டுமே வரவேற்க தக்கது.சட்டம்,ஒழுங்கு பாரபட்சங்கள்,சுயநலங்கள்,ஊழலின் உச்சங்கள் இந்தியாவில் நிகழும் வரை இனியும் இந்தியாவில் துயர சம்பவங்கள் தொடர்கதையாகவே செல்லும்.
பதிலளிநீக்குவாழ்வோடு மனம்,உடல் வடுக்களை நிரந்தரமாக சுமக்கப் போகும் இந்த பெண் பரிதாபத்துக்குரியவர்.
உண்மைதான் இந்த விவகாரத்தில் மக்கள் ஒன்று திறந்திருப்பது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவோம்
நீக்கு//சட்டத்தில் மாற்றம் கௌ வரப போவதாகச் சொல்லி இருக்கிறார்களே பார்ப்போம் //
பதிலளிநீக்குஅதென்னங்க மாற்றம்?தடா,பொடா மாதிரி படுவா?
தடா,பொடா போன்றவை தோல்வியடைந்த சட்டங்கள்.இருக்குன்ற சட்டங்களை சட்டப்படி ஒழுங்காக நிர்வகித்தாலே பாதி குற்றங்கள் காணாமல் போய்விடும்.
அதுவோ என்னமோ உண்மைதான்.
நீக்குஎன்றைக்கு ஒரு பெண் நடு ராத்திரியில் நகை நட்டுகளுடன் தன்னந்தனியாக ரோட்டில் தைரியமாக நடந்து போகும் நிலை வருகிறதோ அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக நான் கருதுவேன்- காந்தியடிகள்.
பதிலளிநீக்குஅவர் சொல்லி எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டன.இன்னும் அந்த நிலைய வரவில்லையே என்பதுதான் எல்லோரின் வருத்தமும்
நீக்குகொடுமையிலும் கொடுமை..
பதிலளிநீக்குபெரிய கொடுமைதான்
நீக்குஎன்னிடம் சொல்ல ஒன்றுமில்லை. :(((
பதிலளிநீக்குஎல்லோரையும் திகைக்க வைத்தது விட்டது இந்த நிகழ்வு
நீக்குமிக மிக அற்புதமான வெளிபாடு ஐயா. எல்லா கொடுமைகளையும் கேட்கவே மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அருமையான கவிதை.!
பதிலளிநீக்குஉண்மைதான் ஆகாஷ்.
நீக்குபலர் அந்தக் நிகழ்வுக்கான காரணங்களைக் கூறு போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அதன் காரணகர்த்தாக்களை கூறு போட்ட உங்களின் இந்தப் பதிவை வரவேற்கிறேன் .எதிர் பார்ப்போம் அரசின் நல்ல முடிவினை(அது மட்டும்தானே நம்மால் முடியும்)
பதிலளிநீக்குஒவ்வொரு வரிகளும் கொதிக்கிற எண்ணைய் சட்டியில் விழுந்த நீர்க்குமிழிகள் போல் பட்டுத் தெரிக்கின்றன. இதோ அந்த கொடும்பாவிகளுக்கு மரணதண்டனை. ஆம் அன்னியன் வந்து விட்டார் நீதிபதி உருவத்தில். தமிழ்நாட்டிலும் அச்சமயத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அல்லவா? அதற்கு இதுவரை முறையான நடவடிக்கை இல்லை என்று செய்தி. விரைந்து நடவடிக்கை எடுத்து கொடும்பாவிகள் தண்டிக்கப் பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்..
பதிலளிநீக்குநெஞ்சில் எரிந்த நெருப்பை வார்த்தைகளாக்கிவிட்டீர்கள்.
பதிலளிநீக்குஉங்கள் கவித்திறம் மட்டுமல்ல, சமூகஇழிவுகளைப் பொசுக்கும் கோபமும் வார்த்தைகளில் அனலடிக்கிறது.
இதுபோன்ற கோபங்கள் தான் மாற்றங்களுக்கான அழைப்பு. “நெஞ்சு பொறுக்குதிலையே” என்ற பாரதியின் பிரதிபலிப்பாக, உளம் நெகிழ்ந்த, மறக்க முடியாத பதிவுக்கு நன்றிஅய்யா.