என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 25 டிசம்பர், 2012

ஒரு நாத்திகர் எப்படி எழுதினார் இதை?

  கிறித்துவ நண்பர்களுக்கு  மனம் கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 
       இசைக்கும் பக்திக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.பெரும்பாலான பாடல் ஆசிரியர்களும் இசை அமைப்பாளர்களும் இறை நம்பிக்கை உடையவர்களாகவே இருக்கிறார்கள். இசை மனதை  ஈர்க்கிறதே!. அதன் காரணம் என்ன?  சில இசை வடிவங்கள் உள்ளத்தை உருக வைக்கிறதே அது எப்படி ? நம்மையும் அறியாமல் கண்ணீர் வரவழைத்து விடுகிறதே ஏன்? 

      அப்படி ஒரு பாடல்தான் திரைப் பாடல்தான் மின்சாரக் கனவு என்ற படத்தில் இடம் பெற்று எல்லோர் மனதையும் கவர்ந்த  'அன்பென்ற மழையிலே' என்ற பாடல் ஏ.ஆர் ரகுமானின் அருமையான மெட்டமைப்பும் அனுராதா ஸ்ரீராமின் காந்தக்  குரலும் வைரமுத்துவின் வைர வரிகளும் அப்பப்பா!
  
       இதில்  எனக்குள் எழுந்த கேள்வி என்னவென்றால் ஒரு நாத்திகராக  (நாத்திகராக  இருந்தாலும் வைரமுத்துவுக்கு பிடித்த வார்த்தை பிரம்மன்) 
வைரமுத்துவால் பக்தி மனம் கவழும் ஒரு பாடலை எப்படி இயற்ற முடிந்தது.

    வைரமுத்து உண்மையில்ஒரு நாத்திகர்தானா என்ற ஐயம் எழும் அளவிற்கு எழுதி இருப்பார். இதோ அந்த வரிகளைப் படித்துப் பாருங்கள் பாடலையும் கேட்டுப் பாருங்கள். 

  இயற்றியவர் நாத்திகர்,பாடியவர் ஹிந்து, இசை அமைத்தவர் இஸ்லாமியர்.பாடலோ கிறித்துவம்.
 இசை மதங்களுக்கு அப்பாற்பட்டது. மனங்களுக்கு நெருக்கமானது


அன்பென்ற  மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே!
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே!
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே!

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே!

கல் வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே!
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே!
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே!
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே!

                               (அன்பென்ற மழையிலே)

கொசுறு:
   இப்படிப்பட்ட  அருமையான பாடலை எழுதிய வைரமுத்து நீர்ப்பறவை படப் பாடல்களுக்காக விமர்சனத்து உள்ளானார்.உண்மையில் கிறித்துவர்கள் மனம் புண்படும் நோக்கத்துடன் அவர் எழுதியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.

**************************************************************************************************************
 இதைப் படிச்சாச்சா!


38 கருத்துகள்:

 1. கிறிஸ்துமஸ் தினத்தன்று மத நல்லிலக்கணப் பதிவு... அருமை...

  பதிலளிநீக்கு
 2. இந்த அற்புத தினத்தில் அற்புதமான ஒரு கருத்தை அவதானித்துள்ளீர்கள் .. நன்றி..

  பதிலளிநீக்கு
 3. கிறிஸ்மஸ் தின சிறப்புப் பதிவு மிக மிகச் சிறப்பு
  அதன் உருவாக்கத்தில் இருந்த மத நல்லிணக்கம் குறித்த
  தகவல் மிக மிக அருமை
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. //வகிறித்துவர்கள் மனம் புண்படும் நோக்கத்துடன் அவர் எழுதியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.

  //

  அந்த வரிகள் எவையென்றறியாமல் அவை கிருத்துவர்கள் மனங்களை புண்படுத்தினவா என்று கருத முடியாது. இணையத்தில் அப்பாடல கிடைக்கிறதென்று கேள்வி. முடிந்தால் சொல்லுங்கள்.

  நாத்திகர் இப்படிப்பட்ட மதச்சார்பு பாடல்களை அவராகவே எவ்விதத்தூண்டுதலுமில்லாமல் எழுதினால் உங்களின் நாத்திகரா எழுதினார் என்ற கேள்வி சரியாகும். வைரமுத்து பணத்திற்காககத்தானே எழுதினார்?

  கண்ணதாசன் ஒரு தீவிர இந்து. இயேசு காவியம் எழுதினாரில்லையா? அதற்காக அவர் இலடசங்கள் வாங்கினார்.

  பணம் என்றால் பிணமும் வாய்ப் பிளக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே! பசியா வரம் பெற்றிருந்தால் எந்த கவிஞனும் எந்த மதத்தைப் பற்றியும் பணம் வாங்காமல் பாடல் எழுதலாம்.
   ‘’ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
   இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
   என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
   உன்னோடு வாழ்தல் அறிது.’’
   என அவ்வைப்பாட்டி சொன்னதுபோல் சாப்பிடாமல் வாழ்தல் கடினம்.

   நீக்கு
 5. தமிழ் என் உசிரு, தமிழ் என் தாய் அப்படின்னு சொல்லிட்டு, டேக் இட் ஈசி பாலிசி, ஷக்கலக பேபி பாட்டெல்லாம் எப்படி வந்துச்சோ அதே மாதிரி தா இந்த பாட்டும் வந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 6. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
  கவிதை, இசை, குரல் என மூன்றும் சரியாக இணைந்த இனிய பாடல்.

  பதிலளிநீக்கு
 7. இசை மதங்களுக்கு அப்பாற்பட்டது. மனங்களுக்கு நெருக்கமானது


  http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_24.html
  அன்பென்ற மழையிலே ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் பதிவை படித்துவிட்டேன்.இயேசு காவியத்தின் பகிர்வு நன்றாக இருந்தது.

   நீக்கு
 8. எனக்கும் மிகவும் பிடித்த பாடல் வரிகள், இசைக்கும் கலைக்கும் ஆத்திக நாத்திக பேதமில்லை... எல்லாம் உணர்வுகளின் வெளிப்பாடே. :)

  பதிலளிநீக்கு
 9. நல்ல தினத்தில் நல்ல பாடலை கெட்ட திருப்தி.உண்மையில்இசைக்கு சாதி மதம் இல்லை,படம்பார்பவரும் பாட்டு கேட்பவரும் கலை என்ற சாதி மட்டுமே

  பதிவு அருமை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. நல்ல பாடல்.
  இனிய நத்தார் - புதுவருட வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 11. அருமையான பாடல்.சரியான நேரத்தில் நல்ல பதிவு.வாழ்த்துக்கள் நண்பா..இசை மனங்களுக்கு தான் சொந்தம். மதங்களுக்கு அல்ல...

  பதிலளிநீக்கு
 12. இந்த நல்ல பாடலை கிறிஸ்துமஸ் தினத்தன்று பதிவிட்டது... அருமை.

  பதிலளிநீக்கு
 13. எனக்கும் மிகவும் பிடித்த பாடல் . மத சார்பற்ற எனக்கு சமயத்தில் தனியாகக் கேட்டால் கண்ணீர் வரவழைக்கும் பாடல். அது இசையின் மகத்துவம்....

  பதிலளிநீக்கு
 14. அருமையான இனிய பாடல் அய்யா. தாங்கள் சொல்வது சரிதான் நீர்ப்பறவைப் பாடலைஉண்மையில் கிறித்துவர்கள் மனம் புண்படும் நோக்கத்துடன் அவர் எழுதியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு


 15. வைரமுத்து நாத்திகரா!! ? பணம் படுத்தும் பாடு முரளி!

  பதிலளிநீக்கு
 16. திரு. டி. என். முரளிதரன்,
  ஏன் இதற்கு வியப்படைய வேண்டும். காரணம் எளிதானதுதான்.
  அடிப்படையில் (ஒரு மதத்திற்கு மட்டுமான) போலியான நாத்திகர். கொள்கையாவது வெங்காயமாவது.

  பதிலளிநீக்கு
 17. மொழியற்று ரசிக்கும் இசைக்கு நல்ல விளக்கம் !

  பதிலளிநீக்கு
 18. //இசை மதங்களுக்கு அப்பாற்பட்டது. மனங்களுக்கு நெருக்கமானது//
  சந்தேகமின்றி!

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895