![]() |
(சி.எம்.மை எனக்கு தெரியும்........அவங்களுக்குத்தான் என்னைத் தெரியாது) |
எத்தனை படங்களில் போக்குவரத்துக் காவலர்களை கலாய்த்து இருப்பார் விவேக்? ட்ராஃபிக் கான்ஸ்டபிளை அழைத்துக் கொண்டு அவர் போட்டுக் காட்டிய ஏழரையை யார் மறக்க முடியும்.ஒரு படத்தில் லீவ் லெட்டரை வேகமாகச் சொல்ல ஆங்கிலம் பேசுவதாக நினைத்து பயந்து அவரை அனுப்பி வைப்பார்கள் போலீஸ்காரர்கள். இப்படி விதம் விதமாக தன் படங்களில் ட்ராஃபிக் போலீசாரை கிண்டல் செய்திருப்பார் விவேக்
இரண்டு தினங்களுக்கு முன்பு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்களை வழி மறித்து ஸ்டிக்கர்களை கிழித்ததோடு 100 ரூபாய் அபராதமும் விதித்துக் கொண்டிருந்தனர். அப்படி ஒரு காரை மடக்கி ஸ்டிக்கரை கிழிக்க வற்புறுத்தியபோது காரில் இருந்து வெளியே வந்தார் விவேக். நான் கருப்பு நிற ஸ்டிக்கர் ஓட்ட அனுமதி வாங்கிக் கொள்கிறேன்.இப்போது அபராதம் கட்டி விடுகிறேன்.ஸ்டிக்கரை கிழிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அபராதம் 100 ரூபாய் மட்டும்(அவ்வளவுதானா) வாங்கிக் கொண்டு விட்டு விட்டனர். திரைப்படங்களில் தங்களை கேலி செய்பவர் என்று தெரிந்தும் பெருந்தன்மையுடன் விட்டுவிட்டனரா அல்லது சி.எம்மை எனக்கு தெரியும் என்று சொலி இருப்பாரோ ஆனா அவங்களுக்குத்தான் எனக்கு தெரியாது சொல்வதற்குள் விட்டுவிட்டார்களோ. அவர்களால் என்ன செய்ய முடியம் எங்கள் மனதை புண்படுத்தி விட்டார் என்று தடையா வாங்க முடியும்.
இது போன்று மாட்டிகொண்டவர்கள் பலர் உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து பேசவைத்தும், போலீஸ் வாகனத்தில் கேமரா சோதனைகளை படம் பிடித்துக் கொண்டிருந்ததால் யார் பேச்சையும் கேட்கவில்லை போலீசார். ஸ்டிக்கரை கிழித்து அபராதம் வசூலித்து விட்டனர். அபராதம் என்னவோ நூறு ரூபாய்தான். அதைக் கட்டக்கூட மனசு இல்லை கார் வைத்திருக்கும் ஏழைகளுக்கு.
சன் ஃபில்ம் ஒட்டப்பட்ட வாகனங்களில் உள்ளே நடப்பது வெளியே தெரிவதில்லை. இதனால் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஸ்டிக்கர் அகற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஸ்டிக்கர் ஒட்ட அனுமதி பெறவும் வாய்ப்பு இருக்கிறது போலும். இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. யாராக இருந்தால் என்ன? சன் ஃபில்ம் ஓட்டக் கூடாது என்றால் அது அனைவருக்கும் பொருந்த வேண்டும். இதில் விலக்கு அளிப்பது சரியல்ல என்பதே என் கருத்து.
ட்ராஃபிக் போலீசாருடன் எனக்கும் ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது.அதை இன்னொரு பதிவில் கூறுகிறேன்.
************************************************************************************
இதைப் படித்து விட்டீர்களா?
வணக்கம்
பதிலளிநீக்குடி,என்,முரளிதரன்(அண்ணா)
விவேக் அவர்களின் காமடியை மையமாக வைத்து ஒரு சமுகஅக்கறையுள்ள பதிவை பகீர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குநல்ல கேள்வி? ஆனால் மருத்துவ ரீதியான பாதிப்புகளுக்கு அனுமதிப்பதில் தவறில்லையே
பதிலளிநீக்குமருத்துவ ரீதியாக என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது என்பது புரியவில்லை.
நீக்குசன் அலர்ஜி அவ்வளவு பேருக்கா உள்ளது.
கருத்துக்கு நன்றி சார்!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபெருமபாலும் இப்படி சன் ஃபிலிம் ஒட்டப்பட்ட கார்கள் தென்பட்டு எரிச்சலூட்டுகின்றன. நீங்கள் சொல்லியிருப்பது போல அவற்றை அகற்ற வேண்டும் என்பதில் எனக்கு சம்மதமே.
பதிலளிநீக்குபெரும்பாலோரின் கருத்தும் அதுவாகத்தான் இருக்கிறது நன்றி கணேஷ் சார்!
நீக்குகாவலர்கள் அபராத தொகையையும் வசூலித்துவிட்டு நடிகர் விவேக்கின் காரில் இருந்த கருப்பு ஸ்டிக்கரை கிழித்து அனுப்பியதாக சில நாளேடுகளில் வந்துள்ளது. அப்படி கிழிக்காமல் இருந்தால் அது தவறு மட்டுமல்ல பாரபட்சமும் கூட.
பதிலளிநீக்குநிச்சயமாக .
நீக்குவருகைக்கு நன்றி சார்
சன் ஃபில்ம் ஓட்டக் கூடாது என்றால் அது அனைவருக்கும் பொருந்த வேண்டும். இதில் விலக்கு அளிப்பது சரியல்ல என்பதே என் கருத்து.//
பதிலளிநீக்குசட்டம் எல்லோருக்கும் பொதுவாய் இருக்க வேண்டும்.
வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பாரபட்சம் பார்க்க கூடாது.
நல்ல பதிவு.
வருகைக்கு நன்றி மேடம்
நீக்குதகவல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குநன்றி மேடம்
நீக்குஇது தவறு... யாராக இருந்தாலும் என்ன...?
பதிலளிநீக்குவாங்க சார்! ரொம்ப நாளாச்சு ரொம்ப நன்றி.
நீக்குஅதெப்படி ஸ்டிக்கரை கிழிக்காமல் விட்டார்கள்...?
பதிலளிநீக்குஒருவேளை விவேக்... As I am suffering from fever so i humbly....என ஆரம்பித்திருப்பார்..
"புரிஞ்சி போச்சு தம்பி...நீங்க ஸ்டிக்கர் ஒட்ட CM கிட்ட பெர்மிசன் வாங்கிட்டதா சொல்றீங்க...அவ்வளவுதானே" -னு சொல்லி விட்டுருப்பாங்க..:-)))))
ஹிஹி
நீக்குஎல்லோருக்கும் அறிவுரை கூறும் விவேக் அதை விவேகமாய் தான் பின்பற்றியிருக்க வேண்டாமா? பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குகருத்து எல்லாம் மத்தவங்களுக்குத்தான்.
நீக்கு\\யாராக இருந்தால் என்ன? சன் ஃபில்ம் ஓட்டக் கூடாது என்றால் அது அனைவருக்கும் பொருந்த வேண்டும். இதில் விலக்கு அளிப்பது சரியல்ல என்பதே என் கருத்து.\\அதே என் கருத்தும். பணம் கொடுத்து அந்த வசதியை வாங்குபவன் மட்டும் தப்பே செய்ய மாட்டானா? கேனத் தனமா இருக்கு........
பதிலளிநீக்கு\\ ட்ராஃபிக் போலீசாருடன் எனக்கும் ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது.\\ நான் பலமுறை மாட்டியிருக்கேன், ஒரே அனுபவம்தான், 50 ரூவா குடுத்துட்டு எஸ்கேப்...........
என்னவோ ரூல்ஸ்!
நீக்கு//சன் ஃபில்ம் ஓட்டக் கூடாது என்றால் அது அனைவருக்கும் பொருந்த வேண்டும். இதில் விலக்கு அளிப்பது சரியல்ல என்பதே என் கருத்து.//
பதிலளிநீக்குஉடன்படுகிறேன்!
நன்றி குட்டன்
நீக்குஉயர்நீதி மன்ற உத்தரவை பின்பற்றுவதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை அதை அமலப்டுத்த வேண்டிய போக்குவரத்து காவலுருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.பொதுவாக Toll Gate மற்றும் பெட்ரோல் பங்கில் இரண்டு மாதங்களுக்கு அங்கேயே காவல்துறை ஆய்வாளர்களை நிறுத்தி அபராதம் போட்டாலே 90% வண்டிகளில் அமல்படுத்தலாமே??
பதிலளிநீக்குநல்ல யோசனைதான். அபராதம் விதிக்கப் படும் தொகையோ மிக அற்பமான 100 ரூபாய்
நீக்கு// நான் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்ட அனுமதி வாங்கிக் கொள்கிறேன்.இப்போது அபராதம் கட்டி விடுகிறேன்.ஸ்டிக்கரை கிழிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அபராதம் 100 ரூபாய் மட்டும்(அவ்வளவுதானா) வாங்கிக் கொண்டு விட்டு விட்டனர். //
பதிலளிநீக்குஎன்னாது? கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட அனுமதியா? அப்ப எல்லா வண்டியிலும் கருப்பு ஸ்டிக்கர்தான். எல்லோரும் அனுமதி வாங்கிக் கொள்வார்கள். சட்டம் யாருக்கு?
உண்மைதான்
நீக்குoh! ..தங்கள் மூலம் தகவல் அறிந்தோம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
உலகம் பலவிதம் விசித்திரம்.
பணி தொடர வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி உண்டு
நீக்குகருப்பு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அனுமதி தருகிறார்களா? எப்படி இருந்தாலும் தவறுதானே!
பதிலளிநீக்குமருத்துவக் காரணங்களுக்காக உண்டு என்று நினைக்கிறேன்.
நீக்குஎல்லோருக்குமே ஒரே சட்டம் நடைமுறை படுத்துவதுதான் சிறந்தது.
பதிலளிநீக்கு