எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாலனின் சிறுகதைகளையோ மற்ற படைப்புகளையோ அதிகம் நான் படித்ததில்லை. அவர் கவிதை எழுதி இருக்கிறாரா? அதுவும் எனக்குத் தெரியாது. தொலைக் காட்சியில் தேர்தல் நேரத்தில் அவரை பார்த்திருக்கிறேன். அவரது கட்டுரைகளை புதிய தலை முறை இதழில் ஒன்றிரண்டு படித்திருக்கிறேன். அதோடு சரி ஆனால் அவையும் என்னை ஈர்த்ததில்லை.
சமீபத்தில் என் ஜன்னலுக்கு வெளியே என்ற தொடரை 'புதிய தலைமுறை' வார இதழில் எழுதி வருகிறார். சமூக நிகழ்வுகள் அவலங்கள் பிரச்சனைகள் பற்றி சில வாரங்களாக எழுதி வந்தாலும் சமீபத்தில் வெளியான பகுதி அவரது எழுத்தாற்றல் மீதான எனது எண்ணத்தை மாற்ற வைத்தது. பாலியல் வன்முறை மீதான சிந்தனை பற்றிய அந்தக் கட்டுரையின் முற்பகுதி என்னைக் கட்டிப் போட்டது. ஒரு கைதேர்ந்த கவிஞனின் வரிகள் போல வார்த்தைகள் வந்து விழ பல்வேறான சிந்தனைகளை என்னுள் விதைத்துச் சென்றது அந்த வரிகள். அது ஒரு கவிதையாகவும் காட்சி தந்தது. ஒரு சிறுகதையாகவும் திகழ்ந்து சிந்தை கவர்ந்தது.
இதோ அவை உங்களுக்காக
"கதவைத் திறப்பதற்காக காத்துக் கொண்டிருந்ததைப் போல என் ஜன்னலுக்கு வெளியே இருந்து வந்து அமர்ந்தது அந்த வண்ணத்துப் பூச்சி.மஞ்சளும் கருப்பும் கலந்த மலர் போல இருந்தது.காகிதத்தில் செய்ததைப் போன்ற சிறகுகள் கண்ணாடியைப் போலப் பொலிந்தன.
முதலில் அது நாற்காலியின் முதுகில் உட்கார்ந்து உரையாட அழைத்தது. இறக்கையை சிலுப்பிக்கொண்டு எதிர் சுவரில் தொற்றி வண்ணத்தை ஆராய்ந்தது.புத்தகங்களை பூக்கள் என்றெண்ணியதோ? அவற்றின் மீது தத்தித் தத்தி இலக்கியம் படித்தது.குழல் விளக்கில் பால் குடிக்க முயன்றது.வானொலியின் மீது அமர்ந்து இசை பயின்றது.வீட்டுக்குள் வந்த விமானம் இறங்க இடம் தேடியது போல் எல்லா இடமும் சுற்றி வந்தது.எனக்கோ அது என் மனதை போல எதனினும் வசம் கொள்ளாது எதையோ தேடித் திரிவதைப் போல் தோன்றியது.
விடிந்து விட்டது.விளையாடிக் கொண்டிருக்க நேரமில்லை என்பதால் நான் என் நடையணிகளை மாட்டிக் கொண்டு கடற்கரைக்கு புறப்பட்டேன். காத்திரு! வருகிறேன் எனச் சொல்லி கிளம்பினேன்.
இளங்காலைக் காற்று இதமாக இருந்தது என்றாலும் என் இதயத்தில் இன்னமும் வண்ணத்துப் பூச்சி படபடத்துக் கொண்டிருந்தது. வந்திருந்த விருந்தாளிக்கு வரவேற்புக் கொடுப்பதற்காக வீடு திரும்பும் வேளையில் வீதியோரம் பூத்திருந்த பெயர் தெரியாப் பூவொன்றைப் பறித்து எடுத்து வந்தேன்.
கதவின் முனகல்கூட அதன் காதில் இடி ஓசையாய் இறங்கும் என்றெண்ணி கவனமாகத் திறந்தேன். காணோம்! வீடெங்கும் தேடினேன்!. அந்த விடிகாலை விருந்தாளி விடை பெறாமலேயே புறப்பட்டிருந்தார். எதிர்பாராமல் வந்த சந்தோஷம் சொல்லிக் கொள்ளாமல் போவதுதான் வாழ்க்கை என்று என்னை தேற்றிக் கொள்ள முயன்றபோது சொத் என்ற சத்தம் வாசலில் விழுந்தது.
ஆம்! நாளிதழ்தான்! நாட்டு நடப்புகளை எல்லாம் வார்த்தைகளில் வடித்தெடுத்த அந்தக் காகிதக் கணையை வீசி விட்டு போய்க் கொண்டிருந்தார் ஒருவர். அதை எடுக்கக் குனிந்தபோது என்நெஞ்சில் ஈட்டிகள் பாய்ந்தன.
கண்ணாடிச் சிறகுகள் நொறுங்கிக் கிடக்க தண்ணீரில் சிந்திய வண்ணத்தைப் போல சிறகின் நிறங்கள் கலைந்து செய்தித் தாளுக்குக் கீழே செத்துக் கிடந்து என் வண்ணத்துப் பூச்சி. "
இதன் பின்னரும் தொடர்ந்து, 13 வயது சிறுமியை தாய்மாமனோடு சேர்ந்து 5 பேர் பாலியல் வன்முறை செய்தது பற்றியது பேசியது அந்தக் கட்டுரை. ஆனால் அவை யாவற்றையும் விளக்க மேலே படித்தவையே போதுமானதாக இருந்தது எனக்கு.
உங்களுக்கு!
******************************************************************************************
இதைப் படிச்சாச்சா?
அமில வீச்சு! சகஜமாச்சு!-புஷ்பா மாமியின் புலம்பல்
அமில வீச்சு! சகஜமாச்சு!-புஷ்பா மாமியின் புலம்பல்
மாலன் சிறுகதைகள் மிகவும் அழுத்தமாகவும் அற்புதமாகவும் இருக்கும் வீடென்று எதைச்சொல்வீர் அதுவல்ல என்வீடு எனத்தொடங்கும் கவிதை அன்றைய என் மன ஓட்டத்திற்கு மிகவும் இசைவாய் இருந்தது. நான் படித்தது 1990களில் கவிதை எழுதப்பட்டது 1970 - 1980 க்குள் என நினைக்கிறேன். மாலன் பற்றி லேட்டாக தெரிந்துகொண்டாலும் லேட்டஸ்டாக தெரிந்துகொண்டீர்களே மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஉண்மைதான் அகலிகன்
நீக்குகதைகளில் ஒரு மாந்த்ரீக மனோபாத்யமான ஆங்கரிதி இருக்கும். கருத்துக்களை நிறுப்ப நில்லா நெஞ்சமொடு அருங் கடிக் காவலர் சோர் பதம் ஒற்றாது,
பதிலளிநீக்குகங்குல் வருதலும் இல்லாது நேர் நிலை படுத்தி எழுதியிருப்பார்.நெடுநெல் அடைச்சிய கழனிஏர் புகுத்து தெரிபகட்டு உழவர் போல விரிவாக பிரச்சனை ஆழமாய் சிந்தித்து எழுதிடுவார்.
அக் கதைகளைப் படிக்கும் போது பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந் தற்று என்ற நிம்மதியான சாந்தம் வரும்.
வாழி பல்லாண்டு
வருக! நன்றி.
நீக்குஅன்பார்ந்த அய்யா ,
நீக்குபொருள்: உங்கள் பின்னூட்டம் குறித்து-February 24, 2013 at 12:18 PM
உங்கள் பின்னூ பின்னிப் பெடலெடுக்கிறது அதை நல்ல தமிழில் மொழிபெயர்த்தால் தன்யனாவேன்.
ஜெய்ஹிந்த்.
மாலன் சிறுகதை மனதை கனக்க வைத்துவிட்டது. தொலைக்காட்சியில் பெண்கள் மாமன் புகைப்படத்தை செருப்பாலும், விளக்குமார் கொண்டும் அடிப்பதை காட்டினார்கள். என்ன உலகம் ! யாரை நம்புவது என்று ஒன்றும் புரியவில்லை.
பதிலளிநீக்குபோனபதிவில் ஒரு பெண்ணை பற்றி எழுதினீர்களே அந்த பெண் இன்று காலை 4.30க்கு இறந்து விட்டாள் தன் கண்ணை தானம் செய்து இருக்கிறாள். தன் அண்ணனிடம் நான் இறந்து விடுவேன் என் கண்களை தானம் செய்து விடுங்கள் என்று சொன்னாளாம் அந்த பெண்.
ஆம்! மேடம் அளவிலா வருத்தம் அடைந்தேன்
நீக்குDear murali sir , Malan is Remarkarble writer & Poet . Malan's Masterpeace " Enn Jannaluku veliye " when i was read dont know may be 1998 to 2000.
பதிலளிநீக்குNow malan writing 2 part
நான் கேள்விப் பட்டிருக்கிறேன். படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை,
நீக்குமாலன் குமுதம் ஆசிரியராக இருந்த போது அவரது எழுத்துக்களை வாசித்து இருக்கிறேன்! சிறப்பாக கட்டி இழுக்கும் நடைக்கு சொந்தக் காரர்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅப்படின்னா சும்மா கட்டி இழுக்கும் நடைன்னா என்ன ? ஒரு டவுட் தான்..........
நீக்குசிறப்பாக கட்டி இழுக்கும் நடை என்றால் விசுவரூபம் விஸ் மாதிரி நடை எனக் கொள்க. இப்படி அத்தனைக்கும் விளக்கம் கேப்பேளா ?
நீக்கு"புதிய தலைமுறை" வந்தபின்தான் அவரைப் பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொண்டேன்.
நீக்குவரலாற்றுப் பிழை -இவ்வளவு பெரிய எழுத்தாளரை இப்ப தான் தெரியும்னு சொல்றீங்களே !
நீக்குஅவரை தெரியவே தெரியாது என்று சொல்லவில்லை.அவரது எழுத்துக்களை அவ்வளவாக படித்ததில்லை என்றுதான் கூறி இருக்கிறேன். பத்திரிகையாளராகவே அவரை அறிந்திருந்தேன்.
நீக்குஆம் அவர் எழுதுகள் கொஞ்சம் கனமானதாய் உணர்ந்து இருக்கிறேன் மீண்டும் படிக்க ஆவல் வருகிறது உங்கள் நியாபக படுத்தலில் நன்றி
பதிலளிநீக்குநன்றி மலர்பாலன்
நீக்குவண்ணத்துப் பூச்சி ரசிப்பாய் இருந்தது. மாலன் அவர்களின் எழுத்துக்களை தொடர்கிறேன். நன்றி!
பதிலளிநீக்குஇதனை ஒரு கவிதைச் சிறுகதை என்று கூறலாம் என்பது என் எண்ணம்
நீக்குவண்ணத்துப்பூச்சி ஒரு உருவகமாகவே இங்கு/மாலன் சாரின் எழுத்துக்கள் நம்மை ஈர்ப்பவை/
பதிலளிநீக்குசரியான உருவகம்தான் விமலன் சார்
நீக்குரசிக்க வைத்தன மாலனின் வரிகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குமாலனின் எழுத்துக்கள் மனதை கலங்க வைத்து விட்டது.
பதிலளிநீக்குநன்றி ஜெயகுமார் சார்
நீக்குரசிகனய்யா நீர்! எங்களுக்கும் ரசிக்கத் தந்ததுல நன்றி! மாலனின் அருமையான எழுத்துக்களில் மலரும் ‘என் ஜன்னலுக்கு வெளியே’ நூறு ரூபாய் விலையில புதிய தலைமுறை புத்தகமாவே வெளியிட்டிருக்கு. பல நல்ல கட்டுரைகள் அதில இருக்கு. முடிந்தால் வாங்கிப் படிச்சுப் பாருங்க முரளி.
பதிலளிநீக்குவாகியாறேன் கணேஷ் சார்
நீக்குஆம் மிக அருமையாக இருந்தது.
பதிலளிநீக்குஇருவருக்கும் இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி மேடம்
நீக்குமாலனை நான் படித்ததில்லை.
பதிலளிநீக்குஆனால் உங்களின் பகிர்வு அவரின் பக்கம் இழுக்கிறது.
நன்றி.
நன்றி அருணா
நீக்குவண்ணத்துப்பூச்சியையும் வதைக்கும் காகிதக் கணை..!
பதிலளிநீக்குநன்றி இராஜேஸ்வரி
நீக்குமாலனின் எழுத்துக்கள் நம்மை ஈர்ப்பவை
பதிலளிநீக்குஉண்மைதான்
நீக்குமுழுதும் படித்துவிட்டு கருத்து சொல்வதுதான் சிறப்பு .நீங்கள் கதையை படித்து சொல்லியுள்ளீர்கள்
பதிலளிநீக்குமுழுவதும் படித்துவிட்டேன். ஆனால் அந்தக் கருத்தை அழுத்தமாக சொல்வதற்கு இந்த முன்பகுதி அமைந்துள்ளது என்பதைக் குறிப்பிடவே விரும்பினேன்.
பதிலளிநீக்குவண்ணத்துப்பூச்சி மனம்நெகிழ வைக்கின்றது.நல்லதொரு எழுத்தாளரை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.மாலனின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்க ஆவலாக ிருக்கின்றது.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குடி என் முரளிதரன்(அண்ணா)
நீங்கள் சொன்னமாதிரி ஒவ்வொரு வரிகளும் அர்த்தமுள்ளதாக உள்ளது மேலும் பல படைப்புகளை படைத்து சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பூங்கொத்து !மாலனுக்கும்!
பதிலளிநீக்கு