என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 14 பிப்ரவரி, 2013

இது சாதாரண காதல் இல்லீங்க!


நம்ம இளைஞன் ஒருத்தனுக்கு காதலிக்க நேரம் நேரம் நிறைய இருக்குதுங்க,ஆனா காதலிக்கருதுக்குத்தான் ஆள் கிடைக்கலேங்க.போன காதலர் தினத்துக்கே ஒரு கவிதை எழுதி வச்சி காத்துக் கிட்டிருந்தான்  பாவம் யாரும் கண்டுக்கலைங்க.ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத  அந்த இளைஞன் அதே கவிதைய வச்சு இந்த வருடமும் திரும்பவும் ட்ரை பண்றாருங்க!   அவனுடைய காதல் கடிதத்தை படிச்சிட்டு தெய்வீகக் காதலை நீங்களாவது புரிஞ்சுகோங்க ப்ளீஸ்.
இதோ அந்தக் கடிதம் 

               அன்பே! 
                விடியும் வரையில் விழித்திருந்தே நான்
                கவிதை ஒன்று உனக்கென வரைந்தேன்
                உன்முகம் கண்ட நாள் முதலாய்
                உணவும் எனக்கு இறங்க வில்லை
                இமையும் ஏனோ உறங்க வில்லை
                கயல்விழி கொண்டு எனைநீ பார்த்தால்
                கனவில் மிதப்பேன்; காற்றில் பறப்பேன்;
                காலையும் மாலையும் உனையே நினைப்பேன்.
                மற்றவை அனைத்தும் இனிமேல் மறப்பேன்!
                நீயே பிரம்மன் செதுக்கிய சிற்பம்
                தமனா ஹன்சிகா   உன்முன் அற்பம்
                புதுநிலவின் கவர்ச்சியதை  முகமே வெல்லும் 
                பூந்தளிரின் மென்மையை உன் மேனியும் சொல்லும்
                செவ்வாழை பூப்போலே விளங்கும் விரல்கள்
                மாதுளையின் முத்தெனவே மின்னும் பற்கள்
                புது ரோஜா நிறமுந்தன் இதழில்
                பூவாசம் மணக்கும்உன் கார் குழலில்
                இளமானின் அழகு உந்தன் கண்ணில்
                ரகுமானின் இசை உந்தன் குரலில்
                அழகிய கன்னம் ஆரஞ்சு வண்ணம்
                பழகிடத் துடிக்குதடி எந்தன் எண்ணம்
                அள்ளிப் பருகிடவே ஆசை பெருகுதடி
                தள்ளி நிற்காதே மனம் தவித்து உருகுதடி
                உறங்கும் போதும் உந்தன் நினைவு
                விழிக்கும் போதும் உந்தன் கனவு
                இரும்பாய் இருந்தேன் காந்தமாய் கவர்ந்தாய்
                கரும்பாய் இன்று நெஞ்சில் இனித்தாய்
                துரும்பாய்  எனைநீ எண்ணி விடாதே             
                திரும்பாமல் நீயும் சென்று  விடாதே
                உனக்கென காத்துக் கிடந்தேன் வீதியில்
                படிப்பைக் கூட விட்டேன் பாதியில்
                நீஎனைக் கேட்டால் எதையும் தருவேன்
                உயிரைக் கூட உடனே தருவேன்.
                உனக்கென ஏங்குது எந்தன் இதயம்
                உன் நெஞ்சில் வருமோ காதல் உதயம்
                இன்றே இதைநீ படித்து விடு
                சம்மதம் என்றே சொல்லி விடு


                                        இப்படிக்கு
                            உன்னை உயிருக்குயிராய் காதலிக்கும்
                                    ?????????????????????
                பின்குறிப்பு;
               விருப்பம் இன்றேல் கிழித்துவிடாதே
               குப்பை தொட்டியில் எறிந்துவிடாதே
               மீண்டும் இதைநீ மடித்து விடு
               உன் தோழியர் இருந்தால் கொடுத்துவிடு


**************************************************************************************** 

40 கருத்துகள்:

  1. சூப்பர்......

    உன் தோழியர் இருந்தால் கொடுத்துவிடு..//

    நாங்கெல்லாம் தோழியைப் பார்க்க மாட்டோம் முதலாவது அவாவிண்ட தங்கை அதுக்குப் பிறகுதான் தோழியெல்லாம் ....யெப்புடி :)

    பதிலளிநீக்கு
  2. ரசித்தேன் ரசித்தேன்
    //உன்முகம் கண்ட நாள் முதலாய் உணவும் எனக்கு இறங்க வில்லை///
    என்னங்க அந்தளவு கொடுர முகம் உள்ளவங்களையா தேடி காதலிப்பீங்க

    // காலையும் மாலையும் உனையே நினைப்பேன்//
    அப்ப மதியம் யாரை நினைப்பிங்க?

    ///அழகிய கன்னம் ஆரஞ்சு வண்ணம்//
    என்னங்க அவங்களை டாக்டரிடம் கூட்டி போங்க மஞ்ச காமாலையா இருக்க போகுது


    //மீண்டும் இதைநீ மடித்து விடு உன் தோழியர் இருந்தால் கொடுத்துவிடு///

    பிழைக்க தெரியாதா ஆளாக இருக்கிரீர்கள் முரளி தோழியிடம் கொடுக்க சொன்னால் அவர்கள் கெடுத்துவிடுவார்கள்

    பதிலளிநீக்கு
  3. // நீயே பிரம்மன் செதுக்கிய சிற்பம்
    தமனா ஹன்சிகா உன்முன் அற்பம்// - ஆஹா நல்லாவே எழுதரிங்க காதல் கவிதை. இருங்க உங்க வொய்ப் கிட்ட பேசிக்கிறேன். DTH எபக்ட் கேட்டு ரொம்ப நாளாச்சு.

    ஹா.. ஹா.. ரசித்தேன். சிரித்தேன்.சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கெல்லாம் இவன் சரிப்படமாட்டான்னுதான்னுதான் எங்க பாஸோ ட கணிப்பு. அப்படி எதாவாது நடந்த DTH ல ஒளிபரப்பிடறேன்.

      நீக்கு
  4. பின் குறிப்பு சூப்பர்;இப்படித்தான் இருக்கிறது இன்றைய காதல்;இதுவா காதல்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிதான் போய்ய்க்கிட்டு இருக்கு .ஒரே காதல் ஒருவரிடம் மட்டும் காதல் எல்லாம் ஓல்ட் ஸ்டைலாம்

      நீக்கு
  5. சர்க்கரை பந்தலில் தேன் மாரி மாறி மாறி பொழிந்து வஞ்சிரா சூரியனின் வர்ண புஷ்பமொத்த பொற் வேதி கிரனங்களில் தோன்றும் ரெயின்போவைப் போன்றள்ளது கவிதை. பெளதீக விதிகளுக்குள் அடங்க மறுத்து சொற் கோகர்னம் கொண்டு தட்டி தட்டித் செய்த வெண் பதினச் சிற்பமாக ரசிக்க வைத்தது.

    கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற்குரியசொல்லிடை புகுத்தி பொருண்மை குறிப்பைக் பொருள்ணெறிப்படத் தெளிவாக்கியுள்ளீர்கள்.

    வாடாமலர் ஒத்த வர்ணஜாலம் தானோ இது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்! வித்தியாசமா கம்மென்ட் போடறீங்க. புதிய வார்த்தைகளைக் கொண்ட சாண்டில்யன் வர்ணனை மாதிரி இருக்கு.நன்றி.

      நீக்கு
  6. பின் குறிப்பு போட்டு காரியத்தை கெடுத்திட்டீங்களே முரளி.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல எழுதும்போது அந்த பின்குறிப்பு கிடையாது.இன்றைய காதல் நு ஒரு தலைப்பில போட்டியில கலந்துகிட்டேன். அதுக்காக இந்த பின்குறிப்பை நகைச்சுவைக்காக சேத்துக்கிட்டேன்.

      நீக்கு
  7. //மாதுளையின் முத்தெனவே மின்னும் பற்கள்//

    அட! சே!! வெத்தளை போட்டு மெல்லுற கட்டைக்கு தான் இப்படி உருகுறீங்க! மாதுளை கலரில் பல்லா ! அய்யோ தேவுடா அப்ப எப்படி கே.ஐ.** அடிக்கிறது

    மியாவ்......

    பதிலளிநீக்கு
  8. அழகிய வரிகளையும் அதற்கு அவர்கள் உண்மைகள் பதிலையும் ரசித்தேன். ஹஹஹஹ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க ரசிக்கலாம் ஆனால் இப்படி எல்லாம் சிரித்து எங்களை பயமுறுத்தாதீங்க

      நீக்கு
  9. தெங்வீகக் காதல் தான்....
    காதல் கவிதை அருமை...

    ஆனால் பின் குறிப்பு....
    இது உண்மை காதல் தானா என்ற கெள்வியை எழுப்புகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைகாதல்தான் அதனால்தான் அவர் உருகி எழுதி இருக்கிறார். இருந்தாலும் அந்த காதலி ஏற்றுக் கொள்ளாவிட்டால் தண்ணி அடித்து தாடி வளர்த்து முக்காடு போட்டு மூலையில் ஒதுங்கி இருக்கும் இளைஞ்ர் அல்ல தோல்வியை தோலில் போட்டு சுமக்காமல் தூர எரிந்து விட்டு வெற்றி நடை போடுபவர்தான் நம்ம முரளி

      நீக்கு
    2. எல்லாக் காதலும் இல்ல! சில காதல் இப்படியும் இருக்குன்னு சொல்லுது கவிதை.

      நீக்கு
    3. //உண்மைகாதல்தான் அதனால்தான் அவர் உருகி எழுதி இருக்கிறார். இருந்தாலும் அந்த காதலி ஏற்றுக் கொள்ளாவிட்டால் தண்ணி அடித்து தாடி வளர்த்து முக்காடு போட்டு மூலையில் ஒதுங்கி இருக்கும் இளைஞ்ர் அல்ல தோல்வியை தோலில் போட்டு சுமக்காமல் தூர எரிந்து விட்டு வெற்றி நடை போடுபவர்தான் நம்ம முரளி//
      உண்மையில் காதலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் சார். எல்லாம் காகிதத்தோட சரி. பின்குறிப்பை மட்டும் கட் பண்ணிட்டு ஒரு நண்பர் இதை தான் எழுதினதா சொல்லி ஒரு பெண்ணிடம் கொடுத்திருக்கிறார், அந்தப் பொண்ணு நம்பலையாம். ஆனாலும் எப்படியோ கரெக்ட் பண்ணிட்டார்.
      இதெல்லாம் பழைய கதை.

      நீக்கு
  10. வர்ணனைகள் அதிகமான அழகிய காதல் கவிதை! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. internetல் சிக்கிய மீனே
    Jurassic parkல் உலவிய மானே
    Dabur பாட்டிலில் அடைபட்ட தேனே
    Leaving togather மேல் நம்பிக்கை கொண்டு
    வா என்னோடு Loving Bird டே.

    இந்தமாதிரி கவிதை எழுதி இருந்தா போன Lovers Day லயே உங்காளுக்கு காதலிக்க ஆள் கிடைச்சிருக்கும்.

    பதிலளிநீக்கு


  12. பின் குறிப்புகு காதர்களுக்குப் பெரிஉம் வாழ்த்து!

    பதிலளிநீக்கு
  13. //வர்ணனைகள் அதிகமான அழகிய காதல் கவிதை! நன்றி!//

    வாங்கங்கோவ்!! வேற எப்புடி எழுதினா ஒத்துபீங்க.... பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா ?

    பதிலளிநீக்கு
  14. இவ்வளவு நாளா பத்திரமா மடிச்சு வைத்தீங்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது மடிச்சி கிழிஞ்சி போச்சு சார். இனிமே யாருக்கும் குடுக்க முடியாது அடிதான் கிடைக்கும்.

      நீக்கு
  15. நன்றாக எழுதியுள்ளீர்கள்
    /நீயே பிரமன் எழுதிய சிற்பம்
    தமன்னா ஹன்சிகா உன் முன் அற்பம்/ ரசிக்க வைத்தது
    பிற்குறிப்பும் சூப்பர்

    பதிலளிநீக்கு
  16. ''..மீண்டும் இதைநீ மடித்து விடு
    உன் தோழியர் இருந்தால் கொடுத்துவிடு...'''
    வம்பு தானே!
    பிந்திய வலன்ரைன்ஸ் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  17. இரும்பாய் இருந்தேன் காந்தமாய் கவர்ந்தாய்
    கரும்பாய் இன்று நெஞ்சில் இனித்தாய்

    nice...

    பதிலளிநீக்கு
  18. பின்குறிப்புல இருந்த பாசிட்டிவ் அப்ரோச் கவர்ந்ததுங்க...!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895