என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 4 பிப்ரவரி, 2013

ஜனவரி,பிப்ரவரி,வருமானவரி!


   மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு பிடிக்காத மூன்று மாதங்கள் ஜனவரி,பிப்ரவரி மார்ச். காரணம் வரு மான வரிதான். ஜனவரியில் இருந்தே வரிப் பிடித்தங்கள் தொடங்கிவிடும். ஜனவரியில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படும்.  பிப்ரவரியில் வருமானவரி பிடித்தம் செய்துவிடுவார்கள்.
   ஒவ்வொரு மாதக் கடைசி நாளில் ஊதியம் கிடைத்துவிடும். மார்ச் மாத ஊதியம் ஏப்ரல் முதல் வாரத்தில்தான் கிடைக்கும்.
   ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இடையே ஜனவரியிலேயே பரபரப்பு ஆரம்பித்துவிடும். கணக்கிட்டுப் படிவங்களின் விலை கன ஜோராக நடக்கும். வருமானம்,சேமிப்பு, வரி இவற்றை கணக்கிட்டு ஐயோ! வரி இவ்வளவு கட்டவேண்டியிருக்குமே என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருப்பர்கள். வரி கட்டாமல் இருக்க அல்லது குறைக்க என்னென்ன வழிகள் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்ய துவங்குவார்கள். இதற்கெனவே பல வழிகாட்டிகள் ஆலோசகர்கள் இருப்பார்கள்.
     இதற்குக்காரணம் வருமான வரி கணக்கிடுவதில் எளிய நடை முறைகள் பின்பற்றுவதில்லை என்பதே.

    கருவூலம் சாதரணமாக  மார்ச்31 வரை உள்ள காலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களைப் பொருத்தவரை பிப்ரவரி மாத ஊதிய பட்டியல்கள் சமர்ப்பிக்கப் படும்போதே வருமானவரி கணக்கீட்டுப் படிவத்தையும் இணைத்தே அனுப்பவேண்டும். வரி கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பித்தல் வேறு. வருமானவரி தாக்கல் செய்வது வேறு. வருமான வரி நேரடியாக வருமான வரித்துறையினரிடம் செய்ய வேண்டும். மார்ச் மாதத்திற்குப் பிறகு தாக்கல் செய்தால் போதுமானது. இவை துறை சார்ந்தது இது தவிர வரி செலுத்தவேண்டியது இருந்தால் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட வேண்டும் அல்லது வங்கியில் வரியை செலுத்தி அதன் பற்றுச் சீட்டை இணைக்கவேண்டும்.இல்லையெனில்  ஊதியம் வழங்கப்பட மாட்டாது. பிப்ரவரி 20 இருபது தேதிக்குள் பட்டியல்கள் கருவூலத்தில் சமர்ப்பிக்கப் பட வேண்டும். 20 இப்பணிகள் முடிய வேண்டுமெனில்  10 ஆம்தேதிக்குள் இந்த விவரங்களை ஊழியர்கள் தர வேண்டும். 
   இது ஒருபுறம் இருக்க வரி கணக்கிடுவதில் ஏராளமான சிக்கல்கள். ஊதியத்தில் கட்டாயமாக பிடித்தம் செய்யப்படும் சேமநல நிதி உட்பட அதிக பட்ச சேமிப்பு ஊர் ஆண்டில் ஒரு லட்சத்திற்கு மட்டுமே வரிக் கழிவுகள் கிடைக்கும். முதல் இரண்டு லட்சத்திற்கு வரி ஏதுமில்லை . இரண்டு முதல் ஐந்து லட்சம் வரை 10 % சதவீதம் வரி செலுத்தவேண்டும்.மீதித் தொகைக்கு 5 லட்சம் ரூபாய் வரை 10 சதவித வரி செலுத்த வேண்டும். இந்த வரியுடன் கல்வி வரி 3  சதவீதம் சேர்த்துக்கொள்ளவேண்டும். 
   மொத்த ஆண்டு வருமானம் கணக்கிடும்போது. வருமானவரி வேண்டிய மொத்த வருமானத்தை வாடகை வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவுதான் வாடகை செலுத்தினாலும்  அதிகபட்சமாக அவர்கள் பெரும் வீட்டு வாடகைப்படிதொகையை மட்டுமே கழித்துக்  கொள்ள முடியும். எவ்வளவு உயர் பதவியில்  இருந்தாலும் அதிக பட்ச வீட்டு வாடகை படி  மாதத்திற்கு 3200 மட்டுமே.

    சேமிப்பிற்கு ஒரு லட்சம்தான் அதிக பட்சம் என்றாலும் அதையும் சேமிக்காமல் கடைசி நேரத்தில் பிப்ரவரி மாதத்தில் LIC,NSC என்று வரி சேமிப்பு திட்டங்களைத் தேடுவார்கள். அதில் திடீரென்று அதிக பணம் போடவேண்டி இருக்கும்.அதற்கு மனம் வராமல் குறுக்கு வழிகளில் இறங்குவோரும் உண்டு.

    அலுவலக கிளார்க்கை சரிக்கட்டி  சில வரவினங்களை காட்டாமல் மறைப்பது, செய்யாத மருத்துவ செலவுகளுக்கு மருத்துவரின் சான்று வாங்குவது போன்றவையும் நடைபெறும். மருத்துவ செலவிற்கான வர்கவரிக் கழிவைப் பொருத்தவரை குறிப்பிட்ட வியாதிகளின் சிகிச்சைக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும். இதற்கான சான்றை உரிய படிவத்தில் தருபவர் சிவில் சர்ஜன் நிலையில் உள்ள மருத்துவ அதிகாரி. ஆனால் இந்த வியாதிகள் எல்லாம் யாருக்கும் வரக்கூடாத வியாதிகளே! முன்பெல்லாம் இவற்றைத் வாங்கித் தருவதற்கென்றே சிலர் உண்டு, இதையெல்லாம் செய்தாலும் கருவூலத்தில் எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள். அவர்களையும் சரிக்கட்டவேண்டும்.

     இத்தனையும் தாண்டி சம்பளம் வாங்குவதற்குள் ஒரு வழி ஆகிவிடும். ஒரு சிலருக்கு பிப்ரவரி மாதத்தில்  ஊதியத்தின் பெரும்பகுதியை வரியாக செலுத்தும் சூழ்நிலையும் வருவதுண்டு. அப்போது ஒரு முடிவு எடுப்பார்கள் அடுத்த ஆண்டு முன்னரே எல்லா வற்றையும் தாயார் செய்துவிட வேண்டும் என்று. ஆனால் அது அத்தோடு மறந்து போகும். 

    மார்ச் மாதத்தில் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளின் தொல்லை அதிகமாக இருக்கும். மார்ச் 31 க்குள் அவர்களது டார்கெட்டை அடைவதற்கு அரசு ஊழியர்களை குறி வைப்பார்கள்.அவர்களும் அடுத்த ஆண்டு வருமான வரிகணக்குக்கு உதவுமே என்று  சேமிப்பார்கள். உண்மையில் மார்ச்சில் செலுத்தப்படும் இன்சூரன்ஸ் தொகை அடுத்த நிதிஆண்டு வருமான வரிக் கணக்கில் சேர்க்க முடியாது. ஏனெனில் அந்த சேமிப்பு முந்தைய  நிதி ஆண்டுக்கே எடுத்துக்கொள்ள முடியும். அரசு பணியில் இருப்பவர்களோ பிப்ரவரியிலேயே கணக்கை சமர்ப்பித்து விடுவதால் மார்ச் சேமிப்பினால் பயன் பெறுவது கடினம். இது தெரியாமல் சிலர் அவஸ்தைப் படுவார்கள். ஒரு வேளை இந்த ஆண்டே அதன் பலனை பெற வேண்டுமெனில் வருமான வரித் துறைக்கு உரிய படிவத்தில் சமர்ப்பித்து அந்தத் தொகையை பெறமுடியும் என்றாலும் அது சற்று சிக்கலானது.

   (தமிழக) அரசுப் பணியாளர்களை பொருத்தவரை வருமான வரி பெற இவ்வளவு சிக்கலான நடை முறைகள் தேவையா என்பதே எனது கேள்வி. அவரவர் ஊதியத்திகேற்ப குறிப்பிட்ட சதவீதத்தை கட்டாயமாக வரிப் பிடித்தம் செய்துவிடவேண்டும்.தொழில் வரி அவ்வாறுதான் பிடித்தம் செய்யப் படுகிறது. இதில் வழங்கப்படும் சலுகைகளே முறைகேடுகளுக்கு வழி வகுக்கின்றன.  ஆயிரம் ரூபாய் வரிசெலுத்தாமல் இருப்பதற்கு 10000 ஆயிரம் ரூபாய் சேமிக்க வேண்டும்.

 சேமிப்பு நல்லதென்றாலும் தேவையை நிராகரித்து சேமிப்பு கட்டாயமாக்கப்படும்போது  சில நேரங்களில் சிலருக்கு சங்கடங்களை உருவாக்கிறது. கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் வரி ஒழுங்காகச் செலுத்துவதில்லையே நம்மிடம் மட்டும் காட்டாயம் வரி வசூலித்து விடுகிறார்களே என்று ஒரு சிலர் நினைத்தாலும் நேரடியாக எளிமையாக வரிப் பிடித்தம் முறையை பின்பற்றுவதை பெரும்பாலோர் வரவேற்கவே செய்வார்கள் என்றே நம்புகிறேன்.

          *********************************************

கொசுறு;
Income tax slab for fy 2012-13
The new and revised income tax slabs and rates applicable for the financial year (FY) 2012-13 and 
 assessment year (AY) 2013-14 are mentioned below:
New Income tax slab for fy 2012-13 / ay 2013-14

S. No.
Income Range
Tax percentage
1
Up to Rs 2,00,000
No tax / exempt
2
2,00,001 to 5,00,000
10%
3
5,00,001 to 10,00,000
20%
4
Above 10,00,000
30%

 
      ********************************************************************************************

29 கருத்துகள்:

  1. தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. // மார்ச் மாதத்தில் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளின் தொல்லை அதிகமாக இருக்கும். மார்ச் 31 க்குள் அவர்களது டார்கெட்டை அடைவதற்கு அரசு ஊழியர்களை குறி வைப்பார்கள்.அவர்களும் அடுத்த ஆண்டு வருமான வரிகணக்குக்கு உதவுமே என்று சேமிப்பார்கள். // - நிஜம்தான்... ஆம்வேகாரங்களை பார்த்து ஓடற மாதிரி இவங்க தொல்லையும்.

    பதிலளிநீக்கு
  3. அதையேன் கேட்குறீங்க இந்தமாதம் மட்டும் 10500/- (பத்தாயிரத்து ஐநூறு )ரூபாய்.இன்னும் ரெண்டுமாச சம்பளம் எதிர்பார்க்க முடியாது.

    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள பகிர்வு! வரிகளை அரசே பிடித்தம் செய்துகொள்வது நல்ல பலன்களை தரும்! அதையும் மாதா மாதம் சம்பளத்திற்கேற்ப சிறு தொகையாக பிடித்தம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதம் சிறு தொகையாகக் கூட பிடித்தம் செய்யலாம்.நான் சொல்வது குழப்பாமான கணக்கீட்டு முறைகளை தவிர்த்து அவரவர் ஊதியத்திற்கு ஏற்ற வகையில் கட்டாயம் மாதம் பிடித்தம் செய்து விடவேண்டும்.

      நீக்கு
  5. விரிவான விளக்கம்! நன்றி முரளி!

    பதிலளிநீக்கு
  6. \\ஜனவரியில் இருந்தே வரிப் பிடித்தங்கள் தொடங்கிவிடும். ஜனவரியில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படும்.\\ அந்த வருடத்துக்கான மொத்த வரியை கணக்கிட்டு அதை 12 ஆகப் பிரித்து ஒவ்வொரு மாதமும் பிடிசுகிட்டுத் தானே சம்பளமே குடுப்பாங்க, இந்த மாதிரி ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சுவரி முறை எங்கேயிருக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழக அரசுப் பணியாளர்களைப் பொருத்தவரை மாத ஊதியம் 500000 க்கும் மேல் உள்ளவர்களுக்குத்தான் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வரியாக பிடித்த செய்வார்கள். பிப்ரவரிமாதத்தில் வருமானவரித்தொகை கணக்கிட்டு மீதித் தொகை இருந்தால் பிடித்தம் செய்துவிடுவார்கள்.மற்றவர்களுக்கு எல்லாம் பிப்ரவரி ஊதியத்தில்தான் பிடித்தம் செய்வார்கள்.இது நடை முறை.

      நீக்கு
  7. Magalirkum Mooththa kudimakkalukkum athiga vilakku ullathaiyum sollaum.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளிருக்கு சிறப்பு சலுகை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. மூத்த குடிமக்களுக்கு சலுகை உண்டு

      நீக்கு
  8. ஆமாங்க!வருசம் பிறந்தாலே பிரச்சினை ஆரம்பமாகி விடும்!

    பதிலளிநீக்கு
  9. ஏற்கனவே கட்டிட்டு முழிச்சுட்டு தான் இருக்கேன்! :(

    பதிலளிநீக்கு
  10. சூப்பர், பயனுள்ள பதிவு, அருமை இப்படித்தான் கமெண்ட் போடுவேன். ஏன்னா!1000 ரூபாய்க்கு சில்லறை மாத்தவே தெரியாது. இதுல வரி, கிஸ்தின்னு போட்டா புரியவா போகுது?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த லொள்ளுதானே வேணாங்கறது உங்க வீட்டோட பைனான்ஸ் மினிஸ்டர் நீங்கதான..

      நீக்கு
  11. // மாதா மாதம் பிடித்துக்கொண்டால் சுமை குறையும்// நான் வேலை செய்யும் கல்லூரி ஆபிசில் தொழில்வரி சரியாக டி.ஏ. அரியர்ஸுடன் போடும் போது தொழில் வரி பிடிப்பார்கள் சுமை தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.நிறையப் பேர் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விடுவார்கள்.

      நீக்கு
  12. வருமானவரி கணக்கு[return-form] தாக்கள் செய்யாததால் ஏற்படும் இலப்பு என்ன?

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895