என்னை கவனிப்பவர்கள்

புதன், 20 பிப்ரவரி, 2013

விவாதம் விரும்பும் பதிவர்கள்

  ஒன்றரை ஆண்டுகளாகத்தான்  தமிழ்ப் பதிவுலகில் எழுதி வருகிறேன். மற்றவர்களுடைய பதிவுகளையும் படித்து வருகிறேன்.சமூகப் பிரச்சனைகள், சினிமா, இலக்கியம்,கவிதை, நகைச்சுவை, அரசியல், அறிவியல், அனுபவம் என்று பல்வேறு பிரிவுகளில் அற்புதமாக எழுதி வருகிறார்கள் பதிவர்கள். சில பதிவுகள் சில நேரங்களில் தெரிந்தும் தெரியாமலும் விவாதத்திற்கு உரியவையாய் அமைந்துவிடுகிறது . பின்னூட்டங்களில் இவை காராசாரமாக விவாதிக்கப் படுகின்றன. ஆணித்தரமாகவும் ஆதாரங்களுடனும் தங்கள் கருத்தை எடுத்து வைத்து விவாதிப்பதில் சிலர் வல்லவர்களாக விளங்குகிறார்கள். அவர்களில் பலரும் அறிந்தவர்கள்  'வவ்வால்-தலைகீழ் விகிதங்கள்', 'ரிலாக்ஸ் ப்ளீஸ்' வருண்,  'சமரசம் உலாவும் இடமே! சார்வாகன்'., ஜெயதேவ் தாஸ். இவர்களைத்  தவிர இன்னும் பலரும் உண்டு. இருப்பினும் இந்த நால்வர் பற்றி எனது கருத்துக்கள்

  வலைசரங்களில் இவர்கள் அதிகமாக குறிப்பிடப்பட்டு அவ்வளவாக பார்த்ததில்லை.(ஒரு வேளை நான் கவனிக்காமல் இருந்திருக்கலாம்.) இவர்கள், எவ்வளவு பிரபல பதிவர்களாக இருந்தாலும்  அவர்களுடைய  பதிவுகளில் உள்ள குறைகளை தயவு தாட்சயன்மின்றி சுட்டிக் காட்டக் கூடியவர்களாகவும் தங்கள் மனதுக்குப் பட்டதை தயங்காமல் உரைக்கக் கூடியவர்களாகவும் இருப்பது காரணமாக இருக்கலாம். இவர்களது பின்னூட்டங்கள் சுவாரசியமாகவும் பல்வேறு விஷயங்களையும் வெளிக் கொணரும் வகையில் அமைந்துள்ளது.

 இவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை அபார வாதத் திறமை. மூவர் மட்டும் நாத்திகர்கள் என்று அறிய முடிகிறது. ஜெயதேவதாஸ் மட்டுமே ஆத்திகர். நிறையப் பேருக்கு சந்தோஷம் அளிக்கக் கூடிய விஷயம் இவர்கள் நிறைய விஷயங்களில்  ஒருவருக்கொருவர் கருத்து மாறுபாடு உடையவர்களாக இருப்பதுதான். பிராம்மண எதிர்ப்பு நால்வருக்கும் பொதுவாக அமைந்திருக்கிறது.
 
1.வவ்வால்-தலைகீழ் விகிதங்கள் : 2006 முதல் எழுதிவரும் வலைப் பதிவர் இரண்டு ஆண்டுகளில் 100 பதிவு எழுதிய இவர் அடுத்த 3 ஆண்டுகளில் 35 மட்டுமே. 2012 இல்தான் அதிக பட்சமாக 91 பதிவுகள் எழுதி இருக்கிறார். இவர் நக்கீரன் போல தனக்கு தவறு என்று பட்டால் குற்றம் குற்றமே என்று குட்டத் தயாராக இருப்பவர்.இவரது ப்ரஃபைல் பார்த்தபோது இவர் எந்த ப்ளாக்கையும் ஃபாலோ செய்வதாகத் தெரியவில்லை. ஒரு வேலை Follow privately என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். விவாதத்திற்குரிய பதிவுகளை அறிந்து அல்லது ஒரு பதிவிற்குள்  ஏதேனும் ஒரு வரியில் காணப்படும்  நுணுக்கமாக பொருளை எடுத்து தன் கருத்தை ஆணித் தரமாக தெரிவிப்பார். மறுப்பு கூறுவது மிகக் கடினமாக இருக்கும்.பெரும்பாலான பதிவர்கள் இவர் தங்களது வலைப் பக்கம் வருவதை விரும்புவதில்லை. புள்ளி விவரங்களை அள்ளி வீசுகிறார். சமீபத்திய தொழில் நுட்பங்களை நாளதுவரைப் படுத்திக் கொள்கிறார்.பல துறைகளில் ஈடுபாடு உடையவராக இருக்கிறார். உரமான்யம் பற்றி இவர் எழுதிய பதிவு அசத்தல் ரகம். இது போன்ற வேறு பதிவு என் கண்களில் இதுவரை பட்டதில்லை.

  இவரது கற்றது தமிழ் போன்ற பதிவுகள் எனக்குப் பிடிக்கும். யார் என்ன கூறினாலும், கடுமையாகக் கடிந்து கொண்டாலும் அதை மறந்து விட்டு தன் விமர்சனப் பணியை தொடர்வது இவரது சிறப்பு. எனக்குத் தெரிந்து வலைசர அறிமுகத்தில் திருப்பூர் ஜோதிஜி மட்டுமே இவரைக் குறிப்பிட்டிருந்தார். பல ஆண்டுகளாக பதிவுலகில் சலிப்பின்றி தொடர்ந்து எழுதிவருவது ஆச்சர்யப்பட வைக்கிறது.

2. வருண் ரிலாக்ஸ் ப்ளீஸ்: நீண்ட நாட்களாக எழுதி வருபவர்.2008 இல்தொடங்கி கிட்டத் தட்ட 950 க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதி உள்ளார். விவாதங்கள் என்றால் இவருக்கும் அல்வா சாப்பிடுவது மாதிரி. ஒவ்வொரு பிரச்சனையும் வேறு கோணங்களில் பார்ப்பவர். ப்ளாக் Contributors என்று  இவர் பெயரோடு கயல் விழி என்று குறிப்பிட்டிருந்தாலும் இருவரும் ஒருவரே என்றுதான் நினைக்கிறேன். இவரது கதைகளில் செக்ஸ் கொஞ்சம் தூக்கலாக காணமுடிகிறது.. பிராய்டின் உளவியல் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.மனித மனத்தை பகுப்பாய்வு செய்வது தனக்கு பிடிக்கும் என்று தனது ப்ரோஃபைலில் சொல்கிறார். இவரும் வவ்வாலைப் போலவே எந்த எந்த வலைப்பூக்களை பின்தொடர்கிறார் என்பதை அறிய முடியவில்லை.

சமரசம் உலாவும் இடமே! சார்வாகன்:  இந்த நால்வரில் முதலில் எனக்கு அறிமுகம் ஆனவர் ஆற்றலரசு என்கிற சார்வாகன்தான். இவர் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையவில்லை. இருநூறு பதிவுகள் எழுதி இருந்தாலும் இவரது பெரும்பாலான பதிவுகள் பரிணாமம் சார்ந்தவையாக உள்ளன. மதசார்பு பதிவுகளை கண்டால் போதும் இவருக்கு குஷி  பிறந்துவிடும். விவாதத்தில் இறங்கி வாதங்களை அடுக்க ஆரம்பித்து விடுவார்.பல்வேறு வீடியோக்களை தன் வாதத்திற்கு துணை சேர்த்துக்கொள்ள களைகட்டும் பின்னூட்டங்கள். பல எதிரிகளை சம்பாதித்திருப்பார் என்று நினைக்கிறன்.  இவர் அறிவியல், கணிதத்தில் அபார ஞானம் உடையவராகத் தெரிகிறது. சிக்கலான கணித அறிவியல் வழிமுறைகளை எளிய தமிழில் விளக்குவதில் அதிக ஆர்வம் உடையவர். பல்வேறு உலக விஷயங்களை இவர் அலசினாலும் எனக்குப் பிடித்தது இவரது கணிதப் பதிவுகள்தான். இவர் பின் தொடரும் வலைத்தளங்கள் பற்றியும் தகவல்கள் இல்லை.

ஜெயதேவ்தாஸ்: விவாதங்களில் துணிந்து இறங்கும் ஒரே ஆத்திகப் பதிவர். 2012 ஆகஸ்டில் இருந்து எழுதி வரும் இவர் நூறு பதிவுகளை எழுதி விட்டார். சைவ உணவின் தீவிர ஆதரவாளர். அதற்காக அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் ஆச்சர்யப் படுத்துகின்றன.ஆத்திகப் பதிவுகளை வித்தியாசமான கோணத்தில் எழுதுகிறார். நாத்திகர்களுக்கும் போலி ஆன்மிக வாதிகளுக்கும் ஆப்பு வைத்தலில் ஆர்வம் உடையவர் என்று தெரிவித்திருக்கிறார். அனைத்து சாமியார்களையும் தாக்கு தாக்கு என்று தாக்குகிறார். அறிவியலிலும் ஆர்வம் உடையவராக இருக்கிறார். மாப்பிள  என்றும் பாகவதர் அழைக்கப்படும் இவர் தன் பாணியில் பதிலடி கொடுக்கத் தயங்குவதில்லை. திறமையான நாத்திகப்  பதிவர்களுக்கு எதிராக சளைக்காமல் வாதாடுவதால் இவருக்கு நிறையப் பதிவர்களின் ஆதரவு கிடைக்கிறது. குறுகிய காலத்தில் தமிழ்மணத்தின் முதல் இருபது இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளார். இவரது நிலவின் மறுபக்கத்தை நாம் காணமுடியாது  என்ற பதிவு எனக்கு பிடிக்கும் தெளிவான விளக்கங்களுடனும் படங்களுடனும் எழுதி இருப்பார் ( இந்தக் கருத்தை நான் எழுத நினைத்திருந்தேன்)
 இதுபோல விவாதங்கள் மூலம் பதிவுகளை சுவாரசியமாக ஆக்கும் இன்னும் சிலரும் உண்டு. அவர்களைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

    விவாதங்கள், அறியாத பல தகவல்களை அறிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால் விவாதங்கள் ஒருவருடைய கருத்தை மாற்ற உதவி இருக்கிறதா என்றால் அது சந்தேகம்தான்.
  எப்படி  இருப்பினும் இவர்களுடைய விவாதங்கள் சுவையானவை என்பதை மறுக்க முடியாது. வரையறை மீறாமல் விவாதங்கள் தொடரட்டும்! ரசிப்போம்!.

******************************************************************************************

 

50 கருத்துகள்:

 1. எப்படி இருப்பினும் இவர்களுடைய விவாதங்கள் சுவையானவை என்பதை மறுக்க முடியாது. வரையறை மீறாமல் விவாதங்கள் தொடரட்டும்! ரசிப்போம்!.
  பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 2. அன்பார்ந்த பதிவர் முரளி அவர்களே!

  கடல் படத்தில் ஒரு குருவானவரை ஊரார் நடத்தும் விதம் அதிர்ச்சிகரமாக காட்டப்பட்டுள்ளது . எக்காரணத்தைக் கொண்டும் ஒரு குருவனாவரை அடிப்பது , உதைப்பது , கிட்டத்தட்ட எல்லோருமே நாராச மொழியில் பேசுவது போன்றவை மணிரத்தினமும் , ஜெயமோகனும் பொதுவாக மீனவர்கள் படிப்பறிவற்றவர்கள் , முரடர்கள் , மரியாதை தெரியாதவர்கள் என்ற பொதுப்புத்தியை தாண்டி எந்த கள ஆய்வும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது . முந்தைய காலங்களைப் போல குருவானவர் என்றால் பிரமிப்பும் , பக்தியும் இப்போது இல்லாதிருக்கலாம் . அதற்கு காரணம் இன்றைக்கு மிக அதிக அளவில் குருவானவர்கள் வருவது இந்த கடற்கரை கிராமங்களிலிருந்து தான் . இப்போது சொந்த குடும்பத்திலோ அல்லது ஒன்று விட்ட குடும்ப வட்டத்திலோ குறைந்தபட்சம் ஒரு குருவானவரோ அல்லது கன்னிகாஸ்திரியோ இல்லாத ஒரு மீனவ குடும்பத்தை பார்ப்பது அரிது .அந்த வகையில் பிரமிப்பும் பக்தியும் குறைந்து போயிருக்கலாம் .ஆனால் குருவானவரை ஏதோ வேண்டப்படாத விரோதி போல பார்க்கும் நிலை கண்டிப்பாக இல்லை .. சில ஊர்களில் சில குருவனாவர்களை ஏசுவதும் , அரிதாக சிறிது தாக்குவதும் நடந்திருக்கலாம் .ஆனால் இது போல ஊர்முழுக்க வசையும் தாக்குதலும் குருவனாவர் மீது நடப்பதாக காட்டுவது மீனவர் பற்றிய பொதுப்புத்தி என்றே நினைக்கிறேன். அதுவும் எடுத்தவுடனே அந்த பையன் பாதிரியாரை வசை மாறி பொழிவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை . அப்படி நடந்தால் கண்டிப்பாக மக்கள் பார்த்துக்கொன்டிருக்க மாட்டார்கள்.

  இத்தனைக்கும் ஜெயமோகன் என்ற பெரும் எழுத்தாளர் இந்த கடற்கரை சமூகம் வாழும் நிலப்பரப்பிலிருந்து 10 கிமீ தூரத்தில் வசிப்பவர் தான் , மணப்பாடு பண்ணீர் சோடா குடித்து வளர்ந்தவர் தான். அவர் இப்படி காட்சிபடுத்த களன் அமைக்கலாமா ?

  இதையெல்லாம் நீங்கள் ஏன் கண்டிக்கவே இல்லை. இந்த நாலு பதிவர்களும் ஏன் கண்டிக்கவில்லை. என்னமோ போங்க எல்லாருமே ஒரு சார்பு நிலையில் சுற்றிவருகிறீர்கள். கண்டிப்பதை கண்டிக்காம விட்டங்காட்டிக்கு தான் இந்த ஊரே இப்படி இருக்குதுங்க.

  ஜோஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருத்தம் புரிகிறது.ஜோஸ்.படம் பார்க்கவில்லை. ஜெயமோகன் இந்தப் படத்தில் பேரைக் கெடுத்துக் கொண்டாதகவே தெரிகிறது.

   நீக்கு
 3. இந்த நான்கு பதிவர்களின் பின்னூட்டங்களை நானும் படித்துள்ளேன்! சிறப்பாக புள்ளி விபரங்களுடன் விவாதிப்பார்கள்! சுவையாக பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 4. இவர்கள் அனைவருமே எனக்கு எப்போதே ஒரு தடவை பின்னூட்டமிட்டதாக ஞாபகம்.இதில் வௌவால் அவர்களின் பின்னூட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும்.அவர் சொல்வதில் நியாயம் இருந்தாலும் வீம்புக்காக எதிர் பின்னூட்டம் இடுவேன்.இவர்களை கண்டறிந்து சிறப்பித்தமை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் ஒன்றிரண்டு தடவை மட்டுமே பின்னூட்டம் இட்டிருக்கிறார்.

   நீக்கு
 5. //பெரும்பாலான பதிவர்கள் இவர் தங்களது வலைப் பக்கம் வருவதை விரும்புவதில்லை. //
  வவ்வால் ஒரு சகலகலா வல்லவன் (அவரது வார்த்தைகளில் (வலை) ஒலக நாயகன்!). வரலாறு, தொழில் நுட்பம் போலவே இலக்கியத்தையும் விட்டு வைக்க மாட்டார் 2007-8 இல் குமரனின் கூடல் வலைபதிவுகளில் இராமகி அவர்களுடன் இவரின் விவாதங்களாலேயே இவர் வலைப்பதிவை படிக்க ஆரம்பித்தே. ஆனால், அதற்குள் சில நாட்களிலேயே வலைப்பதிப்பை நிறுத்திவிட்டார். தற்போது மீண்டும் இடுகைகள் இட ஆரம்பித்துள்ளார். வவ்வால் என் வலைப் பதிவில் ஒருமுறை கருத்திட்டிருக்கிறார். இவரின் வருகையே எனக்கு சிறிது உற்சாகம் அளித்தது [நாமும் கவனிக்கப் படுகிறேன் என்ற அளவில்]. சார்வாகனும் ஒருமுறை கருத்திட்டதாக நினைவு!

  //விவாதங்கள், அறியாத பல தகவல்களை அறிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால் விவாதங்கள் ஒருவருடைய கருத்தை மாற்ற உதவி இருக்கிறதா என்றால் அது சந்தேகம்தான்.//
  கருத்தை முழுவதுமாக மாற்றுகிறதோ இல்லையோ அந்தந்த விஷயங்களில் ஒரு மாற்றுப் பார்வையை அளிக்கவே செய்கின்றன.

  தனிமனிதத் தாக்குதல் இலாத கருத்து மோதல் என்றால் சுவையாகத்தான் இருக்கும்.

  பகிர்விற்கு நன்றிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி. வேங்கட ஸ்ரீனிவாசன்

   நீக்கு
 6. ஆரோக்கியமான விவாதங்கள் புதிய விடயங்களை கற்றுக்கொள்ள உதவும்.

  பதிலளிநீக்கு
 7. அடுத்து கவிதை பதிவர்கள் குறித்து பதிவு எழுதினால் தளிர் அண்ணா சுரேஷ் (s sureshFebruary 20, 2013 at 4:22 PM)
  அவர்களை மறக்காமல் குறிப்பிடவும். அவர் ஹைக்கூ கவிதைகளை ரொம்ப சிறப்பாக எழுதுகிறார். நான் சமீபத்தில் ரசித்துப் படித்த நல்ல பல கவிதைகள் அவர் தளத்தில் உண்டு.

  ஏ.பரமாணந்தம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுரேஷின் பதிவுகள் நான் தொடர்ந்து படித்து வருகிறேன். தக்க சமயம் வாய்க்கும்போது அவரது பதிவுகள் பற்றியும் பேசுவேன்.

   நீக்கு
 8. எந்த சரமும் தராத மன நிறைவை தங்கள் பதிவு தந்திருக்கிறது, என்னை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி முரளி!!

  பதிலளிநீக்கு
 9. These four don't need any introductions...I have bookmarked Vavvaalji's pages for reading when I retire...-:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. இவர்கள் பற்றிய எனது கருத்தைத்தான் கூறி இருக்கிறேன்.

   நீக்கு
 10. உங்கள் பதிவின் மூலம் சில பதிவர்கள் பற்றிய அறிந்துகொள்ளமுடிந்தது நன்றி

  பதிலளிநீக்கு
 11. வரையறை மீறாமல் விவாதங்கள் தொடரட்டும்! ரசிப்போம்!.
  >>
  இதான் ரொம்ப முக்கியம். நம்மோட கருத்துக்களை சொல்லலாம், அடுத்தவர் மனம் நோகாதவாறு...,

  பதிலளிநீக்கு
 12. //வவ்வால்-தலைகீழ் விகிதங்கள்//

  ஸ்பீச் லெஸ் என்பார்கள் இல்லையா அது போல தான் வவ்வாலின் பதிவும் ஏதோ ஒரு விஷயம் புதிதாக அணுக பட்டு இருக்கும்.. பழைய பதிவுகள் வாசித்து பார்க்க வேண்டும் என்று தூண்டிய பதிவர்களில் முக்கியமானவர்.. பல பேரோடு வாய்க்கால் வரப்பு தகராறு இருந்தாலும், நான் விரும்பி (வித்தியாச பதிவுகள்) வாசிக்கும் பதிவுகளில் இவருடையதும் ஒன்று ..

  என்ன இவரது பதிவில் கருத்து போட அறியாத அல்லது பயப்படும் சாதா வாசகர்களில் நானும் ஒருவன்.. ஹி ஹி
  .
  .
  .
  .
  .
  தமாஷ்

  //வருண்//

  இவரது கதைகள் தவிர்த்து பல பதிவுகள் வாசித்து இருக்கிறேன். ஏதும் பிரபல பதிவுகள் அல்லது பதிவர்களின் பதிவுகளுக்கு தனது கருத்தாக பதித்து இருப்பார். அல்லது குற்ற பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து இருப்பார்.. பலது ரசிக்கும் படியும் சிலது ஓட்டைகள் நிறைந்த பதிவாகவும் இருக்கும்.. இருந்தாலும் இவர் பதிவிற்கும் நான் சைலென்ட் ரீடர் தான்.. சண்டியர்களை எதிர்க்கும் சண்டியர்..

  //சார்வாகன் //

  நேர்த்தியான பதிவர், அவருடைய பதிவுகள் அறிவியல் புத்தகங்கள் போல இருப்பதால் கிடைக்கும் நேரத்தில் வாசிப்பது குறைவு, இருந்தாலும் அவருடைய கருத்தே ஒரு பதிவுக்கு சமமாக இருக்கும்.. மற்றபடி இவர் கருத்துக்கு நான் சார்போ எதிர்போ கிடையாது..

  ஆனால் சார்வாகனிடம் இருந்து ஆப்ராஹிமிய மதங்கள் பற்றி ஒரு நடுநிலை ஆய்வு கட்டுரை எதிர் பார்க்கிறேன்.. அப்படி ஏதும் எழுதி இருந்தால் சுட்டி கிட்டி யாரும் போடுங்கப்பா..

  //ஜெயதேவ் தாஸ்//

  இவருக்குள்ள இம்புட்டு வாத விவாதம் இருக்குமா என்று என்னால் நினைக்க முடியா பதிவர், மற்ற படி இவரது மத நம்பிக்கை சார் பதிவுகளை தவிர்த்து எல்லா பதிவுகளும் வாசித்து விட்டேன்..

  //எடக்கு மடக்கு//

  நான் பதிவுலகில் வரும் முதல் கூட இந்த பக்கம் பழக்கம் யாரோ ஒருவரை ஏதோ ஒரு காரணத்திற்காக ரவுண்டு கட்டி கொண்டு இருப்பார்கள்.. இதில் முட்டாள் பையன், சேட்டு போன்றவர்களின் கருத்துக்கள் வாதங்கள் செம சூடாக இருக்கும்..

  //இக்பால் //

  இவர் கூட இந்த நாட்களில் நன்றாகவே வாதாடுகிறார்..  (நாலு முறை சோதித்தே கருத்தை வெளியிடுகிறேன், ஏதும் தப்பு தண்டா இருந்தா ஸ்மால் பாய மன்னிச்சிடுங்க பாஸ்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான்கூட இவர்களுடைய பதிவுகளுக்கு அதிக கருத்திட்டதில்லை.ஹாரி. இக்பால் செல்வன் உள்ளிட்ட இன்னும் சிலர் என் பட்டியலில் இருக்கின்றனர். இன்னொரு பதிவில் அவர்களை பற்றி சொல்ல இருக்கிறேன்.

   நீக்கு
 13. நீங்கள் சொன்னது சரிதான்.இதில் விவாதத்துக்கு இடமில்லை

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துக்கள்
  நல்ல வித்யாசமான பதிவு.... இது போல இன்னும் வித்தியாசாக உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன். உங்கள் பழைய பதிவுகளை இனிமேல படிக்கனும். அப்புறம் தான் நீங்க நிதானமான பதிவரா உட்டாலங்கடி உபயசாமியா என்று என்னால் கணிக்க முடியும்.
  அதுக்கு சில நாள் ஆகும் அதனால இப்ப ஒரு சின்ன ரிக்வெஸ்ட் வச்சிடுறேன். என் அப்பன் பாரதி படத்தை புரபைலில் வச்சிருக்கேங்க.. அதனால கருத்துக்களை பதிவிடும் போதும் பின்னூட்டம் இடும் போதும் சற்றே நிதானத்துடன் இடுங்க.. அவர் பேருக்கு கலங்கம் வராம பார்த்துக் கொள்ளுங்க....

  பாரதிதாஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்தவரை கவனமாகத்தான் இருக்கேன். ஆலோசனைக்கு நன்றி பாரதிதாஸ்

   நீக்கு
  2. கவனம் தவறுகிறாற்ப் போல் உணர்ந்தால் புரபைலுக்கு கவுந்தமணி படத்தை போட்டுடுங்க அப்புறம் எப்படி வேணா எழுதலாம்.
   வழிப்போக்கன்

   நீக்கு
 15. அறிந்த நண்பர்கள்தான்..இருப்பினும் இவர்களை நீங்கள் அறிமுகப்படுத்திய விதம் நன்று.. இவர்களுக்குள்ளான வாதங்கள் சில சமயம் தீவிரமாகச் சென்றாலும் வாதிடும் திறன் கண்டிப்பாக பாராட்டும் விதத்தில் இருக்கும்.

  இவை வரவேற்கப்பட வேண்டியவையே

  பதிலளிநீக்கு
 16. முரளி: விமர்சிக்கப் படவேண்டிய விவாதப் பதிவர்கள்தான் இவர்கள் நால்வருமே! :-) இவர்களிடம் உள்ள குறைகள்னு சொல்ல வந்தால், சமர்த்தாக விவாதத்தை எளிதில் முடிக்கத் தெரியாதவர்கள்னு சொல்லலாம்! :-)

  பதிலளிநீக்கு
 17. சகோ முரளி,
  வணக்கம். வாழ்த்துகளுக்கு நன்றி.

  நாம் கற்கும் விடயங்களை, எளிமைப் படுத்தி அளிக்க முயற்சிக்கிறோம்.மதம்[சார் அரசியல்],அறிவியல் என்பவை நமக்கு பிடித்த விடயங்கள்.
  பரிணாம சிந்தனை என்னும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் நாம் சான்றுகளின் மீது வாதிடுகிறோம்.

  நம் இந்திய கலாச்சாரமே தத்துவ விள்க்கங்களின் கருத்து மோதலே ஆகும்!!

  பிரப்ஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் காலம்,சூழல் பொறுத்து மாறுகிறது. அம்மாற்றத்தின் சான்றுகள் கொண்டு கடந்த எதிர்கால நிகழ்வுகளை கணிப்பதே நாம் அறிந்த வரலாறு& அறிவியல்.

  ஒரு இயற்கை நிகழ்வை அளவீடுகளின் மூலம் சான்றாக்கி நிகழும் விதம் குறித்த பொருந்தும் விள்க்கமே அறிவியல் என்பதை புரியவைக்கவே முயல்கிறோம்.

  இந்தப் பார்வை கொண்டு நோக்கினால் பல பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க முடியும் என நம்புகிறேன்.

  இதுவே நம் அடிப்படை நிலைப்பாடு!!
  **

  ஒருவரின் கருத்து என்பது அவரின் கற்றல்,சூழல் அனுபவம் சார்ந்த விடயம். என்பதால் நம்மோடு வாதிப்பவரின் நிலைப்பாடு,கற்றல், அனுபவம் அறிய முயல்கிறோம்.


  மற்றபடி எதிர்& மாற்று கருத்தாளர்களையும் நேசிக்கிறோம். நம்ம ஜெயதேவு தாசு நம் பாசத்துக்குரிய மாப்பிள்ளைதான். வருண் நம்ம மச்சான்தான், வவ்வால்,சுவனப்பிரியன், ஆஸிக் அகமது,இப்ராஹிம் ஷேக் முகம்மது நம் சகோதரர்கள்தான்!!

  மீண்டும் நம்மை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!!

  இது நம் கடை விளம்பரம்!!
  டிஸ்கி: விருப்ப பதிவு மதம்,அறிவியல் சார்ந்து கேட்கும் நண்பர்களுக்கு இயன்றவரை முயற்சிப்போம் எனவும் கூறுகிறோம் டொட்டய்ங்!!

  நன்றி!!

  பதிலளிநீக்கு
 18. இக்பால் செல்வன். சமூக விமர்சகர். இவரை அறிந்திருக்க வாய்ப்பில்லையோ? அவரது பதிவுகளை விரும்பி படிப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரையும் அறிவேன்.அவரையும் இன்னும் சிலரைப் பற்றியும் இன்னொரு பதிவில் விரிவாக எழுத இருக்கிறேன்.

   நீக்கு
 19. எதிர்பார்ப்புகளுடன் படித்தேன்.

  பதிவு, மன நிறைவு தருவதாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 20. உங்களின் திறனாய்வு அருமை.நால்வரைபற்றி அக்கறையுடன் சொல்லியுள்ளீர்கள் அருமை

  பதிலளிநீக்கு
 21. விவாதமற்ற சமூகம் பயனற்றதாகி விடும் என்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்! என்றாலும் விவாதங்கள் சண்டையில் முடியாமலும் மனக் கசப்பை அதிகமாக்காமலும் இருத்தல் நல்லது.

   நீக்கு
 22. “கலகம் பிறந்தால் தான் நியாயம் கிடைக்கும்“ என்பார்கள்.

  ஆனால் அந்தக் கலகம் ஆரோக்கியமானதாவும்,
  அடுத்தவர்க்கு அல்லது அடுத்தச் சமுதாயத்திற்கு
  உதவுவதாகவும் இருக்க வேண்டும்.

  நீங்கள் சொன்னவர்களின் பின்னோட்ங்கள் அருமையானதாகவும்
  ஆக்கப் பூர்வமானதாகவும் இருக்கும் தான். நானும் படித்திருக்கிறேன்.

  பகிர்விற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 23. நான் புதுசுங்க ஜாம்பவான்களை பற்றி கருத்து சொல்ல இன்னும் நெடும் தூரம் போகணும்
  //விவாதங்கள், அறியாத பல தகவல்களை அறிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால் விவாதங்கள் ஒருவருடைய கருத்தை மாற்ற உதவி இருக்கிறதா என்றால் அது சந்தேகம்தான்.//
  ஆனால் இது ரொம்ப நல்ல இருக்கு

  பதிலளிநீக்கு
 24. முரளி சார்,

  ரொம்ப தாமதமாக உள்ளே வர்ரேன், மன்னிக்கவும் கொஞ்சம் லேட்டாகிடுச்சு :-))

  ஹி...ஹி வலைச்சரம் போல இது தனிச்சரமா, அதிலும் நமக்கு ஒரு இடம் கொடுத்து சிறப்பித்தமைக்கு நன்றி!

  என்னை போன்ற வளரும் பதிவர்களுக்கு இது போன்ற "கவனிப்புகள்" அவசியம் தேவையே.ஏதோ பழைய பேப்பர் போல ,பழைய பதிவர்னு சொல்லி இருக்கீங்க, நான் புத்தம் புது "யூத்து பதிவராக்கும்" :-))

  அப்புறம் நான் விவாதம் எல்லாம் விரும்புவதும் இல்லை, ஏதோ எனது சிற்றறிவுக்கு எட்டியதை குறிப்பிடுவேன் , பிடிச்சவங்க ரசிக்கிறாங்க, பிடிக்காதவங்க அதனை ஏற்காமல் ஏதோ சொல்லுறாங்க, நான் விவாதமெல்லாம், செய்ய மாட்டேன், சொன்னா நம்பணும் :-))

  //மூவர் மட்டும் நாத்திகர்கள் என்று அறிய முடிகிறது. ஜெயதேவதாஸ் மட்டுமே ஆத்திகர். நிறையப் பேருக்கு சந்தோஷம் அளிக்கக் கூடிய விஷயம் இவர்கள் நிறைய விஷயங்களில் ஒருவருக்கொருவர் கருத்து மாறுபாடு உடையவர்களாக இருப்பதுதான். பிராம்மண எதிர்ப்பு நால்வருக்கும் பொதுவாக அமைந்திருக்கிறது.//

  # சகோ.சார்வாகன் மற்றும் எனக்கு பல நேரங்களில் ஒத்த சிந்தனை ஏற்பட்டிருக்கு, அவ்வப்போது கருத்து பறிமாற்றம் செய்வதோடு சரி எனவே முரண்கள் இல்லை,எனலாம். எனவே உங்களுக்கு முழு சந்தோஷம்ம் கிடையாது :-))

  # பாகவதர் பிராமண எதிர்ப்பாளாரா, அறியாத அரிய தகவல் :-))
  எப்படி இப்படிலாம் கண்டுப்பிடிக்கிறிங்க?

  அவர் பார்ப்பண அடிவருடி ,ஆனால் வைணவ பார்ப்பணர்களுக்கு மட்டுமே :-))

  #// விவாதங்கள், அறியாத பல தகவல்களை அறிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால் விவாதங்கள் ஒருவருடைய கருத்தை மாற்ற உதவி இருக்கிறதா என்றால் அது சந்தேகம்தான்.//

  பதிவுகள் அறியாத பல தகவல்களை அறிந்துக்கொள்ள உதவுகின்றன,ஆனால் ஒருவருடைய கருத்தை மாற்ற உதவி இருக்கிறதா என்றால் சந்தேகம் தான் :-))

  இப்படி எல்லாவற்றுக்குமே சொல்லலாம். எனவே என்ன நடக்கும் என எதிர்ப்பார்த்து சொல்வதில்லை, கருத்து வெளிப்பாடு மற்றும் கருத்துப் பரிமாற்றம் நிகழ்தல் மட்டுமே நடந்தாலும் போதுமே.
  ----------------
  வெங்கட ஶ்ரீனிவாசன்,

  தங்களின் மேலான கருத்துரைக்கு மிக்க,நன்றி,

  நல்லா கவனிச்சு வச்சிருக்கீங்க :-))

  # ரெவரிஜி,

  நன்றி!

  //I have bookmarked Vavvaalji's pages for reading when I retire...-:)//

  என்னது ,நான் எழுதினதை ரிட்டயர்ட் ஆன பெருசுங்க தான் படிப்பாங்கன்னு சொல்லுறாப்போல இருக்கு, கலர்,கலரா படமெல்லாம் போட்டு யூத்துகளுக்காக ஒரு யூத்தால் எழுதப்படும் பதிவு நம்மது.

  #ஹாரி,

  நன்றி!

  என்னப்பார்த்தா அம்புட்டு டெர்ராவா இருக்கு அவ்வ் :-((
  ---------------
  அனானி "ஜோஸ்"

  //இந்த நாலு பதிவர்களும் ஏன் கண்டிக்கவில்லை. என்னமோ போங்க எல்லாருமே ஒரு சார்பு நிலையில் சுற்றிவருகிறீர்கள். கண்டிப்பதை கண்டிக்காம விட்டங்காட்டிக்கு தான் இந்த ஊரே இப்படி இருக்குதுங்க.//

  படம் பார்த்திருந்தால் தானே என்ன ஏதுனு சொல்ல முடியும், சமீப காலமாக மணிரத்னம் படங்களே பார்ப்பதில்லை,டிவிடி வாங்குவது கூட காசுக்கு கேடுனு வாங்குவதில்லை :-))

  கடைசியா அலைப்பாயுதே பார்த்தேன்(அதுவும் ஷாலினிக்காக ) அப்புறம் அவர் படமெல்லாம் டிவில போட்டாக்கூட முழுசா பார்க்க மாட்டேன் :-))
  -----------------

  பதிலளிநீக்கு
 25. நீங்க எப்படியும் வருவீங்கன்னு தெரியும். நீங்க எப்பவுமே யூத் தான். பழைய ன்னா நீண்ட நாட்கள் வலையுலகில் எழுதி வரீங்கன்னுதான் சொல்ல நினச்சேன். ""பழைய" ன்ற வார்த்தையை மாத்திடறேன்.
  நான் எந்த நேரத்தில சொன்னனோ இந்த வார வலைசரத்தில தமிழ் இளங்கோ உங்கள் பதிவை குறிப்பிட்டிருக்கிறார்.
  என் மனதில் பட்டதை எழுதி இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முரளி சார்,

   கணினியில் வர முடியாத சூழல் என்பதால் கைப்பேசியில் படித்திருந்தேன்,அதனால் தான் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.

   நீங்க மனதில் பட்டதை தான் சொல்கிறீர்கள் என்பதை அறிவேன், சும்மா தமாஷ் செய்தேன்.

   சண்டைக்காரங்கன்னு சொல்லாம விவாதம் செய்ய விரும்புவதாக சொன்னதே பெரிய விடயம், ஆரோக்கியமான விவாதங்கள் எப்பொழுதும் தேவையே.

   நீங்க பெரிய வாக்கு சித்தராக இருப்பீர்கள் போல, உங்க பதிவில் அறிமும் ஆன கையோடு வலைச்சரத்திலும் மீண்டும் தி.தமிழ் இளங்கோ அவர்களால் ஒரு அறிமுக உரையும் கிடைத்துள்ளது,நன்றி!

   நீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895