என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

இப்படியும் நடக்குமா?குஜராத்தில் ஒரு கொடுமை


  தலைவனுக்காக  தீக்குளிக்கவும் தயார் என்று தொண்டர்கள் சிலர் சொல்வதுண்டு சிலர் அவ்வாறே செய்யத் துணிவதும் உண்டு. ஆனால் தங்கள் விசுவாசத்தை நிருபிப்பதற்காக கொதிக்கும் எண்ணையில் தங்கள் கையை விட்டவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டதுண்டா? அந்தச் செய்தியைப் படித்தது நான் அதிர்ந்துதான் போனேன்.

 குஜராத்  மாநிலத்தில் சபர்கந்த் மாவட்டத்தில் உள்ள தேரியா என்ற கிராமத்தில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடை பெற்றுள்ளது.
காரணம்  என்ன?
  கிராம உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று  வாக்கு எண்ணிக்கை அப்போதுதான் முடிந்தது. ஊராட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் தினேஷ் பரமர் என்பவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மேல்ஜி பரமர் என்பவரிடம் தோற்றுப் போனார். தன் இன மக்கள் தனக்கு எதிராக வாக்களித்துவிட்டார்கள் என்று  அதிருப்தியும் கோபமும் அடைந்தார் 

 அவரை சமாதானப் படுத்த அவரது இன மக்கள் சிலர்   தினேஷுக்குத்தான் வாக்களித்தோம் என்றும் கூறி உள்ளனர். மேலும்  20க்கும் மேற்பட்டவர்கள் பேர் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க முன்வந்து கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு தங்கள் கையை சுட்டுக் கொண்டு கடுமையான காயங்களுடன் துடித்தனர்.  உண்மையில் தினேஷ் பரமருக்கு  ஓட்டுப் போட்டிருந்ததாலும் உண்மையைச் சொன்னதால்  கொதிக்கும் எண்ணையால் அவர்கள் கைக்கு பாதிப்பு வராது என்றும் பொய் சொன்னால்தான் கை வெந்து போகும் என்றும்  நம்பிய மூடத்தனமே இதற்கு காரணமாம்  
  இதை தட்டிக் கேட்கவோ தடுக்கவோ யாரும் முன் வராததும் மனிதாபிமானத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு வேடிக்கை பாரத்து கொண்டிருந்ததும்  வெட்கித் தலைகுனிய வேண்டிய  விஷயமே! 

  அவ்வூர் கோவிலின் முன்னே இக்கொடுமை நடைபெற்றுள்ளது. இந்த மூடநம்பிக்கை ஆழமாக இம்மக்களிடையே வேரூன்றி உள்ளதாம் தினேஷ் பரமரையும் இதற்கு தூண்டு கோலாக இருந்த அம்ருத் பரமர் என்பவரையும்   கைது செய்திருக்கிறது போலீஸ்.

கைது செய்த போலிசை பாராட்டி இருக்கிறார் நரேந்திர மோடி. தினேஷ் பரமரோ அரசியல் செல்வாக்கு பெற்றவர் என்று கூறப்படுகிறது. இவர்களைப் போன்றவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடக் கூடாது.

  அந்த  மக்கள் மீது பரிதாபத்தைவிட கோபம்தான் அதிகமாக வந்தது. அப்படி என்ன இவர்களுக்காக சாதித்து விட்டார் அந்த பாழாய்ப் போன தினேஷ் பரமர் என்று தெரியவில்லை. இது போன்று நடைபெறுவது இப்பகுதிகளில் சகஜமாம்.  "நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்." என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வந்தது. 
  இது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதரணமாக நடக்கிறது என்கின்றனர். ஒரு வயதான கிழவியையும் அவரது மகளையும் திருட்டுக் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க இதேபோல் கொதிக்கும் எண்ணையில் கைவிடச் சொன்ன நிகழ்வும் சமீபத்தில் நடந்ததாம். இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் இது போன்று நடைபெறுவது வேதனைக்குரியது.
 .
 குஜராத் அபாரமான வளர்ச்சி கண்டுள்ளதாக  பத்திரிகைகளும் ஊடகங்களும் தெரிவிக்கின்றன. எத்தனை  தொழில் வளர்ச்சியும் விஞ்ஞான வளர்ச்சியும் வந்தால் என்ன? அடிமை எண்ணம் மாறாமல் வாழும் மக்களின் பரிதாப நிலையை என்னென்பது.

 அறிவியல் தொழில் நுட்பங்கள்   மக்களின் அறியாமையைப் போக்கவில்லை என்றால் அது எப்படி உண்மையான வளர்ச்சி ஆகும்.?

 இது ஒரு உதாரணம்தான் இப்படி இன்னும் எத்தனை மக்கள் நம் நாட்டில் வாழ்ந்து  கொண்டிருக்கிறார்களோ? சுயநல அரசியல்வாதிகள் மட்டுமல்லாது அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. அரசாங்கம் பொதுநல அமைப்புகள், மூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து  செயல் பட்டால் மட்டுமே  இத்தகைய முட்டாள் தனங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

மனதை திடப் படுத்திகொண்டு கையை சுட்டுக் கொண்டவர்களை இந்த செய்தித் தொலைக் காட்சிக் காணொளியில் பாருங்கள்



********************************************************************************
 இதை படித்து விட்டீர்களா?
ஜனவரி,பிப்ரவரி,வருமானவரி!

24 கருத்துகள்:

  1. கோபமாக வருகிறது இப்படி அடிமுட்டாள்களாக இருப்பவர்களைப் பார்த்தும் ,அவர்களை அப்படியே இருக்கச் செய்யும் நம் அரசையும் பார்த்து....தமிழகத்தை விட வட பகுதிகளில் இப்படிப்பட்ட முட்டாள்கள் அதிகமோ?

    பதிலளிநீக்கு
  2. அறியாமை இருள் இன்னமும் முழுமையாக விலகவில்லை.நடிகனுக்கு பாலாபிஷகம் செய்பவர்களும், தலைவனுக்கு தீக்குளித்து உயிர் விடுபவர்களும் இருக்கும் வரை மூடத்தனம் ஒழியாது.

    பதிலளிநீக்கு
  3. என்ன கொடுமை இது இப்படியும் இருப்பார்களா ? சுயசிந்தை இல்லாதவர்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிதாபத்தை விட கோபம்தான் உண்டாக்குகிறது இவர்கள் முட்டாள்தனத்தை எண்ணி.

      நீக்கு
  4. மூடனுக்காக இந்த மூடத்தனம் தேவையா?

    பதிலளிநீக்கு
  5. மூடத்தனம்...that too at its best...

    பதிலளிநீக்கு
  6. இவ்வளவு மூடர்களாக இருக்கின்றார்களே படத்தை பார்க்கவே அய்யோ..... பாவம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவமாகவும் இருக்கிறது மூடத் தனத்தை நினைத்து கோபமும் வருகிறது.

      நீக்கு
  7. கொடுமை யாருக்கு நடந்தாலும் தட்டிக் கேட்க வேண்டியது அவசியந்தான்.

    பதிலளிநீக்கு
  8. ****மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் பேர் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க முன்வந்து கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு தங்கள் கையை சுட்டுக் கொண்டு கடுமையான காயங்களுடன் துடித்தனர். ****

    முட்டாள்களுக்காக வருத்தப் படுபவர்கள் ஒரு வகை!

    முட்டாள்களைப் பார்த்து சிரிப்பவர்கள் இன்னொரு வகை!

    ஒரு சிலர் சிரிக்க முடியாமலும், அழ முடியாமலும் ஒரே குழப்ப நிலையில் இருப்பாங்க.

    இதுமாரி நடக்கிறதாலேயோ என்னவோ இந்தியாவை இன்னும் பலர் "தெர்ட் வால்ட் கண்ட்ரி"னு தான் சொல்றாங்க! அப்புறம் இந்த டெல்லி நிகழ்ச்சியைப் பற்றி பலநாட்டு மக்கள் "கேவலமான பார்வையுடன்" விசாரிக்கிறாங்க! இப்போ இந்த நிகழ்ச்சியும் இந்தியாவுக்கு இன்னும் கொஞ்சம் "பெருமை" சேர்க்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னமோ போங்க!நீங்க சொல்றமாதிரி வருத்தப் படறதா?கோபப் படறதா? ன்னு தெரியல.

      நீக்கு
  9. என்ன அநியாயம்? என்ன முட்டாள்தனம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த முகங்களை பாருங்க! எந்த உணர்வையும் வெளிபடுத்தாம இருக்கிற மாதிரி தெரியல?

      நீக்கு
  10. சாமரஜக புதினங்களின் சாதத்வீக சமூக பரிபாலனத்தின் பார்டர் கோடு இது தான். வகுளந்த மூர்க்கமான செந்துபளா காவோகத்தின் பத்தின பாமசையான செயல்பாடு தான் இது. தனமிஞ்ய துட்டோமைத் தனத்தை வென்று வெற்பதிலமத்தில் வீசப் போகிறார்கள. கெளடாம்பீத நிபோலத்தின் பச்சேந்திர இழிநிலை என்ன சொல்ல ?

    பதிலளிநீக்கு
  11. முரளி,

    இது போன்ற மூடநம்பிக்கைகள் இந்தியா முழுவதும் இருக்கு,எல்லாம் ஏதோ ஒரு மதம்,தெய்வத்தின் பெயரால் நடக்குது.

    கொஞ்சநாள் முன்னர் ஒரு பள்ளி மாணவி திருடவில்லை என நிருபிக்க கையில் சூடம் ஏற்றி காண்பிக்க வைக்கப்பட்டு ,கை வெந்தது,செய்ய வைத்தது அப்பள்ளி ஆசிரியை :-))

    கொதிக்கும் எண்ணையில கையை விட வைக்கும் சோதனை தமிழ்நாட்டிலும் உண்டு, இப்போத்தான் அதெல்லாம் குறைந்து இருக்கு.ஊர் பஞ்சாயத்துல "சின்னக்கவுண்டர்" போல தீர்ப்பு சொல்பவர்கள் இப்படி செய்ய சொல்வார்கள்.

    இப்போ ஊர்ப்பஞ்சாயத்தில அபராதம் கட்டிவிட்டு ,எல்லார் காலிலும் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்க சொல்லும் தீர்ப்புகள் வழங்கப்படுகிறது. அல்லது சாணி,மனித மலம் என கறைத்து வாயில் ஊற்றும் கொடுமையும் நடக்கிறது. இது போன்ற தண்டனைகள் தலித்துகளுக்கே விதிக்கப்படுவதால் 'நம்ம பதிவர்கள்" கண்டுக்கொள்வதில்லை போலும் :-))

    பதிலளிநீக்கு
  12. உண்மைதான். வவ்வால். கவனிக்கபடவேண்டியதும் தீர்வு காண வேண்டியதும் அவசியம்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895