என்னை கவனிப்பவர்கள்

புதன், 21 ஜனவரி, 2015

இந்த புத்தககக் கண்காட்சி பாத்தா சிரிப்பு வரும்



இந்த வருட புத்தகக் கண்காட்சி இன்னைக்கு  முடியப் போகுது . புத்தகக் கண்காட்சி பத்தி ஒரு பதிவு போட்டாச்சி. இன்னொன்னு என்ன போடலாம்னு யோசிச்சேன். விகடன்ல சீசன் ஜோக்ஸ் போடுவாங்க .ஆனா புக் ஃபேர் பத்தி போட்டாங்களான்னு தெரியல . அவங்க போடலன்னா என்ன? நமக்கு நகைச்சுவை உணர்வு இருக்கான்னு ரொம்ப நாளைக்கப்புறம் சோதிச்சி( நியாயமா பாத்த உங்கள சோதிச்சி பாத்தேன்னுதான் சொல்லணும்)  பாத்தேன். சிரிக்க ட்ரை பண்ணுங்க . 
பகவான்ஜி  மன்னிப்பாராக 
சிரிப்பு வந்தா சிரிங்க! . வரலைன்னாலும் சிரிங்க! 



அந்த எழுத்தாளரோட  புத்தகத்தை கேட்டுவாங்க  அவ்வளவு பேர் வந்திருக்காங்களே! அவர் ஏன் கோபப் படறார்?
அவங்க எல்லாம் பழைய புக் பேப்பர் வாங்கறவங்களாம்
*******************************************************************************************************

இவங்க யாருன்னு தெரியல இல்ல! .அப்படியே
மெயின்டைன் பண்ணுங்க  ஹிஹி
வாசகர் சார்! நீங்களே சொல்லுங்க அந்த டாக்டர் செஞ்சது நியாயமான்னு?

அப்படி என்ன சார் செஞ்சாரு?

தூக்க மாத்திரைக்கு பதிலா நாங்க எழுதின புத்தகங்கள பிரி்ஸ்க்ரிப்ஷன்ல  எழுதித்தராராம் .

*************************************************************************


ஒவ்வொரு கடை  முன்னாடியும் ஏகப்பட்ட கூட்டம் இருக்கே ஆனா யாரும் புக் வாங்கற மாதிரியே தெரியலேயே!

அவங்க வாங்க வந்தவங்க இல்லையாம்.புக் எழுதின எழுத்தாளர்களாம்

*********************************************************************************



அவர் பலவருஷமா ஒரு சஸ்பென்ஸ் நாவல் எழுதிக்கிடிருக்காராமே. அப்படி என்ன சஸ்பென்ஸ் அதுல இருக்கும்?

அந்த நாவல்  எழுதி முடிப்பாரா முடிக்க  மாட்டாராங்கறதுதன் சஸ்பென்சாம்



************************************************************

பப்ளிஷர்சார்! நான் எழுதின புத்தகத்துக்கு  ராயல்டீ கொடுக்கறேன்னு சொல்லிட்டு சிங்கள் டீ குடுக்கறீங்களே! நியாயமா

சார்! தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க! ராயல் டீக்கடையில் இருந்து                வாங்கற டீயைத்தான் நாங்கள்     ராயல்டீன்னு சொல்லுவோம்


*********************************************************************************


இதையும் படியுங்க!

35 கருத்துகள்:

  1. :-)))))))))))))))))))))))

    இன்று நானும் புத்தகத் திருவிழா பதிவு ஒன்னு போட்டு என் கடமையை ஆற்றிவிட்டேன்!

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே மிக மிக அருமை. கடைக்கு முன்னாடி ஏகப்பட்ட கூட்டமும், வடிவேலு ஜோக்கும் சூப்பர்! பகவான்ஜி ரசிப்பார். 'தளிர்' சுரேஷ் கூட நிறைய ஜோக்ஸ் சர்வசாதாரணமாக அள்ளி விடுகிறார் முரளி!

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான நகைச்சுவை விருந்து
    தாராளமாகத் தொடரலாம்
    அதற்கான சிறப்புத் திறன் இருப்பதற்கு
    இந்தப் பதிவே அத்தாட்சி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நல்ல நகைச்சுவைப் பகிர்வு. நன்றி. நகைச்சுவையாளர் பட்டியல் தற்போது நீள ஆரம்பித்துள்ளது போலுள்ளது.

    பதிலளிநீக்கு
  5. எழுத்தாளர்களே அவ்வளவு கூட்டமா...? ஹா... ஹா... வருங்காலத்தில் உண்மை....!

    பதிலளிநீக்கு
  6. //அவங்க வாங்க வந்தவங்க இல்லையாம்.புக் எழுதின எழுத்தாளர்களாம்//

    மற்ற சிரிப்புகளும் என்னைச் சிரிக்க வைத்தன. இது வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

    முரளிக்கு நகைச்சுவை கைவந்த கலைதான். தொடரலாம்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    அண்ணா
    அற்புதமான உரையாடல் வழி பதிவை மிக அருமையாக நகர்த்தியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி.. கலக்கிட்டீங்கள்..அண்ணா
    த.ம4
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. ஆனா உங்களையே ஓட்றதுக்கு உங்களால தான் முடியும்,நகைச்சுவை அருமை நன்றி......

    பதிலளிநீக்கு
  9. ஆனா உங்களையே ஓட்றதுக்கு உங்களால தான் முடியும்,நகைச்சுவை அருமை நன்றி......

    பதிலளிநீக்கு
  10. படமும் நகைச்சுவைகளும் அருமை பதிந்த விதம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  11. நகைச்சுவையும் அதற்கு தகுந்த படங்களும் வெகு சிறப்பு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. ரசிக்க வைத்த நகைச்சுவைகள்! அருமை!

    பதிலளிநீக்கு
  13. அஹஹஹஹ்! செம...ஜோக்குகளும், அதற்கு ஏற்றார் போல் படங்களும் அருமை...!

    பதிலளிநீக்கு
  14. ஆஹா இவ்ளோ நகைச்சுவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கல சார்.சூப்பர்

    பதிலளிநீக்கு
  15. வடிவேலு படமும், வடிவான நகைச்சுவையும் அருமை முரளி அய்யா.
    உங்களுக்குள் ஒளிந்திருக்கும் நகைச்சுவை உணர்வு உங்கள் படைப்புகள் முழுவதும வருவதைக் கவனித்திருக்கிறேன். இப்டிமுழுநீளப் பதிவு போட்டால்தான் திருப்தி அவ்வப்போது போடுங்க.

    பதிலளிநீக்கு
  16. ஹ ஹா ஹா ..
    இப்படி கலாய்க்றீங்க
    தம+

    பதிலளிநீக்கு
  17. ராயல் டீ?!
    நான் எழுதினா நிச்சயம் கிடைக்கும்!

    பதிலளிநீக்கு
  18. நகைச்சுவை ரசிக்கும்படி இருக்கிறது நண்பரே...
    நண்பரே நான் தங்களைத்தொடரும் 333 வது நபர்.

    பதிலளிநீக்கு
  19. இந்த டீ யாவது கிடைச்சுதேன்னு சந்தோசப் பட வேண்டியதுதான் :)
    இப்படியே தொடருங்கள் முரளிதரன் ஜி , வாழ்த்துக்கள் !
    த ம 8

    பதிலளிநீக்கு
  20. சிரித்தேன்! கவிஞர் கி பாரதிதாசன்( பாரிஸ்) இன்று இந்தியா வருகிறார் !தொடர்பு கொள்வதாக சொன்னார் என் கைபேசி எண்-7094766822 ஆகும்!முரளி!

    பதிலளிநீக்கு
  21. சிறந்த திறனாய்வுப் பார்வை
    அதேவேளை
    சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  22. ரசித்துச் சிரித்தேன் மூங்கில் காற்று.

    பதிலளிநீக்கு
  23. இதுக்காகத்தான் டிக்கட் போட்டிருக்காங்களா?

    பதிலளிநீக்கு
  24. haahaahaa 1, 3, 5 jokes mikavum rasichu mindum mindum padithu paarthen sir.

    nakaichuvai ungalukku nallaa varukirahu. thodarungal sir.

    பதிலளிநீக்கு
  25. ஆகா
    ரசித்தேன்
    சிரித்தேன்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  26. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html.

    பதிலளிநீக்கு

  27. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!

    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    (வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரித்தால்!)

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள்
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr
    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!

    (இன்றைய எனது பதிவு
    "இந்திய குடியரசு தினம்" கவிதை
    காண வாருங்களேன்)

    பதிலளிநீக்கு
  28. சிரிப்பு வந்தா சிரிங்க! . வரலைன்னாலும் சிரிங்க!
    இதையும் படிங்க
    சிரிக்காட்டி விடமாட்டேன்.
    நான் இதைப் பார்த்தே சிரிச்சிட்டேனே!...
    நல்ல பகிடிகள்.
    வேதா. இலங்காதிலக

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895