இணையத்தின் மூலம் நமக்கு நாடு தாண்டிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். அவர்களில் பலர் எப்படி இருப்பார்கள் என்று நமக்கு தெரியாமல் கூட இருக்கும். சிலர் சந்தர்ப்பம் வாய்க்கும்போது நண்பர்களை சந்திக்கிறார்கள். நெருங்கிய நட்பாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது சில நண்பர்களுடன் தொடர்பு வைத்திருப்பார்கள். இந்த ஆண்டின் துவக்கத்தில் வருத்தம் தந்த செய்தியை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.'பார்வையில்' என்ற வலைப்பதிவு எழுதி வந்த ராஜநடராஜன் அவர்களின் மரண செய்திதான்அது . எதிர்பாராவிதமாக மாரடைப்பால் மரணம் அடைந்து மிகவும் வருத்தம் தந்த செய்தி. அவருடன் இணைய வழியில் கூட அதை அளவு தொடர்போ அறிமுகமோ இல்லாது போனாலும் நெருங்கிய ஒருவரை இழந்தார்ப் போன்ற உணர்வு ஏற்பட்டது உண்மை. .டிசம்பர் 30 அன்று கூட ஒருபதிவு எழுதி இருக்கிறார். அவரது மரணம் எதிர்பாராதது அது சமீபத்தில் டிசம்பரில் எனது பதிவு ஒன்றுக்கு கருத்திட்டிருந்தார். அவர் 2007 இல் இருந்து எழுதி வருகிறார் என்பது அவரது வலைப்பூ தொகுப்பை பார்த்தபோது தெரிய வந்தது.
சீனியர் பதிவரான அவரது மறைவு செய்தி நம்பள்கி ,வருண், போன்றவர் ஐயத்துடன் வெளியிட்டனர். பின்னர் ஜோதிஜி அவர்கள் உறுதிப்படுத்தினார். எனக்கும் அவருக்கும் அவ்வளவு தொடர்பில்லை. நாம் வலைப் பதிவு எழுத வந்த பின் அதிக அளவு எழுத வில்லை என்பதால் அவர் வலைத தளம் செல்ல வாய்ப்பு இல்லாது போனது. வவ்வாலின் பதிவுகளில் அவரது கருத்துரைகளை படித்திருக்கிறேன். ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் அவரைப் பற்றி விரிவாக எழுதி இருந்தார்.
வருண் ராஜ நடராஜன் பெரும்பாலும் எதிர் கருத்துடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். வருண் தனது உருக்கமான பதிவின் மூலம் இரங்கல் தெரிவித்தும் அவரும் அவரைப் பெருமைப் படுத்தும் விதமாகவே எழுதி இருக்கிறார். ராஜ நடராஜன் ஜோதிஜிக்கு அறிமுகமானவராக இருந்திருக்கிறார் . ஜோதிஜி ராஜாநடராஜனின் வலை தளத்தில் அவரைப் பற்றி உருக்கமாக விவரித்திருக்கிறார். இந்த விஷயத்த்தில் ஒரு சிலர் மூலம் தகவலை உறுதிப் படுத்த்திக் கொள்ள முடிகிறது. அன்னாருடைய குடும்பத்தாருக்கு ஒரு பேரிழப்பு . ராஜ நடராசன் சிலருடனாவது நட்பு பாராட்டி இருப்பதால் அவரைப் பற்றிய தகவல்கள் அறிந்து நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடிந்தது.
ஆனால இணையத்தில் சிலர் நெடுநாட்களாக உலா வந்தவர்கள் திடீரென்று வலைப்பக்கமே வராமல் இருப்பது கண்டு அவரது கருத்துக்கு ஒத்த கருத்து உடையவர்களும் எதிர்கருத்து உடையவர்களும் அவர்களது வலைப்பக்கம் அவ்வப்போது சென்று பார்த்து வருகிறார்கள்
இணையத்தில் எழுதிவரும் பலர் திடீரென்று பலமாதங்கள் இணையப் பக்கம் வராமல் இருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒரு சிலர் நான் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளப் போகிறேன் என்று சொல்லி விட்டு செல்வார்கள். சிலர் முகநூல் டுவிட்டர் என்று வேறு தளங்களுக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார்கள். இவர்களை பெரும்பாலும் கண்டுபிடித்துவிட முடியும்.
ஆனால் சிலர் வலைபதிவுகளில் சிலர் தங்களது முகம் காட்ட விரும்புவதில்லை. தன் புகைப் படங்களை இணைப்பதில்லை.முகம் காட்டாமல் இருப்பதில் சில சௌகர்யங்கள் உண்டு . வயது தெரியாது. தங்கள் கருத்துக்களை சற்று சுதந்திரமாக கூறமுடியும். முகம் காட்டாமல் இருப்பது சுவாரசியம். அவர் எப்படி இருப்பார் என்பர் அறிகிற ஆவலை தூண்டும். எழுத்தாளர்கள் சிலர் தன் முகம் வெளிப்படமால் இருக்க விரும்புவது உண்டு. ஒருவருடைய எழுத்தை வைத்து அவருடைய வயதை கணிப்பது சற்று கடினம்தான். இளைய வயது பதிவர்கள் சிலர் முதிர்ந்த எழுத்தை வெளிப்படுத்துகின்றனர். வயதான சிலரின் எழுத்துக்களோ சகிக்க இயலாத அளவுக்கும் இருக்கிறது.
அதிக அறிமுகம் இல்லாத பதிவராக இருந்தாலும் நீண்ட நாட்கள் ஒருவர் எழுதாமல் இருந்தால் இப்போது இவர்கள் என்ன செய்கிறார்கள் ஏன் எழுதுவதில்லை என்று தோன்றுவதுண்டு.
ஒரு சிலர் திடீரென்று பதிவுலகில் காணாமல் போனால் யாருக்கும் தெரிவதில்லை . தேடுவதில்லை ஆனால் பதிவுலகில் தீவிரமாக இயங்கி, விவாதங்கள்,சர்ச்சைகள் பதிவுகள் என்ற சுற்றிவந்த பதிவர் திடீரென்று பல நாட்கள் வலைப் பக்கம் வராவிட்டால் என்ன காரணத்தால் அவர் இணையப் பக்கம் வரவில்லை உடல் நிலை சரியில்லையா. அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று அறிய விரும்பினாலும் முடிவதில்லை.
அப்படிப் பலரும் தேடுகின்ற ஒரு பதிவர் முகமூடிப் பதிவர்களில் ஒருவர்தான் வவ்வால். 'தலைகீழ் விகிதங்கள்' என்ற வலைப்பூவில் எழுதிவந்த வவ்வால் ஆகஸ்டு 2014 க்குப் பின்னர் ஏதும் எழுதவில்லை. அனல் பறக்கும் பின்னூட்டங்கள், ஏராளமான தகவல்கள், விரிவான பதிவுகள் என்று வலையுலகை கலக்கி வந்த வவ்வால் என்ன ஆனார் என்று இதுவரை தெரியவில்லை. இவரைக் கண்டால் பல பதிவர்களுக்கு அலர்ஜிதான். இவருக்கு ஈடு கொடுத்தவர்கள் வருண் மற்றும் ஜெயதேவ் என்று சொல்லலாம். எந்த பிரபலமாக இருந்தாலும் முகத்தில் அடித்தாற்போல் கருத்துக் கூறத் தயங்கமாட்டார். விவாதம் என்று வந்து விட்டால் கடைசி வரை விடமாட்டார். விவாதத்தில் கடைசி கருத்து இவருடையதாகத்தான் இருக்கவேண்டும் என்ற பிடிவாதக்காரர். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் நுழைந்து ஒரு அலசு அலசி விடுவார். வலைப்பதிவுகளை சுவாரசியமாக்கியது அவரது பின்னூட்டங்கள்.
இவரைப் பற்றி அமுதவன் அவர்களும் ஒரு பதிவு எழுதி இருந்தார் இன்று வரை அவரைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
இதற்கு முன்னர்2009 இல் இன் பிற்பகுதியில் பதிவு எழுதிய நிறுத்திய இவர் 2012 இல் மீண்டும் பிற்பகுதியில்தான் மீண்டும் எழுதினர். இப்படி இடை வெளி விடுவது அவரது வழக்கம்தான். இம்முறையும் மிக நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது. பலர் அவர் பக்கத்தை பார்வையிட்டு ஏதேனும் எழுதி இருக்கிறாரா என்று பார்த்து வருகின்றனர். இப்படி எப்போது வருவார் என்று பலரையும் எதிர்பார்க்க வைத்திருப்பது அவரது வெற்றி என்று கொள்ளலாம்.வருணும் ஜெயதேவும் விவாதத்திற்கு தகுந்த ஆள் கிடைக்காமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
வவ்வால் தனக்கு நெருங்கிய நண்பராக யாரையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை. அவரது எழுத்துக்களை வைத்து பார்க்கும்போது அவரது இயல்பை ஓரளவிற்கு ஊகிக்க முடிகிறது. அவரிடம் நெருங்கிப் பழக எல்லோருக்கும் ஒரு தயக்கம் இருக்கும். சுவாரசியத்துக்கு முகமூடி அணிவது தவறில்லை. முகமூடிக்குள் மறைந்திருப்பது யார் என்று கடைசி வரை ஒருவருக்கும் தெரியாமல் போவதில் என்ன சுவாரசியம் இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரிருவருக்காவது தகவல் தெரிந்தால்தான் அவரது நிலையினை மற்றவர்க்கு சொல்ல முடியும். மற்றவர்கள் விடுத்த வேண்டுகோளைப் போல வவ்வால் மீண்டும் வந்து பதிவுகளும் கருத்தும் இடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பதிவர்களே! நீங்கள் எழுதி வருவதை உங்கள் குடும்பத்தார்க்கு தெரிவியுங்கள்.(வீட்டம்மா திட்டத்தான் செய்வாங்க அதெல்லாம் கண்டுக்கப்படாது) ஒரு சில நண்பர்களுடனாவது நேரில் முடியாவிட்டாலும் தொலைபேசியிலாவது தொடர்பாவது கொள்வது நல்லது. ஏதேனும் உதவி தேவைபட்டாலும் கிடைப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். ஓரிரு வலையுலக நட்புக்கேனும் தன்னைப் பற்றிய குறைந்தபட்ச விவரங்களை பரிமாறிக் கொள்வதில் தவறு ஏதுமில்லையே!
மதுரைத் தமிழன், ஜெயதேவதாஸ் வருண் போன்றவர்களும் தங்கள் முகம் மறைத்துள்ளவர்களே. இவர்களின் மதுரைத் தமிழன் முகம் காட்டாதபோதும் (நாங்க பாத்துட்டம் இல்ல) பல நண்பர்களுடன் தொடர்பில் உள்ளார். வருண், ஜெயதேவ்தாசும் முகம் காட்டியதில்லை என நினைக்கிறேன். இப்படி பலர் இருகிறார்கள். அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் . உங்கள் முகத்தை காட்டாவிட்டாலும் உங்கள் முகத்தைப் பார்த்த ஒரு நண்பரின் முகத்தையாவது அறிமுகப் படுத்துங்கள்
இதெல்லாம் உனக்கெதுக்கு வேலையப் பாத்துட்டு போவியா! என்று கேட்கலாம்.
என்ன செய்வது? ஒருவருடைய எழுத்துக்களோடு பழகுவது அவரோடு நேரில் பழகி வருவதாகத் தானே தோன்றுகிறது!
*************************************************************
நல்லதோர் வேண்டுகோள்......
பதிலளிநீக்கு//தலைகீழ் விகிதங்கள் என்ற வலைப்பூவில் எழுதிவந்த வவ்வால் கடந்த ஆகஸ்டு 2014 க்குப் பின்னர் ஏதும் எழுதவில்ல. அனல் பறக்கும் பின்னூட்டங்கள், ஏராளமான தகவல்கள், விரிவான பதிவுகள் என்று வலையுலகை கலக்கி வந்த வவ்வால் என்ன ஆனார் என்று இதுவரை தெரியவில்லை.// அவரின் நிலை அறிந்து கொள்ள ஆவல். நலமுடன் இருக்கட்டும்.
பதிலளிநீக்குஇவர்போல் ஏராளமான பதிவுவர்களின் பதிவுகள் தொடராது உள்ளது உண்மையே.முகம்காட்டாது இருப்பதில் உள்ள நன்மை கருத்துகள் மட்டுமே கவணிக்கப்படும். விவாதங்களே உண்மையை வெளிக் கொண்டுவருகிறது. தங்கள் கருத்துகள் ஏற்புடையது.
***மதுரைத் தமிழன், ஜெயதேவதாஸ் வருண் போன்றவர்களும் தங்கள் முகம் மறைத்துள்ளவர்களே.***
பதிலளிநீக்குஇதில் எனக்குத் தெரிய வருண் மட்டும்தான் முகத்தைக் காட்டவில்லை! என் முகம் பார்த்த ஒரு பதிவர் காதல் வயப்பட்டு விட்டார். அதனாலதான் எதுக்கு வம்புனு அதோட முகம் காட்டுவதை நிறுத்திவிட்டேன் னு ஒரு உண்மையைப் பொய்போல சொன்னால நம்புவீங்களா, முரளி? :)
ஹாஹ்ஹா....வீண் வம்பை நீங்களே தான் தொடங்கியிருக்கிறீர்கள். so, I am granted to ask about it. and is that blogger kayalvizhi??. and is she writing anything still. (ரொம்ப நாள் குடைந்துகொண்டே இருந்த கேள்வியை கேட்டாயிற்று, இனி இதை வருண் பார்க்காதது போல பதில் சொல்லாவிட்டாலும் கேட்டுவிட்டேன், இனி என் தலை வெடிக்காது:))
நீக்குஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா எண்ணம் தான் பிழைப்பைக்கெடுக்குதாம்!
நீக்குவருண் போதும் போதும்!
Mythily!
நீக்குSome bloggers strongly believe that kayalvizhi is just a Varun's "alter ego". They have challenged me and accused me that I am a cheater and hypocrite who writes under two different names! Pretend like both man and woman!! They say it is funny that liar Varun preaches "truth" and "honesty" and integrity! You know believing is a dangerous thing which can not be taken easily. Most of us believe in God. Do you think it is possible to prove the nonexistence of God? Yeah but only to the non-believers. To the believers?? NOPE!
Some people die with the wrong belief or not? What if God never existed or really existed?! So, no matter what some of us are certainly going to die with the wrong belief- it does not matter whether they believed in existence of God or God's nonexistence! So, it is all in one's mind or belief. Truth is based on one's belief rather the facts and "real truth". I guess I answered you very well! lol
***நிஷாJanuary 22, 2016 at 9:59 PM
நீக்குஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா எண்ணம் தான் பிழைப்பைக்கெடுக்குதாம்!
வருண் போதும் போதும்!***
வாங்க நிஷா! நம்ம கிட்ட இந்த பழமொழிகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை, பாருங்க!
உங்க பழமொழிக்கு எதிரா ஒரு திருக்குறள்..
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
அப்பாட தப்பிச்சுட்டேனா? :)
இந்த கருத்துக்கு கருத்து சொல்ல பேஸ்புக் தான் பெஸ்ட் என தோணுதே! நாங்களும் ஏதேனும் சொல்வோம்,பதிவின் நோக்கம் திசைமாறியதா முரளி ஐயா என்னை காய்ச்சி எடுப்பார். தேவையா எனக்கு?நீங்க சொன்ன பொய்யிலிருக்கும் வாய்மையை நம்பிட்டோம்ல!
நீக்குVarun! still now I think you are a big fan of Rajini. but the comment you left here remind me Kamal!!! AND Rajini too talks like this when we question ABOUT his political ideas! lol! anyway lets put an end here as I dont want to mess up murali anna's page DOT
நீக்குஹை!! ஒரே நேரத்தில் நானும் நிஷா மேடமும் ஒரே கருத்தை சொல்லிருக்கோம்!!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநல்லதொரு விண்ணப்பம் நண்பரே!
பதிலளிநீக்குவலைப்பதிவர் ராஜ நடராஜன் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டவுடன், நானே இந்த பொருளில் எழுதலாம் என்று இருந்தேன் நீங்கள் தங்கள் மனதில் பட்டதை உடனே பதிவாக வெளிப்படுத்தி விட்டீர்கள். எனது பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஜோதிஜி திருப்பூர் அவர்கள், ராஜ நடராஜன் பற்றி எழுதிய செய்திகள் சரியாக வலைப்பதிவர் மத்தியில் சென்று சேரவில்லை என்று நினைக்கிறேன்.. காரணம் அவர் தனியே ஒரு பதிவாக தனது வலைத்தளத்தில் எழுதாமல், ராஜ நடராஜன் அவர்களது பதிவு ஒன்றினுள்ளேயே பின்னூட்டங்களாக எழுதியதுதான்.. தங்கள் பதிவு பலருக்கும் சென்று சேர வேண்டும்.
எனக்கும் வவ்வால் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு. அவர் வவ்வால் என்ற பெயரில் மறைந்தும், வேறு ஒரு பெயரில், வேறு ஒரு தளத்தில் வெளிப்படையாகவும் எழுதுகிறாரோ என்ற சந்தேகம் எப்போதுமே எனக்கு உண்டு.
(கைவிரல்களில் கொதிநீர் கொட்டி விட்டதால், முன்புபோல் உடனுக்குடன் அதிகம் கருத்துரைகள், பதிவுகள் எழுதுவதில்லை. அப்படியும் முடிந்தவரை பார்ப்போம் என்று, கம்ப்யூட்டரில் உட்கார்ந்தால் வீட்டில் எல்லோரும் திட்டுகிறார்கள். மேலும் தமிழ்மணத்தில் அடிக்கடி பிரச்சினை. ஓட்டு போடுவதற்குள் நேரம் அதிகம் வீணாகிறது )
//ஒருவருடைய எழுத்துக்களோடு பழகுவது அவரோடு நேரில் பழகி வருவதாகத் தானே தோன்றுகிறது!//
பதிலளிநீக்குஉண்மை தான் சகோ அப்படித்தான் தோன்றுகிறது.
தம 3
நல்லதொரு அலசல் நண்பரே பதிவர்கள் முகம் காட்டுவதில் தவறென்றுமில்லை பெண் பதிவர்களுக்கு இந்த விலக்கு கொடுப்பதில் தவறில்லை
பதிலளிநீக்குநாம் இருவரும் 2 முறை சந்தித்து இருக்கிறோம் பல விழாக்களில் தாங்கள் கலந்து இருக்கின்றீர்கள் இருப்பினும் பதிவில் தாங்களும் முகம் காட்டுவது நல்லது என்பதும் எனது கருத்து நண்பரே... மனதில் பட்டதை எழுதுபவன் நான்.
தமிழ் மணம் 3
எனது புகைப்படம் பல இடங்களில் உள்ளது. மேலும் எனது தலைபேசி என்னும் எனது வாழை தளத்தில் உள்ளது. ஒருவேளை நாள் நீண்ட நாட்கள் வலைப்பக்கம் வரவில்லை என்றால் பலர் போன் செய்து கேட்பார்கள். நிறைய வலையுலக நண்பர்கள் என்னை நன்கு அறிவார்கள். எனது முகவரி தெரிந்தவர்கள் பலர் உள்ளனர். நான் எழுதவில்லை என்றால் இவர்களுக்கு காரணம் தெரிந்துவிடும். முகம் தெரிவது மட்டும் முக்கியம் இல்லை. தொடர்பு கொள்ளும் நிலையில் இருக்கவேண்டும் என்பதே வேண்டுகோள். வலையில் உள்ள என் புகைபடத்தை வைத்து என்னை நிறையப் பேர் குமுதம் ஆசிரியர் உட்பட பலர் என்னை அடையாளம் கண்டறிந்திருக்கிறார்கள்.T.N.MURALIDHARAN என்று என்பெயரை கூகுளில் தட்டி இமேஜ் சர்ச் செய்தால் என் புகைப்படம்தான் முதலில் காணக் கிடைக்கும் நான் பதிவின் தலைப்பை சற்று மாற்றி இருக்க வேண்டும்
நீக்குஆமாப்பா, ஆமாம், என்னையகூட ஒருசிலர் பலமாதிரி நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்று புரிகிறது சார்.
பதிலளிநீக்குசிவபார்க்வி
http://sivaparakvi.wordpress.com/
ஒருவருடைய எழுத்துக்களோடு பழகுவது அவரோடு நேரில் பழகி வருவதாகத் தானே தோன்றுகிறது! -- உண்மைதான் முரளி! தங்கள் பதிவை நூறுவிழுக்காடு நானும் வழிமொழிகிறேன்...(ஆமாம் நாம வேறென்ன செய்ய முடியும்? இந்த வலியை வலைவழி உணர்ந்தாலன்றி அவரவர்தான் யோசிக்கணும்..)
பதிலளிநீக்குநான் என்னுடைய பல முகங்களையும் காட்டி வருகிறேன். நான் எழுதுவது நிறுத்திவிட்டால் ஒரே அர்த்தம்தான்.
பதிலளிநீக்குசக பதிவர்களின் நலன் பற்றிக் கவலைப்படும் நல்ல பதிவு உங்களுடையது.
பதிலளிநீக்குமுகம் காண்பிப்பது முக்கியம் என எனக்குத் தோன்றியதில்லை. நம் எண்ணம், நம் எழுத்து என்பதைக் காட்டிலும் ஒரு அறிமுகம், நெருக்கம் தரும் விஷயம் இருக்கமுடியுமா, என்ன?
வருகைக்கு நன்றி ஏகாந்தன். எழுதுபவர் எல்லோருக்கும் முகம் காட்டாவிட்டால் பரவாயில்லை.சூழலை கோடிட்டுக் காட்டினாலும் போதுமானது. வலைப்பக்கம் வராததன் காரணம் தெரிந்தால் நிறைவு ஏற்படும் என்னவாயிற்றோ என்ற கவலை கொள்ளாமல் இருக்கலாம் அல்லவா . எழுத்து தரும் நெருக்கத்தால் வந்த விளைவு அல்லவா இந்தப் பதிவு.
நீக்குமுகநூலை இருந்தா இந்த கருத்துக்கு ஒரு லைக் தட்டியிருக்கலாம்:((
நீக்குநிஜமான கருத்து ஐயா!மற்றவர்கள் பற்றி தெரியாது,ஆனால்எனக்குள் இந்த தேடல்,கவலை இருக்கும்.
நீக்குமதுரைத் தமிழன் போல ஒருநாள் நேரில் சந்திக்கும் வாய்ப்பு வரும்...
பதிலளிநீக்குBagawanjee KAJanuary 22, 2016 at 6:28 AM
பதிலளிநீக்குஅடுத்த பதிவை இன்னும் நீங்கள் போடாத மர்மம் என்ன ,முரளிதரன் ஜி :
இப்படி கடந்த பதிவில் ,இன்று காலையில் நான் கேட்ட கேள்விக்கு உடனே பதிவு போட்டமைக்கு நன்றி :)
முகம் காட்ட மறுத்தாய் முகவரியை மறைத்தாய் என்று நாம் பாடி என்ன ஆகப் போகிறது ?அவரவர் இஷ்டம் தானே ,முரளிதரன் ஜி :)
Read more: http://www.tnmurali.com/2016/01/tamilmanam-blog-aggregator.html#ixzz3xyBqFMYg
முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே என் கருத்தும்
பதிலளிநீக்குநல்ல வேண்டுகோள் ஐயா
இதில் என்ன இருக்கிறது முரளி! அது அவரவர்கள் விருப்பம் என்றுதான் தோன்றுகிறது.
பதிலளிநீக்கு** என்ன செய்வது? ஒருவருடைய எழுத்துக்களோடு பழகுவது அவரோடு நேரில் பழகி வருவதாகத் தானே தோன்றுகிறது!** fact அண்ணா. எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது. தில்லையகம் கீதா அவர்களை கீத்து, கீத்து என அழைத்தேன். பின் தான் தெரிந்தது அவர் எனக்கு பெரியவர் என்று, ஆனாலும் அப்படியே கூப்பிடு என சொல்லிவிட்டார்கள். மாறாக சசி சற்று ஏறக்குறைய என் வயதினராக இருந்தார்.
பதிலளிநீக்குஆமா, தமிழன் என்ன ஆனார்!!! நானும் தேடிகொண்டே இருக்கிறேன். no reply..மறுபடியும் நெட் fasting ah ன்னு கூட கேட்டாச்சு:((
வௌவால் அவர்களை உங்க பதிவின் பின்னூட்டங்களில் தான் பார்த்திருக்கிறேன். அவர்கள் முகம் காட்டிய பின்னும் இத்தனை காட்டமாக எழுதினால் நம் நண்பர்களை விட்டுகொடுக்கவா போகிறோம்!
எனக்கும் இந்த நண்பர்களை பார்க்க ஆவலாக இருக்கிறேன். அப்போ நான் மட்டும் தான் பிரக்டிகலா இல்லாமல் இப்படி இருக்கிறேனோ என நினைத்தேன். இப்போ நீங்க, நிலவன் அண்ணா எல்லாம் என்னை மாதிரிதான் நினைகிறீர்கள் என்பது சந்தோசம்!!! மிக்க நன்றி அண்ணா
நன்றி மைதிலி.மதுரை தமிழன் திடீரென்று சோதனை முயற்சிகள் எல்லாம் செய்வார். அவரால் கொஞ்ச நாளைக்கு மேல் சும்மா இருக்க முடியாது
நீக்குபயணங்கள் முடிவதில்லை பதிவு விரைவில்
ஆமா, அவரு நட்பின் ஆழத்தை மறைந்திருந்து வேடிக்கை பார்த்து அள்க்கிறார்னு நாம் நினைத்துக்கொள்வோம்! Until he comes back of course! :)
நீக்குமுகம் காட்டாவிட்டாலும் சில நண்பர்களுடன் மட்டுமாவது தொடர்பில் இருப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. உங்களுடைய பதிவு சரியானதே! நான் விரும்பும் சுவாரஸ்யமான பதிவராக வவ்வால், வரலாற்று சுவடுகள், ஜெயதேவ், கும்மாச்சி, மதுரைத்தமிழன், வருண் போன்றோர் வலம் வந்தனர். நம்பள்கியும் அவ்வாறே! இவர்கள் அடிக்கடி அஞ்ஞாத வாசம் சென்று திரும்பி வருவதுண்டு. வவ்வாலும் வருவார் என்று நினைக்கிறேன்! நன்றி! இன்று வேளை அதிகம், இருப்பினும் ஒரு ஜோக் பதிவு தேத்தி விட்டேன்! மற்ற தளங்களுக்குச் செல்லவில்லை! இனி ஒரிரண்டு தளங்கள் சென்று பார்க்க முடியுமா தெரியவில்லை! கண் சொக்குகிறது! உங்கள் பதிவு சுவாரஸ்யமாக இருந்தமையால் படித்து கருத்தும் இட்டுவிட்டேன்! நன்றி!
பதிலளிநீக்குபதிவதில் தவறு.மன்னிக்கவும்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லும் கருத்து நூறு விதம் சரிதான் ஐயா
நான்குமாதத்தில் என்னை போதுமான அளவுவெளிப்படுத்திவிட்டேன்
கிரேஸ்,ராஜி,கில்லர்ஜி,குமார் என்னை அறிவார்கள்.
உங்களைப் பற்றிய குறைந்த பட்ச தகவல்களை அறிந்த தொடர்பில் உள்ள நட்பு ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்
நீக்குவவ்வால் ஒரு அசாதரண பதிவர். பொதுவாக நான் இணைய பதிவர்கள் யாரையும் வியப்புடன் பார்ப்பதில்லை வவ்வால் ஒருவரைத் தவிர. .உண்மையில் அவர் இல்லாத இணையம் சற்று சுவாரஸ்வமின்றித்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குமுரளி அண்ணா
தாங்கள் சொல்லிய கருத்து 100வீதம் உண்மை உண்மை.அருமையாக சொல்லியுள்ளீர்கள் என்னை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் போல் ...த.ம9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பலருக்கும் தெரிவதில் சிலருக்கு சில பிரச்சனை இருக்கலாம். நடாவின் இழப்பு வலையில் பேரிலப்பு என்பது நிஜம். உங்கள் பாணியில் சொல்லிய விதம் ரசித்தேன்.
பதிலளிநீக்குபலருக்கும் தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு சிலருக்காவது அல்லது ஒருவருக்காவது தெரிந்திருக்கலாம். ஜோதிஜி அவர்களுக்கு தெரிந்திருந்தாதால்தான் ராஜநாடரஜனின் மறைவுசெய்தியை அறிய முடிந்தது அல்லவா? அந்த செய்தியே இந்தப் பதிவு எழுதக் காரணம்
நீக்குஅருமையாக அலசியுள்ளீர்கள். ஒரு கருத்தைச் சொல்ல வரும் ஒருவர் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வதில் தவறில்லையே. ஏனோ சிலர் அதிகமாக யோசிக்கிறார்கள். பதிவர் மரணம் குறித்த செய்தி மனதை நெகிழ வைத்தது.
பதிலளிநீக்குநண்பரே மன்னிக்கவும் எனது பதிவில் தங்களது கருத்தை தவறுதலாக நீக்கி விட்டேன்
பதிலளிநீக்குஒருவருடைய எழுத்துக்களோடு பழகுவது அவரோடு நேரில் பழகி வருவதாகத் தானே தோன்றுகிறது!
பதிலளிநீக்குஇதுதான் உண்மை...
நல்லதொரு பகிர்வு ஐயா.
மிகவும் நல்ல உள்ளம் உங்களுக்கு!
பதிலளிநீக்குஉங்களின் ஆதங்கம் புரிகிறது...அத்துடன் சக பதிவர்களை மதித்து விசாரிக்கும் அக்கறையும் புரிகிறது. மனம் நெகிழ்கிறேன். நான் வலைத்தளத்தில் முகத்தை காட்ட வில்லை என்றாலும் என்னை நிறைய பேருக்கு நன்றாக தெரியும், அதிலும் அடிக்கடி ஏன் இன்னும் ஒரு போஸ்ட்டும் போடல என்று மிரட்டி கொண்டிருக்கும் தோழி ஏஞ்சல் ஒருவர் போதும் :-)
பதிலளிநீக்குஅதிக வேலை, நேரமில்லை என்று எழுதாமல் இருப்பதற்கு ஏதோ ஒரு காரணத்தை சொன்னாலும் ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்ததற்கு சிறு சோம்பேறித்தனம் ஒரு காரணம். அப்புறம் எழுதிக்கலாம் என்று தள்ளிபோட்டு மொத்தமாக எழுதாமல் போய்விடுவதும் உண்டு...இதில் நானும் ஒருத்தி. இந்த பதிவை படித்ததும் இனி இப்டி பண்ண கூடாது தொடர்ந்து எழுதணும் என்று தோன்றுகிறது. இதற்கு உங்களுக்கு நன்றி சொல்லணும், உங்கள் பதிவை என்னை படிக்க சொன்ன தோழி ஏஞ்சல்க்கும் என் நன்றி.
வவ்வால்-தலை கீழ் விகிதங்கள் - பங்கெடுப்பபை இங்குள்ள பின்னூட்டத்தில் காண்க
பதிலளிநீக்குhttp://viyaasan.blogspot.in/2014/01/blog-post_8.html
ed;wp
பதிலளிநீக்குஎனக்கு என்ன தோனுதுனா ஒருவர் இருக்கும்வரை அவர் தகுதிக்கேற்ப, அவர் நடந்துகொள்ளும் விதத்திற்கேற்ப அவரை மதிக்கிறோம் இல்லைனா மிதிக்கிறோம். அதே ஆள் மறைந்த பிறகு அவருக்காக ரொம்பவே அதிகமாக செயற்கையாக உருகுகிறோம்..எனக்கென்னவோ இதில் முதலில் நாம் செய்வது (இருக்கும்போது) உண்மையானதாகவும், மறைந்த பிறகு செய்வது போலியானதாகவும் தோனுது.
பதிலளிநீக்குஅருமையான வேண்டுகோள் ஐயா..வலைப்பதிவு மூலம் நண்பர்களானதில் நான் முத்து நிலவன் ஐயா மற்றும் செல்வா ஐயா நேரில் சந்தித்தேன் அருமையான தருணம் அது ஐயா..
பதிலளிநீக்குநினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா, பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
பதிலளிநீக்குபழகியவர்கள் பிரிவு தங்கள் மனதை வாட்டுவது புரிகிறது முரளி!!
கோரிக்கையும் அதற்கான நியாயத்தை
பதிலளிநீக்குவிளக்கிச் சென்றவிதமும் அற்புதம்
மிக முக்கியமாக மனம் தொடும் இறுதி வரிகள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வாசன்
பதிலளிநீக்குகாரிகன் உங்க முகத்தையும் காட்டலாமே
நானும் அவருடன் சில பதிவுகளில் விவாதம் செய்திருக்கிறேன். வித்தியாசமான நல்ல பதிவர். அவர் பின்னூட்டம் இல்லாமல் சுவாரஸ்யம் குறைந்திருக்கிறது.
பதிலளிநீக்கு