மகளிர் தின வாழ்த்துக்கள்
(இந்தப் பதிவு மகளிருக்கு சமர்ப்பணம்)
நல்ல ஆலோசனைகளும் ஆசிகளும் வழங்கும் பெரியவர் ஒருவரைத் சந்தித்து தன் மனைவியைப் பற்றி சொல்லி ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார் ஒருவர்.
"அய்யா! என் மனைவிக்கு எதுவுமே தெரியவில்லை. நாட்டு நடப்பு எதுவும் தெரியாது. முதல்வர் யார்?பிரதம மந்திரி யார் என்று கூட தெரியாது. அரசியல் பற்றி இம்மியும் தெரியாது. இலக்கியங்கள் கவிதைகள் பற்றி தெரியாது. புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கிடையாது. நாளிதழ்கள் கூட வாசிப்பதில்லை. அனைவரும் தெரிந்து வைத்திருக்கக் கூடிய சினிமா நடிக நடிகயைரின் பெயர்களும் தெரியாது. என் நண்பர்களின் மனைவிகள் அரசியல், கணினி, விளையாட்டு, பங்கு வர்த்தகம்,கலைகள், இலக்கியங்கள், கவிதைகள், என்று வெளுத்துக்கட்டுகிறார்கள். இவளுக்கோ celphone operate பண்ணக்கூட தெரியாது. எவ்வளவுதான் சொன்னாலும் இவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்படவில்லை.அவற்றை தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்வதில்லை. இவளை எப்படித் திருத்துவது என்று நீங்கள்தான் ஐயா ஆலோசனை கூறவேண்டும்."
"உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பேர் இருக்குறீர்கள்" பெரியவர் கேட்டார்.
"நான்,என் மனைவி, ஒரு குழந்தை, மூன்று பேர் இருக்கிறோம்."
"நல்லது. நாளை உங்கள் மனைவியை இங்கு அழைத்து வாருங்கள்."
பெரியவர் சொல்ல,மறு நாள் தன் மனைவியுடன் பெரியவரைக் காண வந்தார்.
பெரியவர் சொல்ல,மறு நாள் தன் மனைவியுடன் பெரியவரைக் காண வந்தார்.
மனைவியின் இடுப்பில் குழந்தையும், கையில் ஒருபை. அந்தப் பையில் ஏதோதோ பொருட்கள் இருந்தன. மூவரும் பெரியவரை வணங்கினர். கணவனை சற்று நேரம் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணிடம் ஏதோ கேட்டார். பின்னர் பெண்மணியை வெளியே அனுப்பிவிட்டு கணவனை அழைத்தார்.
"ஐயா,என் மனைவிக்கு அறிவுரை சொன்னீர்களா?கணவன் கேட்டான்.
பெரியவர் "அது இருக்கட்டும். உன் மனைவி கொண்டு வந்த பையில் என்னவெல்லாம் இருந்தது.உனக்குத் தெரியுமா?
"எனக்குத் தெரியாது. என் மனைவிக்குத்தான் தெரியும்"
"உன் குழந்தைக்கு எப்போது உணவு கொடுக்கவேண்டும், எப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும் தெரியுமா?
"தெரியாது,அது அவளுக்குத்தான் தெரியும்"
"என்ன உணவு கொடுக்க வேண்டும் என்றாவது தெரியும்?
"எனக்குத் தெரியாது. அதுவும் அவளுக்கு நன்றாகத் தெரியும்.?
"திடீரென்று உன் குழந்தை சிறுநீர் கழித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
"நிச்சயமாகத் தெரியாது. அதெல்லாம் பெண்களுக்குத் தானே நன்றாகத் தெரியும்."
"குழந்தை அழுதால் உன்னால் அழுகையை நிறுத்த முடியுமா?
"முடியாது என்றுதான் நினைக்கிறேன். அவளிடம் இருக்கும் வரை குழந்தை அழுவதில்லை."
"குழந்தை எப்போது உறங்கும் எப்போது விழிக்கும் என்று உனக்குத் தெர்யுமா?
"அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்" எரிச்சலுடன் சொன்னான் கணவன்.
"உனக்குத் தெரியாத இவ்வளவு விஷயங்கள் உன் மனைவி தெரிந்து வைத்திருப்பதை நீயே உன் வாயாலேயே கூறினாய். இவற்றை தெரிந்து கொள்ள என்றாவது முயற்சி செய்திருக்கிறாயா?"
கணவன் விழிக்க,
பெரியவர் சொன்னார் "இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு வா! பின்னர் நீ விரும்புவதையெல்லாம் உன் மனைவி தெரிந்துகொள்ள அருமையான ஆலோசனைகளை நான் கூறுகிறேன்."
பெரியவர் சொன்னதில் இருந்து ஏதோ புரிந்தது.
*************************************************************
இதையும் படியுங்க!
தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி! யாருக்கு?
"குழந்தை எப்போது உறங்கும் எப்போது விழிக்கும் என்று உனக்குத் தெர்யுமா?
"அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்" எரிச்சலுடன் சொன்னான் கணவன்.
"உனக்குத் தெரியாத இவ்வளவு விஷயங்கள் உன் மனைவி தெரிந்து வைத்திருப்பதை நீயே உன் வாயாலேயே கூறினாய். இவற்றை தெரிந்து கொள்ள என்றாவது முயற்சி செய்திருக்கிறாயா?"
கணவன் விழிக்க,
பெரியவர் சொன்னார் "இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு வா! பின்னர் நீ விரும்புவதையெல்லாம் உன் மனைவி தெரிந்துகொள்ள அருமையான ஆலோசனைகளை நான் கூறுகிறேன்."
பெரியவர் சொன்னதில் இருந்து ஏதோ புரிந்தது.
*************************************************************
இதையும் படியுங்க!
தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி! யாருக்கு?
appadi antha aluvuku thrinjathu kooda en pondatiku thriyalaiye,,,,,,,,, naan enna pannuve.... enna pannuveeeeeeee
பதிலளிநீக்குமகளிர் தின சிறப்புப் பதிவு மிக மிக அருமை
பதிலளிநீக்குஅவசியம் தெரிந்து கொள்ள வேண்டியதை அவர்கள்
தெரிந்து வைத்துக் கொண்டுள்ளர்கள்
நாம் தான் தேவையற்றவைகளை தெரிந்து வைத்துக் கொண்டு
நாமும் குழம்பி எல்லோரையும் குழப்பிக் கொண்டுள்ளோம்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
நன்று
பதிலளிநீக்குபெரியவர் சொன்னதில் இருந்து ஏதோ புரிந்தது.
பதிலளிநீக்குஎல்லாமே உள்ளங்கை நெல்லிக்கனிகள்..
சிறப்பான மகளிர்தின பதிவுக்கு நன்றிகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
VERY AWESOME POST . MIGA ARUMAI
பதிலளிநீக்குஆஹா! இந்தத்தங்களின் பதிவு மிகவும் அருமை தான்.
பதிலளிநீக்குபல வீடுகளில் பல கணவன்மார்கள் தங்கள் மனைவிக்கு ஒன்றும் தெரியாது என்றே நினைக்கிறார்கள்.
சில் வீடுகளில் அதுவே உண்மையும் கூட.
ஆனால் இந்தக் கதையில் வரும் மனைவிக்கு எது மிக முக்கியமோ அது தெரிந்துள்ளது. அதுவே போதும்.
அனாவஸ்யமாக எல்லோருக்கும் எல்லாமே தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல எதிர்பார்ப்பதும் நல்லதல்ல. தொடர்ந்து எதிர்பார்த்தால் ஏமாற்றமே அதிகரிக்கும்.
மிகச்சிறந்த படைப்பு. தாங்கள் இதை இன்று எனக்காகவே சொன்னது போலவும் உணர்கிறேன்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
இந்தப் பதிவு மகளிருக்கு சமர்ப்பணம் அப்படின்ணு சொல்லி ஆண்களுக்கு நல்ல அறிவுரை தந்த பதிவு...
பதிலளிநீக்குகணவன்மார்களின் தவறான மன ஓட்டத்தைப் பற்றி அருமையாகச் சொல்லி நிற்கிறது பதிவு.
பதிலளிநீக்குபுரிந்ததா ஒரு நாடு வளர வீடு வளர வேண்டும் அந்தக் கடமையைச் சிறப்பாகச் செய்தாலே உலகம் உயரும். அக்கடமையை ஒழுங்காக அப்பெண் செய்திருக்கின்றாள். நல்ல பதிவு வாழ்த்துகள்
பதிலளிநீக்குகருத்திட்டோருக்கு நன்றி.
பதிலளிநீக்குதமிழ்மனம் 2
பதிலளிநீக்குசிறப்பான பதிவு!
பதிலளிநீக்குபல இடங்களில் இப்படித்தான் தன் மனைவிக்கு ஏதும் தெரியாது என்றே கணவர்மார் நினைகிறார்கள் .ஆனால் தெரிந்தும் தெரியாதது போல இருந்து எத்தனை குடும்பங்களில் மனைவிமாரின் பெருந்தன்மையால் கணவர்களின் அமைதி கெடுக்க படாமல் இருக்கின்றது . அன்பு சுரக்கும் இதயம் பெண்களுடையது . அதை தமக்கு சாதகமாக பயன்படுத்தி விட்டு அவளுக்கு ஒன்றும் தெரியாது என்றே பல கணவர்கள் மகில்வோடு இருக்கிறார்கள் '
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குஅருமையான பதிவு.., ஆழ்ந்த கருத்துக்கள் ..!
பதிலளிநீக்குஇது மகளிர் தினப் பதிவு என்றில்லாமல் எப்போதுமே பயன் தரும் பதிவு.
பதிலளிநீக்குசிந்து பைரவி படத்தில் கணவன் லதா மங்கேஷ்கரின் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும்போது பருப்பு பொடி அரைக்க மிக்ஸி போடுவாள் மனைவி. 'ஞான சூன்யம்! லதாவின் பாட்டைக் கேட்காமல் மிக்ஸி போடுகிறாயே! என்று கோபித்துக் கொள்ளும் கணவனிடம் மனைவி கேட்பாள் 'லதா மங்கேஷ்கர் வந்து உங்களுக்கு பருப்புப் பொடி அரைத்துக் கொடுப்பாளா?' என்று!
நடைமுறை!
பெண்ணின் பெருந்தக்க யாவுள...?
பதிலளிநீக்கு