எப்படியோ ஆங்கில மொழி உலகத்தை தன் வசப்படுத்தி விட்டது. சீனர்கள் கூட ஆங்கிலம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலம் ஒரு Funny Language என்று கூறுகிறார்கள். நாமும் Funny Language ஆன ஆங்கிலத்துடன் தமிழை இணைத்து இன்று தமிழை 'பண்ணி' மொழியாக்கி விட்டோம். ஆங்கிலம் ஒரு Unphonetic Language. எழுத்து ஒலிகளை சேர்த்து வார்த்தைகளை படித்துவிடமுடியாது. ஆனால் தமிழை எழுத்தொலிகளை இணைத்து வாசித்துவிடமுடியும். put , but இரண்டையும் ஒரே மாதிரி வாசிக்கக் கூடாது. இலக்கணம் படித்துவிட்டு ஆங்கிலம் பேசிவிட முடியாது. பழக்கம் மற்றும் பயிற்சியின் மூலமே ஆங்கிலம் பேச முடிகிறது.
இதோ ஆங்கிலத்தில் உள்ள சில முரண்பாடுகள்.
Prison , Jail இரண்டும் ஒரே பொருளுடைய வார்த்தைகள். ஆனால் Prisoner Jailor இரண்டும் எதிர்மறை பொருள் கொண்டவை.
prisoner என்றால் சிறையில் இருப்பவர். Jailor என்றால் சிறையில் இருப்பவர்களை கண்காணிப்பவர்
Shop , Market இரண்டும் கிட்டத்தட்ட ஒரே பொருள் கொண்டவை.
ஆனால் Shopping , marketing இரண்டும் எதிர்பொருள் கொண்டவை.
defeat , failure இரண்டும் synonyms
to defeat , to fail இரண்டும் antonyms
flammable , inflammable இரண்டும் synonyms ஆனால் decent , indecent ரெண்டும் opposite words
Limitation Delimitation இரண்டும் எதிர் சொற்கள் அல்ல.ஒரே பொருள் கொண்டவை.
perfect . imperfect இரண்டும் எதிர்சொற்கள், ஆனால் prove improve ரெண்டும் Opposite words இல்லை. வெவ்வேறான வார்த்தைகள்.
அதே போல
Course -Discourse
card -Discard
fault -default
இவை antonyms அல்ல. வெவ்வேறான வார்த்தைகள்.
apart என்றால் தூர அல்லது தனியாக. ஆனால் ஒரே கட்டடத்தில ஒண்ணா இருக்கிற வீடுகளுக்கு பேர் Apartments
( ஐயோ, தலைய சுத்து துங்கோ. இத்தோட நிறுத்திக்கலாம். நான் பீட்டர்ல கொஞ்சம் வீக்குங்க.' அப்ப தமிழ்ல?". அப்படின்னு கேக்கறது என் காதில விழுது.. தமிழ்ல ரொம்ப வீக்குங்கோ)
*******************************************************************************************
இதை படிச்சாச்சா? என் மனைவிக்கு எதுவும் தெரியாது.
தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி!
சுவையான பதிவு!
பதிலளிநீக்குநன்றி கூடல் பாலா!
பதிலளிநீக்குவிளக்கமான பதிவு நண்பரே !
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திட்டதற்கும் நன்றி!
பதிலளிநீக்குஅறிவு அன்பு அடக்கதிற்கு எனது நன்றி. கண்டதை கண்டபடி இணைத்துக்கொண்ட ஆங்கிலம் அரசாட்சி செய்து வருவது அதிசயம்தான்.
பதிலளிநீக்குஅருமையான ஆராய்ச்சி,படித்தேன்,ரசித்தேன் " English is really crazy language".நான் இங்கு ஆங்கில மொழியின் மற்றுமொரு Crazy தன்மை பற்றி சொல்கிறேன்...
பதிலளிநீக்குso என்பதை "சோ" என்று சொல்வோம், Me என்பதை "மீ" என்று சொல்வோம் ஆனால் some என்பதை சோமீ என்று சொல்ல முடியாது அது ஸம் என்று உச்சரிப்பை தருகிறது.ஆங்கிலம் அசையற்ற மொழி.
வாய் விட்டு சிரித்தேன். நல்ல பதிவு. நன்றி.
பதிலளிநீக்கு