என்னை கவனிப்பவர்கள்

புதன், 7 மார்ச், 2012

தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி!   "ஏம்மா! அறிவிருக்கா உனக்கு?.பால் வாங்க என்ன போகச்சொல்றயே? எக்ஸாம் நாளைக்கு தொடங்குதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அப்பா சும்மாதானே இருக்கார். அவரை அனுப்ப வேண்டியதுதானே. ஃபிசிக்ஸ் ல ரெண்டு சாப்டர் ரிவைஸ் பண்ணைனும். MATHS ல PROBABALITY யில் ஏகப்பட்ட சந்தேகம் இருக்கு.CHEMISTRY ஒரு பாடம் சுத்தமா புரியல. இந்த சமயத்தில நீ வேற வெறுப்பேத்துற.........
     
   "ஹல்லோ, ப்ரியாவா! எக்சாமுக்கு நல்ல PREPARE  பண்ணியிருக்கயா? ஸ்கூல் ல பிரக்டிகல்சுக்கு ஃபுல்  மார்க் போட்டுடுவாங்க இல்ல. நீ ரெண்டு சென்டம் வாங்கிடிவேன்னு நினைக்கிறேன். எங்க வீட்டுக்கு வாயேன் குரூப் ஸ்டடி பண்ணா யூஸ்ஃபுல்லா இருக்கும் இல்ல. ஒண் வோர்ட் எல்லாம் உனக்கு ஈசிதானே..... சரி நான் அப்புறமா பேசறேன்.
      
  "ஏம்மா லதா என்ன கட் ஆஃப் வாங்கினா ன்னு உனக்கு தெரியுமா?உனக்கு எங்க தெரிய போகுது?  ரெண்டு சென்டமாவது வாங்கலைன்னா அண்ணா யுனிவெர்சிட்டி வாசல் பக்கம் கூட எட்டிப் பாக்க முடியாது. ஜனனி,விஜி,ரகு. இவங்களெல்லாம் விட அதிகமா வாங்கலைன்னா கூட பரவாயில்லை. குறைவா வாங்கிடக் கூடாது. 
      "சரி சரி, டிஃபன்  ரெடி ஆயிடிச்சா? சீக்கிரம் குடு. காலங்காத்தால மூணு மணிக்கு எழுந்தாச்சு. பசி நேரம்.
      "அனு! அனு! கதவை மூடிக்கிட்டு என்ன பண்ற! கதவை திற!
   "அடிப்பாவி மூணு மணிக்கு உன்ன எழுப்பி விட்டா இப்படி தூங்கிக்கிட்டிருக்கயே இது நியாயமா? காலைல  இருந்து அம்மா  நான்பாட்டுக்கு புலம்பிக்கிட்டுருக்கேன். எக்ஸாம் பயம் கொஞ்சம் கூட இல்லையா உனக்கு. சமையல் வேல செஞ்சா நீ படிக்கறதுக்கு ஹெல்ப் பண்ண முடியாதுங்கிறதுக்காக உனக்காக தாத்தா பாட்டிய வீட்டு வேலை எல்லாம் செய்யறதுக்காக  எக்ஸாம் முடியற வரைக்கும் இங்க இருக்க சொல்லியிருக்கேன். நீ என்னடான்னா கொஞ்சம்கூட டென்ஷன் இல்லாம ஜாலியா  இருக்க. 
   "எழுந்திருடி. டிபன் சாப்பிட்டுக்கிட்டே படி. அப்புறம் குளிக்க போலாம். நீகைல புக் வச்சிக்கிட்டு படிச்சிகிட்ட இரு. நான் குளிப்பாட்டி விடறேன்.
    "அப்புறம் பாத்ரூம் கதவில ஃப்சிக்ஸ்  ஃ பார்முலா எழுதி ஒட்டி வச்சிருக்கேன். TOILET கதவுல CHEMISTRY  equations  ஒட்டியிருக்கேன். டிரெஸ்ஸிங் டேபிள் ல முக்கியமான மாத்ஸ் FORMULA இருக்கு எல்லாம் பாத்துக்கோ..............

(+2  படிக்கிற ஒரு பொண்ணோட அம்மாவின் டென்ஷன்தான் இது. நீங்க இத படிச்சி டென்ஷன் ஆகாதீங்க.) 
************************************************************
இதையும் படியுங்க! 
மின் வெட்டு(வெட்டிக்) கவிதைகள் 
ஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012  
      

2 கருத்துகள்:

  1. அந்த அம்மா அவங்க படிக்கிற காலத்தில இப்படி படிச்சிருந்தா எங்கயோ போயிருப்பாங்க .

    பதிலளிநீக்கு
  2. அந்த அம்மா அவங்க படிக்கிற காலத்தில இப்படி படிச்சிருந்தா எங்கயோ போயிருப்பாங்க .

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895