என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 22 மார்ச், 2012

வெள்ளைத்தாள்

 ஒரு கைம்பெண்ணின் குரல் 

                  நாங்கள் 
                  எழுதி 
                  அழிக்கப்பட்ட 
                  வெள்ளைத்தாள்கள் 

                  பாதி எழுதி 
                  விடப்பட்ட 
                  கவிதைகள்


                  முழுவதும் 
                  வாசிக்கப்படாத 
                  முழு நாவல்கள் 


                  சேர்க்கப்பட்ட 
                  முகவரியிலிருந்து
                  திருப்பி  அனுப்பப்பட்ட 
                  தபால்கள்


                  புகுந்த வீட்டால் 
                  புறந்தள்ளப்பட்டவர்கள்

                  பிறந்த வீட்டை 
                  இன்னொரு புகுந்த 
                  வீடாய் நினைத்து 
                  மீண்டும் நுழைந்தவர்கள் 

                  இந்தப்
                  பாதிக் கவிதையை 
                  எந்தப் 
                  புத்தகத்துடனாவது 
                  இணைத்துவிட 
                  முயற்சி நடக்கிறது.

                  அக்கறையினாலா?
                  அல்ல! அல்ல!
                  பழைய காகிதத்தை 
                  எவ்வளவு நாள் 
                  பாதுகாப்பது? 


                  இணையத்திலும் 
                  பத்திரிகையிலும் 
                  பழைய 
                  பேப்பர் காரனை
                  தேடிக்
                  கொண்டிருக்கிறார்களாம் 

                  அதுகிடக்கட்டும்!
                  நான் எப்படியும்
                  நன்றி  சொல்லித்தான் 
                  ஆக வேண்டும்! 
                  குப்பை 
                  தொட்டியில்  
                  எறிந்துவிடாமல் இருப்பதற்காக!

************************************************************** 
 

12 கருத்துகள்:

  1. நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை

    பதிலளிநீக்கு
  2. மிக மிக அருமை
    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
    அருமையான படைப்பு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்!
    முன்பே, உடன்கட்டையில்
    குப்பையாக எரிந்து போனவர்களுக்கு..
    அந்த நெருப்பு
    சுட்டதால்தான்..

    இந்தளவேனும் மற்றம்!!!(?)...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் முரளி.

    சமூக மாற்றத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.இன்னும் மாற்றங்கள் நிறையவே தேவை எங்களுக்கு !

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்! வெள்ளைத் தாளில், கனத்த இதயத்தின் கறுப்பு நினைவுகள் உங்கள் கவிதை. இன்னும் எத்தனை காலம் இந்த சமூகத்தில் இந்த அவலம் இருக்கும் என்று தெரியவில்லை! வெள்ளைப் புடவை வழக்கம் முன்பு போல் இப்போது அதிகம் இல்லை.

    பதிலளிநீக்கு
  6. மனதைத்தொட்ட வெகு அழகான அர்த்தமுள்ள கவிதை.

    //அக்கறையினாலா?
    அல்ல! அல்ல!
    பழைய காகிதத்தை
    எவ்வளவு நாள்
    பாதுகாப்பது?


    இணையத்திலும்
    பத்திரிகையிலும்
    பழைய
    பேப்பர் காரனை
    தேடிக்
    கொண்டிருக்கிறார்களாம் //

    சூப்பர் வரிகள். நான் மிகவும் ரஸித்தேன்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. வை.கோபாலகிருஷ்ணன் said...
    "மனதைத்தொட்ட வெகு அழகான அர்த்தமுள்ள கவிதை."
    நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895