நேற்று எனது இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? வலைப்பதிவு கமெண்ட்ஸ் பகுதியை பார்த்தபோது இனிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் நண்பர் தண்ணீர்ப்பந்தல் வே.சுப்ரமணியன் எனக்கு Liebster Blog விருது வழங்குகிறேன். பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார். ஏற்கனவே சென்னை பித்தன் ஐயா அவர்கள் வலைச்சரத்தில் 2011 இல் கலக்கியவர்கள் என்ற தலைப்பில் அவரைக் கவர்ந்த 1௦ பதிவர்களை அறிமுகப்படுத்தினார் அந்தப் பட்டியலில் நானும் சுப்ரமணியமும் இடம் பெற்றிருந்தோம். நல்ல தரமான பதிவுகளை அளிக்கும் சுப்ரமணியம் Versatile Blog award ம் பெற்றிக்கிறார். அவர் வழங்கும் Liebster Blog விருதினை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறேன்.
ஜெர்மானிய விருதாகக் கருதப்படும் இந்த விருதின் தொடக்கம் பற்றி அறிந்துகொள்ள இயலவில்லை எனினும் பல ஆங்கில பதிவர்களும் இந்த விருதை பெற்றிருப்பதை கண்டேன். விருதைப் பெறுபவர் தன்னைக் கவர்ந்த பதிவர்களுக்கு விருதளிக்கும் தொடர் நிகழ்வாக உலகம் முழுவதும் இவ்விருது வலம் வந்து கொண்டிருக்கிறது.
விருதின்போது கடைபிடிக்கப்படும் நடைமுறைகள்
1 . விருது வழங்கிய பதிவருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்
2 அந்தப் பதிவரின் ப்ளாக்குக்கு இணைப்பு கொடுக்கவேண்டும்.
3 Liebster Blog Logo வை பதிந்து கொள்ளவேண்டும்.
4 பின்னர் மனம் கவர்ந்த பதிவர்களில் ஐந்து பேருக்கு விருதுகள் வழங்கவேண்டும்.
5.இருநூறுக்கும் குறைவான பின் தொடர் பவர்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
6.விருது வழங்கப்பட்ட விவரத்தை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
இன்னொரு மரபான எனக்குப் பிடித்த 7 விஷயங்களை சொல்லிவிட்டு விருது பெறுபவர்களின் பயர்களை அறிவிக்கிறேன்.
1 .கவிதைகளை ரசிப்பது, கவிதைகள் எழுத முயற்சிப்பது
2 .நல்ல நூல்களை படிப்பது
3.கணினி பற்றி அறிந்துகொண்ட சிறு சிறு விஷயங்களை சோதித்து பார்ப்பது.
4.கிரிக்கெட் பார்ப்பது
5.காபி குடிப்பது
6.நல்ல சினிமா
7.கணிதப் புதிர்கள்
கலை ,இலக்கியம் ,சினிமா, நகைச்சுவை, பலவேறு பகுதிகளிலும் கலக்கி வருகிறார்கள். இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்று திணறிப் போனேன்.
இதோ எனது மனம் கவர்ந்தவர்களில் ஐவரின் ப்ளாக் குகளுக்கு Liebster Blog விருது வழங்கிப் பாராட்டுகிறேன். இதனை பெற்றுக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
4.பதிவின் பெயர் : சிறுவர் உலகம்பதிவரின் பெயர்:KANCHANA RADHAKRISHNAN
5 பதிவின் பெயர் : பாசப்பறவைகள் பதிவரின் பெயர்: கோவை ரவி
வித்தியாசமான பதிவுகளை வழங்கியுள்ள இந்த ஐவருக்கும் எனது வாழ்த்துக்கள் **************************************************************************************************
இதையும் படியுங்க:
விருதுக்கும் விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பா.
பதிலளிநீக்குமுனைவர் குணசீலன் அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குவாழ்த்து தெரிவித்ததற்கு தனிமரம் சிவநேசன் அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே.
பதிலளிநீக்குநன்றி பாட்சா அவர்களே!
பதிலளிநீக்குவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பரே !
பதிலளிநீக்குஇசையுலக ஜாம்பவான்கள வழங்கியதையும் அந்த சாதனைகளை வானொலியில் ஒலிபரப்பிய நிகழ்ச்சி தொகுப்புகளையும் தான் நான் எனது வலைபூவில் இணையதள நேயர்கள் கேட்டு இன்புற வழங்கி வருகிறேன். அதுமட்டுமல்லாமல் இசையுலக ஜாம்பவான்களின் தகவல்களையும் அதில் வருமாறு பார்த்துக்கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் வானொலி அறிவிப்பாளர்களின் திறமைகளையும் உலகுக்கு தெரிவிக்கவும். குறிப்பாக வானொலி நேயர்களின் தனி திறமைகளையும் உலகுக்கு தெரிவிக்கவே இந்த முயற்சி இந்த முயற்சியில் 340 பதிவுகள் கடந்து வந்து விட்டேன். இதற்கே இவ்வளவு பெரிய விருதா? என்று வியப்பில் அசந்து போய்விட்டேன். விருதை ஸ்பெஷல் விருந்தாக வழங்கிய திரு.டி.என்.முரளிதரன் ஐயா அவர்களூக்கு என் இதயங்கனிந்த நன்றிகள். இணையதள நேயர்கள் மேலும் வருகை புரிந்து ஆதரவு கரம் நீட்டுவார்கள் அவர்களூக்கு இன்னும் சிறப்பான பதிவுகள் ஒலிக்கோப்புகளூடன் வழங்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். நன்றி.
பதிலளிநீக்குஎனக்கு விருது அளித்த தங்கள் பரந்த மனதுக்கு மிக்க நன்ற்.
பதிலளிநீக்குவிருது ஏற்றுக்கொண்டதற்காக கோவை ரவி அவர்களுக்கு நன்றி.இசை பற்றிய தங்கள் பதிவுகள் தொடரட்டும்.
பதிலளிநீக்குதனசேகரனுக்கும் நன்றி.
பதிலளிநீக்குதாங்கள் பெற்ற விருதுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ...தாங்கள் பதிவுலகில் மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவிருது பெற்றமைக்கும். பெரும் மனதுடன் விருது வழங்கியமைக்கும் வாழ்துக்கள் . தொடரட்டும் பணி. ஜொலிக்கட்டும் பதிவுலகம்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் நன்றி விஜயன்
பதிலளிநீக்குஅவ்வப்பொழுது கருத்திட்டு ஊக்கப்படுத்திவரும் சந்திர கௌரி அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குதங்களது விருது வழங்கும் நிகழ்வில் தாமதமாக கலந்து கொண்டமைக்கு மன்னிக்கவும்! விருது பெற்ற அனைவருக்கும், தங்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள். வலைச்சரத்தில் இணைந்த நம் உறவு மேலும் தொடர்ந்து வலுப்படும் என நம்புகிறேன்! நன்றி!
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவிருது பெற்றமைக்கு வழங்கியமைக்கும் வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்
பதிலளிநீக்கு