திருக்குறளை விரும்பாத தமிழர் இல்லை. குறள் சொல்லாத கருத்துக்களும் இல்லை.அதன் வடிவத்திலும் பொருளிலும் மயங்காத அறிஞர்கள் இல்லை. காந்தத் தன்மையுடைய குறட் பாக்களால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். திருக்குறளை நான் முழுமையாக அறிந்தவன் அல்ல. ஆயினும் குறள் வெண்பா வடிவம் என்னைக் கவர்ந்தது. எப்படியாவது குறள் வெண்பா எழுத வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டது. அது சரியா என்று தெரியவில்லை.
கடந்த சில மாதங்களாக வலைப்பதிவில் ஆர்வம் கொண்டு பதிவுகள் செய்து வருவதால் பதிவுலகம் பற்றி பத்து குறள் வெண்பாக்கள் எழுதியிருக்கிறேன். வள்ளுவரும் புலவர்களும் அறிஞர்களும் வாசகர்களும் மன்னிப்பார்களாக
வாகாய் பதிவுகள் செய்
2. கற்க கணினி கசடற- கற்றுப்
பதிக தமிழில் பதிவு
3. தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்
தொடர்ந்து பதிவு இடல்
4. முன்னோட்டம் பார்த்துப் பதிவிடு உன்பதிவை
பின்னூட்டம் பார்த்துத் திருத்து.
5. சிலைக்கழகு சேர்க்கும் சிறுநுட்பம் உந்தன்
வலைக்கழகு சேர்க்கும் வடிவம்
6. தரவரிசை ஏற்றுதற்கு தாழ்தல் வேண்டாம்
நிறம்வெளுத்துப் போகும் நிஜம்
7. பிறர்பதி வைகவர்தல் நன்றன்று சிந்திப்பாய்
உன்பதி வும்களவு போம்
8. வயலில் விதைப்பார் விதைகள் அதுபோல்
வலையில் விதைப்பாய் பதிவு
9. எல்லை இலையே எழுதவா! பதிவுலகம்
நல்ல பயிற்சிக் களம்
10. கதவு திறந்து அழைக்கும் இணையம்
பதிவு பயனுறச் செய்.
***********************************
அனைத்துக் குறள்களும் அருமை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு//தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்
பதிலளிநீக்குதொடர்ந்து பதிவு இடல்//
எனக்குப் பிடித்த பதிவுக்குறள்.
மற்றவை அனைத்தும் நன்று.
வாழ்த்துக்கள்!
கதவு திறந்து அழைக்கும் இணையம்
பதிலளிநீக்குபதிவு பயனுறச் செய்.
சிறப்பான குறள் அனைத்தும் அருமை ..
தங்களது புது முயற்சி அருமை!
பதிலளிநீக்குமுரளிதரக்குறளும் அருமையாக இருக்கே:)முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமுயற்சிக்குப் பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குசா இராமாநுசம்
//வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்குஅனைத்துக் குறள்களும் அருமை//
நன்றி!
வே.நடனசபாபதி said...
பதிலளிநீக்கு//தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்
தொடர்ந்து பதிவு இடல்//
எனக்குப் பிடித்த பதிவுக்குறள்
கருத்திற்கு மிக்க நன்றி!
//சசிகலா said...
பதிலளிநீக்குகதவு திறந்து அழைக்கும் இணையம்
பதிவு பயனுறச் செய்.
சிறப்பான குறள் அனைத்தும் அருமை//
பாராட்டிற்கு நன்றி!
//ஸாதிகா said...
பதிலளிநீக்குமுரளிதரக்குறளும் அருமையாக இருக்கே:)முயற்சிக்கு வாழ்த்துக்கள்!//
நன்றி தங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது.
/புலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்குமுயற்சிக்குப் பாராட்டுக்கள்!
சா இராமாநுசம்/
புலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே !
பதிலளிநீக்குஇனி திருக்குறல் இப்படிதாங்க மாறிப்போகும்...
பதிலளிநீக்குகாலத்துக்கு ஏற்றது..
நல்ல முயற்கி .பாராட்டுகள்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.