சச்சின்! அடித்தாய் சதங்கள் நூறு
மிச்சம் சாதனை உண்டா கூறு
உச்சம் உயரம் தொட்டாய் இன்று
உலகம் உன்னை போற்றுது நன்று
பத்தில் இருக்கும் ஆறும் நான்கும்
பெயரிலும் இருப்பது பொருத்தம் தானே?
ஓய்வெடு என்று உரைத்தவர் எல்லாம்
வாய்மூடி இன்று வாழ்த்துச் சொன்னார்
ஆஸ்தி ரேலிய நாட்டுடன் தானே
அதிக சதங்கள் அடித்து அசத்தினாய்
மட்டை உனது அங்கம் போன்றது
ஓட்டம் உனது குருதியில் கலந்தது.
ஆறுகள் உன்னை அன்புடன் அழைக்கும்
நான்குகள் உன்னுடன் நட்புடன் இருக்கும்
ஒன்றும் இரண்டும் ஒட்டி உறவாடும்
எதிரணி கூட உன்புகழ் பாடும்
சதம்நீ அடித்தால் வெற்றி இல்லை
என்பவர் சொல்லில் உண்மை இல்லை
ஐம்பத்து நான்கில் கிடைத்தது வெற்றி
இருபத்து நான்கில் மட்டுமே தோல்வி
மட்டை ஆட்டம் ஆடுவோர்க் கெல்லாம்
கட்டை விரலை கேட்காத் துரோணர்
கிரிக்கெட் உலகின் கடவுள் ஆனாய்
நாளேடு களின் நாயகன் ஆனாய்
அணியில் இருப்பது அணிக்கு பலமே
அடுத்தவர் ஆட்டமும் ரசிப்பதுன் குணமே
சிறுவர் சிறுமியர் சீறிடும் இளைஞர்
வறியவர் வல்லுநர் வாழ்ந்திடும் கலைஞர்
அனைவரும் போற்றும் நீஒரு அற்புதம்
நினைவில் நின்றிடும் உந்தன் நூற்சதம்
*************************************************************************************************************************
இதை படித்தீர்களா?
மட்டைப்பந்து விளையாட்டில் சாதிக்க துதிப்போர்க்கு ஒரு மைல் கல்லாக இருக்கும், உலகமே வியந்து ரசிக்கும் ஒரு சாதனை மனிதனுக்கு தங்களது புகழாரம் அருமை! தொடர்ந்து பல சாதைனைகள் அவர் படைக்க வாழ்த்துவோம்!
பதிலளிநீக்குஅரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.
பதிலளிநீக்குசச்சினுக்கு புகழ் ஆரம். உங்கள் சொற்களுக்கு மலர் ஆரம் . வார்த்தைகளுக்குள் கவிப் போதை அள்ளித்தரும் உங்கள் நடையிலே நனைந்திருக்கும் நாங்கள் உங்களுக்குத் தருவது பாராட்டுத் தென்றல்.
பதிலளிநீக்குதங்களைப் போன்றவர்களின் பாராட்டுக்களைப் பெறுவதை பெருமையாகக் கருதுகிறேன். நன்றி
பதிலளிநீக்கு