இனியவளே!
மனதுக்குள்
மலர்வனத்தை வைத்துக்கொண்டு
முட்களை மட்டுமே
காட்டுகிறாய்!
உன் உதட்டுக்கு
இனியாவது
உரிமை கொடு
புன்னகை பூக்களை
பூப்பதற்கு
உன் இதழ்ச் செடிகளுக்கு
உத்தரவு இடு.
மரத்துப்போன
என் இதயத்திற்கு
மறுபடியும் உணர்வு கொடு.
சங்கிலிப் பிராணியாய்
உன் பின்னால் நான்!
நீயோ இன்னும்
சந்தேகப் பிராணியாய்......
நியாயமா பெண்ணே?
*****************************************
DEAR MR. SUBRAMANIAN,
பதிலளிநீக்குKINDLY ALLOW THIS COMMENT.
THANK YOU.
அவசியம் சொடுக்கி >>>>>> பதிவர்களே, வாசகர்களே தமிழ்மணத்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட வைரஸ். <<<<< படியுங்கள்
.
.
சரியான புரிதல் அல்லது உணர வைத்தல் இதுதான் தீர்வு. இரண்டில் ஒரு இடத்தில் குறை இருந்தாலும், மற்றொரு இடத்தில் நிவர்த்திக்க வழி இருந்தால்.. எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல பகிர்வு நண்பா!
பதிலளிநீக்குநல்ல கவிதை முரளி!
பதிலளிநீக்குஅனைத்தும் முத்துக்கள்!
புன்னகை பூக்களை
பூப்பதற்கு
உன் இதழ்ச் செடிகளுக்கு
உத்தரவு இடு.
நயமிகு வரிகள்!
நல்ல எதிர் காலம் உள்ளது
வாழ்க வளர்க!
சா இராமாநுசம்
நன்றி அய்யா!
பதிலளிநீக்குநண்பர் சுப்ரமணியத்திற்கு நன்றி.
பதிலளிநீக்குஅருமை நண்பரே.. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவார்த்தைகளின் கோர்வை அழகு வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்கு