என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 9 ஏப்ரல், 2012

என்மகன் என்னவாக ஆவான்?

    ஒரு இளைஞனின் தந்தை ஒருவர் வேலை ஏதுமின்றி வெட்டியாகத் திரிந்து கொண்டிருக்கும் மகனைப் பற்றி அதிக கவலை கொண்டார். இவன் இப்படி இருக்கிறானே.இவனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தார். தன் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். நண்பரோ மிகுந்த நுண்ணறிவு உடையவர். நல்ல திறமையானவர். தனக்கு தக்க ஆலோசனை கூறுவார் என்று நம்பினார்.

    நண்பரும் கவலைப்படாதீர்கள் உன் மகனுக்கு அவன் அறியாமல் ஒரு சோதனை வைப்போம், அதில் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை பொறுத்து அவன் எதிர்காலத்தில் என்னவாக வருவான் என்பதை கணிக்கலாம் என்றார்.
         அப்படி என்ன சோதனை என்றார் இளைஞனின் தந்தை.

  “ஒரு பையில் நிறைய பணம், இன்னொரு பையில் பைபிள் குர்ரான்,கீதை போன்ற புத்தகங்கள், மூன்றாவது பையில் ஒரு துப்பாக்கி,கடைசி பையில் ஒரு பாட்டில் மது. இவற்றை ஒரு அறையில் வைப்போம் உன்பையனை அறைக்கு அனுப்பி அவன் இவற்றில் எதைத் தேர்ந்தெடுக்கிறான் என்பதைப் பார்ப்போம்
.
      "உன் மகன் பணம் இருக்கும் பையைத் தேர்ந்தெடுத்தால் அவன் நல்ல பிசினஸ் மேன் ஆக வர வாய்ப்பு இருக்கிறது,ஆன்மீக புத்தகங்களை எடுத்தால் அவன் ஆன்மீக வாதியாக வருவான். துப்பாக்கியை எடுத்தால் தீவிர வாதியாக மாற வாய்ப்பு இருக்கிறது. மது பாட்டிலை எடுத்தால் குடிகாரானாக மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.. இவற்றில்  எதை எடுக்கிறான் என்பதை நாம் மறைந்திருந்து கவனிக்கலாம்" என்றார்
  மேலும்  “நாம்தான் செய்தோம் என்று தெரியாமல் இந்த ஏற்பாட்டை செய்வோம்.  என்றும் கூறினார்

      ஓர் அறையில் இவற்றை வைத்துவிட்டு  அவர்கள்தான் வரவழைத்தார்கள்  என்று அறிய முடியாத வகையில் இளைஞனை வரவழைத்தனர்.  இளைஞன் யாரும் இல்லாத அந்த அறைக்குள் நுழைந்தான்.  நான்கு பைகளிலும் வைக்கப்பட்டிருக்கும் பொருள்களையும்  சுற்றுமுற்றும் பார்த்தான் யாரும் அவன் கண்ணில் படவில்லை. முதலில் பணத்த எடுத்து மகிழ்ச்சியுடன்  தன் பைக்குள் வைத்துக்கொண்டான். பின்னர் துப்பாக்கியை எடுத்து தனது சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டான். அதன் பிறகு பாட்டிலில் இருந்த மதுவைக் கடகடவெனக் குடித்தான். வாயைத் துடைத்துக்கொண்டு புத்தகங்கள் இருந்த பையிலிருந்து பைபிள், குர்ஆன், கீதை மூன்று புத்தகங்களையும் கையில் எடுத்துக்கொண்டு கம்பீரமாக நடக்க ஆரம்பித்தான்.

  இதை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த இளைஞனின் தந்தையும் அவரது நண்பரும் குழம்பிப் போனார்கள்.

இளைஞனின் தந்தை நண்பரைப் பார்த்து, இப்படிச்  செய்து விட்டானே. நீங்கள் சொன்ன எந்த வகையிலும் அடங்கவில்லையே என்ன செய்வது? என்று கேட்டார்.

  நண்பர் ஒரு வினாடி சிந்தித்து பின்பு  சொன்னார்.

  “உன் மகன் எதிர்காலத்தில் என்னவாக ஆவான் என்பதைக் கணித்துவிட்டேன்.

அப்படியா! உடனே சொல்லுங்கள். ஆர்வத்துடன் கேட்டார் இளைஞனின் தந்தை.

நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார் கவலைப் படாதே! உன் மகன் அரசியல் வாதியாக ஆகிவிடுவான்?
************************************************************

17 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா......
    ஊமைக்குத்து உறைக்கும்படி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. அருமை. அருமையான சிறுகதை. அரசியலுக்கு வேண்டிய அனைத்தையும் உணர்த்திய விதம் அழகு.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பகிர்வு! தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  4. இக்காலத்திற்கு ஏற்ற பதிவு .

    பதிலளிநீக்கு
  5. //Gobinath said...
    ஹா ஹா ஹா......
    ஊமைக்குத்து உறைக்கும்படி இருக்கிறது.//
    நன்றி

    பதிலளிநீக்கு
  6. "வை.கோபாலகிருஷ்ணன் said...
    அருமை. அருமையான சிறுகதை. அரசியலுக்கு வேண்டிய அனைத்தையும் உணர்த்திய விதம் அழகு."

    நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  7. "வே.சுப்ரமணியன். said...
    நல்லதொரு பகிர்வு! தொடரட்டும்."

    அருமை நண்பருக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. "சசிகலா said...
    இக்காலத்திற்கு ஏற்ற பதிவு"
    கருத்துக்கு நன்றி. .

    பதிலளிநீக்கு
  9. ஹா......ஹா......

    என்ன சோதனை என்ன சோதனை

    இதுவல்லவா சோதனை

    பதிலளிநீக்கு
  10. முடிவு எதிர்பார்த்தது தான்.
    இருந்தாலும் சுவையான பகிர்வு.
    நன்றி

    பதிலளிநீக்கு
  11. //சென்னை பித்தன் said...

    சூப்பர்!ஹா,ஹா,//

    நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  12. //சிவகுமாரன் said...
    முடிவு எதிர்பார்த்தது தான்.
    இருந்தாலும் சுவையான பகிர்வு.//

    நன்றி!

    பதிலளிநீக்கு
  13. This story may be some modified version of Rajaji's story, which run like this, a man was caught by the opponents and they want to kill him, he pleaded for the mercy, then they told him either he should rape a girl, or kill her child or just drink a bottle of liquor. The man thought it is better to drink thank than doing harm to the lady or to kill her child. After consuming the liquor he become terror pull the lady for fulfill his desire by the them the child cried he picked the child through high in the sky and killed the baby, that is the devil of liquor.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895