ஆல்பர்ட ஐன்ஸ்டீன் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி யாகக் கருதப்படுவர். மிகச் சிறந்த அறிவாளி என்று உலகத்தாரால் ஒப்புக்கொள்ளப் பட்டவர்.அவரது E=mc2. என்ற ஆற்றல்,நிறை, ஒளி இவற்றிகிடையே உள்ள தொடர்பை விளக்கும் ஃபார்முலா அறிவியல் உலகில் புரட்சியை ஏற்படுத்தியது. அவர் நோபல் பரிசு வாங்கியதும் எல்லோருக்கும் தெரிந்துதான் .(இது பற்றி இதுக்குமேல எனக்கு ஒன்னும் தெரியாது).
நான் சொல்லப்போவது ஐன்ஸ்டீன் பற்றிய ஒரு சம்பவம். உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். (இது உண்மைதானா அப்படின்னு ஆராய்ச்சி பண்ணக் கூடாது.)
ஐன்ஸ்டீன் தன்னுடைய புவிசார்புக் கொள்கையை வெளியிட்டதும், அதை அப்போது பலரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சொல்லப்போனால் எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை.. அதனால் அவர் ஊர் ஊராகச் சென்று பல்வேறு அறிஞர்களுக்கு மத்தியில் பல்கலைக் கழகங்களில் சென்று விளக்க உரை ஆற்றுவது வழக்கம். அப்போது அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் தெளிவாக விடை அளிப்பார்.
ஒருமுறை ஒரு பல்கலைக் கழகத்திற்கு உரையாற்றுவதற்காக செல்ல வேண்டி இருந்தது. ஏராளமான விளக்கக் குறிப்புகளுடன் காரில் ஏறினார் ஐன்ஸ்டீன்.
காரை இயக்கிய ஓட்டுனர் இதைப் பார்த்து சிரித்தார். "எதற்கு சிரிக்கிறாய்" என்று கேட்டார் ஐன்ஸ்டீன். "ஐயா, ஒவ்வொரு நாளும் பல இடங்களுக்கு சென்று இதைப் பற்றியே சொற்பொழிவு ஆற்றுகிறீர்கள். நீங்கள் என்னென்ன பேசுவீர்கள் என்று எனக்கே நன்றாகத் தெரியும்." ஐன்ஸ்டீன் ஆச்சரியம் அடைந்தார். "உனக்கு இந்த அறிவியல் தத்துவம் புரிகிறதா?" என்று கேட்டார். "எனக்கு அது புரியாது. ஆனால் நீங்கள் என்ன பேசுவீர்களோ அவை எனக்கு ஒரு வரி கூட விடாமல் மனப்பாடமாகத் தெரியும்" என்றார்.
வியப்படைந்த ஐன்ஸ்டீன் எங்கே சொல் பார்க்கலாம் என்று கேட்க ஓட்டுனர் காரை ஒட்டிக்கொண்டே ஐன்ஸ்டீனின் உரையை பேசிக்காட்டினார் ஓட்டுனர். நிறையப் பேர் வழக்கமாக கேட்கும் சில சந்தேகங்களைக் கேட்க அதற்கும் ஓட்டுனர் ஐன்ஸ்டீன் போலவே விளக்கம் அளித்தார்.
இதைக் கேட்ட ஐன்ஸ்டீன் ஒரு குறும்பு செய்ய நினைத்தார்.
ஒட்டுனரைப் பார்த்து, "இப்போது நான் உரையாற்றச் செல்லும் பலகலைக் கழகத்தில் உள்ளவர்கள் இதுவரை யாரும் என்னைப் பார்த்ததில்லை. அதனால் எனக்கு பதிலாக நீ உரையாற்று. உனது ஓட்டுனராக நான் வருகிறேன்". என்றார்.
ஓட்டுனர் ஐன்ஸ்டீனின் ஆடைகளை அணிந்து கொள்ள, ஐன்ஸ்டீன் ஒட்டுனாராக மாற, பேச வேண்டிய அரங்கிற்குள் நுழைந்தனர். இருவருக்கும் பலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐன்ஸ்டீனாகச் சென்ற ஓட்டுனர் மேடையில் அமர ஒட்டுனராகச் சென்ற ஐன்ஸ்டீன் முன் வரிசையில் உட்கார வைக்கப்பட்டார்.(வி.ஐ.பி. இன் ஓட்டுனர் ஆயிற்றே)
ஓட்டுனர் சொற்பொழிவைத் தொடங்கினார். ஐன்ஸ்டீன் போலவே ஏற்ற இறக்கத்துடன் தடுமாற்றமின்றி மிகக் கடினமான அந்த அறிவியல் கருத்தை அற்புதமாக விளக்கினார். கூட்டம் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தது. உரை முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி பாராட்டு தெரிவித்தனர். ஐன்ஸ்டீனும் ஒட்டுனருடைய திறமையைக் கண்டு கைகள் தட்டி பாராட்டினார்.
பின்னர் அரங்கில் உள்ள அறிஞர்களும் மாணவர்களும் தங்கள் ஐயங்களை கேட்க ஆரம்பித்தனர். இவை வழக்கமாக எல்லா இடங்களிலும் கேட்கப் படுவதால் எல்லோருடைய சந்தேகங்களுக்கும் சாமார்த்தியமாக விடை அளித்தார் ஓட்டுனர்.
திடீரென்று மாணவன் ஒருவன் எதிர்பாரா விதமாக இதுவரை யாரும் கேட்காத ஒரு கேள்வியைக் கேட்டான்.
இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்லப் போகிறாய்? என்று சொல்வது போல் குறும்பு சிரிப்புடன் ஓட்டுனரை நோக்கினார் ஐன்ஸ்டீன்.
எதிர்பாராத இந்தக் கேள்வியால் சில வினாடிகள் தடுமாறிய ஓட்டுனர், தன்னைப் பார்த்து கிண்டலாகச் சிரித்துக்கொண்டிருந்த ஐன்ஸ்டீனைப் பார்த்தார்.
பிறகு சட்டென்று, கேள்வி கேட்ட அந்த மாணவனைப் பார்த்து, “ தம்பி! இந்த எளிதான விஷயம் உனக்குப் புரியாதது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. உனது ஐயத்தை தீர்க்க நான் தேவை இல்லை. இதோ எதிரில் அமர்ந்திருக்கும் எனது ஒட்டுனரே போதும். ஓட்டுனரே! வந்து இந்த கேள்விக்கு விடை சொல்லுங்கள்” என்று ஐன்ஸ்டீனை அழைத்தார்.
இதை எதிர்பாராத ஐன்ஸ்டீன் “என்னைவிட நீதான் புத்திசாலி” என்று மனதுக்குள் ஓட்டுனரின் சமயோசித புத்தியைப் பாராட்டிக்கொண்டே விளக்கம் சொல்ல எழுந்தார்.
************************************************************
நல்ல புத்திசாலித்தனமான, சமாளிப்பு தான். ;)))))
பதிலளிநீக்குஅருமை! இதைவிட இதற்கு வேறு வார்த்தைதை தேவையில்லை!வாழ்த்துக்கள்! சா இராமாநுசம்
பதிலளிநீக்குஇதைத்தான் வாய் ஜாலம் என்பதோ அருமைங்க .
பதிலளிநீக்குசூப்பர் பாஸ். வாய்விட்டுச்சிரிக்க வைச்சிட்டீங்க.
பதிலளிநீக்குநல்ல பதிவு!
பதிலளிநீக்கு//வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்குநல்ல புத்திசாலித்தனமான, சமாளிப்பு தான். ;)))))//
வணக்கமும் நன்றிகளும்
//புலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்குஅருமை! இதைவிட இதற்கு வேறு வார்த்தைதை தேவையில்லை!வாழ்த்துக்கள்! சா இராமாநுசம்//
அகம் நிறைந்த நன்றிகள்
//சசிகலா said...
பதிலளிநீக்குஇதைத்தான் வாய் ஜாலம் என்பதோ அருமைங்க//
நன்றி! நன்றி! .
//Gobinath said...
பதிலளிநீக்குசூப்பர் பாஸ். வாய்விட்டுச்சிரிக்க வைச்சிட்டீங்க.//
நன்றி!
//AROUNA SELVAME said...
பதிலளிநீக்குநல்ல பதிவு!//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
சாமார்த்தியசாலி !
பதிலளிநீக்குநிஜமாகவே அந்த ஓட்டுநர் புத்திசாலிதான்...!
பதிலளிநீக்குஇந்த சம்பவம் உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் சமயோசித புத்திக்கு எடுத்துக்காட்டு.
பதிலளிநீக்குஇந்த சம்பவம் மெய்யாலுமே உண்மைதான் ...கற்பனையில்லை
பதிலளிநீக்குmanjoorraja said...
பதிலளிநீக்குஇந்த சம்பவம் உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் சமயோசித புத்திக்கு எடுத்துக்காட்டு.//
உண்மைதான் மஞ்சுராஜா!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இது குறித்து கேள்விப் பட்டிருக்கிறேன், உண்மைதானா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது. அதெப்படி சொற்ப்பொழிவு கூட்ட அமைப்பாளர்கள் மற்றும் கூட்டத்தில் இருந்தவர்கள்- இவர்களில் ஒருத்தருக்குக் கூட அவரைத் தெரியாமல் போயிருக்கும்? அவரைப் பற்றிய ஆதாரப் பூர்வமான வரலாற்று குறிப்பேடுகள் இருந்து சரி பார்த்தால் தான் உண்டு. சில சமயம், கதையை யாரை வைத்துச் சொன்னாள் மக்கள் ரசிப்பார்கள் என்று இந்த மாதிரி பெர்சனாலிட்டிகளை இழுத்துவிடுவார்கள்.
பதிலளிநீக்குநல்லா வாய்விட்டுசிரித்தேன் சகோ....நல்ல கதை. சமயோஜித புத்தி, அந்த நேரத்தில் தோன்றுவதே .... புத்திசாலி....ஹஹஹஹா...நன்றி
பதிலளிநீக்கு