என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி -கவிதையில் விமர்சனம்


     ஒரு கல்,(ஒரு) கண்ணாடி படத்தைப் பார்த்தேன்
     விமர்சனம் எழுதிட விருப்பம் கொண்டேன்.
     கேபிள் சங்கர் அட்ரா சக்கை
     விமர்சன வித்தகர் பலரும் இருக்க
     எந்தன் விமர்சனம் எப்படி எடுபடும்
     என்ற தயக்கம் என்னுள் எழுந்தது
     புதிய முயற்சி எடுத்திட நினைத்தேன்
     கவிதையில் விமர்சனம் எழுதிட முனைந்தேன்.
     நகைச்சுவை நம்பி எடுத்த படமிது
     கதையோ கடுகாய் கொண்ட படமிது 
     வேலை வெட்டி ஏது மின்றி
     காலை தொடங்கி மாலை வரையில் 
     பெண்ணைத் துரத்திக் காதலித்து
     நண்பன் துணையுடன் கைப்பிடிக்கும் 
     நகைச்சுவை இணைப்பே இப் படமாம் 
     ஹன்சிகா வுக்கு அழகு அதிகம்
     அதைவிட அளவு கொஞ்சம் அதிகம்
     உதய நிதிக்கு அக்கா போலே
     சில காட்சிகளில் தெரியுது எனக்கு
     நடிகர்  ஜீவா முகத்தின் சாயல்
     உதய நிதிக்கு இருப்பது உண்மை.
     நடிப்பதில் சிறிது சிரமமிருந்தாலும்
     நன்றாய் சமாளித்து நடித்தும் விட்டார்
     உண்மையில் நாயகன் சந்தா னம்தான்
     உரைப்பது நானல்ல படம் பார்ப்பவர்தான்
     வைகைப் புயலும் கரையைக் கடக்க
     விவேக்கையும் மக்கள் விலக்கத் தொடங்க
     சந்தானக் காட்டில் மழையும் பொழிந்தது
     சிரிப்பில் ரசிகர் உள்ளம் நனைந்தது
     இளைஞர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்
     அரங்கம் நிரம்ப இவர் தேவைப்பட்டார்
     வாயைத் திறந்து எது சொன்னாலும்
     விசிலை அடிக்குது ரசிகர் கூட்டம்

     பாடல்கள் எல்லாம் நன்றுதான் ஆனால்
     எல்லாம் எங்கோ கேட்ட மெட்டுதான்
     அயல் மொழி இசையை அப்பட்டமாக
     காப்பி அடிப்பது ஹாரிஸ் வழக்கம்
     ராஜா  ரஹ்மான் இருவரைப் பார்த்து  
     ஹாரிஸ் கொஞ்சம் கற்பது நன்று  
     நாயகன் நண்பர் இன்னும் சிலரும்
     ஐயோ என்று லேசாய் தலையில்
     அடித்துக் கொள்ளும் காட்சிகள் அனைத்தும்
     எண்ணிப் பார்த்தேன் இருபதைத் தாண்டும்
     சரண்யா நடிப்பில் கொள்ளை கொள்கிறார்
     ஆர்யா கடைசியில் அசத்திப் போகிறார்
     எடிட்டிங் கேமரா பின்னணி இசையில்
     சிறப்பாய் சொல்ல ஒன்றும் இல்லை
     சிரித்திட மட்டும் நினைப்போருக்கு
     நிச்சயம் இதுவோர் சிறந்த படம்தான்
     இயக்குனருக்கு இன்னொரு வெற்றி
     வாழ்த்துச் சொல்லலாம் கைகளைப் பற்றி 

********************************************************************************
தங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்

16 கருத்துகள்:

  1. கவிதையில் விமர்சனம்
    வித்தியாசமாகவும் ரசிக்கும்படி அருமையாகவும் இருந்தது
    தாராளமாக இந்தப் பாணியைத் தொடரலாம்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. //Ramani said...
    கவிதையில் விமர்சனம்
    வித்தியாசமாகவும் ரசிக்கும்படி அருமையாகவும் இருந்தது
    தாராளமாக இந்தப் பாணியைத் தொடரலாம்
    வாழ்த்துக்கள்//
    கருத்திட்டு உற்சாகப் படுத்தியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. கவிதையில் ஓர் விமர்சனம் கதையை நன்றாக விளங்க விளங்க வைக்கின்றது சிரிக்கப் படம் பார்ப்போம். அதுவும் தேவைதானே

    பதிலளிநீக்கு
  4. ஓ இது சிரிப்பு படமா அப்ப சரி

    பதிலளிநீக்கு
  5. //சந்திரகௌரி said...
    கவிதையில் ஓர் விமர்சனம் கதையை நன்றாக விளங்க விளங்க வைக்கின்றது சிரிக்கப் படம் பார்ப்போம். அதுவும் தேவைதானே//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  6. முரளி: மடிப்பாக்கத்தில் எங்கு இருக்கிறீர்கள்?snehamohankumar@yahoo.co.in என்கிற எனது மெயில் ஐ.டி க்கு தங்கள் மெயில் ஐ. டி மற்றும் தொலைபேசி எண் முடிந்தால் அனுப்புங்கள்

    பதிலளிநீக்கு
  7. அட.....!நல்லாத்தாம் இருக்குங்கோ!

    பதிலளிநீக்கு
  8. //வீடு சுரேஸ்குமார் said...
    அட.....!நல்லாத்தாம் இருக்குங்கோ!//
    நன்றி சுரேஷ்குமார்

    பதிலளிநீக்கு
  9. படத்தை பார்க்க தூண்டும் பதிவு சிரிக்க பார்ப்போம் .

    பதிலளிநீக்கு
  10. அசத்தல் கவிதையில் வித்தியாசமான விமர்சனம்!

    பதிலளிநீக்கு
  11. படத்தை விட உங்க விமர்சனம் நல்லா இருக்கு பாஸ். யாரு பாஸ் டான்ஸ் மாஸ்ரர் (அப்படி யாராவது இருக்கிறார்களா?)?

    பதிலளிநீக்கு
  12. //சசிகலா said...
    படத்தை பார்க்க தூண்டும் பதிவு சிரிக்க பார்ப்போம்//
    கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. //ஹேமா said...
    அசத்தல் கவிதையில் வித்தியாசமான விமர்சனம்//
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. //Gobinath said...
    படத்தை விட உங்க விமர்சனம் நல்லா இருக்கு பாஸ். யாரு பாஸ் டான்ஸ் மாஸ்ரர் (அப்படி யாராவது இருக்கிறார்களா?)?//
    தேங்க்ஸ் கோபிநாத்.

    பதிலளிநீக்கு
  15. முரளி!
    படமும் பார்த்தேன் தங்கள் விமர்ச்சன பாடலும்
    பார்த்தேன்!
    மிகவும் பொருத்தமே! கவிதையில்
    வந்தது புதிய முயற்சி! அருமை!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  16. சரியான விமர்சனம் அதுவும் கவிதை நடையில்!! சூப்பர்!!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895