என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

எதிரியே! எதிரில் வா!



               என் எதிரியே
               எங்கே இருக்கிறாய்?
               எதிரில் வா!

                கண நேரத்தில்
                என்னை
                களங்கப் படுத்துகிறாய்!

                சமயம்
                கிடைக்கும் போதெல்லாம்
                சங்கடப் படுத்துகிறாய்!

                களிப்புடன்
                காயப்படுத்துகிறாய்!

                என்
                மகிழ்ச்சியை
                மட்டுப் படுத்துகிறாய்.

                நான்
                புலம்பும்போதேல்லாம்
                புன்னகைக்கிறாய்!


                உதவி செய்ய
                நினைக்கும்போதெல்லாம்
                ஓடி வந்து
                தடுக்கிறாய்!

                வெற்றியை நெருங்கும்போது
                தட்டிப் பறிக்கிறாய்.

                தோல்விகளில்
                துவளும்போதும்
                துன்புறுத்தவே 
                நினைக்கிறாய்!



                தைரியம் இருந்தால்
                முன்னால் வா!

                உன்னை
                ஒழித்துக்கட்டாமல்
                நான்
                ஓயப் போவதில்லை

                எதிரில் இல்லாத எதிரி
                ஏளனத்துடன்
                சொன்னான்
                "என்னை ஏன்
                 வெளியில்
                 தேடுகிறாய்

                 நான்
                 உன்னுள்
                 அல்லவா
                 உறைந்திருக்கிறேன்" 

**************************************************************
                                                                              


17 கருத்துகள்:

  1. //"என்னை ஏன்வெளியில் தேடுகிறாய்
    நான் உன்னுள் அல்லவாஉறைந்திருக்கிறேன்" //

    'இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே!
    அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

    அருமையான கருத்து செறிந்த கவிதை.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. //எதிரில் இல்லாத எதிரி
    ஏளனத்துடன்
    சொன்னான்
    "என்னை ஏன்
    வெளியில்
    தேடுகிறாய்


    நான்
    உன்னுள்
    அல்லவா
    உறைந்திருக்கிறேன்" //

    அருமை!அருமை!அருமை!
    உண்மை!உண்மை!உண்மை!
    வாழ்க கவிவளம்! தருக தினந்தினம்
    பருக! வருக! தருக!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  3. "என்னை ஏன் வெளியில தேடுகிறாய்

    நான் உன்னுள் அல்லவாஉறைந்திருக்கிறேன்" //

    தானே தனக்கு நண்பனும் பகைவனும் !!

    பதிலளிநீக்கு
  4. மிகச் சரி
    எதிரி எங்கே வெளியே இருக்கிறான்
    உள்ளிருந்துதானே கழுத்தை அறுக்கிறான்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    பதிவுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  5. // எதிரில் இல்லாத எதிரி
    ஏளனத்துடன்
    சொன்னான்
    "என்னை ஏன்
    வெளியில்
    தேடுகிறாய்

    நான்
    உன்னுள்
    அல்லவா
    உறைந்திருக்கிறேன்"//

    அருமை. இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே! என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. எத்தனை எதிரிகள் நமக்குள்ளேயே!அனைவரையும் வென்றால்?!
    நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  7. //வே.நடனசபாபதி said...
    //"என்னை ஏன்வெளியில் தேடுகிறாய்
    நான் உன்னுள் அல்லவாஉறைந்திருக்கிறேன்" //
    'இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே!
    அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.//
    அருமையான கருத்து செறிந்த கவிதை.வாழ்த்துக்கள்!//
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. //புலவர் சா இராமாநுசம் said...
    //எதிரில் இல்லாத எதிரி
    ஏளனத்துடன்
    சொன்னான்
    "என்னை ஏன்
    வெளியில்
    தேடுகிறாய்


    நான்
    உன்னுள்
    அல்லவா
    உறைந்திருக்கிறேன்" //
    அருமை!அருமை!அருமை!
    உண்மை!உண்மை!உண்மை!
    வாழ்க கவிவளம்! தருக தினந்தினம்
    பருக! வருக! தருக!
    சா இராமாநுசம்///
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. //ராஜராஜேஸ்வரி said...
    "என்னை ஏன் வெளியில தேடுகிறாய்
    நான் உன்னுள் அல்லவாஉறைந்திருக்கிறேன்" //
    தானே தனக்கு நண்பனும் பகைவனும் !!//

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. //Ramani said...
    மிகச் சரி
    எதிரி எங்கே வெளியே இருக்கிறான்
    உள்ளிருந்துதானே கழுத்தை அறுக்கிறான்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    பதிவுக்கு மனமார்ந்த நன்றி//
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    // எதிரில் இல்லாத எதிரி
    ஏளனத்துடன்
    சொன்னான்
    "என்னை ஏன்
    வெளியில்
    தேடுகிறாய்
    நான்
    உன்னுள்
    அல்லவா
    உறைந்திருக்கிறேன்"//
    அருமை. இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே! என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
    பாராட்டுக்கள்.//
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. //Gobinath said...
    அருமையான அர்த்தம்...//
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. //சென்னை பித்தன் said...
    எத்தனை எதிரிகள் நமக்குள்ளேயே!அனைவரையும் வென்றால்?!
    நல்ல கவிதை//
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! நன்றி!

    பதிலளிநீக்கு
  14. அருமையா இருக்கு.. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  15. //ஆமினா said...
    அருமையா இருக்கு.. வாழ்த்துகள்//
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! நன்றி!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895