நான் வருவதற்கு முன்
உன் நெஞ்சில்
கோடைக்காலம்
என்றாய்!
நம்பினேன்
நான் வந்தபின்தான்
வசந்த காலம்
என்றாய்!
மகிழ்ந்தேன்.
நீ அருகில் இருக்கும்போது
பனிக்காலம்
என்றாய்
பரவசமடைந்தேன்.
இப்போதெல்லாம்
நீ
ஒதுங்கிச் செல்கிறாய்.
புரிகிறது.
என்னை நீ
ஒதுங்கச் சொல்கிறாய்.
கால மாற்றங்களை
நான்
கணிக்கத் தவறி விட்டேன்.
இலையுதிர் காலம்
இருப்பதை
மறந்துவிட்டேன்.
இப்போது
உன் நெஞ்சில்
என்
நினைவுதிர் காலம்
எனக்கோ
நெஞ்சதிர் காலம்
வழி மீது விழிவைத்தேன்.
என்று சொன்னாய்.
காதல்
காதை மறைத்ததால்
என் காதில்
சரியாக விழவில்லை
போலிருக்கிறது.
வலிமீது வலி வைப்பேன்
வலிமீது வலி வைப்பேன்
என்று
சொல்லி இருப்பாயோ?
வலிகள் நிறைந்ததுதானே
வாழ்க்கை?
பரவாயில்லை!
பழகிக் கொள்கிறேன்.!
*****************************************************************************************************************
நெஞ்சதிர் காலம்
பதிலளிநீக்குவலிகள் நிறைந்த காலம் மாறும்...
// கால மாற்றங்களை
பதிலளிநீக்குநான்
கணிக்கத் தவறி விட்டேன்.
இலையுதிர் காலம்
இருப்பதை
மறந்துவிட்டேன்.//
காலங்கள் பலவகை!
மாறும் காதலும் பலவகை!
கவிதையும் கருத்தும் அருமை!
சா இராமாநுசம்
நான் கவிதைகலுக்கு அடிமை இல்லை
பதிலளிநீக்குஉங்கள் கவிதையில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது
சாதாரண மொழியில் இருப்பதாலோ என்னவோ
அருமையான வரிகளை சுவைத்தேன்
பதிலளிநீக்கு'காதல் தோல்விக்' கவிதை மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு//இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குநெஞ்சதிர் காலம்
வலிகள் நிறைந்த காலம் மாறும்...//
நன்றி
"புலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்கு// கால மாற்றங்களை
நான்
கணிக்கத் தவறி விட்டேன்.
இலையுதிர் காலம்
இருப்பதை
மறந்துவிட்டேன்.//
காலங்கள் பலவகை!
மாறும் காதலும் பலவகை!
கவிதையும் கருத்தும் அருமை!
சா இராமாநுசம்"//
தங்களின் கருத்திற்கு மிகவும் நன்றி.
//manazeer masoon said...
பதிலளிநீக்குநான் கவிதைகலுக்கு அடிமை இல்லை
உங்கள் கவிதையில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது
சாதாரண மொழியில் இருப்பதாலோ என்னவோ//
கருத்திற்கு நன்றி!
//N.H.பிரசாத் said...
பதிலளிநீக்கு'காதல் தோல்விக்' கவிதை மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி.//
படைப்புகளுக்கு கிடைக்கும் பாராட்டு மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி.
//umesh mangai said...
பதிலளிநீக்குஅருமையான வரிகளை சுவைத்தேன்//