என்னை கவனிப்பவர்கள்

சனி, 28 ஏப்ரல், 2012

காந்தி தேசத் தந்தை இல்லையா?

       தகவல் அறியும் சட்டம் நமக்கு பலவிதங்களில் தகவல்கள் பெற உதவுகிறதோ இல்லையோ, ஆனால் ஒரு சிலர் பார்த்திபன் பாணியில் ஏதாவது கேள்விகேட்டு பிரபலமாக ஆவதற்கு உதவுகிறது. அப்படிப் பிரபலமானவர்களில் ஒருவர்தான் லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பராஷர் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி.
   
  அவர் என்ன கேட்டார் என்பதை நீங்கள் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்.
அவர் கேட்ட கேள்வி. காந்திக்கு தேசத் தந்தை என்ற பட்டம் யாரால் எப்போது வழங்கப்பட்டது?.
       தகவல் அறியும் உரிமை மூலம் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு உள்துறை அமைச்சகம் முதல் பிரதமர் அலுவலகம் வரை யாரும் சரியான பதிலை அனுப்பி வைக்கவில்லையாம். இந்தக் கேள்வியை இந்திய ஆவணக் காப்பதற்கு அனுப்பிவைக்க அவர்களும் தங்களிடம் இதற்குத் தேவையான ஆவணங்கள் இல்லை என்று சொல்லிவிட்டனர்.
         
   இந்தக் கேள்வியைக் கேட்ட   ஐஸ்வர்யா பராஷரை பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளுகின்றன. இணையத்திலோ பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.? இனி பல உண்மைகள் வெளிச்சதற்கு வரும்? நீதி நிலைநாட்டப்படும் என்றெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் இந்தக் கேள்வியை உண்மையிலேயே அந்த சிறுமிதான் கேட்டிருப்பாளா? என்பதே. சிறுமியின் தந்தை அல்லது உறவினர் ஒருவர் இந்த மாணவியைப் பயன்படுத்தி இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடும்.
இணையத்தில் தேடினால் நிச்சயம்  இதற்கான விடைகள் கிடைக்கும் நிலை இருக்க இதை தகவல் அறியும் உரிமை மூலம் கேட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற பட்டங்கள் யாரோ ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்ல அது மக்களுக்குப் பிடித்து விட்டால் நிலைத்துவிடும். மக்களுக்கு பிடித்தால் மட்டுமே நிலைத்திருக்கும். இதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதாலயே காந்தி தேசத் தந்தை என்று சொல்லப்படுவது இல்லை என்றாகிவிடுமா? அல்லது காந்தியை இவ்வாறு அழைப்பது தவிர்க்கப்படவேண்டுமா? எதை எதிர்பார்த்து இதுபோன்ற கேள்விகள்  கேட்கப்படுகின்றன? .
உண்மையில் காந்தியை தேசத் தந்தை என்று அழைத்தவர் அவரிடம் அதிக அளவு கருத்து வேறுபாடு கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான்.
இதோ காந்தியின் மனைவி கஸ்துரிபா வின் மறைவுக்கு ரங்கூன் வானொலி மூலம் நேதாஜி சொன்ன செய்தியில் கீழ்க்கண்டவாறு உள்ளது.

"...........Nobody would be more happy than ourselves if by any chance our countrymen at home should succeed in liberating themselves through their own efforts or by any chance, the British Government accepts your `Quit India' resolution and gives effect to it. We are, however proceeding on the assumption that neither of the above is possible and that a struggle is inevitable.
Father of our Nation in this holy war for India's liberation, we ask for your blessings
and good wishes".

இதிலிருந்து பல கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும் காந்தியை சுபாஷ் எந்த அளவுக்கு மதித்தார் என்பது புலனாகும்.
   தென் ஆப்ரிக்காவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களுக்காக போராடியவர் காந்தி. அதன் பின்னர் இந்திய விடுதலைக்காக  30 ஆண்டுகளுக்கு மேலாக ஓயாது உழைத்தவர். ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும். ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று உண்மையாய் நினைத்தவர்.  அப்படிப் பட்டவரை தேசத் தந்தை என்று அழைப்பதிலே எந்த தவறும் இல்லை என்பது என் கருத்து.
 அதுவரை உலகம் அதிகமாக அறிந்திராத அறவழிப் போராட்டத்தை உலகுக்கே அறிமுகப் படுத்தியவர் மகாத்மா காந்திதானே! மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்களும் காந்தியடிகளின் போராட்ட முறையால் கவர்ப் பட்டவர்கள் அல்லவா? காந்தியை தேசத் தந்தை என்று அழைப்பதால் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவதாக எண்ணிவிடக் கூடாது. 
        இதைப் போன்ற கேள்விகளைக் கேட்பவர்களுக்கு விளம்பரம் அளிக்காமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் தந்தை பெரியாருக்கு அப்பட்டத்தை யார் வழங்கினார்கள்? வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு கப்போலோட்டிய தமிழன் என்ற பட்டம் எப்படி வழங்கப்பட்டது, பாரதிக்கு தேசிய கவி பட்டம் ஏன் வழங்கப்பட்டது? எந்த அமைப்பு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டத்தை அளித்தது? அண்ணாவுக்கு அறிஞர அண்ணா பட்டம் அதிகார பூர்வமாக வழங்கப்பட்டதா? என்று தகவல் உரிமை மூலம் கேட்க ஆரம்பித்து விளம்பரம் தேடிக்கொள்வார்கள். இவையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொண்ட பட்டம் என்று தெரிந்தும். 
    பல பாரத ரத்னாக்கள் இருக்கலாம், பல பத்ம பூஷன்கள் இருக்கலாம். இது போன்ற விருதுகளை அரசாங்கள் பலபேருக்கு அரசாங்கம் வழங்குகிறது. ஆனால் தேசத் தந்தை என்ற  சுபாஷ் சந்திரபோஸ் காந்தியை அழைத்ததை மக்கள் ஏற்றுக்கொண்டதால்அது விருதாக மாறிவிட்டது. அது அவர் ஒருவருக்கு மட்டுமே பொருத்தமானது.  
   காந்தியைப் பற்றி சொல்லும் ஆசிரியர்கள் அவரை பற்றி சரியான முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கத் தவறுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. இனவெறி, தீவிரவாதம், சுயநலம், மதவெறி போன்றவை பெருகிவரும் சூழ்நிலையில் காந்தியைப் பற்றிய எதிர்மறை உணர்வை ஏற்படுத்துவது எதிர்கால இளைய சமுதாயத்திற்கு நல்லதல்ல என்பது என்கருத்து. காந்தி காங்கிரஸ் காரர்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. நம்மைவிட அயல் நாட்டவரே அவரை  அதிகம் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று  தோன்றுகிறது. 
   இதோ இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன் காந்தியைப் பற்றி சொல்வதை கேளுங்கள்.
 Generations to come will scarce believe that such a one as this ever in flesh and blood  walked upon this earth. 
   இதைவிட காந்தியின் மாண்புக்கு வேறு என்ன பெருமை வேண்டும்? ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். பிஞ்சு நெஞ்சங்களில் காந்தியைப் பற்றிய தவறான கருத்துகளை விதைத்து விடாதீர்கள். காந்தியைப் பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். எழுத்தாளர்   ஜெயமோகன் அவர்களின் வலைப்பதிவுகள் காந்தியைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் என்று நினைக்கிறேன்.

************************************************************************************************************* 

34 கருத்துகள்:

 1. //எதை எதிர்பார்த்து இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன? .// கேட்கப்படவேண்டிய கேள்வி.

  அருமையான பதிவு. காந்தியின் சில விசயங்களில் எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அவர் இந்த தேசத்தின் தந்தை என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை

  பதிலளிநீக்கு
 2. விளம்பர பைத்தியம் பிடிச்ச நிறைய பேர் படிக்க வேண்டிய பதிவு ..!

  பதிலளிநீக்கு
 3. நல்லதொரு பதிவு.

  //நேதஜி சுபாஷ் சந்திர போஸ் காந்தியை தேசத் தந்தை என்று அழைத்ததை மக்கள் ஏற்றுக்கொண்டதால் அது விருதாக மாறிவிட்டது.

  அது அவர் ஒருவருக்கு மட்டுமே பொருத்தமானது.//

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. அதுவரை உலகம் அதிகமாக அறிந்திராத அறவழிப் போராட்டத்தை உலகுக்கே அறிமுகப் படுத்தியவர் மகாத்மா காந்திதானே!

  அருமையான பதிவு ..பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோ,

  அருமையான‌ விள்க்கம்

  நன்றி

  பதிலளிநீக்கு
 6. அருமையான பதிவு. மகாத்மா என்றென்றும் தேசத்தந்தைதான். இப்படி கிடைக்கும் பிரபலம் வெகு விரைவிலேயே மறைந்துவிடும். காந்தியின் பெயர் இன்றும் நினைவுகூரப்படுவதன் காரணத்தை அறிந்தால் இத்தகைய பிரபல நோக்கங்கள் இல்லாமல் போய்விடும்.

  பதிலளிநீக்கு
 7. மறந்து போண் மக்கள் மனதில் இந்த கேள்வியை கேட்டதால் அவரை பற்றிய தகவல்களை மீண்டும் படிக்க நேர்ந்தது. இல்லையென்றால் ஏதாவது ஒரு சினிமா நடிகரைப்பற்றி படிக்க வேண்டி இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 8. //சீனு said...
  //எதை எதிர்பார்த்து இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன? .// கேட்கப்படவேண்டிய கேள்வி.
  அருமையான பதிவு. காந்தியின் சில விசயங்களில் எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அவர் இந்த தேசத்தின் தந்தை என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை//
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. //வரலாற்று சுவடுகள் said...
  விளம்பர பைத்தியம் பிடிச்ச நிறைய பேர் படிக்க வேண்டிய பதிவு// .
  நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 10. //மோகன் குமார் said...
  உண்மை. சரியான பதிவு !//
  நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 11. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  நல்லதொரு பதிவு.வை.கோபாலகிருஷ்ணன் said...
  நல்லதொரு பதிவு.//
  கருத்திட்டதற்கு மிகவும் நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 12. ////இராஜராஜேஸ்வரி said...
  அதுவரை உலகம் அதிகமாக அறிந்திராத அறவழிப் போராட்டத்தை உலகுக்கே அறிமுகப் படுத்தியவர் மகாத்மா காந்திதானே!
  அருமையான பதிவு ..பாராட்டுக்கள். வாழ்த்துகள்.////
  கருத்துக்கு மிக நன்றி!

  பதிலளிநீக்கு
 13. //சார்வாகன் said...
  வணக்கம் சகோ,
  அருமையான‌ விளக்கம்
  நன்றி//
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 14. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  சரியா சொன்னீங்க//
  நன்றி! நன்றி! .

  பதிலளிநீக்கு
 15. //Gobinath said...
  அருமையான பதிவு. மகாத்மா என்றென்றும் தேசத்தந்தைதான். இப்படி கிடைக்கும் பிரபலம் வெகு விரைவிலேயே மறைந்துவிடும். காந்தியின் பெயர் இன்றும் நினைவுகூரப்படுவதன் காரணத்தை அறிந்தால் இத்தகைய பிரபல நோக்கங்கள் இல்லாமல் போய்விடும்.//
  நன்றி கோபிநாத்!

  பதிலளிநீக்கு
 16. //Avargal Unmaigal said...
  மறந்து போண் மக்கள் மனதில் இந்த கேள்வியை கேட்டதால் அவரை பற்றிய தகவல்களை மீண்டும் படிக்க நேர்ந்தது. இல்லையென்றால் ஏதாவது ஒரு சினிமா நடிகரைப்பற்றி படிக்க வேண்டி இருந்திருக்கும்//
  உண்மைதான் நண்பரே! எந்தத் தீமையிலும் ஒரு நன்மை உண்டு. கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. மிக மிக முக்கியமாகத் தெரிந்து வைத்திருக்கவேண்டிய விஷயம்.நன்றி உங்களுக்கு !

  பதிலளிநீக்கு
 18. //திண்டுக்கல் தனபாலன் said...
  நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !//
  நன்றி!

  பதிலளிநீக்கு
 19. //ஹேமா said...
  மிக மிக முக்கியமாகத் தெரிந்து வைத்திருக்கவேண்டிய விஷயம்.நன்றி உங்களுக்கு//
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 20. கேள்விகள் கேட்பது ஒன்றே பல விடயங்களுக்கு தீர்வு காண வழி வகுக்குகிறது ....
  இந்த கேள்வி கேட்டதனால் தான் இந்திய ஆவண காப்பகத்திடமே இதுகுறித்த ஆவணங்கள் இல்லை என்பது மக்களுக்கு தெரிய வந்தது ......!


  இந்திய அரசாங்கத்தையே கேள்விக்கு உட்படுத்திய சிறுமிக்கு வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 21. சிலருக்குக் கிடைக்கின்ற பெயர்கள் அவர்களுக்கு மேடை போட்டுக் கொடுப்பதில்லை . அவர்கள் நற்குண நற்ச்செயல்களாலே சாதாரணமாகவே கிடைக்கின்றது . இந்தக் கருத்தை அச் சிறுமிக்குச் சொல்ல முடியாது . ஆவணங்கள் தேடியிருக்கின்றார்கள் என்றால் இதை என்னென்பது. காந்தி நாட்டுக்காக தன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் துறந்தவர். சகல சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு அடுத்தவர்களைப் பழிக்கடாவாக்கிக் கொண்டு வாழ்ந்த தியாகிகளுக்கு மத்தியில் காந்தி மகாத்மா என்று அறியச் செய்வது என்ன தயக்கமாக இருந்திருக்கின்றது .

  பதிலளிநீக்கு
 22. //அன்புத் தொண்டனின் வரிகள் ... said...
  கேள்விகள் கேட்பது ஒன்றே பல விடயங்களுக்கு தீர்வு காண வழி வகுக்குகிறது ....
  இந்த கேள்வி கேட்டதனால் தான் இந்திய ஆவண காப்பகத்திடமே இதுகுறித்த ஆவணங்கள் இல்லை என்பது மக்களுக்கு தெரிய வந்தது ......!//
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 23. //சந்திரகௌரி said...
  சிலருக்குக் கிடைக்கின்ற பெயர்கள் அவர்களுக்கு மேடை போட்டுக் கொடுப்பதில்லை . அவர்கள் நற்குண நற்ச்செயல்களாலே சாதாரணமாகவே கிடைக்கின்றது . இந்தக் கருத்தை அச் சிறுமிக்குச் சொல்ல முடியாது . ஆவணங்கள் தேடியிருக்கின்றார்கள் என்றால் இதை என்னென்பது. காந்தி நாட்டுக்காக தன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் துறந்தவர். சகல சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு அடுத்தவர்களைப் பழிக்கடாவாக்கிக் கொண்டு வாழ்ந்த தியாகிகளுக்கு மத்தியில் காந்தி மகாத்மா என்று அறியச் செய்வது என்ன தயக்கமாக இருந்திருக்கின்றது///
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 24. அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய பதிவு
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 25. //Ramani said...
  அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய பதிவு
  வாழ்த்துக்கள்//
  தங்கள் கருத்திற்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 26. யார் என்ன காரணம் சொன்னாலும்....காந்தி இந்துக்களுக்கு துரோகம் செயதார் என்பதே உண்மை..அன்று மட்டும் அவர் நியாயமாக நடந்து கொண்டிருந்தால் பாகிஸ்தானில் இருந்து-இன்று இல்லாமல் போன 3 கோடி ஹிந்துக்கள் பாரத்தில் நன்றாக வாழ்ந்திருப்பார்கள்....இங்கு இருக்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப் பட்டிருந்தாலும் அந்த நாடு முஸ்லீம் நாடாகவே இருந்திருக்கும்...அது மட்டுமின்றி காந்தி அன்று நவகாளியில் திடீர் உண்ணவிரதம் இருக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு காஷ்மீர் பிரச்சினை ஐநா விற்கு சென்றிருக்காது...அதுமட்டுமின்றி நாடு சுதந்திரம் அடைந்தபின் யார் பிரதமராக வரவேணுமென்ற பிரச்சினை எழுந்த போதும் காந்தி நியாயத்திற்கு புறம்பாக பட்டேலைப் புறந்தள்ளி நேருவை பிரதமராகினார்... எனது இந்த கருத்துக்களை வெளியிடவேண்டும் ஏனென்றால் உங்களது பதிவிற்கு ஆதரவு மட்டுமல்ல எதிர்ப்பும் உள்ளது என்று தெரியவேண்டும்...மேலும் சீதையே தீகுளிக்கும்போது காந்தி ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல.....

  பதிலளிநீக்கு
 27. பெயரில்லா3 மே, 2012 அன்று 4:05 PM

  நீர் ஒரு பொய்யர்,வேடதாரி,காந்தியைப் போல்.........

  பதிலளிநீக்கு
 28. //Anonymous said...
  நீர் ஒரு பொய்யர்,வேடதாரி,காந்தியைப் போல்.......//
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பெயர் தெரியா நண்பரே!..

  பதிலளிநீக்கு
 29. தங்களுடைய இப்பதிவு துவக்கத்தில் கேள்வி கேட்டவரை பாராட்டுவது போன்று செல்கிறது முடிவில் அது ஒரு அபத்தம் என்று உண்மையை உடைக்கிறது நல்ல கருத்தான பதிவு

  பதிலளிநீக்கு
 30. எது எப்படியோ காந்தியால் தான் இந்தியா சுதந்திரமடைந்தது என்பது அபத்தமானது
  http://imsdsanth.blogspot.com/2014/01/blog-post_17.html

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895