என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 1 மே, 2012

இன்றாவது நினைத்துப் பார்!

(மே தின சிறப்புக் கவிதை)
             கட்டிடங்களை
             பார்க்கும்போதெல்லாம்
             அஸ்திவாரம் நினைவுக்கு
             வந்ததுண்டா!
             இன்றாவது நினைத்துப் பார்!

             ஆடை அணியும் போதெல்லாம்
             சரவணா ஸ்டோர்,ஜெயச்சந்திரன் .....
             தவிர
             அதை நெய்தவன்
             நினைவு வந்திருக்கிறதா?
             இன்றாவது நினைத்துப் பார்!

             தீப்பெட்டிகளை
             திறக்கும்போதும்
             தீக்குச்சியின்
             மருந்துத் தலைகளை
             பார்க்கும் போதும்  
             பாஸ்பரஸ் நெடியில்
             பணி செய்யும்  
             மழலைத்  தலைகள்
             நினைவுக்கு  வருமா!
             இன்றாவது நினைத்துப் பார்!

             உன்
             வியர்வை நாற்றம்
             போக்கும்
             வாசனை சோப்பை
             பயன்படுத்தும்போதெல்லாம்
             அதற்காக உழைத்தவனின்
             வியர்வை வாசம்
             உணர முடிகிறதா?
             இன்றாவது நினைத்துப் பார்!

             சாலையில் நடந்து
             போகையிலும்
             வாகனங்களில்
             செல்கையிலும்
             தகிக்கும் வெய்யிலில்
             தாரை
             உருக்கி ஊற்றியவனை
             நினைத்துப் பார்த்திருக்கிறாயா?
             இன்றாவது நினைத்துப் பார்!

             நீ பசித்து உண்ணும்போதெல்லாம்
             தன் பசியைப்
             போக்க முடியாமல்
             தடுமாறியும்
             விடாப்பிடியாக விவசாயம்
             செய்யும் உழவனை
             நினைத்துப் பார்த்திருக்கிறாயா?
             இன்றாவது நினைத்துப் பார்!

             அது போகட்டும்
             சமையல் அறையில் இருந்து
             வரும் உணவின் வாசம்
             உன் நாசியைத் துளைக்கும்போதும்
             நாவில் வியர்வை வழிய
             காத்திருக்கும்போதும்
             உன் வீடடுப்  பெண்களின்
             சலியா உழைப்பையாவது
             சற்றே நினைத்திருப்பாயா?
             இன்றாவது நினைத்துப்பார்!
********************************************************** 
உழைத்துக் களைத்திருக்கும் தொழிலாளர்களே நீங்கள் சிரிப்பதற்காக 


"இன்னைக்கு ரோட்டில ஒரு
பிச்சைக்காரனைக்கூட 
காணோமே?"

"அவங்களுக்கெல்லாம் 
உழைப்பாளர் தினம் 
விடுமுறையாம்".

*************************************************************************************************************
இதையும்  படியுங்க :
28 கருத்துகள்:

 1. அருமையான கவிதை. நெஞ்சைத்தொடும் வரிகள்....

  பதிலளிநீக்கு
 2. அருமையான கவிதை நண்பரே,, வாழ்த்துக்கள் ..!

  பதிலளிநீக்கு
 3. அருமை அருமை
  இதுதான் கவிதை
  மனம் கவர்ந்த படைப்பு
  மே தின நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா2 மே, 2012 அன்று 1:18 AM

  அருமையான கவிதை...மே தின நல் வாழ்த்துக்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 5. உளைபவர்களை நினைத்துப் பார்க்க வைத்த உங்களுக்கு நன்றிகள் பல

  பதிலளிநீக்கு
 6. மிகவும் அருமையான சிந்தனை இதுவரை நினைக்காதவர்களைக் கூட நினைத்துப் பார்க்க வைக்கும் வரிகள் .

  பதிலளிநீக்கு
 7. ''//Gobinath said...
  அருமையான கவிதை. நெஞ்சைத்தொடும் வரிகள்...//
  முதல் கருத்திற்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 8. //இராஜராஜேஸ்வரி said...
  மேதின வாழ்த்துகள்..//
  ஆதரவிற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. //Ramani said...
  அருமை அருமை
  இதுதான் கவிதை
  மனம் கவர்ந்த படைப்பு
  மே தின நல் வாழ்த்துக்கள்//

  அய்யா,தங்கள் மேலான கருத்தை அளித்து பாராட்டுவதோடு தவறாமல் வாக்களிக்கவும்
  செய்கிறீர்கள். மிக்க நன்றி. தங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. //ரெவெரி said...
  அருமையான கவிதை...மே தின நல் வாழ்த்துக்கள் நண்பரே..//
  தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. //திண்டுக்கல் தனபாலன் said...
  அருமை அருமை ! நெகிழ வைத்த கவிதை !//
  தங்கள் கருத்து என்னை உற்சாகப் படுத்துகிறது. மிக்க நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
 12. //சீனு said...
  உழைப்பவர்களை நினைத்துப் பார்க்க வைத்த உங்களுக்கு நன்றிகள் பல//
  பல பதிவுகளையும் பார்த்து கருத்திட்டமைக்காக மிக்க நன்றி சீனு!

  பதிலளிநீக்கு
 13. வியர்வை வாசம் வீசும் வரிகள்.வாழ்வின் அடி நாதங்களை நினைத்துப்பார்க்கிற மனது வாய்க்கப்பெற்றவர்கள் மிகவும் அருகிப்போய்க்கொண்டே வருகிற பொழுது இது.

  பதிலளிநீக்கு
 14. இவை எல்லாம் நினைத்துப் பார்த்திருந்தால் என்றோ நம் சமுதாயம் முன்னோக்கிப் பயணித்திருக்கும் ...

  பதிலளிநீக்கு
 15. நண்பா...! வணக்கம்...!

  என் இயற்பெயர் டி.முரளிதரன்...!

  பதிவுகளுக்காக பிறந்த மண்ணுடன் சேர்த்து "காஞ்சி முரளி"...!


  ஜஸ்ட் இப்போதான் மலிக்காவின் "நீரோடை"யில் பார்த்தேன்..!

  என்னைப் போல... என் பெயரில் ஒருவனா...!

  கவிதை அருமை...!

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 16. //தினேஷ்குமார் said...
  இவை எல்லாம் நினைத்துப் பார்த்திருந்தால் என்றோ நம் சமுதாயம் முன்னோக்கிப் பயணித்திருக்கும் ...//
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தினேஷ்குமார்

  பதிலளிநீக்கு
 17. //காஞ்சி முரளி said...
  நண்பா...! வணக்கம்...!
  என் இயற்பெயர் டி.முரளிதரன்...!
  பதிவுகளுக்காக பிறந்த மண்ணுடன் சேர்த்து "காஞ்சி முரளி"...!
  ஜஸ்ட் இப்போதான் மலிக்காவின் "நீரோடை"யில் பார்த்தேன்..!
  என்னைப் போல... என் பெயரில் ஒருவனா...!
  கவிதை அருமை...!
  வாழ்த்துக்கள்...//

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா!
  பெயரில் ஒற்றுமை நம் இருவருக்கும் உள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நட்பைத் தொடர்வோம்

  பதிலளிநீக்கு
 18. படமே கவிதையாகி மனதைக் கலக்கியடிக்கிறது முரளி!

  பதிலளிநீக்கு
 19. //ஹேமா said...
  படமே கவிதையாகி மனதைக் கலக்கியடிக்கிறது முரளி!//
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஹேமா.

  பதிலளிநீக்கு
 20. அருமையான கவிதை. கேள்விகள் ஒவ்வோன்றும் நெஞ்சைத்தொடுகின்றன. வாழ்துக்கள் முரளி என் தளத்தி இது எப்படி அப்டேட் ஆகாமல் தப்பித்தன என்று தெரியவில்லை. லேட்டாக வந்துவிட்டேன்

  பதிலளிநீக்கு
 21. இன்றுதானி பார்தேன்!
  இன்றாவது பார்க்க முடிந்ததே என்று நினைத்துப் பார்கிறேன்! நன்று நன்று!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 22. //புலவர் சா இராமாநுசம் said...
  இன்றுதான் பார்தேன்!
  இன்றாவது பார்க்க முடிந்ததே என்று நினைத்துப் பார்கிறேன்! நன்று நன்று!//
  சா இராமாநுசம்//
  மிக்க நன்றி அய்யா! ஒருமாதம் முந்தைய பதிவை தேடிப் பிடித்து படித்து பாராட்டும் தங்கள் உள்ளம் கண்டு உவகை அடைகிறேன் ஐயா!

  பதிலளிநீக்கு
 23. //Jaleela Kamal said...
  மிக அருமையான கவிதை//
  மிக்க நன்றி ஜலீலா கமால். தாமத நன்றிக்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 24. //Avargal Unmaigal said...
  அருமையான கவிதை. கேள்விகள் ஒவ்வோன்றும் நெஞ்சைத்தொடுகின்றன. வாழ்துக்கள் முரளி என் தளத்தி இது எப்படி அப்டேட் ஆகாமல் தப்பித்தன என்று தெரியவில்லை. லேட்டாக வந்துவிட்டேன்//
  நன்றி! நன்றி! தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 25. arumai neegan soonavatra parkum pothuellam ungal kavethai varegal nabagam varum nalla unrvana uerana varrgal ulla kevethai valthukal ungaluku

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895