வேலை தேடும் வடிவேலு - பகுதி 1
வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை
வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3
வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை
வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3
வேலை தேடிச் சென்றபோது கேட்கப்பட்ட புதிர்கேள்விக்கு எப்படியோ நித்தியின் அருள்வாக்கை (உளறலை) முடிச்சு போட்டு கண்டுபிடித்த
விடையை சொல்லி வேலை பெறுவதற்காக மகிழ்ச்சியுடன் நண்பர்களுடன் புறப்பட்டார் வடிவேலு.
"அண்ணே வேலை கிடைச்சதும் எங்களுக்கு ஃ பைவ் ஸ்டார் ஓட்டல்ல
பார்ட்டி குடுக்கனும்ணே."
"அதுக்கென்ன குடுத்துட்டா போச்சு"
நண்பர்கள் மகிழ்ச்சியுடன் வடிவேலுவை தூக்கிக் கொண்டு சென்றனர்.
"நான் உள்ள போயி அப்பாயின்ட்மென்ட் ஆர்டரோட வரேன்.வெளிய இருங்க."
உள்ளே வரவேற்பு பலமாக இருந்தது'
"வாய்யா!. விடய கண்டு பிடிச்சிட்டயா. நீ கண்டுபிடிச்சிருப்ப. உனக்கேத்த வேலையாச்சே!"
"கண்டுபிடிச்சிட்டேன் சார், வேற யாரும் வரலயே?
நீங்க சொன்ன கணக்கு
உன்கிட்ட நூறு ரூபாய் இருக்கு. நூறு ரூபாய பிரிச்சி ஏழு பொட்டலத்தில கட்டி வைக்கணும். அப்படி கட்டி முடிச்சதும் ஒரு ரூபாயிலிருந்து நூறு ரூபா வரை எவ்வளவு கேட்டாலும் பொட்டலமாகத்தான் எடுத்து குடுக்கனும். அப்படி குடுக்கனும்னா ஒவ்வரு பொட்டலத்திலும் எவ்வளவு காசு வைக்கணும்?. ஒரு பொட்டலத்துக்கு மேலயும் குடுக்கலாம். ஏழு பொட்டலமும் சேத்தும் குடுக்கலாம். எந்தக் காரணத்தை கொண்டும் பொட்டலம் கட்டிமுடிச்சதும் அதை பிரிக்ககூடாது.”
அதுக்கு விடை:
ஒவ்வொரு பொட்டலத்திலயும் 1, 2, 4, 8, 16, 32 ,37 (இதுதான் விடை) ரூபா இருக்கற மாதிரி கட்டி வச்சா எத்தனை ரூபா கேட்டாலும் பொட்டலங்கள் பிரிக்காம எடுத்துக் கொடுக்கலாம்
"சூப்பர். சரியான விடைதான் எப்படி கண்டு பிடிச்ச?"
"எப்படி கண்டு பிடிச்சேக்கேங்கறது முக்கியம் இல்ல. கண்டுபிடிச்சனா? அதுதான் முக்கியம்."
"என்ன புத்திசாலித்தனமா பேசற.உனக்கு வேல கொடுக்கிறதா முடிவு பண்ணிட்டேன். இன்னிக்கே ஜாயின் பண்ணலாம்."
"ரொம்ப சந்தோஷம் சார், நீங்க சொன்னபடி டெய்லி பேட்டா, யூனிபார்ம் இதெல்லாம் குடுப்பீங்களா?
"அதுல என்ன சந்தேகம்?. யாருப்பா அங்க ஒரு யூனிபார்ம் ஒண்ணு எடுத்துட்டு வாங்க!
"புதுசா ஓபன் பண்ணி இருக்கிற நங்கநல்லூர் ப்ராஞ்சை நீதான். பாத்துக்கணும். காலையில கம்பனி பஸ் வரும். அதுல வசதியா போகலாம். ஈவினிங் உன்னை பிக் அப் பண்ணவும் பஸ் வந்திரும். பெட்ரோல் டீசல் விலை ஏறினாலும் நம்ம பஸ் நிக்காது...."
சொல்லிக்கொண்டிருந்தபோதே யூனிஃபார்ம் வந்தது.
அதை வடிவேலுவிடம் நீட்ட அதைப் பார்த்த வடிவேலு அதிர்ச்சி அடைந்தார்!
"என்ன சார்! கிழிஞ்சிபோன பேன்ட், சட்டையை குடுக்கிறீங்க.இதுவா
யூனிஃபார்ம்? பிச்சகாரன் போடற துணி மாதிரியே இருக்கே! நான் என்ன பிச்ச எடுக்கவா போறேன்?"
"ஆமாம் மிஸ்டர் வடிவேலு உங்களுக்கு நாங்க குடுக்கிற வேலையே பிச்ச எடுக்கற வேலைதான். அதுக்கு இந்த யூனிஃபார்ம்தான் கெளரவமா இருக்கும்"
"அடப் பாவிங்களா நீங்க சொன்ன யூனிஃபார்ம் இதுதானா? இத முன்னாடியே சொல்லக்கூடாதா? இந்த வேலைக்கு கணக்க அறிவு வேற ரொம்ப முக்கியம்னு சொன்னீங்களேடா!"
"தட்டுல விழற சில்லறைய கரெக்டா எண்ணி பொட்டலம் கட்டி வக்கனுமே. அதுக்கு கணக்கு தெரிய வேணாமா?"
"நான் ஏதோ காஷியர் வேலன்னு நினச்சனே? அதுக்காக ஒரு புதிர் கணக்கு வேற கேட்டு என்ன நாற அடிச்சிட்டேங்களேடா.அதுக்கு விடை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கண்டுபிச்சேன் தெரியுமா? கலக்டர் வேலைக்குக் கூட அந்த மாதிரி கஷ்டமான கணக்கு கேக்க மாட்டாங்களே?
"இதோ பார் இதுவும் கலெக்டர் வேலைதான். கலக்சன் பண்ணறங்களுக்கு என்ன பேரு? கலக்டர்தானே? நூறு நூறா பிரிக்க தெரிஞ்சாதானே வேல ஈசியா முடியும்.?
"டேய் எதுக்கும் ஒரு அளவு இல்லையாடா? சரவணா ஸ்டோர், தங்கமாளிகை,போதிஸ்,ஜெயச்சந்திரன், இவங்களெல்லாம் உங்கள நம்பி இருக்கற மாதிரியே ஒரு டூப் விட்டேங்களே? அதை உண்மைன்னு நினைச்சிட்டேனே?
"அது டூப் இல்ல உண்மைதான்! அவங்க தினமும் இங்க வந்து அவங்க கடைக்கு தேவையான சில்லறைய வாங்கிட்டு போவாங்க. நாங்க சில்லறை குடுக்கலன்னா கடைய நடத்துறது கஷ்டம் தெரியுமா உனக்கு?
அவங்க கேக்கறப்ப ஒண்ணு ஒண்ணா எண்ணிக்கிட்டா இருக்க முடியும்?. கேட்டவுடன் டக் டக்குன்னு பொட்டலம் பொட்டலமா சில்லறைய கரெக்டா எடுத்து குடுக்கணும். அதுக்குதான் கணக்கு நல்லா தெரிஞ்ச ஆளுக்குத்தான் வேல குடுப்போம்."
அவங்க கேக்கறப்ப ஒண்ணு ஒண்ணா எண்ணிக்கிட்டா இருக்க முடியும்?. கேட்டவுடன் டக் டக்குன்னு பொட்டலம் பொட்டலமா சில்லறைய கரெக்டா எடுத்து குடுக்கணும். அதுக்குதான் கணக்கு நல்லா தெரிஞ்ச ஆளுக்குத்தான் வேல குடுப்போம்."
" நாந்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டனா? ஏண்டா.. பிச்ச எடுக்கறத கம்பனி மாதிரி வச்சு நடத்தறீங்கலேடா?.இந்தக் கேவலமான வேலைக்காடா நான் இவ்வளோ கஷ்டப்பட்டேன்.அவ்வ்வ்வ்வ்..... "
"டேய் நம்ம தொழில இவன் கேவலமா பேசிட்டான். எல்லாம் ஓடிவாங்க...... இவனை சும்மா விடக்கூடாது. "
அங்கு இருப்பவர்கள் வடிவேலுவைத் தாக்க ஓடிவர வடிவேலு தப்பிப்பதற்காக தலை தெறிக்க வெளியே ஓட்டுகிறார்.
வெளியே காத்திருந்த அவரது நண்பர்கள் "என்னண்ணே! ஏன் ஓடறீங்க நில்லுங்கண்ணே! நில்லுங்கண்ணே!' என்று பின்னாலே ஓடிவர
"அடேய்! எல்லாம் உங்களாளதாண்டா.... உங்களை அப்புறமா கவனிச்சிக்கிறேன்... இப்போதைக்கு உசுருதாண்டா... முக்கியம்........"
************************************************************************************************
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பதிலளிநீக்குmuthlil sariyana vidai sonnavan naan, parttu raja pradeep'ka. "Anonymous said...
பதிலளிநீக்கு1, 2, 4, 8, 16, 32, 37"
"rajapradeep said...
another ans 1,2,4,8,10,25,50"
இலியாஸ்! ராஜா பிரதீப் 12.05.2012 அன்று 12.35 க்கு முதல் சரியான விடையை சொல்ல்விட்டார். புதிரின் சுவாரசியம் கருதி அதை மறைத்து விட்டேன்.பின்னர் anonymous பெயரில் சரியான விடை அளிக்கப்பட்டிருந்தது. அது 9.05.2012 அன்று 2.13 க்கு பதிவாகி இருந்தது. ஒருவேளை அது நீங்ககளாக இருக்கலாம்.விடை மறைக்கப் பட்டதால் ராஜப்ரதீபே மீண்டும் anonymous பெயரில் விடை அளித்திருக்கிறார் என்று நினைத்தேன். நேரமின்மை காரணமாக அதை மறைக்கவில்லை இன்னொரு விடையும் அவரே பதிவு செய்தார். அந்த விடையை அவரது தந்தை தெரிவித்ததாக முகநூலில் தெரிவித்தார். மறைக்கப்பட comment ஐ இப்போது வெளியிட் டிருக்கிரேன். அதை கவனிக்கவும். இப்போது அந்தப் பதிவை பாருங்கள் முதலில் சொன்னவர் ராஜா பிரதீப் என்று தெரிந்துகொள்வீர்கள். உங்கள் பெயரைக் குறிப்பிட்டிருந்தால் நிச்சயமாக உங்களுக்கும் பாராட்டு தெரிவித்திருப்பேன்.
பதிலளிநீக்குஎப்படி இருப்பினும் இப்போது விடை கண்டுபிடித்ததற்கு உங்களையும் பாராட்டுகிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிஇலியாஸ் .
நட்புடன்
முரளிதரன்.
தொழில்னா எல்லமே தொழில்தான். இதில் என்ன கேவலம் இருக்கு. இந்தத் தொழில்ல இருக்கிறவங்க எல்லாம் பெரிய பேங்க்குகள்ல பணம் போட்டிருக்காங்களாமே?
பதிலளிநீக்குஹா ஹா ..... பிரச்சனை இல்லாத தொழில் !
பதிலளிநீக்குஅச்சோ.....ஹிஹிஹி !
பதிலளிநீக்கு//திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குஹா ஹா ..... பிரச்சனை இல்லாத தொழில் !//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்,
//ஹேமா said...
பதிலளிநீக்குஅச்சோ.....ஹிஹிஹி !//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி!
புதிருக்கு விடை கிடைச்சத விட தமாஷ் வடிவேலுக்கு என்ன வேலைன்னு தெரிஞ்சப்பதான். பயங்கர காமடி. ஆனால் இந்த சில்லறை விஷயம் நீங்கள் சொன்னதுபோல்தான். ஒருநாள் நான் ரிலையன்ஸ் ஃப்ரஷ் கடையில் பில் கவுண்டரில் நிற்கும்போது இப்படித்தான் ஒருவர் ஒரு பொட்டலத்தை கொடுத்து இதில் நூறு இருக்கு என்று சொன்னார்.அதை கவுண்டரில் இருந்த பெண் எண்ணிக்கூட பார்க்காமல் நூற்றைந்து ரூபாயை எடுத்துக்கொடுத்தார். நூறுரூபாய் சில்லறையின் விலை நூற்றைந்து ரூபாய்!!
பதிலளிநீக்குhttps://www.modelpaper2020.in/
பதிலளிநீக்கு