என்னை கவனிப்பவர்கள்

புதன், 23 மே, 2012

சந்திப்பு=பதிவர்கள்+விஷாலினி+யோகநாதன்

    20.05.2012 புலவர் ராமானுசம் ஐயா அவர்களின் வேண்டுகோள் கவிதைக்கு கருத்திட்டுவிட்டு யூத் பதிவர் சந்திப்புக்கு புறப்பட்டேன். உதயம் தியேட்டர் அருகே இறங்கி சிவகுமாருக்கு ஃபோன் செய்து இருப்பிடத்தை அறிந்து நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக உள்ளே நுழைந்துவிட்டேன்.
    கேபிள் இளமைத் துடிப்புடன் (யூத்தாம்?) நின்றுகொண்டிருக்க,"ஹலோ! சார், நான் முரளிதரன்" என்று அறிமுகப்படுத்திக்கொள்ள "உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே" என்று கேட்க  "ஆமாம், புக் ஃபேர் ல பாத்திருக்கோம்." என்று நான் சொல்ல பரவாயில்லையே நம்மை நினைவு வைத்திருக்கிராரே என்று நான் மகிழ்ச்சி அடைந்து உட்கார, மீண்டும் , "உங்களை எங்கேயோ பார்த்திருக்கேறேனே" என்ற குரல் கேட்க ,இப்பதானே கேட்டார்! என்று நான் திரும்பிப் பார்க்க அடுத்து வந்த பதிவரை அதே கேள்வியுடன்  வரவேற்று இணைப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்  கேபிள்.
      மெட்ராஸ் பவன் சிவகுமார் இங்குமங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். முதல் முறையாக  அவரை நேரில் பார்த்தேன். சத்தியம் டி.வி இல்  பார்த்ததைவிட இளமையாக இருந்தார்.
      ஒரு சில பதிவர்கள் தானாக வந்து அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். புலவர் ஐயாவும் சென்னை பித்தன் அவர்களும் ஒன்றாக உள்ளே நுழைந்தனர். முதன் முறையாக அவரைப் பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. என்னை முரளிதரன் என்று அறிமுகப் படுத்திக்கொள்ள, கையைக் குலுக்கி, " இனிஷியலோடு டி.என்.முரளிதரன்னு  சொல்லுங்க " என்றார் கலகலப்பாக. அவர் என்னை அறிந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. புலவர் அவர்களிடமும் என்னை அறிமுகப் படுத்திக்கொள்ள, அவரும் என்னை நினைவில் கொண்டிருந்தார்.   "என்ன படிச்சிருக்கீங்க! என்று கேட்டார். நான் கணிதம் என்று சொல்ல "அப்படியா நல்லா தமிழ்  எழுதறீங்க! தமிழ் படிச்சிருப்பீங்களோன்னு நினச்சேன்" என்றார். பேச்சில் அவர் பெருந்தன்மை வெளிப்பட்டது.

   சட்டென்று  திரும்பிப் பார்க்க மின்னல் வரிகள் கணேஷ் அமர்ந்திருந்தார். அவரும் உங்கள் பக்கத்திற்கு வந்திருக்கிறேன். உங்கள் அடையாள படம் பாரதி எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.
     சிறப்பு விருந்தினர்கள் விஷாலினி , யோகநாதன் ,கோகுல் தயாராக இருந்தனர்.  ஆரூர் மூனா செந்தில் புலவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

  "இந்த முறையாவது ஒரு அமைப்பை உருவாக்குங்கள். பதிவர்களுக்கு மிகவும் அவசியமானது இது. எதிர்காலத்தில் நிச்சயம் பதிவர்களுக்கு பல்வேறு வகையில் உதவியாக அமையும். நீங்கள் பொறுப்பேற்று நடத்துங்கள்.  அதற்கான செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார்." இன்று எப்படியும் செய்து விடலாம் என்றார் ஆரூர் மூனா செந்தில்
ஆனால்  கடைசிவரை அதைப்பற்றி பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
        நிகழ்ச்சி தொடங்கியது. ஒரே வரியில் அனைவரையும் வரவேற்றார் சிவகுமார். கேபிள் தொகுப்பில் ஈடுபட அனைவரும் ஒவ்வொருவாராக மைக் பிடித்து தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டனர். எழுத்தில் பிய்த்து உதறும் பெரும்பாலான பதிவர்கள் பலருக்கு  மேடைக் கூச்சம் காணப்பட்டது. சென்னைபித்தன் அவர்களும் புலவர் அவர்களும் கம்பீரமாக அறிமுகப் படுத்திக்கொண்டனர். பிலாசபி,அப்துல்லா கார்க்கி, வீடு சுரேஷ் இவர்கள் அறிமுகமானார்கள்
       அறிமுகப் படலத்தின்போது பின்புறத்தில் இருந்து நக்கல் நையாண்டியுடன் உடனூட்டங்கள் (பின்னாடி வந்தா பின்னூட்டம்,உடனே சொன்னதால உடனூட்டம் ..ஹி,ஹி,) வந்து கொண்டிருந்தன.
       பின்னர் சிறப்பு விருந்தினர் சாதனைச் சிறுமி விஷாலினியின்  தாய் பேச அழைக்கப்பட்டார். ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த அந்த தாய் தன்  மகளின் சாதனைகளை அடுக்கினார். விஷாலினியின் நுண்ணறிவு ஈவு 225. நான்கு உலக சாதனைகளை நிகழ்த்தி உள்ளதாகவும் ஆனால் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், பதிவர் 'உணவு உலகம்' சங்கரலிங்கம் அவர்கள் எழுதிய பதிவு, உலகமே தனது பெண்ணை  கவனிக்க காரணமாக அமைந்தது என்றார். தினமும் ஆயிரக் கணக்கான மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருப்பாதாகவும் கூறினார். சான்றுக்கு ஒரு நாளில் வந்த அஞ்சல்களை அச்செடுத்து வந்திருந்தார். அதுவே மிகப் பெரிய புத்தகமாக இருந்தது.
    விஷாலினியின் சாதனைகளை வெளி உலகிற்கு அறிமுகப் படுத்த தான் பட்ட கஷ்டங்களை விளக்கினார். ஒருமணிநேரம் நீண்ட அவரது பேச்சு  ஆதங்கம்,சிறு கோபம், தன்னம்பிக்கை,பெருமை முதலிய உணர்ச்சிகள் நிறைந்ததாக அமைந்தது.
   அந்தப் பெண்ணிற்கு பதிவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் அதை வெளிக்கொண்டுவந்த சங்கரலிங்கத்திற்கும் பாராட்டுக்கள்.

   மரங்களை காதலியோடு சேர்த்து சுற்றி வந்து ஆடிப் பாடுபவர்கள் நமது திரைப்படக் கதாநாயகர்கள். ஆனால் மரங்களையே காதலியாக நினைத்து அதை சுற்றி வந்து காதலிக்கும் உண்மையான  கதாநாயகன் யோகநாதன்
  நடத்துனாராகப் பணியாற்றும் யோகநாதன் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் மரங்கள் வெட்டப் படுவதை தடுக்க தான் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை உணர்ச்சியோடு விவரித்தார்.. இப்படியும் ஒரு மனிதர் இருக்கிறாரா என்று ஆச்சர்யப்பட வைத்தது. எதிர்ப்புகளின் காராணமாக 23 மாதத்தில் 9 முறை இட மாற்றம் செய்யப்பட்டார் என்பதை அறியும்போது வேதனை ஏற்பட்டது. மரங்கள் நடுவதற்கும் மரம் வெட்டுவதை தடுப்பதற்கும் பண இழப்புகளையும் பொருட்படுத்தாது செய்த பணிகள் பிரமிக்க வைத்தன. தனது அழைப்பட்டையில் சுற்றுச் சூழல் போராளி (Eco Warrior) என்று அச்சடித்துள்ளார். இப் பணிகளுக்கு விடுப்பு கிடைக்காததால் அடிக்கடி தான் சம்பளமில்லா விடுப்பில் செல்வதாகவும் சேமநலநிதியில் பணம் எடுத்து செலவுசெய்ததாகவும் சொன்னது வேதனை அளித்தது.  அவரது சேவைகளைப் பார்க்கும்போது நாம் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்தோம்! என்று வெட்கப் பட வைத்தார்.
     பதிவர் அப்துல்லா யோகநாதனை பாராட்டிப் பேசினார். யோகநாதன் அரசு அதிகாரிகளையும் ஊழியர்களையும் தான் நம்பவில்லை என்று சொன்னதற்கு தாங்கள் அப்படி சொல்வது சரியல்ல பேருந்து நடத்துனர்களைக் கூடத்தான் மக்கள் நம்பவில்லை. ஆனனல் நீங்கள் நம்பிக்கைக்குரியரவராக இருக்கிறீர்களே என்று சொன்னபோது கைத் தட்டல்கள் கிடைத்தது.
     கேபிள் சங்கர் பதிவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் என்று புகழ்ந்தார்.உண்மைதான்.
 மேலும் ஓரிருவர் பேசியதும் கேபிள் அண்ணன் மிக சுருக்கமாக நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

    மரங்களைப் பற்றிய ஒரு கவிதை எழுதி அதை ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு சாதனை படைத்த யோகநாதனுக்கு வாசித்து அர்ப்பணிக்க நினைத்த நான் அதற்கு நேரம் கிடைக்காததால்  புறப்படுமுன்  அவரைப் பார்த்து சேவையைப் பாராட்டி கவிதை எழுதி இருப்பதையும் சொல்லி, அவருடைய சேவைகளுக்காக செலவு செய்யும் பணத்தை எல்லாம் ஈடு செய்ய  முடியாது என்றாலும் ஒரு  ஐநூறு ரூபாயை அவரிடம் மரங்களுக்காகப் பயன் படுத்திக்கொள்ளும்படி வற்புறுத்திக் கொடுத்தேன்.
(பிறகு சிந்தித்துப் பார்த்தபோது அனவைருக்கும் எதிரில் தந்திருந்தால் வேறு யாரேனும் கூட தந்திருப்பார்கள் என்ற எண்ணம் தோன்றியது.)

   பதிவர் கோகுலுக்கு சிறந்த யூத் பதிவர் விருது வழங்கப்பட்டது.அவர் தனது திருமண அழைப்பிதழை வந்திருந்தோருக்கு வழங்கினார். நிகழ்ச்சி அதிக நேரம் நடந்ததால் பேச நினைத்த புலவர் அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. பதிவர்சங்கம் உருவாக்கவேண்டும் என்று எண்ணத்தை வலியுறுத்த இயலவில்லை. 
   இது தொடர்பாக கேபிள் சங்கர் அவர்களுடனும் பேசிக் கொண்டிருந்தார்.
   நிகழ்ச்சியை வடிவமைப்பதில் இன்னும் கொஞ்சம் seriousness இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
   பதிவர் சந்திப்பிற்கு இடம்  அளித்து டிஸ்கவரி புக் பேலஸ்  மற்றும் தேநீர் விருந்தோடு பயனுள்ள வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை நடத்திய பதிவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவித பிரதிபலனும் பாராமல் உழைத்த பதிவுலக நண்பர்களுக்கு நன்றி. டிஸ்கவரி புக் பேலஸ் வந்திருந்த அனைவருக்கும்ஜெயமோகன் புத்தகத்தை நினைவுப் பரிசாக அளித்தது.
இது  ஒரு பதிவு செய்யப்பட வேண்டிய பதிவர் சந்திப்பு.

  அடுத்த  சந்திப்பை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

யோக நாதனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மரங்கள் பற்றிய கவிதை அடுத்த பதிவில்
 .

19 கருத்துகள்:

  1. பெயரில்லா23 மே, 2012 அன்று AM 8:57

    முரளிதரன் அவர்களே, ஒரு சிறுதிருத்தம். பின்னாடி அமர்ந்து உடனுக்குடன் கமெண்ட் அடித்துக் கொண்டு பிரெஞ்ச் பியெர்டுடன் அமர்ந்திருந்தாரே, எங்கள் தல அவர் தான் கேஆர்பி செந்தில்.

    புலவர் அவர்களுடன் சங்கம் அமைப்பது சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தது நான் ஆரூர் மூனா செந்தில். நேரமின்மை காரணமாக அன்று சங்கம் சம்பந்தமான பேச்சு வார்த்தையை தொடர முடியவில்லை. அடுத்த சந்திப்பில் பார்த்துக் கொள்ளலாம் என புலவர் அய்யா அவர்களிடம் சொல்லி விட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சாரி பாஸ்! சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்திட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா23 மே, 2012 அன்று AM 10:20

    தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே. சென்னை பதிவர் சந்திப்பு பொதுவாகவே மிகவும் சீரியசாக இருந்ததில்லை. மீண்டும் இணைவோம்.

    பதிலளிநீக்கு
  4. நண்பர் முரளி... அன்று விஷாலினியின் தாயார் சங்கரலிங்கம் அவர்கள் வலைப்பதிவின் மூலம் அறிமுகப்படுத்தியபின் விஷாலினிக்கு உலகமெங்கும் இருந்து மெயில்கள் வருவதாகச் சொல்லி. ஒரு மாத மெயிலை பைண்ட் செய்து வைத்திருந்ததைக் காட்டிய போது எழுத்துக்களின் சக்தியை உணர்ந்து பெருமிதமும். அதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்று பொறுப்புணர்வும் கூடித்தான் போனது. மனதில் நிற்கும் ஒரு தினம். உங்கள் போன்ற நண்பர்களைச் சந்தித்ததில் கொள்ளை மகிழ்வு எனக்கு.

    பதிலளிநீக்கு
  5. எல்லாருக்கும் வாழ்த்துகள்....!!!

    பதிலளிநீக்கு
  6. அன்பின் இனிய தம்பி முரளி!

    என்பால் மிகுந்த அன்பினைக் கொண்டுள்ள தங்களை என் உடன் பிறவா சகோதரர் என்றே கருதுகிறேன். இது தமிழ்தந்த பேறு ஆகும்!

    தங்கள் பதிவு செய்திகளை தெளிவாகவும் விளக்கமாகவும் தொகுக்கப் பட்டுள்ளது! நன்றி!
    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  7. //கணேஷ் said...
    நண்பர் முரளி... அன்று விஷாலினியின் தாயார் சங்கரலிங்கம் அவர்கள் வலைப்பதிவின் மூலம் அறிமுகப்படுத்தியபின் விஷாலினிக்கு உலகமெங்கும் இருந்து மெயில்கள் வருவதாகச் சொல்லி. ஒரு மாத மெயிலை பைண்ட் செய்து வைத்திருந்ததைக் காட்டிய போது எழுத்துக்களின் சக்தியை உணர்ந்து பெருமிதமும். அதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்று பொறுப்புணர்வும் கூடித்தான் போனது. மனதில் நிற்கும் ஒரு தினம். உங்கள் போன்ற நண்பர்களைச் சந்தித்ததில் கொள்ளை மகிழ்வு எனக்கு.//
    நன்றி கணேஷ் சார்,

    பதிலளிநீக்கு
  8. //MANO நாஞ்சில் மனோ said...
    எல்லாருக்கும் வாழ்த்துகள்....!!!//
    நன்றிநெஞ்சில் மனோ சார்,

    பதிலளிநீக்கு
  9. புலவர் சா இராமாநுசம் said...
    அன்பின் இனிய தம்பி முரளி!
    என்பால் மிகுந்த அன்பினைக் கொண்டுள்ள தங்களை என் உடன் பிறவா சகோதரர் என்றே கருதுகிறேன். இது தமிழ்தந்த பேறு ஆகும்!

    தங்கள் பதிவு செய்திகளை தெளிவாகவும் விளக்கமாகவும் தொகுக்கப் பட்டுள்ளது! நன்றி!
    சா இராமாநுசம்//
    தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அய்யா!

    பதிலளிநீக்கு
  10. பதிவர் சந்திப்புக்கு நேரில் வரலைன்னாலும் உங்க வர்ணனை அதை நிறைவேத்தியது.

    பதிலளிநீக்கு
  11. நிகழ்வினை நேரடியாகப் பார்ப்பதைப் போல மிக மிக அழ்காக தொகுத்து
    வழங்கியமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. நல்ல சந்திப்பு,தங்களது கூட்டு முயற்சி தொடரவும்,அமைப்பு ஏற்படுத்தவுமாய் வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  13. //Ramani said...
    நிகழ்வினை நேரடியாகப் பார்ப்பதைப் போல மிக மிக அழ்காக தொகுத்து
    வழங்கியமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//
    வாக்கிற்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  14. //கோவை நேரம் said...
    பதிவர் சந்திப்புக்கு நேரில் வரலைன்னாலும் உங்க வர்ணனை அதை நிறைவேத்தியது.//

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  15. //விமலன் said...
    நல்ல சந்திப்பு,தங்களது கூட்டு முயற்சி தொடரவும்,அமைப்பு ஏற்படுத்தவுமாய் வாழ்த்துக்கள்/
    நன்றி! காலை தங்கள் சிறுகதையைப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. நிகழ்ச்சியின் முழுமையான வர்ணனை.உங்களை அங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  17. //சென்னை பித்தன் said...
    நிகழ்ச்சியின் முழுமையான வர்ணனை.உங்களை அங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.//
    தங்களை சந்தித்ததி மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  18. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. விரிவாக விழா பற்றி எழுதியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895