இன்று உலக அன்னையர் தினம்.உலகின் மிக உயர்ந்த உறவு தாய். அனைத்து உறவுகளுக்கும் அடிப்படை தாய்.அந்தத் தாயைப் பற்றி சந்தத் தமிழில் எனது சொந்தத் தமிழில் கவிதையாக்கி, அனைத்து அன்னையருக்கும் சமர்ப்பிக்கிறேன்
சொல்லவே முடியாத் துயரில்
சோர்ந்தே விழுந்த போதும்
மெல்ல எடுத் தணைத்து
மெல்ல எடுத் தணைத்து
மழலையை இதமாய்த் தொட்டு
வெல்லக் கட்டி என்றும்
வேங்கையின் மகனே என்றும்
செல்லமாய்த் தமிழில் கொஞ்சி
சேயினைக் காப்பாள் அன்றோ? 1 காலை எழுந்த உடன்
கடிகாரம் கடிது ஓட
சேலையை சரியாய்க் கட்ட
சிறிதுமே நேரமும் இன்றி
வேலை செய்து கொண்டே
விரைவாய் இடையில் வந்து
பாலை வாயில் இட்டு
பக்குவமாய் சுவைக்க வைப்பாள் 2
சத்துணவு நமக்கே தந்து
சுவையுணவு மறந்த போதும்
பத்தியம் பலவா ரிருந்து
பகலிரவாய் விழித்த போதும்
நித்திய வாழ்க்கை தன்னில்
நிம்மதி இழந்த போதும்
சத்தியத் தாய் தன் அன்பில்
சரித்திரம் படைத்து நிற்பாள் 3
பச்சிளம் பாலகன் தன்னை
அம்மா என்றழைக் கும்போதும்
அச்சிறுவன் வளர்ந்து பின்னர்
அறிஞனாய் ஆகும் போதும்
மெச்சி அவன் புகழை
மேலோர்கள் சொல்லும் போதும்
உச்சியே குளிர்ந்து போவாள்
உவகையில் திளைத்து நிற்பாள் 4 பேய்குணம் கொண்டே பிள்ளை
பெருந்துயர் தந்திட் டாலும்
சேய்குனம் சிறிதும் இன்றி
சிறுமையை அளித்திட் டாலும்
நாய்குணம் மனதில் கொண்டே
நல்லன மறந்திட் டாலும்
தாய் குணம் மாறா தம்மா
தரணியில் உயர்ந்த தம்மா! 5
விண்ணைத் தொடும் அளவு
வளர்ந்திட்ட தென்னை போல்
என்னையே எடுத்துக் கொள்
என்றீயும் வாழை போல்
தன்னையே நினையா நெஞ்சம்
தன்னலம் பாரா நெஞ்சம்
அன்னையின் அன்பு நெஞ்சம்
அவனியில் இதை எது மிஞ்சும்? 6
*******************************************************************************
தாய், எவற்றடோடும் ஒப்பிடமுடியாதவர் ..!
பதிலளிநீக்குஅன்னையின் அன்பு நெஞ்சம்
பதிலளிநீக்குஅவனியில் இதை எது மிஞ்சும்?
இனிய அன்னையர் தின வாழ்த்துகள் !
//அன்னையின் அன்பு நெஞ்சம்
பதிலளிநீக்குஅவனியில் இதை எது மிஞ்சும்? //
எதுவும் இல்லை.மிக அருமையான கவிதைப் பகிர்வுக்கு நன்றி.
அற்புதக் கவிதை கண்டே
பதிலளிநீக்குஅழகியத் தமிழில் விண்டே
சொற்பதம் சுவைக்க வைத்தீர்
சுகமிக வியக்க வைத்தீர்
பொற்புடை அன்னை தன்னை
போற்றிய அருமை என்னை
கற்பனை செய்ய இயலா
களிப்பினில் வீழச் செய்தீர்
சா இராமாநுசம்
////சென்னை பித்தன் said...
பதிலளிநீக்கு//அன்னையின் அன்பு நெஞ்சம்
அவனியில் இதை எது மிஞ்சும்? //
எதுவும் இல்லை.மிக அருமையான கவிதைப் பகிர்வுக்கு நன்றி.////
மிக்க நன்றி அய்யா!
//புலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்குஅற்புதக் கவிதை கண்டே
அழகியத் தமிழில் விண்டே
சொற்பதம் சுவைக்க வைத்தீர்
சுகமிக வியக்க வைத்தீர்
பொற்புடை அன்னை தன்னை
போற்றிய அருமை என்னை
கற்பனை செய்ய இயலா
களிப்பினில் வீழச் செய்தீர்//
அழகிய கவிதையாய் தங்கள் கருத்தை வெளியிட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா!
அம்மாவைப் பற்றி என்ன சொன்னாலும் முடியாது நீளும் அவளது பாசம்.அன்னையர்கள் பாதம் தொட்டு வணங்குவோம் !
பதிலளிநீக்கு//ஹேமா said...
பதிலளிநீக்குஅம்மாவைப் பற்றி என்ன சொன்னாலும் முடியாது நீளும் அவளது பாசம்.அன்னையர்கள் பாதம் தொட்டு வணங்குவோம் !//
நன்றி!
நல்ல பதிவு ...
பதிலளிநீக்குவாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ்.DailyLib
we can get more traffic, exposure and hits for you
To link to Tamil DailyLib or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்
நன்றி
தமிழ்.DailyLib
அழகன்ன வரிகள் சார் !
பதிலளிநீக்கு