வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 இன் தொடர்ச்சி.
வடிவேலு வேலை கிடைப்பதற்காக இந்தப் புதிருக்குத்தான் விடை கண்டு பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டிருந்தார்.
(வேலை தேடும் வடிவேலு - பகுதி 1)
(வேலை தேடும் வடிவேலு - பகுதி 1)
உன்கிட்ட நூறு ரூபாய் இருக்கு. நூறு ரூபாய பிரிச்சி ஏழு பொட்டலத்தில கட்டி வைக்கணும். அப்படி கட்டி முடிச்சதும் ஒரு ரூபாயிலிருந்து நூறு ரூபா வரை எவ்வளவு கேட்டாலும் பொட்டலமாகத்தான் எடுத்து குடுக்கனும். அப்படி குடுக்கனும்னா ஒவ்வரு பொட்டலத்திலும் எவ்வளவு காசு வைக்கணும்?. ஒரு பொட்டலத்துக்கு மேலயும் குடுக்கலாம். ஏழு பொட்டலமும் சேத்தும் குடுக்கலாம். எந்தக் காரணத்தை கொண்டும் பொட்டலம் கட்டிமுடிச்சதும் அதை பிரிக்ககூடாது.”
வடிவேலு, கையில் பேப்பரை வைத்துக்கொண்டு விதம் விதமாக எண்களை எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தப்போது அவருடைய நண்பர்கள் வந்தனர்.
"அண்ணே! விடை கண்டுபிச்சிட்டீங்களா?"
"ஒரு வாரமா முட்டி மோதிக்கிட்டிருகேன். கண்டுபிடிக்க முடியலையே!"
"நீங்க கண்டு பிடிக்க மாட்டேங்கன்னு எங்களுக்கு தெரியும்.?அதனால உங்களுக்கு உதவி செய்யறதுக்காக நித்தியானந்தா கிட்ட அருள் வாக்கு கேட்டுட்டு வரோம்"
"யாரு! ரஞ்சிதாவோட ஆட்டம் போட்டாரே அந்த சாமியாரா? அவருக்கு என்னடா தெரியும்?"
"அண்ணே! அவர சாதரணமா நினச்சிடாதீங்க.அவர் உங்களுக்காக அருள்வாக்கு சொல்லி இருக்காரு. அந்த அருள் வாக்குல விடை இருக்கும் தேடிப்பாருன்னு அவருடைய சீடருங்க சொல்லறாங்க."
"அப்படி என்னடா சொன்னாரு!"
"அவரு கண்ண மூடிக்கிட்டு சொன்னத சொல்லறோம்.
நீ,
நான்,
ரஞ்சிதா,
எல்லா திசையிலும் தேடி பாருங்க,
ரெண்டு சவரன எடை போடு
நான் சிரிக்கும்போது எண்ணி பாரு.
மீதி ஏதும் விடாதே!"
"ஒண்ணுமே புரியலயேடா"
"அண்ணே இதை சொல்லிக்கிட்டே இருங்க விடை கிடைச்சிடும். அண்ணே குளிக்கரதக் கூட மறந்துட்டு இப்படி கணக்கு போட்டுக்கிட்டு இருக்கீங்களே! உங்கள எப்படி பாரட்டறதுன்னே தெரியலண்ணே "
நான் நாலு நாளா குளிக்காதது உங்களுக்கு எப்படிடா தெரியும்?
"கொஞ்சம் ஸ்மெல் ஓவரா வருதுண்ணே! குளிச்சிட்டு வந்துடுங்க நாங்க வெய்ட் பண்ணறோம்.
"நீ நான் ரஞ்சிதா ........" என்று வடிவேலு அதை சொல்லிக்கொண்டே போன வடிவேலு திடீரென்று பாத்ரூம் கதவைத் திறந்துகொண்டு கொண்டு கண்டு பிடிச்சிட்டேன். கண்டு பிடிச்சிட்டேன்....என்று கூவிக்கொண்டே டிரஸ் போடாதாதைக்கூட மறந்து வெளியே ஓடி வந்தார்.
"என்னன்னே ஆர்க்கிமிடிஸ் மாதிரி டிரஸ் போடாம ஓடி வறீங்க! நண்பர்கள் சொன்னபிறகு டிரஸ் போட்டுக்கொண்டு வந்தார்.
"கண்டு பிடிச்சிட்டீங்களா விடை என்ன?எப்படி கண்டு பிடிச்சீங்க!'
"அடேய்! "நீ" எத்தனை எழுத்து?
"ஒண்ணு"
" 'நான்' எத்தனை எழுத்து?"
"ரெண்டு'
"ரஞ்சிதா?"
"நாலு"
"எல்லா திசையிலும் தேடிப்பாருன்னா?
"ரொம்ப பெரிசா இருக்கு.எண்ணிப் பார்க்க முடியாதுன்னே."
"இதை எண்ணிப் பாக்கக் கூடாது. எல்லாதிசைன்னு சொன்னா எட்டு திசை".
"அதாவது எட்டு."
"ரெண்டு சவரன எடைபோடுன்னா"
"ரெண்டு சவரன எடை போட்டு பாத்தா 16 கிராம் இருக்கும்."
"அப்பா நான் சிரிச்சா எண்ணிப்பாருன்னு சொன்னாரே அதுக்கு என்ன அர்த்தம்?
"அவரு சிரிக்கும்போது பல்லை எண்ணினா எத்தனை இருக்கும்?
"முப்பத்து ரெண்டு. சூப்பர்ணே"
"அப்புறம் மீதி ஏதும் விடாதேன்னா. மேல சொன்ன 1, 2, 4, 8,16, 32
இதெல்லாம் கூட்டினா 63. மொத்தம் நூறுல மீதி இருக்கறது 37."
அதனால ஒவ்வொரு பொட்டலத்திலயும் 1, 2, 4, 8, 16, 32 ,37 (இதுதான் விடை) ரூபா இருக்கற மாதிரி கட்டி வச்சா எத்தனை ரூபா கேட்டாலும் பொட்டலங்கள் பிரிக்காம எடுத்துக் கொடுக்கலாம். அட.. அட.. என்னா அருள்வாக்கு! "
"47 ரூபா எப்படி எடுப்பீங்க. சொல்லுங்க பாக்கலாம்.
"2 ரூபா பொட்டலம் , 8 ரூபா பொட்டலம் , 37 ரூபா பொட்டலம்"
"ரொம்பப் பிரமாதம் ணே உங்களுக்கு வேல கிடச்ச மாதிரிதான்"
" நித்தி அப்படி இப்படி இருந்தாலும் கணக்கில கில்லாடிதான் .சரி சரி உடனே கிளம்புங்க வேற எவனாவது வந்து விடை சொல்லிடப் போறான்"
(தொடரும்)
கிளம்பிச் சென்ற வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? அவசரப் படாதீங்க! சீக்கிரமே சொல்லிடறேன்.
வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3
வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3
**********************************************************************************************
நானும் பதிலை யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பதில்தான் கிடைக்கலை. நல்லவேளை 100 ரூபாயை பிரிச்சு பங்கு போட்டீங்க.ரஞ்சிதாவை நினைச்சிருந்தா பதில் உடனே கிடைச்சிருக்குமோ?
பதிலளிநீக்குகதவை மூடு ரஞ்சிதா வந்தாச்சு...!!!
பதிலளிநீக்குநித்தி நல்லாத்தான் கணக்கு பண்ணுராரோ .., ஹி ஹி ஹி ..!
பதிலளிநீக்குஹா ஹா ! நல்ல கணக்கு !
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவையான பதிவு. இதுவும் வேண்டும் எங்களுக்கு. மிகவும் ரசித்தேன்
பதிலளிநீக்கு//விச்சு said...
பதிலளிநீக்குநானும் பதிலை யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பதில்தான் கிடைக்கலை. நல்லவேளை 100 ரூபாயை பிரிச்சு பங்கு போட்டீங்க.ரஞ்சிதாவை நினைச்சிருந்தா பதில் உடனே கிடைச்சிருக்குமோ?//
நித்தியைவிட ரஞ்சிதாவுக்கு மவுசு ஏறிடிச்சோ?
//MANO நாஞ்சில் மனோ said...
பதிலளிநீக்குகதவை மூடு ரஞ்சிதா வந்தாச்சு...!!!/
நித்தி என்ன சொல்றாருன்னா வந்தாச்சுக்கு முன்னாடி ஒரு மூடு சேத்துக்கோ.
"கதவை மூடு ரஞ்சிதா! மூடு வந்தாச்சு'
//வரலாற்று சுவடுகள் said...
பதிலளிநீக்குநித்தி நல்லாத்தான் கணக்கு பண்ணுராரோ .., ஹி ஹி ஹி //
நித்தி போட்ட கணக்குக்கு சரியான விடை மதுரை ஆதீனம்...
//திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குஹா ஹா ! நல்ல கணக்கு !//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//சந்திரகௌரி said...
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவையான பதிவு. இதுவும் வேண்டும் எங்களுக்கு. மிகவும் ரசித்தேன்//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
அருமை,அருமை...சிறப்பான புதிரை வழங்கியமைக்கு நன்றி,புதிரை கற்பனையுடன் வழங்கியுள்ளமை நன்றாக உள்ளது,தொடரட்டும் தங்கள் முயற்சி.
பதிலளிநீக்கு//விஜயன் said...
பதிலளிநீக்குஅருமை,அருமை...சிறப்பான புதிரை வழங்கியமைக்கு நன்றி,புதிரை கற்பனையுடன் வழங்கியுள்ளமை நன்றாக உள்ளது,தொடரட்டும் தங்கள் முயற்சி.//
நன்றி விஜயன் சார்,
அன்பின் முரளிதரன் - எளிமையான புதிர் - நல்லதொரு புதிர் - அதனை விட விடை கண்டுபிடிக்க மற்றொரு புதிர். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு