என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 6 மே, 2012

வேலை தேடும் வடிவேலு - பகுதி 1

           (முழுக்க முழுக்க கற்பனையே ) 
  
   வடிவேலு வீட்டு வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். எவ்வளவு நாள்தான் சும்மா இருப்பது. ஏதாவது வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்து ஆட்கள் தேவை விளம்பரங்களை  ஆராய்ந்து கொண்டிருந்தார்.
  
  “அண்ணே! என்ன பண்ணிகிட்டிருக்கிங்க! வேலை தேடிக்கிட்டு இருக்கீங்களா?” என்று திடீரென்று குரல் கேட்க வடிவேலுவின் நண்பர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

     “அடடா! இவனுங்க எப்ப வந்தானுங்க” என்றுநினைத்துக் கொண்டே
“நான் வேல தேடறது உங்களுக்கு எப்படிடா தெரியும்?நான் உங்கக்கிட்ட சொல்லவே இல்லையே! உங்க சங்காத்தமே வேண்டாம்னு தானே ஒதுங்கி இருக்கேன்.”

     “ஏண்ணே! இப்படி நினைக்குறீங்க! நீங்க என்ன செய்வீங்கன்னு எங்களுக்கு தெரியாதா? உங்க கஷ்டம் எங்க கஷ்டம் இல்லையா? உங்களுக்கு உதவி செய்யறதுக்குத் தானே நாங்க இருக்கோம்.”

     “நீங்களாடா உதவி செய்வீங்க! பின்னாடி வெடி வச்சு வேடிக்கை பாக்கறவங்களாச்சே!”

   “போங்கண்ணே! கணக்கு வழக்கு தெரிஞ்ச ஆளு ஒருத்தர் வேலைக்கு வேணும்னு கேட்டிருந்தாங்க. அப்ப உங்க ஞாபகம்தான் எங்களுக்கு வந்துச்சி.உடனே உங்க கிட்ட சொல்லனும்னு ஓடோடி வந்தா...நீங்க என்னடான்னா எங்களை இன்சல்ட் பண்ணறீங்க,
சரி வாங்கடா போலாம். அண்ணன் நம்பள நம்ப மாட்டேங்கிறார்.”

  “அடேய் கோவிச்சுக்காதீங்கடா. எனக்கும் உங்களை விட்டா யாரு இருக்கா. அடி உதை வாங்கினதுக்கு அப்புறமாவது வீட்டுக்கு தூக்கிகொண்டு வந்து சேத்துடறீங்க இல்ல.  சரி! சரி சொல்லுங்க வேலைய பத்தி ஏதோ சொல்லவந்தீங்களே.. நான் இப்ப வேளைக்கு போயே ஆகணும்டா. மரியாத நாளுக்கு நாள் தேஞ்சிக்கிட்டே வருது.!

  “அண்ணே, அந்தக் கம்பனி பணம் அதிகமா நடமாடற இடமாம். நல்லா வேல செய்யற நம்பிக்கையானவாங்களா இருக்கணுமாம்....”

  “பேங்க்கா இருக்குமோ. அதுக்கு நிறைய படிச்சி இருக்கனுமேடா. நான் பண விஷயத்தில கில்லாடிதான். ஆனா என்கிட்டே மூணாவது படிச்ச சர்டிபிகேட்  கூட இல்லையேடா!
 “அதெல்லாம் எங்களுக்கு  தெரியாதன்னே. சூப்பரா டிரெஸ் பண்ணிக்கிட்டு வாங்கண்ணே போகலாம். அங்கே உங்களுக்கு இன்டெர் வியு வைப்பாங்க அதுல கரக்டா பதில் சொல்லிட்டா உங்கள வேலைக்கு எடுத்துக்குவாங்க ”

  வடிவேலுவை நண்பர்கள் இன்டெர்வியுக்கு அழைத்துச் சென்றனர். அவரைப்போலவே இன்டெர்வியுக்கு நிறையப் பேர் வந்திருந்தனர்.
நண்பர்கள் வெளியே இருக்க தனக்கு வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்துடன் உள்ளே போனார் வடிவேலு.

இன்டெர்வியூசெய்பவர்,"உன்ன பாத்தா வடிவேலு மாதிரி இருக்கே, இந்த வேலைக்கு  வேலைக்கு உன் பேஸ் ஒ.கே. ஆனா டிரஸ் நல்லாவே இல்லையே.”

   அவரைப்பார்த்த வடிவேலு, "சார்! நான்  உங்கள  எங்கயோ பாத்திருக்கேனே!”
“டி.வி. இல பாத்திருக்கலாம். நான் இந்தக் கம்பனியோட எம்.டி. உனக்கு பான் கார்டு இருக்கா?பேங்க் அக்கவுன்ட் இருக்கா.”

   பான் கார்டுன்னா என்னான்னு தெரியா விட்டாலும் இருக்கு என்று தலை ஆட்ட, 
  "இந்தக் கம்பனி சாதாரண கம்பனை இல்ல. சரவணா ஸ்டோர், தங்கமாளிகை,போதிஸ்,ஜெயச்சந்திரன், இவங்கெல்லாம் நான் இல்லேன்னா வியாபாரம் செய்ய  முடியாது.  இவங்களுக்கு தேவையான முக்கியமானதை நான்தான் சப்ளை பண்றேன். சென்னையில எங்களுக்கு நிறைய கிளை இருக்கு. புதுசா பிராஞ்ச் ஓபன் பண்ணப்போறோம். இங்க வேல கிடைக்கனும்னா கணக்கு அறிவு ரொம்ப முக்கியம். கணக்கு உனக்கு வருமா?”

    “அய்யா கணக்கில நான் புலி.”

    “அப்ப சரி.  நான் ஒரு கேள்வி கேக்கறேன். அதுக்கு சரியான பதில் சொல்லிட்டா உனக்கு வேல குடுக்கறோம். வேலையில சேந்துட்டா டெய்லி பேட்டா,லீவு, யூனிபார்ம் இப்படி நிறைய சலுகை கிடைக்கும். ஆனா இந்தவேலையில பொறுமை ரொம்ப ரொம்ப  முக்கியம். கஸ்டமர் தான் நம்ம கடவுள்.”

   “உங்க கிட்ட வேல செய்ய நான் குடுத்து வச்சிருக்கணும். நீங்க கேளுங்க அய்யா. எப்படியாவது கஷ்டப்பட்டு பதில் சொல்லிடறேன்.

   “சரி கேட்டுக்கோ. உன்கிட்ட நூறு ரூபாய் இருக்கு. நூறு ரூபாய பிரிச்சி ஏழு பொட்டலத்தில கட்டி வைக்கணும். அப்படி கட்டி முடிச்சதும் ஒரு ரூபாயிலிருந்து நூறு ரூபா வரை எவ்வளவு  கேட்டாலும் பொட்டலமாகத்தான் எடுத்து குடுக்கனும். அப்படி குடுக்கனும்னா ஒவ்வரு பொட்டலத்திலும் எவ்வளவு காசு வைக்கணும்?. ஒரு பொட்டலத்துக்கு மேலயும் குடுக்கலாம். ஏழு பொட்டலமும் சேத்தும் குடுக்கலாம்.. எந்தக் காரணத்தை கொண்டும் பொட்டலம் கட்டிமுடிச்சதும் அதை பிரிக்ககூடாது.

  உதாரணத்துக்கு 51 ரூபா குடுக்கனும்னா 30 ,20,1  இன்னு மூணு பொட்டலமா குடுக்கலாம். ஏழு பொட்டலங்களிலும் சேத்து மொத்த காசு நூறு ரூபாங்கறதை நினைவுல வச்சிக்கணும்’

   “சார்! தலைய சுத்துது இதுக்கு பதில் இப்பவ சொல்லனுமா?”

   ஒரு வாரம் கழிச்சி கூட சொல்லலாம். ஆனா வேல தேடி வர்றவங்க யாராவது மொதல்ல சொல்லிட்டா வேலய அவங்களுக்கு குடுத்திடுவோம். இப்ப நீங்க போகலாம்.

 “ஓ.கே. சார், ட்ரை பண்ணி பாக்கறேன்.”

வடிவேலு சிந்தனையுடன் வெளியே வருகிறார்.
வடிவேலு விடை கண்டு பிடித்தாரா? அவருக்கு  வேலை கிடைத்ததா?
முடிஞ்சா நீங்க அவருக்கு ஹெல்ப் பண்ணுங்க. 
                                                             (தொடரும்) 
வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை 
வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3 

************************************************************************************************

13 கருத்துகள்:

 1. சர்தான் .., அண்ணே ஏற்கனவே ஸ்கூல்ல கேள்வி கேக்குராங்கன்னு தான் ஸ்கூல்லு திக்கமே போகாம திரியிறோம்.., நீங்க இங்கேயும் கேள்வி கேட்டீங்கன்னா அப்புறம் இந்த ஏரியா திக்கமே வரமாட்டோம் பார்த்துக்கோங்க ..!

  பதிலளிநீக்கு
 2. கடைசியில கேள்விய எங்ககிட்ட கேட்டுடீங்களே

  பதிலளிநீக்கு
 3. //வரலாற்று சுவடுகள் said...
  சர்தான் .., அண்ணே ஏற்கனவே ஸ்கூல்ல கேள்வி கேக்குராங்கன்னு தான் ஸ்கூல்லு திக்கமே போகாம திரியிறோம்.., நீங்க இங்கேயும் கேள்வி கேட்டீங்கன்னா அப்புறம் இந்த ஏரியா திக்கமே வரமாட்டோம் பார்த்துக்கோங்க ..!//

  ஐயய்யோ! வரலாறு கோவிச்சுகிட்டா எங்க வாழ்க்கை என்ன ஆவறது. வடிவேலு அதுக்கு பதில் சொல்லிடுவார். வடிவேலு சொல்லப்போறது சரியான்னு பாக்கறதுக்கு நீங்க வந்து போங்க தலைவா.

  பதிலளிநீக்கு
 4. //Vairai Sathish said...
  கடைசியில கேள்விய எங்ககிட்ட கேட்டுடீங்களே//

  வடிவேலு யோசிச்சிக்கிட்டு இருக்கார் நண்பா. யார் கையில கால்ல உழுந்தாவது கண்டுபிடிக்காம போகமாட்டார். அவர் கண்டுபுடிச்சதும் உடனே சொல்லிடறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 5. நானும் யோசிச்சுக்கிட்டே இருக்கேன். பதில்தான் கண்டுபிடிக்க முடியலை.அண்ணே நீங்களே சொல்லிருங்க.

  பதிலளிநீக்கு
 6. வடிவேலு இப்ப இங்கயா இருக்கார் !

  பதிலளிநீக்கு
 7. வேலை தேடுறவங்களுக்குதானே இந்த கேள்வி எங்களை போல வந்து படிப்பவர்களுக்கு இல்லையே???

  பதிலளிநீக்கு
 8. //நானும் யோசிச்சுக்கிட்டே இருக்கேன். பதில்தான் கண்டுபிடிக்க முடியலை.அண்ணே நீங்களே சொல்லிருங்க.//
  சொல்லிடறேன் தலைவா.

  பதிலளிநீக்கு
 9. //ஹேமா said...
  வடிவேலு இப்ப இங்கயா இருக்கார் !//
  இப்படி இருக்குற இடம் தெரியாம ஆக்கிட்டாங்களே!
  ஐ ஆம் பாவம்!

  பதிலளிநீக்கு
 10. //Avargal Unmaigal said...
  வேலை தேடுறவங்களுக்குதானே இந்த கேள்வி எங்களை போல வந்து படிப்பவர்களுக்கு இல்லையே???//
  அவன் அவன் ஆயிரம் கேள்வி கேக்கறான். ஒரு கேள்வி கேட்டுட்டு நான் படற அவஸ்த இருக்கே!
  ஐயய்யய்யய்யோ!

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895