கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான்
பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை -ஆனாலும்
உற்றதுணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா
பற்றியெனைத் தூக்கி விடு.
பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை -ஆனாலும்
உற்றதுணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா
பற்றியெனைத் தூக்கி விடு.
என்ற கடவுள் வாழ்த்துவெண்பாவில் தொடங்கினேன். இன்று நூறாவது பதிவைத் தொட்டிருக்கிறேன். நூறு என்பது ஒரு மந்திர எண். நூறாண்டு வாழ்க. நூறு ரூபாய். நூறு கி.மீ. வேகம். கிரிக்கெட்டில் செஞ்சுரி. ஆயிரத்தைக்கூட நூறுகளில் சொல்வதைப் பார்த்திருக்கலாம். நூறு நாள் ஓடும் படம். இப்படி நூறுக்கு இருக்கும் வசீகரம் வேறு எங்களுக்கு இல்லை.
நூறு பதிவு என்பது சாதனை அல்ல. பல பதிவர்கள் அனாயாசமாக நூறைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நானும் சென்சுரி அடித்தவர்களில் ஒருவன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் பதிவர் என்பது நண்பர்களுக்குக் கூட தெரியாது. அலுவலகத்திலும் தெரியாது.
எனக்கு ஓரளவிற்கு எழுத்தார்வம் உள்ளது என்றால் அதற்கு காரணம் எழுத்தாளர் இலக்கியவீதி இனியவன் அவர்கள். நான் நான்காம் வகுப்பிலிருந்து கதை புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். அப்பொழுது இனியவன் அவர்கள் எழுதுவதை பின்னல் இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அடித்தளம் என்ற எனது முதல் கதையை எழுதினேன். அதை எதிர்பாராமல் படித்த எழுத்தாளரின் உறவினரும் (தற்போது அவரின் மருமகன்) எனது நண்பர் அதனை அரும்பு என்ற இதழில் வெளிவரச் செய்தார்.. அதை அவர் பாராட்டியது, எழுதுவதற்கு தூண்டு கோலாக அமைந்தது. கவிதைகள் கதைகள் ஒன்றிரண்டு பிரசுரமாகி இருந்தாலும் அதைத் தொடர இயலவில்லை. எழுதுவதை எல்லாம் நோட்டுப் புத்தகத்தில் நான் மட்டும் அறிந்ததாகவே இருந்தது. இப்போது அவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்பு பதிவுலகின் மூலம் கிடைத்ததற்கு கூகுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இந்த நூறு எனக்கு பல அனுபவங்களை தந்திருக்கிறது.ஆரம்பத்தில் எனது பதிவுகள் யாராலும் படிக்கப் படவில்லை.(நல்லா எழுதினாத்தானே?) முதல் மூன்று பதிவுகளுக்குப் பின் கிட்டத்தட்ட ஓராண்டு வரை எந்தப் பதிவும் இடவில்லை. பின்னர் எங்கள் வீட்டில் வளர்ந்த செல்ல நாய் ஜூனோ எதிர் பாரவிதமாக இறக்க அதன் பாதிப்பில் இரங்கல் கவிதை ஒன்றை (ஜூனோ! எங்கள் செல்லமே!) பதிவிட்டேன். ஒரு சிலர் பார்த்தனர்.
ஒரு நம்பிக்கை ஏற்பட மேலும் ஒரு சில கவிதைகளை பதிவிட்டேன். பிறருடைய பதிவுகளை அதிகமாக வாசிக்கத் தொடங்கினேன். மோகன் என்பவரின் வானவில் எண்ணங்கள்தான் நான் படித்த முதல் பதிவு. அப்போது பதிவுலகில் நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதை அறியாதவனாகவே இருந்தேன். பின்னர் கேபிள் சங்கரின் வலைப்பதிவைப் படிக்க நேர்ந்தபோதுதான் பிரம்மாண்டமான தமிழ்ப் பதிவுலகம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். விவாதங்கள், சண்டைகள், கிண்டல்கள் ,கலாய்த்தல்கள், உள்ளது என்பதையும் அறிய நேர்ந்தது, சிறிது அச்சமும் ஏற்பட்டது.
தமிழ்மணம் வலைத்திரட்டி பற்றி தெரிந்துகொண்டு என்னுடைய வலைப்பதிவையும் இணைத்த பிறகுதான் திருப்பம் ஏற்பட்டது. எனது பதிவுகள் கவனிக்கப் பட ஆரம்பித்தது. கவிதைகள் மட்டுமல்லாது பிற தலைப்புகளிலும் பதிவிட்டேன். இன்டலி, தமிழ் 10, உடான்ஸ், உள்ளிட்ட பல்வேறு திரட்டிகளில் இணைக்கக் கற்றுக் கொண்டேன்.
தமிழ்மணத்திற்கு மிக்க நன்றி. பிற திரட்டிகளுக்கும் நன்றி
ஓரளவிற்கு எனது பதிவுகள் கவனிக்கப்படுவது கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது. பக்கப் பார்வைகளுக்கான கேட்ஜெட்டை இணைத்த பின்பு எனது வலைப்பதிவுகளுக்கு பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அறிந்து கொண்டேன். பார்த்துக்கொண்டிருக்கும்போதே எண்ணிக்கை சட்டென்று ஒன்றிரண்டு உயர்வது கண்டு ஆச்சர்யம் ஏற்பட்டது.யாரோ தற்போது பதிவுகளை பார்த்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.ஒவ்வொரு முறையும் இதைப்போல நிகழ, நான் பார்க்கும் பார்வைகளையே அது கணக்கில் எடுத்துக்கொண்டு எண்ணிக்கையை உயர்த்திக்காட்டியதை உணர்ந்தேன். பின்னர் செட்டிங்க்ஸில் இதற்கு ஒரு வழி இருப்பது தெரிந்தது. Dont Track Your Own Pageviews என்பதை தேர்வு செய்தபின் எனது பதிவுகளை நான் பார்க்கும்போது எண்ணிக்கை உயர்வது தடுக்கப்பட்டது.அதிலும் ஒரு சிக்கல் ஒவ்வொரு ப்ரௌசரிலும் இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டி இருந்தது.
கூகிள் கவுண்டர் தவிர ஹை ஸ்டேட்ஸ் கவுன்ட்டர் பயன் படுத்தும்போது கூகுளுக்கும் அதற்கும் பேஜ் வியூ எண்ணிக்கையில் பெரிய வேறுபாடு இருந்தது. அதிலும் I.P exclusion என்ற ஆப்ஷன் தேர்ந்தெடுத்து நமது I.P அட்ரஸ் கொடுத்தபோது இந்த வேறுபாடு ஓரளவிற்கு குறைந்தது.

தமிழ்மணத்தில் சேர்ந்தபோது எனது தமிழ்மணம் தர வரிசை 2000 க்கும் மேல் இருந்தது. மெதுவாக உயர்ந்து தற்போது 272 இல் இருக்கிறேன்.
முன்னணிப் பதிவர்கள் பலரும் பின்னூட்டம் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் மூன்று பின்னூட்டமிட்ட Elan ராம்ஜி யாஹூ., பொன்சந்தர் மூவருக்கும் நன்றி.
இணையம் இளைஞர்களுக்கே வாகானது எனது என்ற எண்ணத்தை தகர்த்தெறிந்த சென்னை
பித்தன்,புலவர் ராமானுசம் ,கோபால கிருஷ்ணன், நடன சபாபதிபோன்றவர்களும் பின்னூட்டமும் ஊக்கமும் அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
எனது பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் இடுவதற்கு word verfication option enable செய்யப்பட்டிருக்கிறது என்பதை கோபால கிருஷ்ணன் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்பே அப்படி ஒன்று இருப்பது எனக்கு தெரிய வந்தது. இப்படிப் பல பதிவர்கள் பல்வேறு வகைகளில் உதவி இருக்கிறார்கள்.
எனது பதிவுகளுக்கு கருத்திட்ட அனைத்து பதிவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
"நான் பேச நினைப்பதெல்லாம்" சென்னை பித்தன் அவர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். அவர் 2011 இல் கலக்கியவர்கள் பட்டியலில் என்னை பற்றி வலைசரத்தில் அறிமுகப் படுத்தினார். எனக்கு Liebster Blog விருது வழங்கிய நண்பர் சுப்ரமணியத்தை மறக்க இயலாது.
கூகிள் கனெக்ட் மூலம் எனது வலைப்பதிவை இணைத்துக் கொண்டவர்களுக்கும் இன்டலி மூலம் என்னை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் (பின் தொடர்பவர்கள் என்ற வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை) நன்றி.
எனது அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் நன்றி. யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் எனது நன்றி.
வலையுலகத்தின் மூலம் நான் பெற்ற நன்மைகளில் ஒன்று. பதிவர் "வீடு திரும்பல்" மோகன்குமார் என் வீட்டுக்கருகில் வசிக்கிறார் என்பதை தெரிந்துகொண்டது. ஆனாலும் அவரை இன்னும் சந்திக்கவில்லை. பல்வேறு நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இன்னும் பல விஷயங்கள் உள்ளன. நீளம் கருதி நிறுத்திக்கொள்கிறேன்.
பதிவுலகில் பல சமயம் தடுமாறி விழுந்து எழுந்து நின்றிருக்கிறேன்.
இப்போது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது விழுந்தாலும் எழுந்திருக்க முடியும் என்று.
தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
*******************************************************************************************
வேலை தேடும் வடிவேலு பகுதி2 -அடுத்த பதிவில்
*******************************************************************************************
வேலை தேடும் வடிவேலு பகுதி2 -அடுத்த பதிவில்
உங்கள் நூறாவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். நூறாவது பதிவை சிறப்பாகவும் நன்றி நவிலுதல் போலவும் அமைத்திருப்பது அருமை, இன்னும் பல நூறு பதிவுகள் நீங்கள் இட வேண்டும் அவற்றையும் நான் கமேன்டிட வேண்டும் என்பதே என் ஆவல்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சார்
நன்றி சீனு.உங்கள் அன்புக்கு நன்றி.
பதிலளிநீக்குநூறுக்கு வாழ்த்துகள். விரைவில் சந்திப்போம்
பதிலளிநீக்குவணக்கம்! உங்கள் நூறாவது பதிவில் நீங்கள் அடைந்த பரவசம் எப்போதும் இருக்க எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅடிச்சு தூள் கிளப்புங்க தல.., சீக்கிரத்தில் இருநூருல சந்திப்போம் ..!
பதிலளிநீக்குஉங்களோட நுாறாவது பதிவு என்னை மாதிரி கற்றுக்குட்டிகளுக்கு ஒரு அனுபவப்பாடம். நன்றி தொடர்ந்து கலக்குங்கள்.
பதிலளிநீக்குநூறு ஆயிரமாய் வளர்ந்து பெருக
பதிலளிநீக்குமனமார்ந்த வாழ்த்துக்கள்
Tha.ma 3
பதிலளிநீக்கு//Ramani said...
பதிலளிநீக்குநூறு ஆயிரமாய் வளர்ந்து பெருக
மனமார்ந்த வாழ்த்துக்கள்//
வருகை தரும்போதெல்லாம் வாழ்த்தளிப்பதோடு வாக்கும் அளிக்கும் தங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி ரமணி சார்!
//Gobinath said...
பதிலளிநீக்குஉங்களோட நுாறாவது பதிவு என்னை மாதிரி கற்றுக்குட்டிகளுக்கு ஒரு அனுபவப்பாடம். நன்றி தொடர்ந்து கலக்குங்கள்.//
தொடர்ந்து கருத்திடும் உங்களுக்கு நன்றி கோபி நாத்.
omments:
பதிலளிநீக்கு///சீனு said...
உங்கள் நூறாவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். நூறாவது பதிவை சிறப்பாகவும் நன்றி நவிலுதல் போலவும் அமைத்திருப்பது அருமை, இன்னும் பல நூறு பதிவுகள் நீங்கள் இட வேண்டும் அவற்றையும் நான் கமேன்டிட வேண்டும் என்பதே என் ஆவல்.
வாழ்த்துக்கள் சார்//
எனது பல பதிவுகளையும் படித்ததோடு மட்டுமல்லாது கருத்தும் அளித்துவருகிறீர்கள். நன்றி சீனு.
//மோகன் குமார் said...
பதிலளிநீக்குநூறுக்கு வாழ்த்துகள். விரைவில் சந்திப்போம்//
நன்றி மோகன் குமார் சார்.
//தி.தமிழ் இளங்கோ said...
பதிலளிநீக்குவணக்கம்! உங்கள் நூறாவது பதிவில் நீங்கள் அடைந்த பரவசம் எப்போதும் இருக்க எனது வாழ்த்துக்கள்!//
நன்றி!
//வரலாற்று சுவடுகள் said...
பதிலளிநீக்குஅடிச்சு தூள் கிளப்புங்க தல.., சீக்கிரத்தில் இருநூருல சந்திப்போம்//
நன்றி பாஸ்! ..
"மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார் ! "
பதிலளிநீக்கு//திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்கு"மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார் ! "//
வாழ்த்துக்கு நன்றி
மேலும் பல நூறு பதிவுகள் இட வாழ்த்துகிறேன்
பதிலளிநீக்குதிரு முரளிதரன் அவர்களே!
தொடர்ந்தும் எழுதுங்கள் முரளி.மனம் நிறைந்த வாழ்த்துகள் !
பதிலளிநீக்கு//வே.நடனசபாபதி said...
பதிலளிநீக்குமேலும் பல நூறு பதிவுகள் இட வாழ்த்துகிறேன்
திரு முரளிதரன் அவர்களே!//
வாழ்த்துக்கு நன்றி
//ஹேமா said...
பதிலளிநீக்குதொடர்ந்தும் எழுதுங்கள் முரளி.மனம் நிறைந்த வாழ்த்துகள் !//
வாழ்த்துக்கு நன்றி ஹேமா
நூறாவது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு//இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குநூறாவது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கு நன்றி.
//அப்பாதுரை said...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி! ஐயா!
நூறு ஆயிரமாய் வளர்ந்து பெருக
பதிலளிநீக்குமனமார்ந்த வாழ்த்துக்கள்
நூறு ஆயிரமாய் வளர்ந்து பெருகவும் நீங்கள் பல்லாண்டு வாழவும் வாழ்த்துகிறேன்!
பதிலளிநீக்குசா இராமாநுசம்
ragupathy ragu said...
பதிலளிநீக்குநூறு ஆயிரமாய் வளர்ந்து பெருக
மனமார்ந்த வாழ்த்துக்கள்//
நன்றி! ரகுபதி ரகு!முதல் முறையாக வருகை தந்திருக்கிறீர்கள்! நன்றி மீண்டும் வருக!
//புலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்குநூறு ஆயிரமாய் வளர்ந்து பெருகவும் நீங்கள் பல்லாண்டு வாழவும் வாழ்த்துகிறேன்!
சா இராமாநுசம்//
அய்யா அவர்களின் வாழ்த்துக்கு மிகவும் நன்றி.