என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 17 மே, 2012

IPL - ஒரு கிரிக்கெட் ரசிகரின் திருக்குறள்

   ஐ.பி.எல் தேவையா வேண்டாமா என்று ஒரு பக்கம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. வேண்டாம் என்பவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் சூதாட்டப் புகார்கள்.இவை  கிரிக்கெட் ரசிகர்களை வருத்தம் அடையைச் செய்கின்றன. இருந்தபோதும் இளைஞர்களின்  ஐ.பி.எல் ஆர்வம் இதனால் குறைந்து விடாது என்றே தோன்றுகிறது. உற்சாகம் கொப்பளிக்கும் ஐ.பி.எல் ஒரு திருவிழாவாகவே அமைந்துள்ளது. 
   பிரபல பதிவர் மோகன்குமார் சொல்வது போல ஐ.பி.எல் முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து (சண்டைக் காட்சிகள் கூட களத்தில் உண்டு)  காணப்படுகிறது. முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூட ஐ.பி.எல் காலங்களில் திரைப்படங்கள் வெளியிடத் தயங்குகிறார்கள். திரை அரங்குகள் காலியாக காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
   இதெல்லாம்  எதற்கு சொல்கிறேன் என்றால் ஐ.பி.எல் நடந்து கொண்டிருக்கும்போதே  அதைப் பற்றி எழுதிய பத்து திருக்குறளை பதிவிடப் போகிறேன் என்று எச்சரிப்பதற்காகத்தான் (திருவள்ளுவர் எழுதியதுதான் திருக்குறள். நீ எழுதினா தெருக்குரல் என்றுயாரோ சொல்வது போல் இருக்கிறது.)

1.          தேவையா  ஐ.பி.எல் என்பார் சிலபேர்கள் 
             சொல்வதை  மறந்து  விடு.

2.          இளமைக்கே ஐ.பி.எல் என்றிருக்க வேண்டாம்
            தலை'மை' அடித்தாவது செல் 

3.          ஆண்டியும்  வந்திடுவார்  காண்பதற்கு ஐ.பி.எல்
             தூண்டும் கிரிக்கெட் வெறி

4.          ஒன்றும் இரண்டும் ஓடாதே  எப்போதும் 
            சிக்சரும் ஃபோரும் அடி.

5.           தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது 
             கடுப்பாகி வீசுவார் கல்

6.           கேட்ச்கள் விடுதல் அழகல்ல அதனாலே
             மேட்ச்வெற்றி கைவிட்டுப் போம்.

7.           ஒருரன் ஒரு பந்து விக்கெட்டால் ஆட்டம்
             விறுவிறுப்பு கூடுமே பார்.

8.           ஏளனமாய் நினைக்காதே எதிரணியை அவ்வணியின்
             ஏப்பையும் எட்டுவார் இலக்கு.

9.           ஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு அப்போது 
             அழகியர்  ஆட்டம் ரசி.

10.          சூதாடும் ஜாக்கியிடம் சிக்காதே உன்வாழ்வு 
             சூனியமாய் ஆகிவிடும் சிந்தி.


( இதுக்கெல்லாம் இலக்கணம் பாக்கப்படாது.)

*********************************************************************************************************
பிடிச்சிருந்தா  தட்டலாம் 
பிடிக்கலன்னா திட்டலாம்  
கோவம்னா    குட்டலாம்
இதைப் படிச்சாச்சா?

15 கருத்துகள்:

  1. ஐ.பி.எல்.குறள் அருமை
    வித்தியாசமான சிந்தனை
    ரசித்துப் படித்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்க

    பதிலளிநீக்கு
  2. Ramani said...
    ஐ.பி.எல்.குறள் அருமை
    வித்தியாசமான சிந்தனை
    ரசித்துப் படித்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்க
    வருகைக்கும் வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி சார்!

    பதிலளிநீக்கு
  3. ஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு அப்போது
    அழகியர் ஆட்டம் ரசி.

    மாத்தி எழுதுங்க பாஸ். நாமெல்லாம் பாக்கிறதே இரண்டாவதைத்தானே.......:D

    அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  4. Interesting. Nice (I am travelling. not able to comment in a detailed manner)

    பதிலளிநீக்கு
  5. ///தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது கடுப்பாகி வீசுவார் கல்///


    அவ்வ்வ்வ்வ்,

    பதிலளிநீக்கு
  6. உங்க தூக்கத்தில திருவள்ளுவர் வந்து உங்களுக்குப் பயம் காட்டப்போறார் பாருங்க முரளி !

    பதிலளிநீக்கு
  7. //ஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு அப்போது
    அழகியர் ஆட்டம் ரசி.
    மாத்தி எழுதுங்க பாஸ். நாமெல்லாம் பாக்கிறதே இரண்டாவதைத்தானே.......:D
    அருமையான வரிகள்//
    நன்றி கோபி!

    பதிலளிநீக்கு
  8. //மோகன் குமார் said...
    Interesting. Nice (I am travelling. not able to comment in a detailed manner)//
    பயணம் செய்துகொண்டிருக்கும்போதே கருத்தளித்ததற்கு நன்றி! மோகன் சார்!

    பதிலளிநீக்கு
  9. //வரலாற்று சுவடுகள் said...
    ///தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது கடுப்பாகி வீசுவார் கல்///
    அவ்வ்வ்வ்வ்,//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //திண்டுக்கல் தனபாலன் said...
    ஹா ஹா ! நல்லா இருக்கு//
    அடிக்கடி வந்து உற்சாகப் படுத்துவதுற்கு நன்றி சார்,

    பதிலளிநீக்கு
  11. //ஹேமா said...
    உங்க தூக்கத்தில திருவள்ளுவர் வந்து உங்களுக்குப் பயம் காட்டப்போறார் பாருங்க முரளி !//

    திருவள்ளுவர் கனவுல பயமுறுத்தான் வந்தாரு. அப்ப நான் சொன்னேன். நீங்க ரொம்ப நல்லவருன்னு.

    பதிலளிநீக்கு
  12. எனக்குக் கிடைத்த விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் அதை ஏற்றுக் கொள்ள தாழ்மையுடன் அழைக்கின்றேன்


    மீண்டு(ம்) வந்தேன்

    பதிலளிநீக்கு
  13. உங்கள் அன்புக்கும் விருதுக்கும் நன்றி. சீனு.மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895