என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 21 மே, 2012

+2 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள

           (முடிவுகளுக்கான இணைப்புகள்  கீழே உள்ளது.)
  பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் சில  மணிநேரமே உள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் எதிர்காலமே அன்றுதான்  தெரியப்போகிறது என்ற (தவறான) எண்ணத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். மாணவர்களைவிட அதிக டென்ஷனுடன் இருப்பார்கள். அநேகமாக இன்று இரவு அவர்களுக்கு உறக்கம் வராது. உறவினர், நண்பர்களின் மகன்/மகன்களோடு ஒப்பீடு செய்யத் துடித்துக் கொண்டிருப்பார்கள். முன்பெல்லாம் +2 தேர்வு முடிவுகள் செய்தித்தாளில் வெளிவரும். அதில் மதிப்பெண்கள் அறிய முடியாது. ஒரு வார காலத்திற்குப் பிறகே பள்ளிக்கு மதிப்பெண் சான்றிதழ் வரும், அப்போதுதான் மதிப்பெண்களையே அறிந்து கொள்ள முடியும். இப்போது அப்படியல்ல. அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, முடிவுடன் சேர்த்து மதிப்பெண்களும் தெரிந்துவிடுகிறது. தேர்ச்சி பெற்றாலே பெரிய விஷயம் என்ற நிலை மாறி அதிக மதிப்பெண்களே குறிக்கோளாக அமைந்துள்ளது. எண்பது சதவீதம் வாங்கினால் கூட ஏன் அவ்வளோ குறைஞ்சிபோச்சு என்று பரிதாபத்துடன் பார்ப்பவர்களும் உண்டு. 
  ஆனால் இன்றும் தேர்வில் தோல்வி அடைபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
      அதெல்லாம் இருக்கட்டும். கீழ்க்கண்ட இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.முன்பெல்லாம் மற்றவர்களின் மதிப்பெண்களை அவர்கள் சொன்னால்தான் தெரிந்து கொள்ளமுடியும்.அது உண்மையா பொய்யா என்று அறிந்து கொள்ள இயலாது. ஆனால் இப்போது மற்றவர்களுடைய மதிப்பெண்களையும் அறிந்துகொள்ள முடியும். 
   உங்கள் மகன்/மகள், உறவினர்களின் மகன்/மகள் உங்கள் போட்டியாளார்களின்  மதிப்பெண்களையும் அறிந்து கொள்ளுங்கள். ஆனால் யாருடனும் யாரையும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.
இது  தேர்வு முடிவுதானே தவிர வாழ்க்கை முடிவு அல்ல என்பதை உணர்வோம்! உணர்த்துவோம்!.
மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!.
இந்த இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து நுழையுங்கள்.
http://tnresults.nic.in/
http://dge1.tn.nic.in/
http://dge2.tn.nic.in/
http://dge3.tn.nic.in/
http://tnpubliclibraries.gov.in/
https://results.reportbee.com/
http://results.dinamalar.com/
http://dinakaran.com/
http://jayanews.in/
http://tnresults.puthiyathalaimurai.tv
http://tnresults.puthiyathalaimurai.tv/


************************************************************************************************************
 மார்ச் 2012 ல சிலர் இப்படி இருந்தாங்க!இதையும் படிச்சி பாருங்க!
தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி!

2 கருத்துகள்:

  1. தேவையான லிங்க் கொடுத்து உள்ளீர்கள். ப்பலருக்கு இது மிகச் சிறப்பான உதவியாக இருக்கும். தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த களத்தில் தான் என் தேவு முடிவு வந்தததால். தேர்வு முடிவுகள் செய்தி தாள்களில் தான் வரும் என்பதை படிக்காதவன் படம் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895