என்னை கவனிப்பவர்கள்

காமெடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமெடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 மே, 2012

வேலை தேடும் வடிவேலு - பகுதி 1

           (முழுக்க முழுக்க கற்பனையே ) 
  
   வடிவேலு வீட்டு வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். எவ்வளவு நாள்தான் சும்மா இருப்பது. ஏதாவது வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்து ஆட்கள் தேவை விளம்பரங்களை  ஆராய்ந்து கொண்டிருந்தார்.
  
  “அண்ணே! என்ன பண்ணிகிட்டிருக்கிங்க! வேலை தேடிக்கிட்டு இருக்கீங்களா?” என்று திடீரென்று குரல் கேட்க வடிவேலுவின் நண்பர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

     “அடடா! இவனுங்க எப்ப வந்தானுங்க” என்றுநினைத்துக் கொண்டே
“நான் வேல தேடறது உங்களுக்கு எப்படிடா தெரியும்?நான் உங்கக்கிட்ட சொல்லவே இல்லையே! உங்க சங்காத்தமே வேண்டாம்னு தானே ஒதுங்கி இருக்கேன்.”

     “ஏண்ணே! இப்படி நினைக்குறீங்க! நீங்க என்ன செய்வீங்கன்னு எங்களுக்கு தெரியாதா? உங்க கஷ்டம் எங்க கஷ்டம் இல்லையா? உங்களுக்கு உதவி செய்யறதுக்குத் தானே நாங்க இருக்கோம்.”

     “நீங்களாடா உதவி செய்வீங்க! பின்னாடி வெடி வச்சு வேடிக்கை பாக்கறவங்களாச்சே!”

   “போங்கண்ணே! கணக்கு வழக்கு தெரிஞ்ச ஆளு ஒருத்தர் வேலைக்கு வேணும்னு கேட்டிருந்தாங்க. அப்ப உங்க ஞாபகம்தான் எங்களுக்கு வந்துச்சி.உடனே உங்க கிட்ட சொல்லனும்னு ஓடோடி வந்தா...நீங்க என்னடான்னா எங்களை இன்சல்ட் பண்ணறீங்க,
சரி வாங்கடா போலாம். அண்ணன் நம்பள நம்ப மாட்டேங்கிறார்.”

  “அடேய் கோவிச்சுக்காதீங்கடா. எனக்கும் உங்களை விட்டா யாரு இருக்கா. அடி உதை வாங்கினதுக்கு அப்புறமாவது வீட்டுக்கு தூக்கிகொண்டு வந்து சேத்துடறீங்க இல்ல.  சரி! சரி சொல்லுங்க வேலைய பத்தி ஏதோ சொல்லவந்தீங்களே.. நான் இப்ப வேளைக்கு போயே ஆகணும்டா. மரியாத நாளுக்கு நாள் தேஞ்சிக்கிட்டே வருது.!

  “அண்ணே, அந்தக் கம்பனி பணம் அதிகமா நடமாடற இடமாம். நல்லா வேல செய்யற நம்பிக்கையானவாங்களா இருக்கணுமாம்....”

  “பேங்க்கா இருக்குமோ. அதுக்கு நிறைய படிச்சி இருக்கனுமேடா. நான் பண விஷயத்தில கில்லாடிதான். ஆனா என்கிட்டே மூணாவது படிச்ச சர்டிபிகேட்  கூட இல்லையேடா!
 “அதெல்லாம் எங்களுக்கு  தெரியாதன்னே. சூப்பரா டிரெஸ் பண்ணிக்கிட்டு வாங்கண்ணே போகலாம். அங்கே உங்களுக்கு இன்டெர் வியு வைப்பாங்க அதுல கரக்டா பதில் சொல்லிட்டா உங்கள வேலைக்கு எடுத்துக்குவாங்க ”

  வடிவேலுவை நண்பர்கள் இன்டெர்வியுக்கு அழைத்துச் சென்றனர். அவரைப்போலவே இன்டெர்வியுக்கு நிறையப் பேர் வந்திருந்தனர்.
நண்பர்கள் வெளியே இருக்க தனக்கு வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்துடன் உள்ளே போனார் வடிவேலு.

இன்டெர்வியூசெய்பவர்,"உன்ன பாத்தா வடிவேலு மாதிரி இருக்கே, இந்த வேலைக்கு  வேலைக்கு உன் பேஸ் ஒ.கே. ஆனா டிரஸ் நல்லாவே இல்லையே.”

   அவரைப்பார்த்த வடிவேலு, "சார்! நான்  உங்கள  எங்கயோ பாத்திருக்கேனே!”
“டி.வி. இல பாத்திருக்கலாம். நான் இந்தக் கம்பனியோட எம்.டி. உனக்கு பான் கார்டு இருக்கா?பேங்க் அக்கவுன்ட் இருக்கா.”

   பான் கார்டுன்னா என்னான்னு தெரியா விட்டாலும் இருக்கு என்று தலை ஆட்ட, 
  "இந்தக் கம்பனி சாதாரண கம்பனை இல்ல. சரவணா ஸ்டோர், தங்கமாளிகை,போதிஸ்,ஜெயச்சந்திரன், இவங்கெல்லாம் நான் இல்லேன்னா வியாபாரம் செய்ய  முடியாது.  இவங்களுக்கு தேவையான முக்கியமானதை நான்தான் சப்ளை பண்றேன். சென்னையில எங்களுக்கு நிறைய கிளை இருக்கு. புதுசா பிராஞ்ச் ஓபன் பண்ணப்போறோம். இங்க வேல கிடைக்கனும்னா கணக்கு அறிவு ரொம்ப முக்கியம். கணக்கு உனக்கு வருமா?”

    “அய்யா கணக்கில நான் புலி.”

    “அப்ப சரி.  நான் ஒரு கேள்வி கேக்கறேன். அதுக்கு சரியான பதில் சொல்லிட்டா உனக்கு வேல குடுக்கறோம். வேலையில சேந்துட்டா டெய்லி பேட்டா,லீவு, யூனிபார்ம் இப்படி நிறைய சலுகை கிடைக்கும். ஆனா இந்தவேலையில பொறுமை ரொம்ப ரொம்ப  முக்கியம். கஸ்டமர் தான் நம்ம கடவுள்.”

   “உங்க கிட்ட வேல செய்ய நான் குடுத்து வச்சிருக்கணும். நீங்க கேளுங்க அய்யா. எப்படியாவது கஷ்டப்பட்டு பதில் சொல்லிடறேன்.

   “சரி கேட்டுக்கோ. உன்கிட்ட நூறு ரூபாய் இருக்கு. நூறு ரூபாய பிரிச்சி ஏழு பொட்டலத்தில கட்டி வைக்கணும். அப்படி கட்டி முடிச்சதும் ஒரு ரூபாயிலிருந்து நூறு ரூபா வரை எவ்வளவு  கேட்டாலும் பொட்டலமாகத்தான் எடுத்து குடுக்கனும். அப்படி குடுக்கனும்னா ஒவ்வரு பொட்டலத்திலும் எவ்வளவு காசு வைக்கணும்?. ஒரு பொட்டலத்துக்கு மேலயும் குடுக்கலாம். ஏழு பொட்டலமும் சேத்தும் குடுக்கலாம்.. எந்தக் காரணத்தை கொண்டும் பொட்டலம் கட்டிமுடிச்சதும் அதை பிரிக்ககூடாது.”

  உதாரணத்துக்கு 51 ரூபா குடுக்கனும்னா 30 ,20,1  இன்னு மூணு பொட்டலமா குடுக்கலாம். ஏழு பொட்டலங்களிலும் சேத்து மொத்த காசு நூறு ரூபாங்கறதை நினைவுல வச்சிக்கணும்’

   “சார்! தலைய சுத்துது இதுக்கு பதில் இப்பவ சொல்லனுமா?”

   ஒரு வாரம் கழிச்சி கூட சொல்லலாம். ஆனா வேல தேடி வர்றவங்க யாராவது மொதல்ல சொல்லிட்டா வேலய அவங்களுக்கு குடுத்திடுவோம். இப்ப நீங்க போகலாம்.

 “ஓ.கே. சார், ட்ரை பண்ணி பாக்கறேன்.”

வடிவேலு சிந்தனையுடன் வெளியே வருகிறார்.
வடிவேலு விடை கண்டு பிடித்தாரா? அவருக்கு  வேலை கிடைத்ததா?
முடிஞ்சா நீங்க அவருக்கு ஹெல்ப் பண்ணுங்க. 
                                                             (தொடரும்) 
வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை 
வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3 

************************************************************************************************

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

வடிவேலு சொன்ன கருத்து


   வடிவேலுவைத் தேடி அவரது நண்பர்கள் வருகிறார்கள்.அவர்களைக் கண்டதும் வடிவேலு முகத்தை திருப்பிக் கொள்கிறார்.
       
 “டேய்! அண்ணன் இன்னும் கோவத்தில இருக்கார். அன்னிக்கு நாம அடிச்சத மறக்கல போல இருக்கு.(Flash Back:வடிவேலுக்கு உதவியது யார்?) அண்ணன்கிட்ட மன்னிப்பு கேட்டுடலாம் வாங்க!”
             “அண்ணே எங்கள மன்னிச்சுடுங்கண்ணே. ஏதோ கோவத்தில உங்கள அடிச்சிப்பிட்டோம். அத இன்னும் மனசுல வச்சுக்கிட்டு எங்கிட்ட பேசாம இருக்காதீங்கன்னே! எங்களுக்கு உங்களை விட்டா யாருன்னே இருக்காங்க!”
          “சென்டிமெண்டா டச் பண்ணறாங்களே  சரி! சரி! மன்னிச்சிட்டேன். போய்ட்டு வாங்க!”
   “என்னண்ணே எங்கள நம்ப மாட்டேங்கிறீங்க! நாங்க திருந்திட்டோம். இப்ப கூட நல்லது செய்யனும்னு கிளம்பி போய்ட்டிருக்கோம்.”   
     “அப்படி என்னடா பண்ணப்போறீங்க! நல்துன்னா உங்களுக்கு என்னன்னே தெரியாதே?
      “போங்கண்ணே கிண்டல் பண்ணாதீங்க! நம்ம ஊர்ல இருக்கற குடிகாரப் பசங்களுக்கு புத்தி சொல்லி திருத்தலாம்னு பாக்கறோம்.”
       “நீங்களே குடிகாரப் பசங்களாச்சே! நீங்க சொல்லி எவனாவது திருந்துவாங்களாடா”
      “அதுக்குத்தான் உங்களையும் கூட்டிக்கிட்டு போகலாம்னு வந்திருக்கோம்.”
      “நான் எதுக்குடா?”
       “எங்கள விட நீங்கதான் நல்லா எடுத்து சொல்லி புரிய வைப்பீங்க! எவ்வளோ பேர்கிட்ட அடிவாங்கின அனுபவம் இருக்கு!
        “நீங்க சொல்றது சரிதாண்டா! சினிமாவில்தான் அடிவாங்கியே காலத்தை கழிச்சிட்டேன். நேர்லயாவது நல்ல கருத்த சொல்லி பாப்போம்.
         “வாங்கண்ணே ஏரியா பக்கம் போவோம்.”
       “அண்ணே! அதோ பாருங்கண்ணே! ஒரு குடிகாரன் கையில சாராய பாட்டிலோட வர்றான். அவன அப்படியே மடக்குங்க!
       “அடேய்! என்னடா  பண்ணற”
       “ தெரியல? குடிச்சிக்கிட்டுருக்கேன்?”
    “ஏன்டா? நீ குடிச்சி குடிச்சி அழிஞ்சி போறயே! நியாயமா? உன் பொண்டாட்டி புள்ளைய நினச்சி பாத்தியா?”

 “அவங்களை நினச்சித்தான் நான் குடிக்கிறேன்?”

      “இப்படி சொன்ன எல்லாம் நீ கேக்க மாட்ட. அந்த சாராய பாட்டில எங்கிட்டு குடு”
       “நான் குடுக்க மாட்டேன். நீ குடிச்சிடுவ.?
       “அண்ணன் குடிக்க மாட்டார் குடுடா!,
          இந்தாங்கன்னே!’

நண்பர்கள் பாட்டிலை வாங்கி வடிவேலுவிடம் கொடுத்தனர்.
        
   வடிவேலு அந்த பாட்டிலை வாங்கி, “அண்ணன் இப்ப என்ன செய்யறன் பாரு. இதுக்குள்ள சாராயம் இருக்கா? அடேய்  குடிகாரா அதோ ஓடுது பாரு பூச்சி அந்த பூச்சிய எடுத்து இந்த பாட்டிலுக்குள்ள போடு.  போட்டுட்டயா? இப்ப என்ன  நடக்குதுன்னு பாரு.”
          
 “அடடே! பூச்சி கொஞ்ச நேரத்தில துடி துடிச்சி செத்துப் போச்சே? அண்ணே! நீங்க கடவுள்னே! உங்க கால்ல உழுந்து சொல்றேன். இப்படி எனக்கு இதுவரை  யாரும் எடுத்து சொன்னதில்லே! எவ்வளோ பெரிய விஷயத்தை இவ்வளோ எளிமையா சொல்லீட்டேங்க! உங்கள மறக்கவே மாட்டேன். நான் வரேன் .....”

 “ நில்லுடா... இவ்வளோ சீக்கிரம் நல்லவனா மாறிட்டான்.  பாருங்கடா பய என் பேச்சை கேட்டு திருந்திட்டான்?”

“ ஆமாண்ணே! நீங்க செஞ்சு காமிச்சதுக்கு என்ன அர்த்தம்? எங்களுக்கு ஒன்னுமே புரியலயே?”

“மடப் பசங்களா சாராயத்தில விழுந்த  பூச்சி துடி துடிச்சி செத்து போச்சு இல்ல? அந்த மாதிரி குடிச்சா  நீயும் செத்துப்போய்டுவன்னு அர்த்தம்? இப்பயாவது தெரிஞ்சுக்கோங்க! அய்யாவோட அறிவை?

“பிரமாதம்ணே! உங்களை மாதிரி அறிவாளி உலகத்தில யாரும் இல்ல.”

“ரெண்டு நாள்  கழிச்சி வாங்க! நாம அந்த பய எப்படி இருக்கான்னு பாத்துட்டு வரலாம்.”

 இரண்டு நாட்கள் கழித்து வடிவேலுவும் அவர் நண்பர்களும் அந்தக் குடிகாரனின் வீட்டுக்குச் செல்கிறார்கள்.

“அண்ணே! முதன் முதலா ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க! உங்களுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைக்கப் போகுது. எங்களை மறந்துடாதீங்கண்ணே.”

“சரி சரி வீட்ல யாரு இருக்கா பாரு?

“அவனோட பொண்டாட்டி தொடப்ப கட்டயோட  வருது?

“என்னம்மா? உன் புருஷன் எப்படி இருக்கான்?
“ரெண்டு நாளைக்கு முன்னாடி கொஞ்சமா குடிச்சிட்டு வந்தாரு. இப்ப நிறைய குடிக்கிறாறு? ஆமாம், நீங்க யாரு?

“உன் புருஷன் சொல்லலையா? ரெண்டு நாளைக்கு முன்னாடி சாராயத்துல ஒரு பூச்சிய போட்டு என்ன ஆச்சுங்கறத  காமிச்சி புத்தி சொன்னவன் நான்தான். சொல்லுங்கடா  தங்கச்சிகிட்ட.?

“ஓ! அந்த ஆள் நீதானா? வாய்யா! உனக்காகத்தான் காத்துக்கிட்டுருக்கேன். ஏன்யா இப்போ அதிகமா  குடிக்கிறேன்னு என் புருஷன கேட்டா, என்  வயித்தில நிறைய பூச்சி இருக்கு அது சாகறதுக்காகத்தான் நான் குடிக்கிறேன்.  சாராயம் குடிச்சா  வயித்தில இருக்கும் பூச்சியெல்லாம் செத்து போகும்னு நீதான்  சொன்னயாமே? அதுவும் இல்லாமே ஒரு பூச்சியப் பிடிச்சு போட்டு  வேற காமிச்சயாமே? கொஞ்சமா குடிச்சிக்கிட்டு இருந்தவனை அதிகமா குடிக்க வச்சுட்டயே யா! உன்ன சும்மா விடறனா பாரு. இந்த தொடப்பகட்டைக்கு வேல குடுத்து ரொம்ப நாளாச்சு....  ”

“ வேணாம்மா...... நான் சொன்னது வேற அவன் புரிஞ்சிக்கிட்டது வேற? டேய் சொல்லுங்கடா? ............... ஓடிட்டீங்களா?  என்ன அடி வாங்க வச்சுட்டு வழக்கம்போல ஓடிட்டானுங்க? நம்ம வெகுளித்தனத்தால இந்த முறையும் ஏமாந்துட்டமே!
*************************************************************
இதையும் படிச்சுப் பாருங்க!
பூக்களைத் தேடி! 
புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்! 
புதிர்!உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க!