என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 12 செப்டம்பர், 2013

சிறிய வாழ்க்கை! பெரிய சாதனை!

   முறுக்கு மீசைக் கவிஞனின் கம்பீர முகத்தைப் பார்த்தாலே நமக்கும் வீரம் பொங்கும். அநீதியைக் கண்டு மோதி மிதித்துவிடத் தோன்றும்.அவனது நறுக்கு வார்த்தைப் பாடல்கள் ஆங்கிலேயரை அச்சப்பட வைத்தன. காலத்தை வென்ற பாடல்களைப் படைத்த பாரதியின் நினைவு நாள் இன்று. உண்மையில் 12.09.1921 காலை 1.00 மணிக்கு இறந்தார் என்று ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஆனால். பாரதியின் மறைவு 11.09.1921 என்றே பல நூல்களில் கூறப்பட்டுள்ளது.
தனது  பாடல் மூலம் தேசபக்தியை தட்டி எழுப்பிய பாரதி குறுகிய காலமே உயிர் வாழ்ந்தபோதிலும் மகாகவியாக இன்றும் நம் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
   இந்தியாவின் முதல் திரைப்படம் வருவதற்கு முன்பே மறைந்து போன பாரதியின் பாடல்கள் இன்றும் திரைப்படங்களில் இடம் பெறுகின்றன. இந்தக்  காலத்துக்கும் பொருந்தும் வண்ணம் அவரது பாடல்கள் அமைந்துள்ளது சிறப்பு.
   எழுதப்பட்ட பாடல்களுக்கு திரைப்படங்களில் இசை அமைப்பாளர்களால் அதிகமாக மெட்டமைக்கப்பட்டது பாரதியின் பாடல்களாகத் தான் இருக்கும்.. எம்.எஸ்.வி. க்கு முந்தைய காலத்து இசை அமைப்பாளர்கள் முதல் இன்றைய ரகுமான் வரை பாரதி பாடல் எழுதாத இசை அமைப்பாளரைக் காண்பது அரிது.

இதோ  அவரது சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு 

1882- டிசம்பர் 11 பாரதி பிறந்தார். தாயார் லட்சுமி அம்மாள். தந்தை 
     சின்னசாமிஅவர்கள் பாரதிக்கு இட்ட பெயர் சுப்பையா
1887- பாரதியின் தாயார் மரணம்- பாரதிக்கு வயது ஐந்து 
1889- தந்தையார் மறுமணம் 
1893-  எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் பாலகன்  சுப்பையாவை 
      சோதித்து  வியந்து பாரதி என்ற பட்டம் அளிக்கின்றனர்.

1894-1897 திருநெல்வேலி ஹிந்து கல்லூரியில் ஐந்தாம் படிவம் படிப்பு 
         பண்டிதர்களுடன் சொர்போர்கள் 
1897-ஜூன்  பாரதி செல்லமாள் திருமணம் 

1898- தந்தை மரணம்-பெருந்துயர் சஞ்சலம் 

1898-1902 காசியில் அத்தை குப்பம்மாளுடன் வாசம்.பலமொழி கற்றல் 
          மீசை வைத்தல் வால் வைத்த தலைப்பாகை அணிதல் 
          இங்குதான் ஆரம்பம் 

1903-1904  எட்டயபுரம் மன்னருக்கு தோழர்-விருப்பமில்லா வேலை     
          மதுரை விவேக பானு பத்திரிகையில் தனிமை இரக்கம்என்ற  
          முதல் பாடல் அச்சேறுதல்

1904 - மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் 
      வேலை,சுதேச மித்திரன் உதவி ஆசிரியர் வேலை 

1905- வங்கப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து 
     கொள்ளுதல், விவேகானந்தரின் சீடர் சிஸ்டர் நிவேதிதாவை   
     சந்தித்து ஞான குருவாக ஏற்றுக் கொள்ளுதல்  

1907  டிசம்பர்  சூரத் காங்கிரஸ் -திலகர் தீவிரவாத கோஷ்டிக்கு 
     ஆதரவு..வ.உ.சி., ஸ்ரீநிவாசாச்சாரி உள்ளிட்ட இளைஞர் குழுவுடன் 
     சூரத் பயணம் -திலகர் அரவிந்தர் லலாலஜபதிராயுடன் சந்திப்பு 

1907-  எதிர் கருத்து கொண்டவராக இருந்தபோதிலும் பாரதியின்  
      தேசியப் பாடல்களில் மெய் மறந்து  சிலவற்றை  பிரசுரித்து  
      இலவசமாய்  விநியோகிக்கிறார் வி. கிருஷ்ணசாமி ஐயர்.

1908 - சென்னையில் பாரதியும்,தூத்துக்கொடியில் வ.உ.சி ,சுப்ரமணிய 
      சிவாவும் சுயராஜ்ய தினம் கொண்டாடுகின்றனர், மூவரும் கைது

1908- 1910-  முதல் கவிதை நூல் வெளியீடு-பாரதிக்கு கைது வாரண்டு-
      புதுச்சேரிக்கு தப்பித்து செல்லுதல-அங்கிருந்து கொண்டே 
      இந்தியா  பத்திரிகைமூலம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு  
      கடுமையான எதிர்ப்பு   பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் நுழைய 
      பாரதிக்கு தடை 

1911-  மணியாச்சி ஆஷ் துரைகொலை-போலீஸ் கெடுபிடிகள் 
       புதுவையில் இருந்து தேச பக்தர்களை வெளிஈற்ற முயற்சி 

1912-  கண்ணன் பாட்டு,குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலியன 
      படைப்பு
1913-18 பல்வேறு படைப்புகளில் தீவிரம்

1918- புதுவையில் இருந்து வெளியேறியபோது கடலூரில் கைது 34 
     நாட்கள் ரிமாண்ட்..பின்னர் வழக்கில்லை என விடுதலை -
      மனைவியின் ஊரான கடையநல்லூருக்கு செல்லுதல்
1919- சென்னை விஜயம் ராஜாஜி வீட்டில் காந்தியுடன்  சந்திப்பு

1920- மீண்டும் சுதேச மித்திரனில் ஆசிரியர் வேலை-சுதந்திர உணர்வை 
     தட்டி எழுப்பும் கட்டுரைகள் எழுதுதல்

1921-  ஜூலையில்திருவல்லிக்கேணி கோயில் யானை பாரதியை கீழே 
      தள்ளியது.குவளைக்கண்ணன் கா ப்பாற்றி அழைத்து செல்கிறார்.
      அதிர்ச்சி காரணமாக நோய்வாய்ப்படுகிறார்
.
1921- செப்டம்பர் 11 நோய் கடுமையாகிறது-மருந்து உண்ண மறுப்பு
     செப்டம்பர் 12 அதிகாலை 1.30 மணிக்கு மகாகவி மரணம் (ஆனால் 
     மறைவு செப்டம்பர் 11 என்றே சொல்லப் படுகிறது)

அந்த தேசிய கவியின் இறுதி ஊர்வலத்தின்போது சொற்பமான பேரே கலந்து  கொண்டனர் என்று தெரிவிக்கிறது வரலாறு. 


அவர் குறுகிய காலம் வாழ்ந்தார் என்று சொல்வது மடமை .அவர்தான் பாடல்களால் காலமெல்லாம் வாழ்கிறாரே!
*****************************************************************************

கொசுறு:வைரமுத்து  தன் கவிராஜன் கதை என்ற பாரதியின் வாழக்கை பற்றி புதுக் கவிதையில் எழுதி இருக்கிறார். பாரதியின் இறுதி ஊர்வலம் பற்றி வைரமுத்து எழுதியது நெஞ்சை உருக்கக் கூடியது,
*********************************************************************************
கடந்த ஆண்டு இதே நாளில்  கவிதாஞ்சலி39 கருத்துகள்:

 1. பாரதியின் வாழ்க்கைச் சரித்திரத்தை
  தொகுத்துக் கொடுத்தவிதம் அருமை
  (பெரிது என்பதற்கு இணையாக
  சிறிது எனச் சொல்லி இருக்கிறீர்கள்
  என நினைக்கிறேன்.
  குறைவான ஆயுளாயினும்
  நிறைவான வாழ்க்கையெனச் சொன்னால்
  இன்னும் சிறப்பாக இருக்குமோ எனப்படுகிறது )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலையுலகின் பாரதி ரமணி சார் சொன்னது அனைத்து சரி

   நீக்கு
 2. சிறிய வாழ்க்கை! பெரிய சாதனை!

  குறைவான ஆயுளாயினும் நிறைவான வாழ்க்கை தான்!

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. பாரதியை பற்றி தெரியாத நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி..

  பதிலளிநீக்கு
 4. முறுக்கு மீசை பாரதியைப் பற்றி முத்தான பதிவு!

  அருமை! வாழ்த்துக்கள்!

  த ம.3

  பதிலளிநீக்கு
 5. தலைப்பும் சொன்ன விதமும் சிறப்புங்க.

  பதிலளிநீக்கு
 6. சிறந்த தொகுப்பு. பிள்ளைகளுக்காக காப்பி பண்ணிட்டேன். நன்றி

  பதிலளிநீக்கு
 7. பாரதியின் வாழ்க்கை சரிதத்தை சுருக்கமாய் விவரித்தது சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  முரளி(அண்ணா)

  பதிவு அருமை சிறப்பான தொகுப்பு. வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. பாரதியின் வாழ்க்கை சரித்திரத்தைச் சுருக்கமாக சொல்லிய விதம் மிக அருமை அய்யா. சில புது தகவல்கள் தெரிந்து கொண்ட மகிழ்வு பிறக்கிறது. பகிர்வுக்கு நன்றி அய்யா. மேலும் சில- பாரதியார் பாடல்களை முதன்முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் பரலி.சு.நெல்லையப்பர். பாரதியார் பாடல்களை முதன்முதலில் வெளியிட்டவர் கிருட்டினசாமி அய்யர்.. பாரதி பாடல்களை ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரிடமிருந்து வாங்கி நாட்டுடைமையக்கியவர் ஓமாந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்.. என்றெல்லாம் கூறப்படிகிறது, படிப்பவர்கள் ஆய்க. நன்றி.

  பதிலளிநீக்கு
 10. இன்றைய நிலைக்கு மிக அவசிய பதிவு ...

  பதிலளிநீக்கு
 11. பாரதியின் சுதந்திர தாகம் நிறைவேறி விட்டது ஆனால் அவர் விரும்பிய சமுதாயம் மட்டும் இன்னும் உருவாகவில்லை :(
  மகா கவிக்கு எனது அஞ்சலிகள்
  பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 12. பாரதி பற்றி நல்ல தொகுப்பு...

  மகாகவியை போற்றுவோம்...

  பதிலளிநீக்கு
 13. மகா கவி பாரதியின் இறுதி ஊர்வலத்தின் போது, அவரது உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையைவிட, உடன் சென்ற மனிதர்களின் எண்ணிக்கைக் குறைவு ஐயா. சுதந்திர தாகத்தை,உணர்ச்சியைத் தட்டி எழுப்பி, நாடி நரம்புகளை எல்லாம் முறுக்கேற்றியவனுக்கு இதுதான் நமது சமுகம் காட்டிய மரியாதை.
  பாரதியினை போற்றுவோம் ஐயா

  பதிலளிநீக்கு
 14. எனது பெரியம்மா மகன் சின்ன வயதில் மறைந்த போது என் பாட்டி சொன்னார்: 'கடவுளுக்குக் கூட பிஞ்சு தான் பிடிக்கிறது. பழுத்த கிழங்களை எடுப்பதில்லை' என்று. எனக்கு பாரதியாரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் என் பாட்டியின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.

  மாபெரும் கவிஞனுக்கு சிறப்பாக அஞ்சலி செலுத்தியிருக்கிறீர்கள், முரளி!
  பாராட்டுக்கள்!

  தந்தையார் 'மறுமணம்' என்று இருக்க வேண்டும். கொஞ்சம் திருத்தி விடுங்கள், ப்ளீஸ்!

  பதிலளிநீக்கு
 15. நன்று...

  உங்களை போன்றொர் சித்தர்களாக அல்லவா பூமியில் உள்ளார்கள்...

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895