என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

ஆட்டோ கட்டண விவரம் டவுன் லோட் செய்ய சமீபத்தில் ஆட்டோ கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.சென்னையில் 01.05.2013 நிலவரப் படி67021 ஆட்டோக்கள் ஓடுகின்றன. நான் அடிக்கடி ஆட்டோவில் பயணம் செய்பவன் அல்ல.(எப்போதாவது  அவசர தேவைக்காக செல்வதுண்டு. இதுவரை எந்த ஆட்டோகாரரும் மீட்டர் போட்டு நான் பார்த்ததில்லை. பயனிப்பவர்களும் பெரும்பாலும் மீட்டர் போடும்படி வற்புறுத்துவது இல்லை. ஒரு வேலை போட்டாலும் டிரைவர் கேட்கும் தொகையை விட அதிகமாக காட்டும்படிதான் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கும் என்ற (அவ)நம்பிக்கையே அதற்கு காரணமாக இருக்கக் கூடும். பெரும்பாலான ஆட்டோக்காரர்ளைப்  பற்றிய நல்ல அபிப்ராயம் மக்கள் மனதில் இல்லை.எல்லோரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல.நல்ல நேர்மையான ஆட்டோ ஒட்டுனர்களையும் அவ்வப்போது காண முடிகிறது. அவர்களைப் பற்றிய செய்திகளும் நாளிதழ்களில் இடம் பெறுகிறது.ஆனால் இம்முறை கெடுபிடி சற்று அதிகமாக  இருக்கும் என்று நினைக்கிறேன்.  மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்  ஆட்டோவில் செல்ல கட்டணம் அதிகம் என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு.  ஆனால் ஆட்டோக்காரர்களோ இந்தக் கட்டண உயர்வு போதுமானதன்று என்றே தெரிவிக்கிறார்கள். மீட்டர் போட்டு ஓட்டும் வழக்கம் இன்னும் அதிக அளவில் நடை முறை இல்லை. இனியும் அதுதான்  தொடரும் என்றே பொதுமக்கள் நினைக்கிறார்கள். அப்படிப் போட்டாலும் மீட்டருக்கு மேல் இவ்வளவு கொடுக்கவேண்டும் என்றே வற்புறுத்துவார்கள்.
    அவர்கள் பக்கத்திலும் சில நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சென்னை போன்ற போக்கு வரத்து நெரிசல் மிக்க நகரங்களில் ஆட்டோ தொடர்ந்து சீராக செல்ல முடிவதில்லை. அடிக்கொரு சிக்னல்கள். பெட்ரோல் அதிக அளவில் செலவாகிறது. மேலும் பெட்ரோல் விலையோ அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுவதால் கிடைக்கும் லாபம் எங்கள் வாழ்க்கை நடத்த போதுமானதில்லை என்று ஆட்டோ டிரைவர்கள் தரப்பில் சொல்லப் படுகிறது அதுவும் வாடகை ஆட்டோ ஓட்டுபவர்கள் பாடு இன்னும் கஷ்டம் என்றும் சொல்கிறார்கள். அதுபோகட்டும்

ஒவ்வொரு ஆட்டோவுக்கும் புகைப்படத்துடன் கூடிய திருத்தி அமைக்கப் பட்ட புதிய கட்டண அட்டைகளை போக்கு வரத்து அலுவலர் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். இவை ஒவ்வொரு ஆட்டோவின் உட்புறம் ஓட்டப் பட்டிருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பெரிய அளவில் விளம்பர பேனர்களும் அமைக்கப் போகிறார்களாம். 
   இந்த ஆட்டோக்களுக்கு  ஜி.பி.எஸ். தொழில் நுட்பத்துடன் கூடிய டிஜிடல் மீட்டர்களை இலவசமாக தமிழக அரசேவழங்க இருக்கிறது.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு நன்மைதான் என்றாலும். ஆட்டோக்காரர்கள் இதை வரவேற்பதாகத் தெரியவில்லை.
இதோ  கட்டண விவரம். சும்மா தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை மீட்டர் போட வற்புறுத்துங்கள். அதிகம் கொடுத்தாலும் எவ்வளவுதான் கொடுக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம் அல்லவா? ஆற்றில் போட்டாலும் அளந்தே போடுங்கள்.
 • குறைந்த பட்ச கட்டணம் ரூ. 25.00(முதல் (1.80 கி.மீ. வரை)
 • அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ 12.00
 • (குறைந்த  பட்ச கட்டனத்துக்குப் பின் ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் 1.20 வீதம் கட்டணம் கணக்கிடப்படும்)
 • காத்திருப்புக் கட்டணம்  ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ரூ 3.50
 • இரவு நேரக் கட்டணம் பகல் நேரக் கட்டணத்தில் 50% அதிகம் கொடுக்க வேண்டும் 
 • இரவு நேரம்: இரவு   10.00 முதல் காலை 5.00 மணி வரை
மாநில போக்குவரத்து  அதிகாரி வெளியிட்டுள்ள அட்டவணையை கீழே கொடுத்திருக்கிறேன். வேண்டுபவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்  இந்த இணைப்பிற்கு சென்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
புதிய "ஆட்டோ கட்டண அட்டவணை "
அட்டவணையின்  வலது கீழ்ப்புறத்தில் down arrow வை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்


************************************
நன்றி:மாநில போக்குவரத்துத் துறை 
 http://www.tn.gov.in/sta/autofare_300813.pdf
***********************************************************************************
படித்து  விட்டீர்களா?
ஆசிரியர் இப்படி சொல்கிறார்-நம்பலாமா? 

*********************************************************************************

நாளை: பதிவர் சந்திப்பு- தி.கொ.போ சீனுவின் நேர்மை 

 

23 கருத்துகள்:

 1. எங்க ஊருக்கு எப்போது வரும் என்று தெரியவில்லை... ஆட்டோ கட்டண அட்டவணை தகவலுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  முரளி(அண்ணா)

  வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆட்டோ கட்டண அட்டவணை மிக பயனாக இருக்கும் யாரும் ஏமாற்ற முடியாது தகவலுக்கு நன்றி அண்ணா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. பயனுள்ள பகிர்வு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. சென்னை ஆட்டோ காரங்க..........!!


  மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டப் போறாங்க............!!

  உங்க ஆசைக்கும் ஒரு அளவே இல்லியா!!

  "கடல் எப்ப வத்தும் தின்னலாம்" மாதிரியான ஆசையை இன்னைக்கே அடியோட மறந்திடுங்க!!

  பதிலளிநீக்கு
 5. அரசாங்கத்தின் பொறுப்பு என்ன? சாலைகளை சரியாக பராமரிப்பது, பெட்ரோல் விலையை அடிக்கடி ஏற்றாமல் பார்த்துக்கொள்வது.... இதையெல்லாம் செய்ய முடியாத ஒரு அரசு ஆட்டோ கட்டணத்தை மட்டும் எப்படி நிர்ணயிக்கலாம்? அதுவும் இத்தனை மாதத்திற்கு ஒருமுறை கட்டணத்தை மாற்றுவோம் என்ற உறுதிமொழி கொடுக்க முடியாதபோது நிரந்தரமாய் இந்த கட்டணத்தை வாங்கு என்றால் எப்படி? உண்மையில் மினிமம் கட்டணமாக இருந்த இருபது ரூபாய் இப்போது இருபத்தைந்து ரூபாய் ஆகிவிட்டது. அதுமட்டும்தான் இவர்களால் முடிந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. டவுன்லோட் செய்து கொண்டேன். தகவலைத் தந்த சகோதரருக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. "மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் ஆட்டோவில் செல்ல கட்டணம் அதிகம் என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் ஆட்டோக்காரர்களோ இந்தக் கட்டண உயர்வு போதுமானதன்று என்றே தெரிவிக்கிறார்கள்."

  மற்ற மாநிலங்களில் மூன்று கிலோமீட்டர் சுற்றளவிற்குள் அரசே நடத்தும் 10 - 12 டாஸ்மாக் கடைகள் இருப்பதில்லை. 10 ,15 வருடங்களுக்குமுன்னால் ரிச்சாகாரர்களையும் அடித்தட்டு மக்களையும் சாராயம் விற்பவர்களாகவும் குடிப்பவர்களாகவும் சித்தரிப்பார்கள் அதற்கு அவர்களின் அறியாமையும் சமூகத்தால் அடக்கிவைக்கப்பட்ட அவலமும்தான் காரணம் என்றும் கூறப்பட்டது.

  ஆனால் இன்று அரசே அக்கடைகளை நடத்துவதால் நடுத்தர வர்கத்தில் மாதம் 18,000 சம்பளம் வாங்கும், சமூக ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்படாத நல்ல பின்புலத்தில் பிறந்துவளர்ந்த நண்பரும் தினமும் குறைந்தபட்சமாக 200 ரூபாய்க்கு குடித்துவிட்டுதான் வீட்டிற்கு செல்கிறார். கேட்டால் ஆபிஸிலிருந்து வீட்டிற்கு வருவதற்குள் 20 - 30 டாஸ்மாக் கடைகளை கடந்து வரவேண்டி இருக்கிறது முதல் 10 - 12 கடைகளை பல்லை கடித்துக்கொண்டு கடந்துவிட்டாலும் அதன் பிறகு கன்ட்றோல் பண்ணமுடிவதில்லை என்கிறார். எனில் ஆட்டோ ஊட்டுனருக்குமட்டுமல்ல வருங்காளத்தில் அம்பானிக்கேகூட வருமானம் பற்றாக்குறை ஏஏபடலாம்.

  பதிலளிநீக்கு
 8. மிகமிக பயன்மிக்க பதிவு சகோ!
  புக்மார்க் பண்ணுகிறேன்.

  பகிர்விற்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்!

  த ம.5

  பதிலளிநீக்கு
 9. இங்கு இருக்கும் ஆட்டோ நண்பர்கள் இந்த அட்டவணை எங்களுக்கு இல்லை. சென்னைக்கு மட்டும்தான் என்கிறார்கள். தமிழ்நாடு நல்ல தமிழ்நாடு.

  பதிலளிநீக்கு
 10. A very useful report.
  While there is every past evidence, not to trust the auto drivers to implement these new rules, as users we must try to make them comply. At least we must have the moral courage and conviction to report abuse. While traveling with the wife, they do not encourage the haggling. But, when we go alone or with male friends, we must make it a point to insist this. I have seen and heard from friends from Kerala that the autos there comply with the basic rules. The petrol is slightly expensive there.
  Also, now a days, most autos run on LPG only. The new rates are definitely competitive for direct expenses. But our auto wallahs always say that they are forced to pay "mamool" to the traffic cops.
  If they are not flouting any rules, they can flex their muscle through their respective unions to fight this out.
  Overall, let us be positive and see if we can make them work.

  பதிலளிநீக்கு
 11. பேருந்து போல ஆட்டோவிலும் டிக்கட் முறை வந்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 12. ஒரு சில ஆட்டோக்காரர்கள் பயணி ஊருக்கு புதிது என்று தெரிந்து விட்டால் அருகில் உள்ள இடத்திற்கு ஊரையே சுற்றி வழைத்து வந்து இறக்கி விட்டு மீட்டர் காட்டி பணம் பறிக்கும் நிகழ்வு நடந்தேறுகிறது. இப்படிப் பட்டவர்களிடம் மீட்டர் போடச்சொல்வதில் பயனில்லை. இந்த இடத்திற்கு செல்ல வேண்டும் எவ்வளவு என்பதை முன்கூட்டியே கேட்டு பயணம் செய்வது சிறந்தது என்று தோன்றுகிறது. அதே சமயம் உள்ளூர் பயணிகள் மீட்டர் போடச் சொல்லலாம். முறைப்படுத்தப் பட்ட கட்டண முறை ஆட்டோ ஓட்டுனர்களையும் பாதிக்கக் கூடாது என்ற உங்கள் பார்வையே எனதும். பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895