பெட்டிக்கடை- 3
யாருக்கு வெற்றி- புதிர்
புது வீடு கட்டின ராமசாமி தன் வீட்டில மனைவி குழந்தைகள் அப்பா அம்மா ஆசைப் படி ஊஞ்சல் வாங்கி மாட்டினார். எல்லோரும் ரொம்ப சந்தோஷமா தினமும் ஊஞ்சலாடுவாங்க. குழந்தைகளும் தாத்தா பாட்டிக்கும் ஊஞ்சலாடறதில சண்டையே நடக்கும். அன்னைக்கு ஞாயித்துக் கிழமை. ராமசாமியும் மனைவியோட ஊஞ்சலாடறதுக்கு வந்துட்டாரு. தாத்தா-பாட்டி, மகன்-மகள், பேரன்-பேத்தி மூணு டீமும் இன்னைக்கு முழுதும் நாங்கதான் ஆடுவோம்னு சண்டை போட்டுக்கிட்டாங்க. அப்புறம் குட்டீசுகளின் ஆலோசனைப்படி ஒரு போட்டி வச்சு அதுல யார் ஜெயிக்கறாங்களோ அவங்க இன்னைக்கு முழுதும் அவங்க இஷ்டப்படி ஊஞ்சலாடலாம்னு முடிவு பண்ணாங்க. போட்டியும் அவர்களே சொல்ல, அதாவது ஒவ்வொரு டீமும் ஒரு நிமிஷம் ஊஞ்சலாடனும். யார் அதுக்குள்ள அதிக ஆட்டம் ஆடறாங்களோ அவங்கதான் ஜெயிச்சவங்க அவங்க மத்தவங்களுக்கு விட்டுக் கொடுத்துட்டு போயிடனும் . ஒரு ஆட்டங்கிறது ஒரு பக்கத்தில ஆரம்பிச்சு திரும்பி அதே பக்கத்துக்கு வர்றது ஒரு ஆட்டம். இந்த டீலிங் தாத்தா பாட்டிக்கு பிடிக்கலன்னாலும் வேற வழியில்லாம ஒத்துக்கிட்டாங்க. ஒரு டீம் ஆடும்போது இன்னொரு டீம் செல் ஃபோன் ஸ்டாப் கிளாக் வச்சு ஒரு நிமிஷத்தில ஆட்டத்தை எண்ணணும்னு முடிவு பண்ணி போட்டிய ஆராம்பிச்சாங்க.
முதல்ல பசங்க வேகமா ஆட ஆரம்பிச்சாங்க.
அடுத்து ராமசாமியும் அவர் மனைவியும் ஆடினாங்க அவங்களால பசங்க மாதிரி வேகமா ஆட முடியல
கடைசியா தாத்தா பாட்டி ஆடினாங்க.அவங்க நாம எப்படியும் தோத்துதான போறோம்னு நினைச்சு வழக்கத்த்டை விட மெதுவா ஆடினாங்க.
இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி. இதுல யாரு ஜெயிச்சிருப்பாங்க?
(இதற்கான விடையும் விளக்கமும் அடுத்த பெட்டிக்கடையில்)
(இதற்கான விடையும் விளக்கமும் அடுத்த பெட்டிக்கடையில்)
*******************************************************************************
வம்பு
பிரபல பதிவர் கேபிள் சங்கர் ”தொட்டால் தொடரும்” படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இன்னொரு பழைய செய்தி. இந்த தொட்டால் தொடரும் தலைப்பு பட்டுக் கோட்டை பிரபாகரனின் பிரபல நாவலின் தலைப்பாம். இதை தன் படத்துக்கு பெயர் வைக்க அனுமதி கேட்க, மறுத்து விட்டாராம். பி.கே.பி. ஆனாலும் பெயர் மாற்றப்படவில்லை என வருத்தப் பட்டாராம் பி.கே.பி. பெயரை பதிவு செய்தால் மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.. எத்திக்ஸ் என்றால் என்ன என்று அவருக்கு கற்றுக் கொடுங்கள் என்கிறார் பி.கே.பி. தனது முக நூல் பக்கத்தில்.
*******************************************************************************************
இந்த படத்தை பாருங்க
நான்கு படத்தை ஒன்றாக இணைத்திருக்கிறார்கள் என்றுதானே நினைகிறீர்கள்? அப்படி நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்? இது ஒரே படம் ஒரு அறையில் உள்ளவற்றை வித்தியாசமான கோணத்தில் எடுக்க அது நான்கு படங்கள் சேர்ந்தாற் போல காட்சி அளிக்கிறது. எப்படியெல்லாம் யோசிக்கறாங்க! Lateral Thinking என்பது இதுதானோ?
இன்னொரு கோணத்தில் படத்தை பாருங்கள்
இன்னொரு கோணத்தில் படத்தை பாருங்கள்
இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
********************************************************************************************அற்புத லட்சியம்
படத்தில இருக்கிற அம்மணியை பத்தி பத்திரிகையில படிச்சி இருப்பீங்க. பேரு ஆனியா லிசெவ்ஸ்கா வயது 21. இந்த போலந்து நாட்டு அம்மணியோட வாழ்நாள் லட்சியத்தை கேட்டா ஆடிப் போயிடுவீங்க. வாழ்நாள்ல குறைந்த பட்சம் ஒரு லட்சம் ஆண்களோட செக்ஸ் வச்சுக்கனுமாம். ஏற்கனவே Target ல 284 அச்சீவ் பண்ணிட்டாங்களாம். குறிக்கோள் நிறைவேறும் வரை அயாராது உழைக்கப் போறாங்களாம்? என்னா லட்சியம்?
*********************************************************************************************
சமீபத்தில் படித்தது
நீங்கள் ஹாக்கர்களின் Victim ஆக இருக்கிறீர்களா?
Tamil Computer College என்ற வலை தளத்தில் மேற்கண்ட கட்டுரையை படித்தேன். எவ்வளவு பாதுகாப்பின்றி கணினி உலகம் இருக்கிறது என்பதை இந்த கட்டுரை சொல்கிறது. நாம் பயன்படுத்தும் ஈமெயில், முகநூல், டுவிட்டர் பாஸ்வோர்டுகளை எளிதில் ஹாக் செய்ய முடியும் எச்சரிக்கை செய்ய முடியும்என்கிறது கட்டுரை. எந்த முறையில் எப்படி எல்லாம்ATM பின் நம்பர் உட்பட ஹாக் செய்ய முடியும் என்பதை புட்டுப் புட்ட வைக்கிறார் கட்டுரை எழுதியவர். ஒரே மாதிரி பாச்வோர்டை எத்தனை பேர் வச்சுருக்காங்கன்னு ஒரு பட்டியல் வேறு காணப்படுகிறது.
ஆர்வம் இருப்பவர்கள் போய் படித்துப் பார்க்கலாம்.
********************************************************************************************டெல்லி பாலியல் வன்முறை சம்பவ வழக்கில் தீர்ப்பு வழங்கப் பட்டு விட்டது . இந்த அளவுக்கு விரைந்து வழக்கை முடித்தது பாராட்டுக்குரியது. இதுபோல் மற்ற பாலியியல் வன்முறை வழக்குகளிலும் விரைந்து முடித்து நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் .
அந்த கொடூர சம்பவத்தின் போது நான் எழுதிய கவிதை
அந்நியன் வருவானா தண்டனை தருவானா?
இந்தப் பெட்டிக்கடை எப்படி இருக்கிறது? தவறாமல் உங்கள் கருத்துக்களைப் பதியவும்.
******************************************************************************
படித்து விட்டீர்களா?
பெட்டிக்கடை - 1-திருக்குறளில் இலக்கணப் பிழையா?
பெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும்
வணக்கம் அய்யா வணக்கம், பெட்டிக்கடை 3 விற்கு எனது அன்பான வாழ்த்துக்கள். வாடிக்கையாளர்களின் பேராதரவால் மற்றொரு கிளை தொடங்கி விட்டீர்கள். கண்டிப்பாக இதிலும் கல்லா கட்டுவீர்கள்.. நட்புடன் அ.பாண்டியன்..
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி பாண்டியன்
நீக்குபெட்டிக்கடை - 3 நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
நன்றி நாகராஜ்
நீக்குபெட்டிக்கடை சரக்குகள் அருமை
பதிலளிநீக்குவிற்பனை அமோகமாகப் பெருக வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்
நீக்குபெட்டிக்கடைநல்லாத் இருக்கு..!!!!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்....
நட்ன்ரி தனபாலன் சார், இப்பெல்லாம் DD லேட்டா வராரே
நீக்குசரக்கு நல்ல முறுக்கு!
பதிலளிநீக்குநண்டிர் குட்டன்
நீக்குத ம 3
பதிலளிநீக்குபெட்டிகடைக்கு இது தான் என் முதல் வருகை...
பதிலளிநீக்குமுதல் புதிருக்கு பதில் என்ன ?
தத்தா பாட்டி - காரணம் மெதுவா ஆடினதால குறைவான தூரம் அதிகமான சுற்றுகள் சரியா ?
தவறு வவ்வால் சொன்னதே சரி. அடுத்த பெட்டிகடையில் விடையும் விளக்கமும் தருகிறேன்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குமுரளி(அண்ணா)
பெட்டிக்கடை சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குமுரளி,
பதிலளிநீக்கு"தொட்டால் தொடரும்" தலைப்பு திருட்டு பற்றி கூகிள் பிளஸ்ஸில் சில நாட்கள் முன்னர் ஒரு விவாதம் ஓடிச்சு,நான் பிளசில் இல்லை என்பதால் ,தனியாக பதிவாக போடனும்னு நினைச்சேன், இதில் சில காப்பி ரைட் டெக்னிக்கல் சமாச்சாரங்கள் இருக்கு அதை எல்லாம் சொல்லாம , பாம்பும் சாவக்கூடாது, கம்பும் உடையக்கூடாதுனு எழுதிட்டிங்களே :-))
# ஒரே படம்னு நீங்க போட்டிருப்பது , ஒரே படமா இருக்க வாய்ப்பில்லை, போட்டோ ஷாப் சமாச்சாரமாகவே இருக்கனும்,ஏன் எனில் ஒரே "ஷாட்டில்" பல கோணம் தெரியிறாப்போல எடுக்க வராது,அப்படியே இருந்தாலும் இப்படி கிளியர் கட்டா நாலு கட்டம் கட்டி இமேஜ் இருக்காது, ஒன்றாக கலந்தாப்போலத்தான் வரும. அதுவும் லைட்டிங்லாம் மாறி வேற இருக்கு.
# பேரன்,பேத்தி,அப்பா,அம்மா,தாத்தாப்பாட்டி என எல்லாருமே ஒரே எண்ணிக்கையில் தான் ஒரு நிமிடத்தில் "ஊஞ்சல் ஆடி" முடிப்பாங்க.
காலை கீழ ஊன்றி தள்ளியாதாகவொ, யாரும் ஆட்டியதாகவோ சொல்லவில்லை,எனவே தானாக ஆடினால் , வீச்சின் தூரம்,வேகம் பொறுத்து ஆடும் எண்ணிக்கை மாறாது. ஆடும் எண்ணிக்கை(ஃப்ரிக்குவெண்சி) கூட வேண்டும் என்றால் ஊஞ்சல் கயிற்றின் நீளம் மாற்றியமைக்கப்பட வேண்டும். இதான் "பெண்டுலம்" விதி.
# ஒரு லட்சம் "ஹிட்ஸ்" பெண்மணிய பத்தி ஒருத்தர் விடாம எல்லாரும் நியுஸ் போடுறிங்களே, ஹி...ஹி எல்லாருக்கும் "ஹிட்ஸ்" வெறி அதிகமாயிடுச்சா :-))
1. ஹிஹிஹிஹ்
நீக்கு2. அது நிச்சயமாக ஒரே படம்தான், இன்னொரு படத்தை இணைத்திருக்கிறேன். அதே பொருட்கள் கோணத்தில் அமைந்திருப்பதை பாருங்கள். வலது பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்தால் இதுபோல் அமையும். இது திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட படமாகத்தான் இருக்கும். கொஞ்சம் கணிதத்தை பயன்படுத்தினால் இது போன்ற காட்சிகளை எடுக்க முடியும் என்று நினைக்கிறன். நானும் முயற்சி செய்து பார்க்கா இருக்கிறேன். வெற்றி பெற்றால் தெரிவிக்கிறேன்.
3.சரி.
4.ஹிஹிஹிஹி
5. இன்னும் ஒண்ணைப் பத்தி கருத்து எதுவும் சொல்லலயே
முரளி,
நீக்கு//5. இன்னும் ஒண்ணைப் பத்தி கருத்து எதுவும் சொல்லலயே//
ஹேக்கர்ஸ் பத்தி எழுதுவதை தானே சொல்லுறிங்க,அந்தப்பதிவை முன்னரே படிச்சுப்பார்த்தேன்,அதில் சொல்லப்பட்டிருப்பதுலாம் ரொம்ப பழைய செய்திகள், ஏற்கனவே இதே போல யுவகிருஷ்ணா குமுதம் ரிப்போர்ட்டரிலும்,ஆண்டன்ராய் விகடனிலும் எழுதினாங்க,அவங்க எழுதுனதே பழைய சமாச்சாரங்கள்னா, இவர் அதை விட பழைய சமாச்சாரங்கள எழுதுறார், "The Unofficial Guide to Ethical Hacking" , என்ற புத்தகத்தை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் Ankit Fadia என்ற +11 மாணவன் எழுதினார் அதில இருக்க சமாச்சாரங்கள் தான் நிறைய இருக்கு,அதெல்லாம் இப்போ அவுட் டேட்டட், ஆனால் ஒரு ஆரம்ப அறிமுகத்துக்கு உதவும்.
இதெல்லாம் சொல்வதால் என்ன தொழில்நுட்ப புலினுலாம் நினைச்சுடாதிங்க, நாம எல்லா வகை புத்தகமும் படிப்போம் ,அது அப்படியே கொஞ்சம் நியாபகத்துல ஒட்டிக்கிட்டு இருக்கு,அதை வச்சு சும்மா ஜல்லி அடிப்பது தான் ...ஹி..ஹி.
ஏதோ ஒன்று எழுதுறாங்க,நாம குறை சொல்லிக்கிட்டு இருக்க வேண்டாம்னு சும்மா போனால் ,கூப்புட்டு வச்சு கேட்கிறிங்களே அவ்வ்.
அப்புறம் மேலும் அந்த தளத்தில"Cross-site scripting (XSS)" போல ஏதேனும் ஸ்கிரிப்டிங் ஒளிச்சு வச்சுருப்பாங்களோனு ஒரு டவுட் எனக்கு உண்டு, எனவே அந்த தளத்தை ஒரு தடவை பார்த்ததோடு சரி.
updated தகவல்கள் உங்களிடமிருந்து கிடைக்கும் என்ற நோக்கத்தில்தான் உங்கள் கருத்தை எதிர் பார்த்தேன். இது தொடர்பாக விரிவான கட்டுரைகளை படித்ததில்லை
நீக்குநீங்கள் கடைசியில் சொன்ன சந்தேகம் எனக்கும் உண்டு.
வவ்வால் சார், குழந்தைகள் தோற்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என நினைக்கின்றேன். நீளம்(தொகுதியின் ஈர்வை மையத்திற்கான நீளம்) எல்லோருக்கும் சமனாக இருக்காது.
நீக்குமுரளி,
நீக்குநமக்கும் அந்த அளவுக்கு தெரியாது,ஆனால் இணையத்தில தொழில்நுட்பம் கதைப்பவர்களை பார்த்தால் நானே கொஞ்சம் பெட்டர் போல தோனுது அவ்வ்!
# டிக்ஷனரி மெத்தட், புருட்ஃபோர்ஸ்லாம் இணையம் பயன்ப்பாட்டுக்கு வந்த போது செயல்பட்டது, இப்போலாம் அதனை வைத்து பாஸ்வேர்ட் ஹேக் செய்ய முடியாது, இப்போதைய இணைய சேவைகளில் எல்லாம் ஐந்து முறை(எண்ணிக்கை சேவையை பொறுத்து மாறும்) தவறான பாஸ்வேர்ட் கொடுத்து முயற்சித்தாலே தானகவே ஒரு மணி நேரத்துக்கு அக்கவுண்ட் லாக் ஆகிடும் போல மாத்தியாச்சு.
அடுத்த முறையும் முயற்சித்தால் நிரந்தரமாக அக்கவுண்ட் லாக் ஆகிடும், பின்னர் நம்ம சீக்ரெட் கேள்விலாம் கொடுத்து அக்கவுண்ட் ரிட்ரைவல் செய்தால் மட்டுமே லாகின் ஆகும்.
# ஹேக்கிங் எல்லாம் நாம வச்சிருக்கும் இணைய கணக்கை வைத்துக்கொண்டு செய்ய முடியாது, அதற்கு யுனிக்ஸ், அல்லது லினக்ஸ் ஷெல் அக்கவுண்ட் வேண்டும், தனி நபர்களுக்கு இந்தியாவில் தருவதில்லை, மென் பொருள் நிறுவனங்கள், பல்கலைகளுக்கு மட்டும் கொடுப்பாங்க, அங்கே இருந்துக்கிட்டு ஹேக் செய்தால், யார் என அடுத்த நிமிடமே கையும் களவுமாக புடிச்சிடுவாங்க.
IP Spoofing செய்தாலும் MAC address வச்சு கண்டுப்பிடிச்சுடுவாங்க, ஹேக்கர்ஸ் யாருனு ஈசியா கண்டுப்பிடிச்சிடுவாங்க ,வெளியில சொன்னா அசிங்கம்னு சொல்லாமலே ,நடவடிக்கை எடுப்பது தான் வழக்கம்,பெரும்பாலும் அந்த ஹேக்கரையே வேலைக்கு சேர்த்துப்பாங்க. இல்லைனா, சர்வதேச சட்டங்களுக்கு ஒத்துழைக்காத சீனா, ரஷியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருப்பார்கள்.
# இப்போ வெகுவாக செய்வது "phishing" முறையில் தான், ஒரு லின்க் கொடுத்து அதை கிளிக் செய்தால் உங்க கணினியில் சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டை எடுத்துவிடுவார்கள்.
சில சமூக வலைத்தளங்களில் லாக்கின் செய்யும் போது நம்ம பாஸ்வேர் எடுக்க ஸ்கிரிப்பிட்ங் வச்சிருப்பாங்க,ஃபயர் ஃபாக்ஸ் உலாவியில் நோ ஸ்கிரிப்பிட்டிங் பிளக்கின் வச்சுக்கிட்டு , முடிஞ்சவரைக்கும் தடுக்கலாம், நம்ம வழக்கமாக பயன்ப்படுத்தும் உலாவியில் ஜாவா ஸ்கிரிப்ட்,குக்கீஸ் டிஸேபில் செய்தும் வைத்துக்கொண்டு, தேவையான பொழுது மட்டும் செயல்ப்படுத்திக்கலாம்.
# எந்த சமுகவலைபக்கத்துக்கு போனாலும் ,அதில் லாக்கின் செய்யாமல் நம்ம பக்கத்தில் லாக்கின் செய்துவிட்டு போகலாம், மேலும் சேவ் பாஸ்வேர்ட் என கொடுக்காமல் இருக்கனும்.
# ஒவ்வொரு முறை உலாவியை மூடும் போதும் கிளியர் குக்கிஸ் அன்ட் பிரவ்சிங் ஹிஸ்டரி ஆப்ஷன் வச்சிக்கனும்.
ஹி..ஹி ஹேக்கர்ஸ் பத்திலாம் ரொம்ப கவலைப்படும் நம்ம மக்கள் இலவசமாக கிடைக்குதுனு சேர்க்கும் விட்ஜெட்டுகள், அப்ளிகேஷன்கள் மூலம் நம்ம ரகசியம் எளிதில் திருடு போகும் என்பதை அறிவதில்லை, பல இலவச அப்ளிகேஷன்களின் பிரைவசி பாலிசி படிச்சு பாருங்க,அவனே உங்க பெர்சனல் டீடெடெயில் எல்லாம் எடுப்போம் ஒத்துக்கிறியானு கேட்டு வச்சிருப்பான் ,நாமளே விருப்பத்தோட கொடுத்துக்கிட்டு இருக்கோம்.
உங்க கைப்பேசியில் நிறுவும் எல்லா அப்ளிகேஷன்களும் இதை தான் செய்யுது, எனவே ஹேக்கர்ஸ் ஒரு இலவச அப்ளிகேஷன் செய்து இணையத்தில உலாவவிட்டா தானா போய் மாட்டிக்க நெறைய பேரு இருக்காங்க :-))
நானே ஒரு பதிவ போடலாம் போல இருக்கே அவ்வ்!
--------------
கமல் பாலன்,
ஊஞ்சல் பொதுவா சங்கிலியால் தொங்க விட்டிருப்பாங்க ,எனவே அவ்வளவு எளிதாக உட்கார்பவர்களின் எடைக்கு ஏற்ப நீண்டு சுருங்கிடாது, கயிறு என்றாலும் அந்த நீட்சி மிகச்சிறியதாக இருக்கும் எனவே பெரிய அளவில் ஊசலாட்ட எண்ணிக்கையில் மாற்றிவிடாது.
எனவே நீளம் மாறாத நிலையில் வேகமாக ஆடினாலும் ,மெதுவாக ஆடினாலும், எடை வித்தியாசம் இருந்தாலும் ஊசலாட்ட எண்ணிக்கை மாறாது.
ஊசலாட்ட எண்ணிக்கை(பிரிக்குவென்சி) மாற நீளம் மற்று புவி ஈர்ப்பு விசை மாற்றம் மட்டுமே காரணமாக இருக்க முடியும், ஒரே மாதிரியான சூழல் நிலவும் போது மாற்றம் வராது.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குVavval,
நீக்குI did not mean the length change because of the tension in the chain (or string). Center of gravity of the system can change dramatically among three situations.(We cannot neglect the mass of a person compared to the mass of a swing, I guess.) The length we discuss here is the distance between the hanging point of the swing and the center of gravity of the system. So the length will change.
Kamal,
நீக்குoscilation period is mass independent one
,,
T =2pi*square root L/g
So msss does'nt affect oscilation
எட்டாம் வகுப்பில் ஆசிர்யர் சரியாக சொல்லிக் கொடுத்திருந்தால் அல்லது சொல்லிக் கொடுத்ததை கவனித்திருந்தால் இந்த கேள்விக்கு பதில் எளிதில் சொல்லி விடலாம்.
நீக்கு+2 PHYSICS எடுக்கும் ஆசிரியரிடம் இந்தக் கேள்வியை கேட்டாலும் சட்டென்று தவறான பதிலளிக்கவே வாய்ப்பு உண்டு. இத்தனைக்கும் அவர் SIMPLE PENDULUM EXPERIMENT ஐ. ஊசலின் நீளம் மாற்றி, குண்டின் எடை மாற்றி, செய்ய வைத்திருப்பார். பெரும்பாலான ஆசிரியர்கள் நடைமுறை நிகழ்வுகளோடு சேர்த்து யோசித்து பாடம் நடத்துவதில்லை. அதிலும் மெட்ரிக் பள்ளிகளில் ரீடிங் அளவுகளையும் மனப்பாடம் பண்ண வைத்து விடுவர்.
Vavval,
நீக்குI never said mass affects the oscillation. But the mass distribution will affect the oscillation. Please read my last reply again. Simply asking, what is the 'L' mentioned in the equation you given. Is it just the length of chain used for the swing??
கமல் பாலன்,
நீக்குஓ நீங்க சயின்டிஸ்ட் ரேஞ்சில மைக்ரோ செகண்ட் துல்லியமாக கணக்கு போடனும்னு பார்க்குறிங்களா ,அவ்வ்!
அப்படிப்பார்த்தால் நீங்களே முன்னுக்கு பின் முரணாக பேசிட்டு இருக்கீங்க,
மாஸ் பற்றி சொல்லவில்லைனு சொல்லிட்டு,அப்புறம் மாஸ் டிஸ்ட்ரிபுஷன் என்கிறீர்கள், மாஸ் டிஸ்ட்ரிபுஷன் சொல்லிட்டு சென்டர் ஆப் கிராவிட்டி எனவும் சொல்லிக்கொள்கிறீர்கள்.
உங்க கணக்குப்படி பார்த்தாலும், சென்டர் கிராவிட்டி தான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் மாஸ் டிஸ்ட்ரிபுஷன் அல்ல.
உள்ளீடு அற்ற ஹாலோவான கோளத்திற்கும் சென்டர் ஆஃப் கிராவிட்டி அதன் கோர் இல் தான் அமையும்.
சென்டர் ஆஃப் கிராவிட்டி மாறுவது வைத்து ஆசிலேஷனில் ஏற்படும் நேர மாற்றம் மைக்ரோ செகண்டில் தான் இருக்கும், இத நான் சொல்லவில்லை ரொம்ப காலம் முன்னரே நியுட்டன், கலிலியோக்கு அப்புறமாக கன்டுப்பிடிச்சு லேசா கரெக்ஷன் செய்து விட்டார்கள்.
அப்புறம் மனிதர்களுக்கு இயல்பாக சென்டர் ஆஃப் கிராவிட்டி அவர்களின் இருகால்களுக்கு நடுவில், பெல்விக் போன் பகுதில் தான் அமைந்துள்ளது, எனவே அவர்கள் ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் பலகையின் மீதே சென்டர் ஆப் கிராவிட்டியின் புள்ளி அமைந்து விடும், பலகை ஒரு இஞ்ச் கனம் எனவே சென்டர் ஆப் கிராவிட்டி ஒரு இஞ்ச் மேல இருக்கும் அதனால் நீளம் மாறுதுனு சொல்லிக்கிட்டு வராதிங்க அவ்வ்!
பலகை கட்டப்பட்ட புள்ளிக்கு கொஞ்சம் மேல, கீழ சென்டர் ஆஃப் கிராவிடி அமைந்தாலும் பெரிய மாற்றம் வராது, அம்மாற்றம் மைக்ரோ செகண்ட் அளவில் இருக்கலாம்,அது வெற்று கண்ணுக்கு புலப்படாது.
//குழந்தைகள் தோற்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என நினைக்கின்றேன். நீளம்(தொகுதியின் ஈர்வை மையத்திற்கான நீளம்) எல்லோருக்கும் சமனாக இருக்காது.//
அப்புறம் நீங்க சின்னப்பசங்க தான் தோற்க வாய்ப்பு இருக்குனு சொல்லி இருப்பது,நீங்க புடிச்சு தொங்கும் சென்டர் ஆஃப் கிராவிட்டி கணக்குக்கு எதிரானது.
எடை குறைவானவர்கள் அமரும் போது சி.ஜி கொஞ்சம் தரை மட்டத்தில் இருந்து மேல இருக்கும், அதாவது சி.ஜி - தொங்கும் புள்ளியின் இடைப்பட்ட நீளம் குறைவாக இருக்கும் எனவும், எடை அதிகமானவர்கள் உட்காரும் போது சி.ஜி தாழ்வாக அமையும், எனவே சி.ஜி - தொங்கும் புள்ளி இடையே உள்ள நீளம் கூடும் எனவும் ரொம்ப துல்லியமாக கொண்டால், சின்னப்பசங்க வேகமாக ஆடி விடுவார்கள் :-))
இந்த சென்டர் ஆஃப் கிராவிட்டி எங்கே அமையும் என்பது கப்பல்கள் கடலில் மூழ்காமல், அல்லது கவிழாமல் செல்ல ரொம்ப பயன்ப்படுகிறது. சரக்கை எல்லாம் இறக்கின பிறகு, சி.ஜி மெயின்டெயின் செய்ய என்றே காலியாக கப்பலை கடலில் செலுத்த மாட்டார்கள்,கடல் தண்ணியை லோட் செய்து சமன் செய்து ஓட்டுவார்கள்.
இதை விட இன்னும் உள்ள புகுந்தால், ஊஞ்சலில் வைக்கும் எடை( பெண்டுலம் பாப் எடை) வைத்து உருவாகும் சென்டர் ஆஃப் கிராவிட்டி என்பது வேற,ஆனால் தொங்கும் அமைப்பின் ஒட்டு மொத்த ( கயிறு/சங்கிலி, பலகை, அமர்பவர்கள்,) என எல்லாம் சேர்த்து அவ்வமைப்பின் சி.ஜி எங்கே அமையும் எனப்பார்த்து ஆசிலேஷன் கணக்கிட வேண்டும் என்றால் சரியாக கணக்கிடவே முடியாது.
மேற்கண்டதை சமன் செய்ய என்றே எடையற்ற கயிறு/சங்கிலி, உராய்வற்ற தொங்கும் புள்ளி , காற்று தடையற்ற சூழல் என்றெல்லாம் வரையறைக்கும் போது சொல்லிவிடுகிறார்கள் :-))
பதிவ போட்டவரு கூட பகோடா சாப்பிட்டுக்கிட்டு அடுத்த பதிவுக்கு போயிட்டார், பதில் சொன்ன என்ன புடிச்சு நோண்டுறாங்க அவ்வ்!
Relax vavaal,
நீக்குLet us share some pakoda as well..Anyway, thanks for the detailed explanation..
வவ்வால் சார்,
நீக்குகோவிச்சுக்காதீங்க உங்க விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி. இதற்கான விடையை இதே பதிவில்தான் போடணும்னு நினைச்சேன். நீங்க இதைப் பத்தி அல்சுவீங்கன்னு எதிர்பார்த்தேன், அதன் படியே நடந்தது. ஒரு வேளை நான் சொல்கிற விடைக்கு எதிராக ஆதாரங்களை அளிப்பீர்கள் என்று நினைத்துத்தான் அடுத்த பெட்டிகடைப் பதிவில் போடலாம் என்று விட்டுவிட்டேன். நல்ல காலம் நான் சொல்ல நினைத்த விடையும் நீங்கள் சொன்ன விடையும் ஒன்றாகவே இருக்கிறது.
நான் C.G போன்றவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளவில்லை. ஏழாம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில்தான் இந்தப் புதிரை(?) தயாரித்தேன்.
இந்த அளவுக்கு விவாதத்துக்கு வழி வகுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
சிலரைத் தவிர இதனை தெரிந்து கொள்வதில் ஆர்வம காட்டவில்லை.
தனி ஊசல் பாடத்தை கொஞ்சம் மாணவர்களுக்கு சுவாரசியமாக கற்றுத் தர முடியும் என்பதை தெரிவிக்கவே இந்த பதிவை எழுதினேன்.
இது தொடர்பான அடுத்த பதிவை முழு பதிவாக எழுதலாம் என்றும் தோன்றுகிறது. இருந்தாலும் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது.
நன்றி
நன்றி..... முரளி & வவ்வால்... hacking பற்றின பதிவை அந்த தளத்தில் எழதி வருவது நான்தான்.... நான் ஒன்றும் ஹாக்கிங் புலி ஒன்றும் அல்ல எனக்கு தெரிந்ததை மக்களுக்கு புரியும்மாறு எழத முயற்ச்சி செய்துக்கொன்டு இருக்கிறேன் அவ்வளவே...
நீக்குமேலும் நீங்கள் கூறிய தகவல் எல்லாம்எனக்கும் தெறியும் ஆனால் ஆனைத்து தகவல்களையும் ஒரே பதவில் , போட முடியாது. ஆப்படிப் போட்டால் அது 1000 பக்கங்கள் கொன்ட புத்தகம் போல இருக்கும். ஆதனால் தான் ஒரு தொடர் போல ஏழதலாம் என்று முயற்ச்சி செய்த்து க் கொன்டு இருக்கிறேன் மேலும் tecவிஷயசங்களை அளவுக்கு அதிகமாக்க பேசினாலும் படிபவர்களுக்கு சலிப்பு தட்டி விடும். எனவே அப்படி எற்படாதவன்னம் ழதிக்கொன்டு இருக்கிறேன்... உங்களுடைய கருத்துக்கும் அதரவுக்கும். நன்றி என்னுடைய வலைத்தளம் www.wheretheworldisgoing.blogspot.in
முரளி,
நீக்குஇங்கே யாரும் கோச்சுகலையே, கொஞ்சம் தெளிவில்லாம முன்னுக்கு பின்னாக நான் அதை சொல்லலை ,இத சொன்னேன்னு மாத்திக்கிட்டே கமல் பாலன் போனதால் அப்படி சொன்னேன். நீங்களே சொன்னாப்போல இது எட்டாம் வகுப்பு சமாச்சாரம் நான் ஒன்னும் சொந்தமாக கண்டுப்பிடிச்சு சொல்லை.
அடிப்படை இயற்பியலில் நான் என்ன மாத்தி சொல்லிட முடியும் :-))
---------------
உங்களுள் ஒருவன்,
உங்களுக்கு தெரியும் சரி ஆனால் , சொல்லும் போது சொல்லாமல் மக்களை பயமுறுத்துறாப்போல பழைய விடயங்களையே இப்பவும் நடக்க சாத்தியம் உள்ளார்போல சொல்லி இருக்கிங்களே ,அதான் குறிப்பிட்டு சொன்னேன்.
அனைத்து விடயங்களையும் நானும் சொல்லவில்லை இப்ப சொல்லி இருப்பதில் சொல்லாமல் விட்டதை தான் சொல்லி இருக்கிறேன், இந்த விடயங்களை சொல்லும் போது ,அதோடு தொடர்பில் இதனை சொல்லி இருக்கனும் இல்லையா?
வவ்வால்
நீக்குநான் இதை ஒரு தொடர்ப் போல் ஏழதலாம் என்று இருக்கிறேன்... அதில் இந்த விஷயங்கள் அனைத்தும் கவர் செய்து விடுகிறேன். மேலும் dictionary & bruteforce attack method முலம் தான் msoffice password protected & some uncrypted server கூட ஹாக் செய்ய முடியும் நன்பா...
இதுப்போன்ற விஷயங்கள் இன்னும் பல பெயர்களுக்கு தெரியாமல் இருக்கிறுது... அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், பதிய ஹாக்கர்கள் பழகிக் கொள்ளவும் தொதக்க இருக்கும் என்பதற்காகவே.....
உங்களுள் ஒருவன்,
நீக்குதொடரில் கவர் செய்யுங்கள்,நல்ல முயற்சி, ஆனால் ஒரு சிலவற்றை மட்டும் சொல்லி,இப்படித்தான் நடக்குது என்பதாக தவறாக சித்தரிப்பது போல இருக்க வேண்டாம்.
// msoffice password protected & some uncrypted server கூட ஹாக் செய்ய முடியும் நன்பா.//
உங்கள் பதிவில் இணைய பயனர் சொல்,கடவுச்சொல் என்று சொல்லிவீட்டு இப்போ எம்.எஸ்.ஆபீஸ் என்கிறீர்களே அவ்வ்.
சர்வரை ஹேக் செய்ய முதலில் ஷெல் அக்கவுண்ட் தேவைப்படும்,அப்புறமா தான் ப்ரூட்ஃபோர்ஸ் வேலை செய்ஞ்சா அதிஷ்டம்.
கொஞ்சம் குத்துமதிப்பா இப்படியும்,அப்படியும் எழுதிட்டிங்க என்பதையே சொல்லி இருந்தேன், நாம வழக்கமாக பயன்ப்படுத்தும் இணைய அக்கவுண்ட் மூலம், பிரவுசர் இடை முகப்பு என்பது அப்ளிகேஷன் லேயரில் தான் வேலை செய்யும் என்பதால் ,ஹேக்கிங் செய்வது முடியாது, பொதுவா பிஷிங் தான் சாத்தியம் என்பதே நான் சொல்ல வந்தது.
உங்கப்பதிவை படிக்கிறவங்க ஊருல இருக்க எல்லாரும் ஹேக்கிங் செய்துக்கிட்டு இருப்பாங்கனு நினைச்சுப்பாங்க!
//கொஞ்சம் தெளிவில்லாம முன்னுக்கு பின்னாக நான் அதை சொல்லலை ,இத சொன்னேன்னு மாத்திக்கிட்டே கமல் பாலன் போனதால் அப்படி சொன்னேன்.//
நீக்கு//அப்படிப்பார்த்தால் நீங்களே முன்னுக்கு பின் முரணாக பேசிட்டு இருக்கீங்க,
மாஸ் பற்றி சொல்லவில்லைனு சொல்லிட்டு,அப்புறம் மாஸ் டிஸ்ட்ரிபுஷன் என்கிறீர்கள், மாஸ் டிஸ்ட்ரிபுஷன் சொல்லிட்டு சென்டர் ஆப் கிராவிட்டி எனவும் சொல்லிக்கொள்கிறீர்கள்.//
வவ்வால்,
இதிலென்ன முரண் கண்டீர்கள்? ஒரு பொருளின் திணிவுப்பரம்பல்(Mass distribution) அதன் center of gravity இனை தீர்மானிக்கும். இங்கு ஒரே திணிவு வெவ்வேறு திணிவுப்பரம்பலை கொண்டிருப்பதன் மூலம் வெவ்வேறு center of gravity இனை கொண்டிருக்கலாம். (மனிதனின் CG வெவ்வேறு நிலைகளில் இடம் மாறும். அதாவது நின்ற நிலையில் ஒரு CG , குனிந்த நிலையில் வேறு ஒரு CG ) . அதனால் தான் "திணிவில் தங்காது, ஆனால் திணிவுப்பரம்பலில் தங்கி இருக்கும்" என குறிப்பிட்டேன். இங்கு திணிவுபரம்பலில் ஏற்படும் மாற்றம் CG மாற்றத்தினை குறிப்பது புரியவில்லையா?
//அப்புறம் மனிதர்களுக்கு இயல்பாக சென்டர் ஆஃப் கிராவிட்டி அவர்களின் இருகால்களுக்கு நடுவில், பெல்விக் போன் பகுதில் தான் அமைந்துள்ளது//
இது நின்ற நிலையில் உள்ள மனிதனுக்கு. ஊஞ்சலில் அமர்ந்த நிலையில் CG , தொப்புள் பகுதிக்கு உயர்ந்து விடும்.
//எனவே சி.ஜி - தொங்கும் புள்ளி இடையே உள்ள நீளம் கூடும் எனவும் ரொம்ப துல்லியமாக கொண்டால், சின்னப்பசங்க வேகமாக ஆடி விடுவார்கள் :-))//
ஊஞ்சலில் அமர்ந்த நிலையில் சிறுவர்களின் தொப்புள் பகுதியை விட பெரியவர்களின் தொப்புள் பகுதி மேலே இருக்கும்.(உயர வேறுபாடு காரணமாக). எனவே தான் சிறுவர்கள் தோற்கலாம் என கூறினேன்.
//சென்டர் ஆஃப் கிராவிட்டி மாறுவது வைத்து ஆசிலேஷனில் ஏற்படும் நேர மாற்றம் மைக்ரோ செகண்டில் தான் இருக்கும்//
ஓரளவு நம்பகத்தன்மையான தரவுகளை பயன்படுத்தி கணித்தீர்களானால் 4 நிமிடங்களில் பெரியவர்கள் ஒரு அலைவு கூடுதலாக முடித்து விடுவர். ஆகவே மைக்ரோ செகண்டில் தான் மாற்றம் இருக்கும் என்பதையும் ஏற்று கொள்வது கடினம் :(
//பதிவ போட்டவரு கூட பகோடா சாப்பிட்டுக்கிட்டு அடுத்த பதிவுக்கு போயிட்டார், பதில் சொன்ன என்ன புடிச்சு நோண்டுறாங்க அவ்வ்!//
நீங்கள் இவ்வாறு குறிப்பிட்டதாலேயே அத்துடன் முடித்துக்கொண்டேன். ஆனால் நீங்கள் மீண்டும் நான் முன்னுக்கு பின் முரணாக பேசுவதாக கூறியதாலேயே இந்த பின்னூட்டம்.
அப்புறம் முரளி சார்,
அழையாவிருந்தாளியாக வந்து அலம்பல் பண்ணுவதாக நினைக்காதீர்கள். நான் பொதுவாக பின்னூட்டம் இடுவதில்லை என்றாலும் பெரும்பாலான தளங்களின் ரெகுலர் வாசகன். அதே நேரம் வவ்வால் சாரின் தகவல் களஞ்சியமாக காணப்படும் பின்னூட்டங்களுக்கும் ரசிகன். அதனால் தான் கொஞ்சம் அதிகமாகவே இந்த பதிவில் மினக்கெட்டு விட்டேன். (மத்தபடி நான் முதலில் யோசித்த விடையும் தங்கள் விடையே)
நன்றி....
வருகைக்கும் விவாதத்துக்கும் நன்றி கமல்பாலன். நுட்பமான ஆராய்தல்.நல்லதுதானே. மேலும் உங்கள் இருவரின் வாதங்களையும் தகவல்களையும் ரசித்துக் கொண்டிருந்தேன். இந்தப் பதிவு ஆரோக்கியமான விவாதத்திற்கு வழி வகுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கான விடையை இதே பதிவில் போடலாம் என்றே நினைத்தேன். ஆனால் விவாதத்திற்கு வாய்பிரயுக்கிறது. ஒரு வேளை இந்தப் புதிரை உருவாக்கியதில் பெரிய பிழை இருப்பின் சரி செய்து கொள்ள முடியும் என்பதால்தான் வெளியிட முடியவில்லை. தனி ஊசல பாடத்தை ஆசிரியர்கள் வறட்சியாக நடத்துவதை பார்த்திருக்கிறேன். அதை சுவாரசியமாக இப்படியும் சொல்லலாம் என்பதற்காகவே இதை எழுதினேன்.
நீக்குநீங்கள் அழையா விருந்தாளியாக வந்ததுதானே எனக்கு மிக்க மகிழ்ச்சி.
இதை ஒரு சிலராவது ஆர்வத்துடன் படித்து விவாதத்தில் ஈடுபட்டதுதான் எனக்கு கிடைத்த வெற்றி.
இப்போது அழைப்பு விடுக்கிறேன் நேரம் கிடைக்கும்போது என் வலைப்பதிவுக்கு வருகை தாருங்கள்
நன்றி கமல் பாலன்
முரளி,
நீக்குஅழைப்புக்கு நன்றி.
பெட்டிக்கடை செய்திகள் சிறப்பானவை தொடரட்டும் பணி!
பதிலளிநீக்குநன்றி நன்றி
நீக்குபெட்டிக் கடை
பதிலளிநீக்குசிறப்பு
ஹாக்கர்ஸ் பற்றிய செய்தி
அனைவரும் அறிய வேண்டியது
அவசியம் அத்தளத்திற்குச் சென்று படிக்கின்றேன் ஐயா
நன்றி
நன்றி ஜெயக்குமார்
நீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...
இந்த ‘மழை’க் காலத்தில் கூட பெட்டிக் கடை சரக்குகள் மொறமொறப்பாய் இருக்கின்றன. பல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குவாழ்க..வாழ்க.. வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குவவ்வாலுக்கு தெரியாத விஷயமே இல்லைன்னு ஒர் பதிவர் (நீங்கதானே TNM?)என் பதிவுல சொல்லியிருந்ததா ஞாபகம். அது உண்மைதான் போல இருக்கு. அவரே ஒரு புத்தகம் எழுதலாம் போலருக்கே?
பதிலளிநீக்குஉங்களுடைய பெட்டிக்டை வழக்கம் போலவே நல்ல சரக்குகளோட வந்துருக்கு. ஒரு குட்டி ரீடர்ஸ் டைஜஸ்ட் மாதிரி. நன்றி.
டிபிஆர்.ஜோசப் அவர்களே,
நீக்கு//வவ்வாலுக்கு தெரியாத விஷயமே இல்லைன்னு ஒர் பதிவர் (நீங்கதானே TNM?)என் பதிவுல சொல்லியிருந்ததா ஞாபகம். அது உண்மைதான் போல இருக்கு. அவரே ஒரு புத்தகம் எழுதலாம் போலருக்கே?
//
ஹி...ஹி இது எதாவது வஞ்சப்புகழ்ச்சி அணியா?
நீங்க அப்படிலாம் சொல்ல மாட்டிங்க, எனக்கு பதிவு எழுதவே தெரியலைனு ஊருக்குள்ள பேச்சு,இதுல புக்கு போட சொல்லுறிங்களே அவ்வ்.
பின்னாடியே குட்டிப்பிசாசு சொன்னதை கேட்டிங்களா, நாம ஒரு பின்னுட்ட பெருச்சாலி மட்டுமே( அது என்ன புலி, புலிக்கு பின்னூட்டம் போடத்தெரியுமா ?)
இது எதாவது வஞ்சப்புகழ்ச்சி அணியா? //
நீக்குஎனக்கு தமிழே ஒழுங்கா தெரியாது.... இதுல இலக்கணம் வேறயா? வஞ்சம் இல்லாத புகழ்ச்சின்னு வேணும்னா சொல்லலாம் :))
//வவ்வாலுக்கு தெரியாத விஷயமே இல்லைன்னு ஒர் பதிவர் (நீங்கதானே TNM?)என் பதிவுல சொல்லியிருந்ததா ஞாபகம். அது உண்மைதான் போல இருக்கு. அவரே ஒரு புத்தகம் எழுதலாம் போலருக்கே?//
பதிலளிநீக்குஜோசப் ஐயா,
வவ்ஸின் கமெண்ட் படிக்கும் சுவாரசியம் புத்தகத்தில் கிடைக்காது.
முரளி,
நான் பேஸ்புக்கில் கூகில் ப்ள்ஸில் இல்லாததால், தொட்டால் தொடரும் மேட்டர் தெரியாது. கேபிளால் யோசிச்சி சொந்தமா ஒரு தலைப்பு வைக்க முடியாதா? இதுவே இப்படி என்றால்? கதை யாருடையது என்று தெரியவில்லை.
குட்டிப்பிசாசு,
நீக்கு//வவ்ஸின் கமெண்ட் படிக்கும் சுவாரசியம் புத்தகத்தில் கிடைக்காது. //
நம்ம பின்னூட்டம் படிச்சு நெறயப்பேரு கொலவெறியுல திரிவதாகத்தான் கேள்வி நீர் ரசிக்கிறீரோ, நல்லது, நம்ம பின்னூட்டத்தையும் ரசிக்க ஒரு ஆளு கிடைச்சாச்சு :-))
# // கதை யாருடையது என்று தெரியவில்லை.//
ஹி..ஹி அதான் ஒலக சினிமாலாம் டிவிடில கிடைக்குதே கதைக்கா பஞ்சம்!
கமெண்ட் படிக்கும் சுவாரசியம் புத்தகத்தில் கிடைக்காது. //
நீக்குஇவர் போடற கமென்ட்ஸுங்களையெல்லாம் சேர்த்தே ஒரு புத்தகம் போட்டுறலாமே... ஒரு நல்ல பெட்டிக்கைட மாதிரி இருக்கும்.
டி.பி.ஆர் ஜோசப் அவர்களே,
நீக்குசும்ம கிடந்த சங்க ஊதிக்கெடுக்காதிங்க, அப்புறமா நானும் கைக்காச போட்டு புக்கு போட்டுட்டு உங்கள வாங்கிக்க சொல்லி தொல்லை பண்ண ஆரம்பிச்சிடுவேன் :-))
ஹி..ஹி உங்களுக்கு மட்டும் 100 காப்பி அனுப்பிட மாட்டேன் :-))
தாத்தாவும், பாட்டியும்தான் ஜெயிச்சது.
பதிலளிநீக்குசுவையான தகவல்களோடு பெட்டிக்கடை 3 அருமை! வவ்வால்களின் தகவல்களும் படித்து என் சிற்றறிவை வளர்த்துக் கொண்டேன்! நன்றி!
பதிலளிநீக்குபெட்டிக் கடையில் பலதரப்பட்ட விஷயங்களும் அலசப்படுவது நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவவ்வால் கூறியவிடை மிகவும் சரிகடைக்கு நிறைய கஸ்டமர் வராங்க போல...
பதிலளிநீக்குதொட்டால் தொடரும் பிரச்சனை சிலநாட்கள் முன்பு இணையத்தில் படித்தேன்.. இப்போதெல்லாம் சர்ச்சை ஏற்படுத்துவதுதான் விளம்பரத்திற்கான எளிய வழி. ஒருவேளை அப்படி ஏதாவது இருக்குமோ...? சும்மா மாத்தியோசிச்சேன் . :-)
பதிலளிநீக்குஅந்த நான்கு கோணத்தில் இருக்கும்படம் செம கிரியேடிவ்.
ஹா.ஹா.. அந்த போலந்து அம்மணி பற்றி நானும் ஒரு பதிவு போட்டேன்.. அந்த அம்மணியின் பேஸ்புக் லிங்க் என்பதிவில் இருக்கு... அதில் நிறைய பயபுள்ளைக அட்வான்ஸ் புக்கிங் வேற பண்ணியிருகாணுவ.
அந்த ஹாக்கர் சம்மந்தப்பட்ட லிங்கை இப்போதுதான் படித்தேன்.. கொஞ்சம் திகிலாத்தான் இருக்கு. முதல்ல பாஸ்வேர்டை மாத்தனும்...
பெட்டிக் கடை என்ற தலைப்பில் பல விஷயங்களை தொகுத்து சுவாரசியமாக தந்து இருக்கிறீர்கள்.... வாழ்த்துகள் முரளி.... ஆனால் நீங்கள் குறிப்பிட்ட புதிர் என்ன என்று எனக்கு தெரியவில்லை....
பதிலளிநீக்கு