என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கவுத்திட்டயே சரோ!- காதல் கடிதம் -போட்டி


திடம் கொண்டு போராடு சீனு நடத்திய காதல் கடிதப் போட்டியில் ஆறுதல் பெற்ற கடிதம்.
(எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கடிதம் மூலம் காதலை சொல்லி விடுவார்கள். குமாரை போன்ற நினைத்ததை எழுதத் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கும் காதல் வராதா என்ன?  வந்தால் மனதில் உள்ளதை தன் மனம்  கவர்ந்தவர்களுக்கு எப்படி சொல்வார்கள்?   இப்படி சொல்வார்களோ! )

என்னை கவுத்து போட்ட சரோஜாவுக்கு,

   அது இன்னமோ தெர்ல சரோ, கொஞ்ச நாளா  உன்னை பாக்கறப்பல்லாம் ஒரு மாரியா கிறு கிறுன்னு ஏறுது. ஆய்ரம் கொசு என்ன மொச்சுக்கினு இருந்தாலும் அடிச்சு போட்ட மாதிரி தூங்குவனா. இப்பெல்லாம் இன்னாடான்னா உன் நெனப்புதான் கொசுவா மொச்சுகிட்டு என்ன தூங்க வுடாம பண்ணுது. இது என்னாத்துக்கு?.. எப்போ? இப்படி ஆச்சுன்னு ஒண்ணும் புர்ல 

  இதை  எப்டியாவது உன்கிட்ட சொல்லனும்னு பாக்கறேன். தொண்டை வர்ல வந்து பேச்சு முட்டிக்கினு நிக்குது. எழுதி குடுக்கலாம்னா எனுக்கு அவ்வளவா எழுத வராது. அப்பறம்தான் ஒரு ஐடியா வந்திச்சு . பர்மா பஜார்ல 500 ரூபாக்கு ஒரு செல் போனை வங்கனேன்.அதுல பேசறத அப்படியே பதிவு பண்ணலாம்னு சொன்னாங்களா. அங்க நின்னுக்கிட்ருந்த சீனு ன்னு ஒரு தம்பி கிட்ட எப்பிடி ரிக்கார்ட் பண்றதுன்னு கத்துகிட்டனா? அப்புறம் ஊட்டுக்கு வந்து என் மனச புட்டு புட்டு இதுல சொல்லி இருக்கறன். இதக் கேட்டுட்டு நீ சொல்றதுலதான் என் வாய்க்கையே இருக்கு. சரோ என் மனசை கவுத்த நீ வாய்க்கைய கவுத்துபுடாத!

  நீயும் நானும் ஒண்ணாப்புல இருந்து அஞ்சாப்பு வர ஒண்ணாதான கார்பரேசன் இஸ்கூல்ல  படிச்சோம். ஒரு நாள் குச்சி ஐஸ் வாங்கி சப்பிக்கிட்டிருந்தயா. நான் அதை புடுங்கினு ஓடிட்டனா? நீ உங்கம்மா கிட்ட சொல்ல, உங்கம்மா எங்கப்பாகிட்ட சொல்ல எங்கப்பா என்னை குச்சி எடுத்து வெலாச வந்தப்ப நீதானே "பாவம், வுட்டுடுன்னு சொன்ன. அப்ப வந்த இதுவா இருக்குமோ?. அப்புறம் ஒருநாளு கணக்கு டீச்சர் கணக்கு ஓம் ஒர்க் கேட்டப்ப நீ ஒன் நோட்ட குடுத்து என்ன அடி வாங்காம காப்பாத்தினியே அப்பத்துலேர்ந்து இருக்குமோ?எனக்கு ஒண்ணும் புரியல

   எத்தினியோ எலக்சன் வந்து போயும் இன்னும் அய்க்கா இருக்கிற நம்ம குப்பத்துல அயகா இருக்கிற ஒரே பொண்ணு நீதான. இஸ்கூல்ல படிச்சப்ப கூட இவ்ளோ அயகா நீ இல்லையே. இப்போ எப்படி வந்துச்சு. கருப்பா  இருந்தாலும் கலக்கலா இருக்கறய!. புச்சா புடிச்சிகினு வந்த மீனு வலயிலே துள்ளுமே அந்த மாதிரி கண்ணு, அப்புறம் கோன் ஐஸ் மாரி ஒரு கிளிஞ்சல் இருக்குமே! அத கவுத்து வச்ச மாதிரி மூக்கு, கடல்பஞ்சு மாதிரி உன் கன்னம். தூரமா கருப்பா தெரியற கடல் மாதிரி ஒன் முடி, வெள்ளை உப்பை கோத்து வைச்சது மாதிரி பல்லு. இதெல்லாம் பாத்தா மனசு பேஜாராவாதா நீயே சொல்லு. அப்புறம் எனக்கு ஒரு டவுட்டு!உன் பல்லு  இவ்ளோ வெள்ளையா கிதே. அது எப்பிடி? உங்கப்பன் பேஸ்டு கூட வாங்கித்தரமாட்டானே. கஞ்சனாச்சே! சரி, சரி, கோச்சுக்காதே! மாமானரை இனிமே மருவாத இல்லாம பேசமாட்டேன். அப்புறம்.. அது இன்னா கண்ணுக்கே தெரியாத மாதிரி ரெண்டு புருவத்துக்கு நடுவுல இத்துனூண்டு பொட்டு வச்சிக்கினுகிற? அயகாத்தான் இருக்குது இருந்தாலும் கொஞ்சம் பெரிசா வச்சாத்தான் இன்னாவாம். ஒன் ஒதடு மட்டும் லேசா ரோஸா இருக்குதே எப்டி? லிப்டிக் பூசறியா. இனிமே பூசாதே அது நல்லது இல்லையாம். அப்புறம் கல்யாணத்துக்கபுறம்  எனக்கு கஷ்டமா பூடும் 

    அஞ்சு மொழம் பூவு அடி எடுத்து வச்சு வந்த மாதிரி ஒரு நாளு ரேஷன் கடைக்கி அரிசி வாங்க வந்தயே, அரிசிப் பையை தூக்கி இடுப்பில வெக்க  நான்கூட ஒதவி செஞ்சேன். அப்ப உங்கை என்மேல பட்டுச்சி தெரியுமா?  வெண்ணெ  பட்டா எப்படி இருக்கும் அப்படி இருந்துச்சி எனக்கு.
    அப்புறம்  உன்மேல எனக்கு ஒரு இதுன்னு என்கூட சுத்திகினி இருப்பானுங்களே அந்த பசங்களுக்கு தெரிஞ்சிபோச்சா!..என்னாடா உன் ஆளு சரோஜானு பழய பேர் வச்சுக்குனு கீதுன்னு கடுப்பேத்துனானுங்க! எனக்கு வந்துச்சே கோவம். கழுத்தாமுட்லயே ஒன்னு உட்டு, "சரோஜாலதான் ரோஜா இருக்குடா பேமானிங்களா" ன்னு கத்துனனா? பசங்க மெர்சல் ஆயிட்டானுங்க. 

   அந்த  சோமாரிங்களுக்கு என்னா தெரியும் உன்ன பத்தி. அந்த பசங்க செவப்பு தோல் வச்சிகினு எல்லாம் தெரியற மாரி காட்டிக்கினு சுத்திக்கினுகிற பணக்கார பொண்ணுங்களுக்கு நூல் வுட்டுக்கினு இருக்கானுங்க. எவனோ இளவரசனாமே ரயில்ல  உழுந்து செத்தானாமே! அந்த மாதிரி இந்த பசங்க எந்த பஸ்சு கீய வுய போறானுங்களோ. வேணாண்டான்னா கேக்க மாட்றானுங்க.  நீ வேணாம்னு சொல்லு; இந்த பசங்க சாவாசத்த கூட இப்பவே  உட்டுடறேன். நீ சொன்னா கூவத்துல கூட குச்சிடுவன் தெர்யுமா?

     இன்னாடா இவன் இப்படி சொல்றானேன்னு நெனக்காத. காலையில ரோட்டுல கடைபோட்டு  இட்லி விக்கிற உங்கம்மாகூட,  இட்லி விக்க போவாத.  அரை நிக்கர் போட்டுக்கினு தெனோம் ஒடம்பு இளைக்க ஓடிக்கினு கிறானுங்களே அவனுங்கல்லாம் உன்ன ஒரு மாதிரியா பாத்துகினு போறானுங்க. பொண்டாட்டி தொல்லை தாங்காம பீச்சுக்கு வர ஒண்ணு ரெண்டு பெருசுங்க கூட உன்ன பாத்து ஜொள்ளு வுட்டுக்குனு போவுது. சொல்லிட்டேன் சாக்கிரதை.

     அப்பறம்  எவ்வளோ நாள்தான் இப்படியே சுத்திகினி இருக்கறது? உன்ன பாத்துத் தான் செட்டில் ஆவனும்னு எனக்கு ஆசயே வந்துச்சு. நம்பு சரோஜா! இப்பெல்லாம் நான் தண்ணி அடிக்கிறதில்ல. எல்லோர் கிட்டயும் மருவாதியாத்தான் பேசறேன். ரெண்டு நாளைக்கு  முன்னாடி பழைய ஒண்ணாப்பு டீச்சரைப் பாத்தனா.. தூக்கி கட்டின லுங்கிய இறக்கி விட்டு வணக்கம் சொன்னேன்னா பாத்துக்கயேன். 

     உனக்கு சோறாக்க  தெரியாதாமே! உங்கம்மா எங்கம்மா  கிட்ட கொற பட்டுக்கிச்சாம். பரவாயில்ல சரோ! நான் நல்லா சோறாக்குவேன். அதான் எங்கமாவுக்கு ஒடம்பு சரியில்ல இல்ல. எங்கப்பாதான சோறாக்கி போடுவாரு. நானும் கத்துக்கிட்டேன். நான் மீன் கொழம்பு வச்சா இந்த குப்பமே மணக்கும் நாலு நாளிக்கு வச்சிருந்து சாப்பிடலாம்னு எங்கம்மா சொல்லும். அப்புறம் நான் மீன் கொயம்பு வக்கும் போதெல்லாம் அஞ்சலை இல்லை? அதான் எங்க பக்கத்து வூட்ல கிதே அதான், மோப்பம் புச்சிகினு வந்து எனக்கு கொஞ்சம் குடுன்னு கேட்டு பல்ல இளிச்சுகினு  நிக்கும். அதுவும் அது மூஞ்சும் அத்த பாத்தாலே எனக்கு புடிக்கல.

    நீ  என்ன  கட்டிக்கினன்னு வச்சுக்கோயேன், நான் உன்ன ராணி மாதிரி பாத்துக்குவேன். நான் தெனமும் சம்பாரிச்சி கொண்டு வந்து உன்கிட்ட குடுத்துடுவேன். நீ வூட்டயும் கொயந்தங்களையும் பாத்துகினயன்னா போதும். நம்ம புள்ளைங்களை நல்ல படிக்க வச்சு எஞ்சினியராவும் டாக்டராவும் ஆக்கணும்.இன்னா சொல்ற?

   நாந்தான் பொலம்பிகினு கிறேன்.இன்னும் கண்டுக்காத மாரிதான் போய்க்கினு கீற. இந்த செல்போனை உன்கிட்ட எப்படியாவது குடுத்து அனுப்பறேன். இதை கேட்டுட்டு எனக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பதில் சொல்லிடு. அப்பால எப்படியோ என்னவோ நடக்கறது நடக்கட்டும்.

                                                                               இப்பிடிக்கு 
                                           உன்னைபாத்து கொயம்பி போய் கெடக்கும் 
                                                                                   குமாரு


=======================================================================

இந்தக் கடிதம் எப்படி எழுதப்பட்டது என்பதற்கான விளக்கம் கீழே லின்கில்
  இந்தக் கடிதம் கடிதம் பிறந்த கதை

72 கருத்துகள்:

 1. ஏன்ப்பா கைய்டிசி னேரத்லெ... சோக்கா கீதுப்பா.. யக்ஹிம்....!

  பதிலளிநீக்கு
 2. வட்டார பேச்சு வழக்கில் எழுதப்பட்ட ஒரு நல்ல காதல் கடிதம். கண்டிப்பாக சீனு அவர்கள் நடுவர்களுடன் பேசி இந்த பதிவையும் "கண்டிப்பாக" சேர்க்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள். போட்டி நேரம் முடிந்த சில மணி நேரங்களுக்குள் வெளியிடப்பட்டதால் அதை எடுத்து கொள்வதில் தப்பு இல்லை.


  முரளியின் இந்த பதிவை படிக்கும் பதிவாளர்கள் இதற்கு ஆதரவு தருவார்கள் என நினைக்கிறேன்.

  அரசாங்கம் தந்தி சேவையை நிறுத்திவிட்டது இல்லையென்றால் சீனுவுக்கும் நடுவர்களுக்கும் இந்த நேரத்தில் லட்சகணக்கான தந்திகள் பறந்து இருக்கும்

  பதிலளிநீக்கு
 3. வித்தியாசமான பேச்சு வழக்கில் வித்தியாசமாக எழுதி வித்தியாசமாக போட்டிக்கான கால எல்லை முடிவாகும் தருணத்தில் வெளியிட்டு வித்தியாசமான முறையில் எம் வாழ்த்துக்களைப் பெறிகின்றீர்கள் சகோதரரே!...:)

  போட்டிகான நடுவர்கள் கருணைக் கண் திறந்தால் சகோவின் கடிதமும் போட்டிக்குள் இடம்பெறும்...

  யாவற்றிற்கும் அதிர்ஷ்டம் இருந்து போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி இளமதி .வித்தியாசமா எழுதனுனுநினச்சது உண்மைதான். கடைசி நாள் அன்று BSNL சதி பண்ண. அடுத்த நாள் காலையில அவசர வேலையா வெளிய போக வந்த பிறகு வெளியிட்டேன்

   நீக்கு
 4. போட்டியில் சேர்க்கப்பட்டால்
  நிச்சயம் பரிசு பெறும்போல் உள்ளதே
  மனம் திறந்த காதல் கடிதம்
  மனம் கவர்ந்தது
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. அசத்தல் கடிதம் வெற்றிக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. சென்னை பேச்சை கண்முன் நிறுத்திய கடிதம். அபாரம் நன்றி.
  த.ம 4

  பதிலளிநீக்கு
 7. வட்டார வழக்கில் அசத்தல் கடிதம்.... வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 8. சீனுவுக்கு மற்றொரு வேண்டுகோள் எனது போட்டிக்கான பதிவை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக அந்த இடத்தில் முரளி பதிவை சேர்த்து கொள்ளுங்களேன்( எப்படியோ என் பதிவை கழட்டி விட்டுடுவாங்க அதனால நானனே முந்திக்கிறேன்)

  அப்படி அவரை சேர்க்காவிட்டால் நாளை இந்திய பகல் நேரப்படி நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்( அந்த நேரம்தான் எனக்கு இரவு நேரம் ஒன்றும் சாப்பிட வேண்டியதில்லை) நாங்க மதுரக்காரய்ங்கல

  இதை படிக்கும் எவரும் இதை சீனுவின் கவனத்திற்கும் நடுவர்களின் கவனத்திற்கும் எடுத்து செல்லவும்)

  இதற்கு அவர்கள் செவி சாய்க்காமல் இருந்தால் பதிவுலகத்துடன் கலந்து ஆலோசித்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம மதுரை தமிழனின் பலமான சிபாரிசுக்கும் போராட்ட அறிவிப்புக்கும் நன்றி.

   நீக்கு
  2. யாரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். போராட்டமும் தேவையில்லை. முரளியின் பதிவு போட்டிக்குள் வந்துவிட்டது! நாங்களும் குமாரு, சரோஜா காதலை ரசிக்கத் தயாராகிவிட்டோம்!

   நடுவர்கள் சார்பில்
   ரஞ்சனி

   நீக்கு

  3. ஆஹா போட்டியில் சேர்த்ததும் இல்லாமல் நடுவரே ரசிக்க ஆரம்பித்துவிட்டார். போட்டிக்கு வந்த எந்த கடிதத்திலும் நடுவர் வந்து பின்னுட்டம் இட்டதாக எனக்கு தெரியவில்லை ஆனால் நடுவர் வந்து பின்னுட்டம் இட்ட பதிவு உங்களதுதான் முரளி. அப்ப வெற்றி உங்களுக்குதான் முரளிசார்

   பரிசு கிடைச்சா உங்களுக்காக போராடிய என்னை தனியாக கவனிக்கனும் சொல்லிப்புட்டேன். பரிசு வாங்கிய பின் யார் இந்த மதுரைத்தமிழன் என்று எல்லாம் கேட்க கூடாது

   நீக்கு
  4. பலமான போராட்டம் அறிவிச்சி,உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு மிரட்டி சிபாரிசுபண்ணிய மதுரை தமிழனுக்கு ஸ்பெஷல் பரிசை அமெரிக்காவுக்கு பார்சல் பண்ணிடறேன்.
   பரிசு கிடைச்சா ஓகே. வேற ஏதாவது கிடைச்சா?

   நீக்கு
  5. @அவர்கள் உண்மைகள்
   போட்டியில் கலந்துகொள்ளும் பதிவுகள் அனைத்தையும் கடித எழுதியவர்களின் தளத்திற்கே போய் படித்து வருகிறோம்.

   இதுவரை வந்த கடிதங்களை எழுதியவர்களுக்கு எல்லா நடுவர்களுமே பின்னூட்டம் இட்டிருக்கிறோம்.

   என்னைத் தொடர்ந்து பிற நடுவர்களும் விரைவில் வருவார்கள்.

   நீக்கு
 9. கலக்கிட்டியே கொமாரு.... கலந்துக்கீனிருக்கலாம்...

  பதிலளிநீக்கு
 10. சென்னைத் தமிழில் கடிதம் அருமை.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே !!!

  பதிலளிநீக்கு
 11. ஆஹா......உங்களுக்கு தமிழ்லேயே பத்து மொழி தெரியும்னு இப்போ ஒத்துக்குறேன்.

  "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா கடிதம் வந்ததா...?"

  "பரிசுதாங்க வந்தது..."

  பதிலளிநீக்கு
 12. இன்று தான் படித்தேன். நன்று...

  பதிலளிநீக்கு
 13. இதை கேட்டுட்டு எனக்கு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பதில் சொல்லிடு. //லேட் என்ட்ரி இருக்கான்னு கேட்டுடுங்க நண்பரே.அருமையா இருக்கு

  பதிலளிநீக்கு
 14. சோக்கா எழுக்கீறியே பா!

  நான் கண்டி நடுவரா இருந்தேன்னு வையு, மொத பர்சு உனக்குதாம்பா! :)

  தீயா வேலை செஞ்சுருக்கியே கொமாரு!

  பதிலளிநீக்கு
 15. படிக்க படிக்க காட்சிகளாய் கண்முன் வந்து போகிறது உங்கள் காதல் அருமை பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 16. நல்லா சிரிப்பு வந்தத: நன்று.
  தமிழ் கொலை...கொலை...
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 17. சென்னை செந்தமிழில் ஒரு இனிய கடிதம்... இந்தக் கடிதம் போட்டியில் இருப்பதாகத் தான் மின்னஞ்சலில் வந்துள்ளது... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 18. அருமையான காதல் தகவல்...மொபைலில் போவதால் இது கடிதம் அல்ல... போட்டியில் சேர்கிறதோ இல்லையோ வாசகர்களின் பரிசு உங்களுக்குத்தான் ... வாழ்த்துக்கள் முரளிதரன்

  பதிலளிநீக்கு
 19. உண்மையா இந்த பாஷையில் கடிதம் எழுதுவது சிரமமே.. வித்தியாசமான முயற்சி.

  பதிலளிநீக்கு
 20. ரூபக் ராம் சொன்னது போல் உங்கள் கடிதம் போட்டியில் இருப்பதாகத்தான் எனக்கு வந்த மின்னஞ்சலும் (சீனுவிடம் இருந்து) கூறுகிறது.

  உங்கள் கடிதம் ‘கெலிக்க’ வாழ்த்துக்கள் முரளி!

  பதிலளிநீக்கு
 21. சூப்பரப்பு ...! கொயம்பி போய் கெடக்கும் போதே இப்பூடி பேசீருக்கீகளே , கொயம்பாமா பேசீருந்தா ....?

  சரோசா சாமா நிக்காலோ ...!

  பதிலளிநீக்கு
 22. அந்த பசங்க செவப்பு தோல் வச்சிகினு எல்லாம் தெரியற மாரி காட்டிக்கினு சுத்திக்கினுகிற பணக்கார பொண்ணுங்களுக்கு நூல் வுட்டுக்கினு இருக்கானுங்க.

  காதல் என்பது ஒருவகை உணர்வு அதை அழகாகவும் மிருதிவாகவும் கையாள்வதே சுகம் . இன்றைய காதலர்கள் எல்லாம் காமத்தைக் காதல் என்று புரிந்து வைத்துள்ளார்கள். காமம் வேறு காதல் வேறு. சீலேன்பது காமம் உணர்வென்பதே காதல். இன்றைய இளைஞர்களுக்கு காதல் உணர்வு என்பதைவிட காம உணர்வே மேலோங்கியிருக்கின்றது. காமத்தைக் காதலென தவறாக புரிந்துகொள்வதே காதல் பிரிவில் முடிகின்றது. இதற்க்கு காரணம் இன்றைய காட்சி ஊடகங்களின் வழிகாட்டுதலே.

  காதல் இருந்தால் எந்த மதமும் எந்த குறுக்கே நிற்காது அப்படி குறுக்கே நின்றாலும் காதலே ஜெயிக்கும்

  இன்றைய காதல் ஒருவித கவர்ச்சியால் உருவாகின்றது. அதில் காமமே பிரதானமாக இருக்கின்றது. இந்த வேறுபாட்டை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

  மேலை நாட்டில் இளைஞர்கள் காமம் காதல் இரண்டையும் அழகாக வேறுபடுத்தி பார்க்கின்றார்கள் உண்மையை அறிந்து புரிந்து கொள்கின்றார்கள். ஆகவே மேலைநாட்டினர் டேட்டிங் என்று சொல்வார்கள். எது காமம் எது காதல் என்பதில் நம் இளைஞர்களின் புரிதல் காட்சி ஊடகங்களால் பாழ்பட்டுக் கிடக்கின்றது. அத்தகைய இளைஞர்கள் மனதில் உள்ள நஞ்சை நீக்கி அவர்கள் வாழ்வில் உண்மையான காதலுடன் நல்வழியில் நடந்திட உதவிடும் வண்ணம் விழிப்புணர்வு செய்திடுவோம்.இல்லையேல் நம் மனிதவளத்தை வீணாக செய்துவிட்டு அரசியல் கட்சிகள் இந்தியத் திருநாட்டையே வெளிநாட்டு உள்நாட்டு சுயநல சக்திகளுக்கு விற்றுவிடுவார்கள் இந்தியா விலைபோகும் மீண்டும் நாம் அடிமை ஆவோம். காந்தி தேசமே விழித்தெழு!!!.

  பதிலளிநீக்கு
 23. சொக்கா சொன்னீங்க , மெர்செலாயிட்டென்!. அழகு...

  ச..ரோஜா உங்க வீட்டை தேடிக்கிட்டு இருக்கறதா கேள்விபட்டேன்?? (குமாரு பொலம்பிகினு கிறாரு )

  பதிலளிநீக்கு
 24. சென்னைத் தமிழ்........சிங்காரச் சென்னைத் தமிழ் .....இனிமையாகத்தான் இருக்கு ..நிறைய வார்த்தைகள் விளங்க அகராதி இருக்கா...?

  பதிலளிநீக்கு
 25. மெட்ராஸ் பாஷையில் கலக்கிட்டீங்க, முரளி!
  //மெர்செலாயிட்டேன்// என்ன அர்த்தம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /மெர்செலாயிட்டேன்/ -பயந்துட்டேன்-அசந்த்துட்டேன்-அதிர்ச்சியாயிட்டேன். ன்னு பல் அர்த்தம் இருக்கு மேடம்

   நீக்கு
 26. வணக்கம்
  முரளி(அண்ணா)

  அழகான பேச்சுமொழி செந்தமிழில் அழகான சரோவுக்கு கற்பனை மலர்ந்த அழகான கடிதம் அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 27. சூப்பரா சொன்ன பாஸ் உன் காதல ! சரோசா உனக்கு தான் பா! கவலைப்படாத சகோதரா அந்த கருமாரி காத்து நிப்பா காதல தான் சேத்து வைப்பா.....

  பதிலளிநீக்கு
 28. //புச்சா புடிச்சிகினு வந்த மீனு வலயிலே துள்ளுமே அந்த மாதிரி கண்ணு, அப்புறம் கோன் ஐஸ் மாரி ஒரு கிளிஞ்சல் இருக்குமே! அத கவுத்து வச்ச மாதிரி மூக்கு, கடல்பஞ்சு மாதிரி உன் கன்னம். தூரமா கருப்பா தெரிய கடல் மாதிரி ஒன் முடி, வெள்ளை உப்பை கோத்து வைச்சது மாதிரி பல்லு. இதெல்லாம் பாத்தா மனசு பேஜாராவாதா நீயே சொல்லு//

  செமயா இருக்கு ! இந்த வர்ணனை

  பதிலளிநீக்கு
 29. \\எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கடிதம் மூலம் காதலை சொல்லி விடுவார்கள். குமாரை போன்ற நினைத்ததை எழுதத் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கும் காதல் வராதா என்ன? வந்தால் மனதில் உள்ளதை தன் மனம் கவர்ந்தவர்களுக்கு எப்படி சொல்வார்கள்? இப்படி சொல்வார்களோ!\\ காதலிக்கிறதுக்கு வார்த்தைகளே தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

  பதிலளிநீக்கு
 30. சாதாரண ஜனங்களுக்கு காதல் வராதான்னு யோசி்சு கலக்கிப்பூட்டிய‌ே முர்ளி...! நான் மெர்சலாயிட்டேன்!

  பதிலளிநீக்கு
 31. ஹா... ஹா.. சிரிக்கவும் முடிஞ்சது ரசிக்கவும் முடிஞ்சது.
  ஆஹா காதல் கடிதம் ன்னவுடனே எல்லாரும் எழுதி தள்ளறாங்களே... நிறைய பேர் ஸ்கூல்ல படிக்கும் போது லீவ் லெட்டர் எழுத கத்துக்கிட்டதை விட லவ் லெட்டர் எழுத கத்துக்கிட்டாங்கன்னு தெரியுது. ஹா...ஹா..!

  நான் நடுவரா இருந்தாலும் முதல் பரிசு உங்களுக்குத்தான் கொடுப்பேன்.


  அப்பப்பா என்ன வர்ணனை .. இப்படி நீங்க சரோவை வர்ணிச்சதை எல்லாம் வீட்ல பார்த்து சும்மா விட்டாங்களா?
  ஒரு சினிமாவையே நடத்திப்புட்டிங்க போங்க...
  மெயில் ஓட்டு வச்சி தீர்ப்பு தந்தா... உங்களுக்கு 101 ஓட்டு போட்டுடறேன்...

  நடுவர்களே இந்த பாயிண்ட்ஸ் எல்லாம் வச்சி 100 க்கு 150 மார்க் போடனும்னு ரிக்வஸ்ட் பண்ணிக்கிறேன்...

  //இதை எப்டியாவது உன்கிட்ட சொல்லனும்னு பாக்கறேன். தொண்டை வர்ல வந்து பேச்சு முட்டிக்கினு நிக்குது. எழுதி குடுக்கலாம்னா எனுக்கு அவ்வளவா எழுத வராது. அப்பறம்தான் ஒரு ஐடியா வந்திச்சு // - பாருங்க காதல்னு பின்னாலேயே போய் தொந்தரவு தராமா எவ்வளவு டீசண்ட்டா காதலை வெளிப்படுத்தி இருக்காரு குமாரு...

  //என்னை குச்சி எடுத்து வெலாச வந்தப்ப நீதானே "பாவம், வுட்டுடுன்னு சொன்ன. அப்ப வந்த இதுவா இருக்குமோ?. அப்புறம் ஒருநாளு கணக்கு டீச்சர் கணக்கு ஓம் ஒர்க் கேட்டப்ப நீ ஒன் நோட்ட குடுத்து என்ன அடி வாங்காம காப்பாத்தினியே அப்பத்துலேர்ந்து இருக்குமோ?எனக்கு ஒண்ணும் புரியல// - சரோவோட அன்பு பார்த்து வந்திருக்கு... ரொம்ப வருஷமா புரிஞ்சி வந்த காதல்..

  // அப்பறம் எவ்வளோ நாள்தான் இப்படியே சுத்திகினி இருக்கறது? உன்ன பாத்துத் தான் செட்டில் ஆவனும்னு எனக்கு ஆசயே வந்துச்சு. நம்பு சரோஜா! இப்பெல்லாம் நான் தண்ணி அடிக்கிறதில்ல. எல்லோர் கிட்டயும் மருவாதியாத்தான் பேசறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி பழைய ஒண்ணாப்பு டீச்சரைப் பாத்தனா.. தூக்கி கட்டின லுங்கிய இறக்கி விட்டு வணக்கம் சொன்னேன்னா பாத்துக்கயேன். -- உண்மையான காதல் எப்படி அவனை மனுஷனா மாத்தியிருக்கு பார்த்தீங்களா...?

  // நீ என்ன கட்டிக்கிட்டன்னு வச்சுக்கோயேன், நான் உன்ன ராணி மாதிரி பாத்துக்குவேன். நான் தெனமும் சம்பாரிச்சி கொண்டு வந்து உன்கிட்ட குடுத்துடுவேன். நீ வூட்டயும் கொயந்தங்களையும் பாத்துகினயன்னா போதும். நம்ம புள்ளைங்களை நல்ல படிக்க வச்சு எஞ்சினியராவும் டாக்டராவும் ஆக்கணும்.இன்னா சொல்ற?// - என்னா எதிர்கால கனவு, நம்பிக்கை..!

  // நாந்தான் பொலம்பிகினு கிறேன்.இன்னும் கண்டுக்காத மாரிதான் போய்க்கினு கீற. இந்த செல்போனை உன்கிட்ட எப்படியாவது குடுத்து அனுப்பறேன். இதை கேட்டுட்டு எனக்கு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பதில் சொல்லிடு. அப்பால எப்படியோ என்னவோ நடக்கறது நடக்கட்டும்.// - இருக்குதுன்னாலும் இல்லைன்னாலும் குமாரு வச்சிருக்கிற காதலு மெய்யுன்னு சொல்லுது.

  மனசை மட்டும் எதிர்பார்த்து வந்த சாதாரணமானவனின் காதலா இருந்தாலும் உண்மையான காதல்... இதில் எந்த கலப்படமுமில்ல. படிச்சதும் மனசுக்குள்ள அப்படியே வரி வரியா ஓடுது... வாசகர் மனசில எழுத்துக்கள் ஒரு அதிர்வை உண்டாக்கிட்டாலே அது வெற்றிதானே!

  மொத்தத்தில் ரொம்ப ரொம்ப நல்லாருக்கு பரிசு உங்களுக்குத்தான் கலக்கிட்டிங்க...சகோ!


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னோட வேண்டுகோள் என்னன்னா? இதை நகைச்சுவையா பாக்கக் கூடாது.சாதாரண மக்களின் காதல் படித்தவர்களின் காதலுக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. என்று எனக்குப் பட்டது. அதுவே இந்தக் கடிதமாய் மாறி இருக்கிறது.
   நானே எதிர் பார்க்காத அளவுக்கு ரசிச்சிருக்கீங்க!. ஏழு எட்டு பாயிண்ட்களை மனசுல வச்சுக்கிட்டு இந்தக் கடிதத்தை எழுதினேன். ஒவ்வொண்ணா அதையே நீங்கள் சொல்லி இருக்கிறது ஆச்சர்யமா இருக்கு.
   காதலால் ஏற்படற மாற்றங்களை சொல்லணும்,பழைய நினைவுகளை சொல்லணும்,காதலியோட அழகை சொல்லணும், தன் காதலியை ஏதாவது சொன்னால் தன்னால் தாங்கிக்க முடியாதுன்னு சொல்லணும், நண்பர்களோட பொருத்தமில்லா காதலை சொல்லணும் ,தன்னுடைய இயல்பை மாத்திகிட்டதை சொல்லணும்,உனக்காக எது வேணுமானாலும் செய்வேன்னு சொல்லணும், லேசா கொஞ்சம் நகைச்சுவை இருக்கணும்,உன்னைத் தவிர வேறு யாரையும் புடிக்காதுங்கறத சொல்லணும் எதிர்கால கனவை சொல்லணும் .இத்தனையும் இந்தக் கடிதத்தில இருக்கணும்னு நானே சில வரையறைகளை வச்சுகிட்டேன்.. ஆனா வித்தியாசமான முறையில PRESENT பண்ணனும்னு முயற்சி செஞ்சேன். இதில் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறேன்னு தெரியல.
   உங்களுடைய வரிக்கு வரி விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 32. மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. ரசிக்கும்படியாகவும் இருக்கிறது. இயற்கையாக இருக்கிறது. இதை நகைச்சுவையாகப் பார்க்கவில்லை முரளி!

  மதுரைத் தமிழன்! உங்கள் சிபாரிசுக்கு பலன் கிடைத்து விட்டது!

  //போட்டிக்கு வந்த எந்த கடிதத்திலும் நடுவர் வந்து பின்னுட்டம் இட்டதாக எனக்கு தெரியவில்லை ஆனால் நடுவர் வந்து பின்னுட்டம் இட்ட பதிவு உங்களதுதான் முரளி//

  உங்கள் கவனிப்புத் திறனுக்கு எங்கள் பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 33. காதல் என்பது கவிஞர்களுக்கு மட்டமல்ல.. மேல்தட்டு மக்களுக்கு மல்ல எல்லோருக்கும் வரும் . குப்பத்திலும் காதல் உண்டு... அதை உங்கள் எழுத்து நடையே சொல்கிறது... அருமை.

  பதிலளிநீக்கு
 34. பயணம் காரணமாக உடனே படிக்க முடியவில்லை.

  அஞ்சு முழம் பூ அடியெடுத்து வந்தாப்புல - ரொம்ப நாளைக்குப் பிறகு படித்த அழகான கவிதை .

  வித்தியாசமான கடிதம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 35. வட்டார பேச்சு வழக்கு எனக்குக் கடினமாக இருந்தது வாசிக்க. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 36. சிறப்பான படைப்புகள் வெற்றி பெறத் தவறுவதில்லை.. உங்கள் படைப்பு பெற்ற வெற்றி அதை பறைசாற்றும்.. வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 37. மொதல் ஆறுதல் பரிசு பெற்ற உன்க்கு என் சைடுலேர்ந்து ஒரு சபாஷ்பா!
  அல்லா பயலுகளும் திருச்சி பாசையையே யூஸ் பண்றாங்க. கொஞ்ச பேர் மருதையையும் கொஞ்ச பேர் தின்னவேலி கன்யாகுமாரி பாஷயும்தான் சோக்கா கீதுன்னு சொல்லும்போது எனக்கு அப்படியே சுர்ர்ர்ர்ர்ன்னு ஏறும். அத்த நீ டப்புன்னு ஒட்ச்சி போட்டு சோக்கா ஒரு லெட்டர செல் போன்ல ரெகார்ட் பண்ண பாரு அங்கதான்யா ஒங்கொமாரு கடல் மாரி கம்பீரம நிக்கறான்! கலக்கிட்ட வாத்யாரே!

  பதிலளிநீக்கு
 38. போட்டியில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 39. தீயா வேலை செஞ்ச குமாருக்கு சரோ கவுத்துடாம பரிசு பெற்றுக் கொடுத்துட்டாளே!
  வாழ்த்துக்கள் முரளிதரன்.

  பதிலளிநீக்கு
 40. சொம்மா நச்சுன்னு நாய்க்குட்டி மாறி கீது வாத்யாரே... (இன்னாடா இத்து "நாய்க்குட்டி" ன்னு சொல்லிக்கினானேன்னு மெர்சலாவாதபா... அப்புடீனாக்கா "ரெம்ப கியூட்டு"ன்னு மீனிங்கு...)
  இந்த்த இஸ்டோரி காண்டி இஸ்க்ரீன் பிளே, டீக்குள்ள அமுக்குன பன்னு கணக்கா கீதுபா...

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895